Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 26

அத்தியாயம் – 26

பியானோ இசை கேட்குமா என்கிற எதிர்பார்ப்போடு அன்று இரவு வெகுநேரம் தன்னுடைய அறையில் காத்திருந்த மிருதுளா இறுதியில் ஏமாற்றத்துடன் படுக்கையில் சாய்ந்தாள். உறக்கம் வரவில்லை.

 

ஆக்ரோஷமாக மருத்துவமனையை ரகளை செய்து கொண்டிருந்த அந்த பெண், ரெத்தம் ஒழுகஒழுக அர்ஜுன் கையால் வதைபட்ட அந்த மலைமனிதன், ‘தேர்ட் ரேட் பொறுக்கியா நா?’ – சீற்றத்துடன் பாய்ந்த அர்ஜுன் ஹோத்ரா… அனைத்து சம்பவங்களும் மாறிமாறி அவள் சிந்தனையை ஆக்கிரமித்தன.

 

புரண்டு படுத்து கண்களை இறுக்கமாக மூடி உறங்க முயன்றாள். அப்போதுதான் அவளை தாலாட்டுவது போல் பியானோ இழைந்து. சட்டென்று உற்சாகத்துடன் எழுந்து அமர்ந்தாள் மிருதுளா. நேரம் பதினொன்று என்றது சுவர் கடிகாரம்.

 

நேரமாகிவிட்டதே என்று புத்தி அறிவுறுத்தியது. மனமோ அவன் விழித்துத்தானே இருக்கிறான் என்று உந்தியது. பின்னோக்கி இழுக்கும் தயக்கத்தை விஞ்சியது பக்கத்து அறையிலிருந்து வந்த ஈர்ப்பு. மெல்ல எழுந்து பியானோ அறைக்குச் சென்றவள் வாயிலில் தயங்கி நின்றாள். அவள் வந்தது தெரிந்தும் அவன் பார்வை மற்றும் கவனம் இரண்டும் இசைப் பெட்டியிலிருந்து விலகவில்லை.

 

ஓரிரு நிமிடங்கள் அவனுடைய அங்கீகரிப்பை எதிர்பார்த்து தயங்கிநின்ற மிருதுளா பிறகு தானாகவே உள்ளே சென்றாள். பியானோவிற்கு எதிரில் கிடக்கும் சோபாவில் அமர்ந்தாள். அடுத்தடுத்து தொடர்ந்து அவன் வாசித்த மூன்று பாடல்களில் மூழ்கி லயித்தாள்.

 

பியானோ பெட்டியில் அவன் விரல்கள் ஆடும் நடனம், ஏறி இறங்கும் புருவத்தின் தாளம், கூடிக் குறையும் உதடுகளின் அழுத்தம், கற்றையாய் நெற்றியில் சரியும் கேசம், ஒற்றை தலை சிலுப்பலில் அதை அவன் மேலே ஏற்றும் பாங்கு என்று அவனுடைய அசைவுகள் ஒவ்வொன்றும் அவளுக்குள் ஆழமாக பதிவாகின.

 

மூன்றாவது பாடல் முடிந்த பிறகு அறையில் நிசப்தம் சூழ்ந்தது. பார்வைகள் இரண்டும் மௌனமாய் மொழியாடிக் கொண்டன.

 

“ஐம்… சாரி…” – சற்று நேரம் கழித்து மிருதுளா வாய்திறந்தாள்.

 

“சாரி! எதுக்கு?”

 

“அவனை ப்ரொடெக்ட் பண்றீங்கன்னு நெனச்சேன்”

 

அவன் புருவம் சுருங்கியது. மிருதுளா பூஜாவோடு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறாள் என்கிறவரைதான் அவனுடைய செவிக்கு வந்திருந்தது. அதற்குமேல் அவள் யாருடைய அறைக்குச் சென்றாள்… உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் அவளை தொடர்ந்துக் கொண்டிருந்த நிழல் உருவத்தால் அறிந்துகொள்ள முடியவில்லை. காரணம், பாதிக்கப்பட்ட அந்த பெண் தங்கியிருந்த அறையை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அந்த நியூஸ் வெளியே தெரிவதை கோர்த்தா விரும்பவில்லை என்பதே அத்தகைய பாதுகாப்புக்கு காரணம்.

 

ஆகவே அவனுக்கு கிடைத்த குறைந்தபட்ச தகவலை கொண்டு, அவளுடைய இந்த மொட்டையான பேச்சை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, “யாரை ப்ரொடெக்ட் பண்றேன்னு நெனச்ச?” என்றான் குழப்பத்துடன்.

 

“அந்த பொண்ண ஹராஸ் பண்ணினவனை”

 

“ஓ!” – இப்போது அவனுக்கு அனைத்தும் தெளிவாக விளங்கிவிட்டது.

 

“யார் உன்கிட்ட இதெல்லாம் சொன்னது? பூஜாவா?”

 

“அது மேட்டர் இல்ல”

 

“ஓ ரியலி! வேற எது மேட்டர்?” – நக்கலும் கோபமுமாகக் கேட்டான்.

 

“யு பனிஷ்ட் ஹிம். அதுதான் மேட்டர்” – அவள் குரலில் நிறைவு இருந்தது. முகத்தில் மகிழ்ச்சியிருந்தது. கண்களில் பெருமிதமிருந்தது.

 

சட்டென்று அவன் முகத்தில் ஒரு தீவிரம் வந்தது. “என்னைய அப்படி பார்க்காத ஐம் நாட் எ ஹீரோ… என்னோட தொழிலை தாண்டி ஒரு துரும்பையும் நா அசைக்க மாட்டேன். அவனால கோர்த்தாவுக்கு பிரச்சனை. பிரச்சனைகள் எதையும் நாங்க உள்ள வச்சுக்கறது இல்ல. முடிச்சிடுவோம்… அவனையும் முடிச்சிட்டோம். அவ்வளவுதான்” என்றான் அலட்சியமாக.

 

அவளிடம் தன்னை ஹீரோவாக நிலைநிறுத்த வேண்டும், அவளை தன் பொறியில் சிக்கவைக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய எண்ணம். ஆனால் தன்னுடைய எண்ணத்திற்கே எதிராக ஒரு கூற்றை வெளியிட்டான். எந்த உந்துதல் தன்னை அப்படி பேச வைத்தது என்று அவனுக்கே புரியவில்லை.

 

மிருதுளாவின் முகம் சுருங்கியது. அவளுடைய புருவங்கள் முடிச்சிட்டன. அப்போதுதான் அவனுக்கு தன் தவறு புரிந்தது. அடுத்த நொடியே அவனுடைய முகமும் குரலும் மாறியது. கபடன் தலைதூக்கினான்.

 

“நீ ரொம்ப அப்பாவி மிருதுளா… கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். குறிப்பா இந்த மாதிரி இடத்துல. ஈஸியா யாரையும் நம்ப கூடாது. புரியுதா?” – அக்கறையோடு கூறினான்.

 

அவன் நம்ப கூடாது என்று அறிவுரை கூறும் போதுதான் அவனை முழுமையாக நம்பவேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. முகத்தில் மலர்ச்சியும் மீண்டது.

 

“வா… இப்படி வந்து உட்காரு” அவளை பியானோ ஸ்டூலில் அமரச் செய்து சுலபமான நோட்ஸை கற்றுக் கொடுத்தான். அப்படி அவன் கற்றுக்கொடுக்கும் போது இசைப்பெட்டியின் விசைகளில் அவனுடைய விரல்களின் நளினமான அசைவையும் மென்மையான தீண்டலையும் கண்கொட்டாமல் கண்ட மிருதுளா, ‘இதே கை கொலையும் செய்யுமா!’ என்று எண்ணினாள்.

 

“விருப்பம் வேற கடமை வேற” என்றான் அர்ஜுன்.

 

சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் மிருதுளா. மனதில் நினைப்பதாக எண்ணி வாய்விட்டு உளறியிருக்கிறோம் என்பதை உணரவே அவளுக்கு சில நொடிகள் பிடித்தது. அதன் பிறகுதான் அவனுடைய கூற்றின் பொருள் என்ன என்பதைப் பற்றி யோசித்தாள். அவளை அதிக நேரம் யோசிக்கவிடாமல் அவனே விளக்கமும் கூறினான்.

 

“மியூசிக் என்னோட விருப்பம்… துப்பாக்கி என்னோட கடமை… என்னோட கடமையை உன்னோட இடத்திலிருந்து மதிப்பிடாத. கணக்கு தப்பா போகும். டோன்ட் ஜட்ஜ் மீ, ஓகே” என்று கூறிவிட்டு லேசாக புன்னகைத்தான். அந்த புன்னகை அவ்வளவு அழகாக இருந்தது – மிருதுளாவின் பார்வைக்கு.

 

“யாராலயும் உங்கள ஜட்ஜ் பண்ண முடியாது. நீங்க ரொம்ப வித்தியாசமானவர்” என்று கூறிவிட்டு அவன் சொல்லிக் கொடுத்த நோட்ஸை வாசித்துப் பழகினாள். அவனோடும் இசையோடும் தனித்திருக்கும் அந்த பொழுதை அவள் மிகவும் ரசித்தாள்.

 

அன்றைய செஷனை முடித்துக் கொண்டு இறுதியாக அவள் கிளம்பிய போது அர்ஜுன் அவளுக்கு ஒரு பரிசு கொடுத்தான்.

 

‘அலைபேசி!’ – மிருதுளாவின் கண்கள் விரிந்தன. ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள்.

 

“வாழ்ந்த ஊர்லேருந்து திடீர்ன்னு ரொம்ப தூரம் வந்துட்ட. அங்க உனக்கு ஃபிரண்ட்ஸ் இருக்கலாம்… அவங்ககிட்ட பேசணும்னு தோணலாம்… தேவைப்படலாம்… வச்சுக்க” என்றான்.

 

மிருதுளா பூரித்துப்போனாள். அவனுடைய அக்கறையும் கவனிப்பும் அவளை மெய்சிலிர்க்கச் செய்தது. அதுமட்டுமல்ல… அவள் மீது அவனுக்கு எத்தனை ஆழமான நம்பிக்கை! அலைபேசியையே கையில் கொடுத்துவிட்டானே! – குற்றஉணர்ச்சிக் கூட தோன்றியது. ஆம்… அவனுடைய நம்பிக்கைக்கு தகுதியாக அவள் நடந்துகொள்ளவில்லையே! அவளிடம் ரகசியம் இருக்கிறதல்லவா. அந்த குற்றஉணர்ச்சி.

 

ஷாப்பிங் மால் கழிவறையில் போனை கடன்வாங்கி திருட்டுத்தனமாக தாய்க்கு தொடர்புகொள்ள முயன்றதை அறிந்து, தன்னை இன்னும் சுலபமாக வேவு பார்க்கத்தான் இந்த அலைபேசியை அன்பளிப்பாக கொடுக்கிறானோ என்கிற சந்தேகம் எள்ளளவு கூட அவளுக்குத் தோன்றவில்லை. அவனை முற்றும் முழுதாக நம்பினாள். அந்த நம்பிக்கை தன்னை எவ்வளவு பெரிய ஆபத்திற்கு ஆளாக்கப் போகிறது என்பதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.

 

*******************

 

அந்த அலைபேசியை கையில் எடுக்கும் பொழுதெல்லாம் அவளுக்குள் ஒருவித குறுகுறுப்பு இருந்துகொண்டே இருந்தது. தவறு செய்வது போன்ற உணர்வு அவளை சங்கடப்படுத்தியது. தன்னைப் பற்றிய உண்மையை சொல்லிவிட வேண்டும் என்றுதான் விரும்பினாள். ஆனால் ஏதோ ஒரு உள்ளுணர்வு அவளை தடுத்துக் கொண்டே இருந்தது. அதோடு தாயின் நினைவுகளும் அவளை உறங்கவிடாமல் செய்தது. அவர்களுக்கு என்னவாயிற்று என்கிற கவலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது.

 

பகல் முழுக்க இருவரும் அவரவர் உலகத்தில் மூழ்கியிருந்தாலும் இரவு உறங்கச் செல்வதற்கு முன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருவரும் சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். இசையோடு இணைந்திருக்கும் அந்த நேரத்தை இருவருமே தனிச் சிறப்பு வாய்ந்ததாக உணர்ந்தார்கள். அந்த நேரத்தை விரும்பினார்கள் – ரசித்தார்கள் – அந்த நேரத்திற்காக கார்த்திருக்கவும் செய்தார்கள். இருவருக்கும் இடையே ஓர் அழகான உணர்வு பரிமாற்றம் நடந்து கொண்டிருந்தது. பெயரிட முடியாத ஆரம்பநிலை அது. பாலின ஈர்ப்பிற்கும் நட்பிற்கும் இடையில் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்திருந்தார்கள். அல்லது அப்படி இணைந்திருப்பதாக மிருதுளா நம்பினாள்.

 

*********************

 

நேரம் நள்ளிரவை நெருங்கி கொண்டிருந்தது. ஊருக்கு வெளியே பராமரிப்பற்று கிடந்த அந்த கட்டிடத்தில் மின்விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. கோர்த்தா ஆட்களின் நடமாட்டமும் அதிகமாக இருந்தது. இருள் மறைவில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை கவனித்தால் உள்ளே பெரிய தலைகள் இருப்பதை கூட அறிந்துகொள்ளலாம்.

 

“இதுவரைக்கும் யார் லீடிங்னு தெரியல” – காவலுக்காக வெளியே சுற்றிக் கொண்டிருந்தவர்களின் ஒருவன் சொன்னான்.

 

“இங்கதான் இவ்வளவு பேர் இருக்கோமே. நீ வேணுன்னா கொஞ்ச நேரம் உள்ள போயி பார்த்துட்டு வா” – மற்றவன் பதில் சொன்னான்.

 

முந்தையவனுக்கு உற்சாகம் பிரவாகமெடுத்தது. “சீக்கிரம் வந்துடறேன்” என்று கூறிவிட்டு உள்ளே ஓடினான். சிங்கங்கள் இரண்டு ஆக்ரோஷத்துடன் மோதிக்கொள்ளும் காட்சியை நேரடியாக பார்க்க வேண்டும் என்கிற ஆவல் அவனை துரத்தியது.

 

பாக்சிங் ரிங் போன்று பாதுகாப்பு அம்சங்களோடு ரப்பார் கயிற்றால் கட்டப்பட்ட ரிங் அல்ல அது. பத்து அடி உயர இரும்பு கம்பிவலையை கூண்டு போல சுற்றி அடைத்து வைத்திருந்தார்கள். ‘கேஜ் ஃபைட்டிங்’ என்றழைக்கப்படும் கோரமான சண்டை போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளும் சிங்கங்கள் இரண்டும் உள்ளே ஒன்றை ஒன்று பார்த்து உறுமிக் கொண்டிருந்தன.

 

இவருடைய உடம்பிலும் இரத்தக் காயம் அதிகமிருந்தது. கடுமையான பயிற்சியால் உடம்பில் கச்சிதமாய் தேங்கியிருந்த சதைக்கட்டுகள் வியர்வையில் குளித்திருந்தது. சுஜித்திற்கு கண்ணோரம் காயம். மாலிக்கிற்கு நாசியில் வெட்டுப்பட்டிருந்தது. பசித்த புலியின் கொலைவெறியோடு இருவரும் ஒருவரையொருவர் வேட்டையாட தயாராக நின்றார்கள். ‘டிங்’ என்று ஒற்றை மணியடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் பாய்ந்தார்கள். யாரோ ஒருவரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, காரணமே இல்லாமல் காட்டுத்தனமாக தாக்கிக் கொண்டார்கள். சுஜித்தின் வேகமும் ஆக்ரோஷமும் மாலிக்கைவிட இருமடங்கு அதிகமாக இருந்தது. அசுரத்தனமாகத் தாக்கி அவனை நிலைகுலைய வைத்தான்.

 

கம்பி வளையத்திற்கு வெளியே குழுமி நின்ற வீரர்கள், அந்த கோரக்காட்சியைக் கண்டு ரசித்து உற்சாகக் கூச்சலிட்டார்கள். மேல்தளத்தில் அமர்ந்தபடி கீழே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள் பெரிய தலைகள்.

 

“மாலிக் தேவையில்லாம ரிஸ்க் எடுத்துட்டான்” – “ஜெயிப்போம்னு தெரிஞ்சுதான் சுஜித் ரிங்ல இறங்க சேலஞ் பண்ணியிருக்கான்” – “அவனுக்கு அவனோட பவர் தெரிஞ்சிருக்கு” – அர்ஜுனோடு அமர்ந்திருந்த கோர்த்தாவின் மற்ற தளபதிகள், வெல்லப்போவது சுஜித் தான் என்கிற எதிர்பார்ப்போடு தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

“அவனோட பவர் என்னனு மட்டும்தான் அவனுக்கு தெரியும். வீக்கனஸ் தெரியாது” – அவர்களை மறுத்துப் பேசினான் அர்ஜுன். அந்த நொடியில் மாலிக்கின் எதிர்பாராத வஜ்ர தாக்குதலுக்கு ஆளாகி தரையில் சரிந்தான் சுஜித் சிங்.

 

மாலிக்கிற்கு ஆதரவானவர்கள் கூச்சலிட்டு அவனை ஊக்கப்படுத்தினார். “கில் ஹிம்… கில் ஹிம்” என்று கத்தி அவனுடைய வெற்றியை உறுதி செய்து கொள்ள தூண்டினார்கள்.

 

ஆனால் மாலிக் அதை செய்யவில்லை. நிற்க முடியாமல் தள்ளாடிய நிலைமையிலும், மீண்டும் சுஜித் எழுந்தால் தன்னை விழத்தட்டும் வாய்ப்பிருக்கிறது என்கிற நிலையிலும், அவன் மீண்டும் எழுந்து தன்னை தாக்க முற்படுவான் என்கிற எச்சரிக்கையோடு பார்த்துக் கொண்டிருந்தானே தவிர கீழே கிடப்பவனை மேலும் தாக்கி தன்னுடைய வெற்றியை உறுதி செய்து கொள்ளவில்லை.

 

அனைவரும் அவனை வியப்புடனும் எதிர்பார்ப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுஜித் மீண்டும் எழப்போகிறான், மாலிக்கை நிலைகுலைய வைக்கப்போகிறான் என்றுதான் அனைவரும் நம்பினார்கள். ஆனால் குறிப்பிட்ட நேரம் கடந்தும் அவனிடம் எந்த அசைவும் தெரியவில்லை. மூன்று முறை மணியோசை ஒலித்த பிறகு மாலிக் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதை கொண்டாடுவதை தவிர்த்து, நண்பனிடம் விரைந்தான் மாலிக்.

 




21 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kurinji says:

    Kathaiyoda mudivu yosisittu Kathai eluthuvengalaa..

    En enraal ik Kathai nulin Mel nadakum. Payanam.


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      yes yes…Muduvu ellaam already yosichachchu pa… but flow correct ah varanum la…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Arhitha says:

    Where r yu nithya sis? Missing the story


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Hey… Very sorry pa… Episode ezhudhitten… padichcu paarththaa enakke mokkaiyaa irukku… :O rewrite pannikittu irukken. kandippa nalaikku pottudren…. Very sorry to all the readers..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    adhira shana says:

    waiting for ur ud from long timee……konjam ud podunga pls


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Reena says:

    Nithya sis one week aachu epo ud poduveenga


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Samri Thi says:

    Y’day unga ud ethirparthen sis but emathitinga 😥thirumba busy ah? Today ud unda?


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Sorry pa…Nalaikku pottudren… innum mudikkala…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anjali Suresh says:

    Ithenna da aniyayama iruku. Sambanthame illama adichikranunga… aju nee unake theriyama mrithu side fall agura. Enakithu pudichirukku.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya Ganeshan says:

    Nice ud sis…👌👌👌👌


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Afrin Zahir says:

    Each day I am just sitting and memorizing the whole story repeatedly . That’s how much I’m addicted to this . I think I should have started it late so that I didn’t have to wait for the next episodes but the waiting is also kicky!! Please try to give regular uploads as it’s getting more difficult to wait 😭😭😭😭


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Aasha says:

    Can’t tolerate women getting humiliated even in stories ! I mean he is a killer and how could she hve feelings for that beast ..is she really that weak mentally ?? Even if he behaves good with her she should ask him to let her free instead devoleping love ..


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      I respect your thought and honest comment. Thank you for that. As the story Nizhal nilavu comes under mafia romance genre the hero would obviously be a beast which all the readers might know from the beginning.

      She is not blindly falling for the killer as you say. ofcourse She has some kind of feelings for him. but that is for the soft, gud and caring man who is inside the killer, that too not even reached the friendship level so far. so no need to worry about the strong love and all right now.

      //Even if he behaves good with her she should ask him to let her free instead devoleping love// – ofcourse she will do that. and about developing love – its not a thing to develop… nothing to do with developing love especially in her age. its a feeling… it blossom in heart. Even after knowing all of his brutal activities if she feels love for him in future that’s not a crime I think. Only thing matters is how she handles that feeling. hopefully I’ll convince you in upcoming episodes.

      I really like your comment thats the reason for this long explanation. Thank you… 🙂


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Aasha says:

        Thank you for handling it so perfectly


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Afrin Zahir says:

        Even I had the Same thoughts .. but A very convincing explanation 👍🏻👍🏻


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Arhitha says:

    Mrithula ava self respect vitutu edhum panra maadhiri vachiradhinga sis


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Miruthu kitta enna ragasiyam irukku … Sujith Ku enna aachu .. Semma epi nithya


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Umamanoj says:

    Chinna meen pottu periya meen ah pudikrathu kooda theriyathalavu nambikai Arjun mela..ithu sariyilaiye…
    Sujith… ennachu…sema interesting..
    Seekiram update podunga Nithya…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kurinji says:

    Miri kutti ponne unakku intha arakanai than pidikutha.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Samri Thi says:

    Interesting sis👏Arjun nadikarathu kastama eruku sis Ava innocent nu therinche enn epadi emathuran so sad… Kandipa Mila love panromnu ninachu 1st propose panita kudathu… Avan nose cut pannuna thanga Matta… Mila mom penna metkarathuku Nayak atkal ah nerunki erupangala? Arjun suya rubam therinchu asinka padama Mila thapichutuvala? Mila Nayak family erunthalum avangala pathi ethume theriyama innocent ah eruka but aju avala Sikka vachu sathika ninaikuran… Avan sonnathu Pola Avan hero ila villan tha … Pali vangurathukum kariyam sathikavum love use panrathu remba thappu…pavam Mila… Epo theliva sis… Eagerly waiting for your next ud… keep rocking 👍

You cannot copy content of this page