காஜலிட்ட விழிகளே 11
2309
0
கிரிஜா திருமணம் முடிந்த பிறகு கார்த்திக் ஸ்ருதியை சந்திக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. கைபேசியல் பேசினாலும் வாட்ஸ்ஆப்பில் உரையாடினாலும் ஒரு பத்து நிமிடம் பார்த்ததுபோல் ஆகுமா? ஒரு வாரம் அவளைப் பார்க்காமல் தவித்துப்போய்விட்டான் அவன். இரவு நேரத்தைக் கடத்த அரும்பாடு பட்டான். தருணிடம் எந்நேரமும் “டேய் இப்ப மணி என்ன?” என்று கேட்டு ஆமையாக நகர்ந்த மணித்துளிகளை நகர்த்தப்பார்த்தான்.
“டேய் தருண் மணி என்னடா? ”
“அரை மணிநேரத்திற்கு முன்பாக நான் சொன்னதில் இருந்து அரை மணிநேரம் கூட்டிக்கோ! ”
“டேய் மடையா மணியைச் சொல்லு! அந்த பிரசாத் மாமியார் வீட்டில் ஓரேடியாக டேரா போடுறான். நான் என் ஆளுகூட பேசவே முடியல்லை. எப்ப பாரு மாமா வந்திருக்கார், கறி பிரியாணி செய்யிறோம் கோழி பிரியாணி செய்யிறோம் என்கிறா.. இவனுக்கு பிரியாணி செய்தே என் ஸ்ருதிக்கு உடம்பு இளச்சிடும்போல.. மணியைச் சொல்லுடா நான் சாப்பிட்டுகிட்டு இருக்கேன்ல்ல? ஹாலில் கிளாக் வேலை செய்யலை.”
“டேய் இருபது வருஷத்திற்கு முன்பாக சூரியனைப் பார்த்துதான் எல்லோரும் மணியை கண்டுபிடிச்சாங்க. அப்புறம் கடிகாரம்.. ரிஸ்ட் வாச்ட் அது இதுன்னு வந்திடுச்சு. ஆனால் இப்போ செல்ஃபோனில் இருந்து டாப் லாப்டாப் ஏன் நாம பார்க்கிற டி.வியில்கூட டைம் பார்க்கலாம். ஆனால் இதையெல்லாம் விட்டுட்டு நீ என்கிட்ட டைம் கேட்டு பண்ற டார்ச்சர் மாதிரி எதுவுமே இல்லைடா. ”
“சொல்லுன்னா சொல்லேன். ”
“மணி பத்து. ”
“இப்ப ஸ்ருதி அப்பா தூங்கியிருக்க மாட்டார். பதினோரு மணிக்குத்தான் தூங்குவார். அதனால்.. ”
“அதனால் நீ என்னை திரும்ப பதினோரு மணிக்கு எழுப்பி மணி என்ன என்று கேட்கப்போற! அப்படித்தானே? ”
“கோகுல் அவன் ஃப்ரண்ட் நரேனுக்கு கிட்னி தேவைப்பட்டால் கிட்னியே குடுக்கப்போறானாம். உனக்கு அந்த விஷயம் தெரியுமா? ”
“கார்த்திக் நீ ஒண்ணு புரிஞ்சக்கணும். நான் கோகுல் இல்லை. நீ நரேன் இல்லை. இன்னொன்று நரேன் கீழ்பாக்கத்தில் இல்லை கிட்னி சென்டரில் ட்ரீட்மென்ட் பார்த்திட்டு இருக்கான். அது ரொம்ப சின்ன பிராப்ளம்தான். மாத்திரையிலேயே சரியாகிடும். நீ கீழ்ப்பாக்கம் கேஸ். உன் வியாதிக்கு ஸ்ருதி வந்து உன்னைக் கட்டிப்பிடித்து.. ”
“ அங்கேயே நிறுத்து.. ”
“சும்மா மேலோட்டமாக சொல்லிமுடித்துக்குறேன்டா.. ஆழமாக மேட்டருக்குள் போகமாட்டேன். நானும் தூங்கணும்தானே? ம்? எங்க விட்டேன்? ஆ.. ஸ்ருதி வந்து.. ஸ்ருதி வந்து உன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கணும். அது இந்த ஜென்மத்தில் நடக்கப் போவதில்லை. அதனால் மற்றவர்களோடு உன் பிரச்சனையை ஒப்பிட்டுப் பார்க்காதே. குட் நைட். அப்புறம் பதினோரு மணிக்கு எழுப்பினால்.. ”
“எழுப்புவேண்டா! நீ எழுப்பகூடாதுன்னு சொன்னதால் கண்டிப்பா எழுப்புவேண்டா மச்சான். எழுப்பினால் என்ன பண்ணுவ? ”
“உன்னை நானே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திடுவேன். ஓகேயா? என் ஆர்த்தியைப் பற்றி கனவு காணும் போது முத்தத்தோடு மட்டும் நிறுத்துவேன்னு தோணலை. ”
“கருமம் கருமம். தூங்கித் தொலை. ”
அதன் பிறகு தருண் தூங்கியேவிட்டான் கார்த்திக் தன்னை நிச்சயம் எழுப்பமாட்டான் என்று நினைத்துக்கொண்டு.
பத்து ஐம்பதுக்கு ஸ்ருதிக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்தான்.
அடுத்த நொடி அவள் அவனை அழைத்தாள்.
“நல்லவேளை கார்த்திக் அப்பா இப்போதான் என்கிட்ட பேசிட்டு படுக்கப் போனார். ”
“இவ்வளவு நேரமா பேசிகிட்டிருந்தார்? நம்ம விஷயத்தை சொல்லிட்டியா என்ன? ”
“இல்லப்பா கார்த்திக். அப்பா கேதர்நாத் பத்ரிநாத் போயிட்டு வந்தபிறகுதான் நான் அவர்கிட்ட பேசணும். இரண்டு நாளில் கல்யாண விருந்து முடிந்ததும் கிளம்பிடுவார். எண்ணி முப்பது நாள்தானே? வந்திடுவார். அதுவரை வெயிட் பண்ணு ப்ளீஸ்! உங்க அப்பாவை அதன்பிறகு நேரில் வந்து பேசச்சொல்லு. அப்பா நிச்சயம் யெஸ் சொல்வார். ஜாதகம் பார்க்கணும் என்று சொன்னால் கிரிஜாவும் அம்மாவும் சப்போர்ட் பண்ணணும்.. முதலில் அம்மாகிட்ட விஷயத்தைச் சொல்லணும்..”
“ஒரு நிமிஷம்கூட வெயிட் பண்ண முடியாது. அவர் கேதர்நாத் போறதுக்கும் பத்ரிநாத் போறதுக்கும் நாம ஹனிமூன் போறதுக்கும் என்ன சம்பந்தம்? ஹனிமூனுக்கு உங்க அப்பாகிட்டயா கைசெலவுக்கு பணம் கேட்கப்போறேன்? உங்க அப்பா அடுத்த வருஷம் கேதர்நாத் போகட்டும் கிஷ்கின்தா போகட்டும். எனக்கு ஒன்றும் இல்லை. இப்போவே நான் என் அப்பாகிட்ட பேசி உன்னைப் பெண் கேட்டு வரச்சொல்லப்போறேன். ”
“கார்த்திக் அவசரப்படாதே. நான் அம்மாகிட்ட மட்டும் முதலில் சொல்லிடுறேன் கார்த்திக். கிரிஜா அக்கா சப்போர்ட் எனக்கு ரொம்பத் தேவைப்பா.. அப்பா ஜாதகக் கட்டைத் தூக்கினால் அவரை அடக்கிட கம்மியுனிஸ்ட் கிரிஜா அக்கா வேண்டாமா? ஜாதகக் கட்டை பிடுங்கி எறிந்திட ஒரு ஆள் வேண்டாமா? ”
“உங்க அப்பாவை விட நீ கிரிஜாவுக்குத்தான் பயந்து சாவுற.. ”
“ கிரிஜா அக்கா யார் என்று நினைச்ச? அவளுக்கு நான் மான்க்குட்டி முயல்குட்டி.. இப்படி எதுவேனும்னாலும் நீ வச்சிக்கலாம். ஆனால் நான் கரடிக்குட்டியென்றால் அவள்தான் தாய்க்கரடி. குங்காருக்குட்டி யென்றால் அவள்தான் அம்மா கங்காரு.. ”
ஸ்ருதி சொன்னது நூறு சதவிகிதம் உண்மை. கிரிஜா எப்போதும் அதிகாரத்தோடு அக்கரை காட்டுவாள் ஸ்ருதியிடம். அதில் அவளுக்கு விருப்பமும்கூட. சில நேரங்களில் ஸ்ருதிக்கு அதெல்லாம் அதிகப்படி என்று தோன்றினாலும் பல நேரங்களில் அது நன்மையாகவும் நல்ல உதவியாகவும்தான் இருக்கும். பஸ் பாஸ் மறந்துவிடாமல் எடுத்துக்கொடுப்பது , “நல்ல டிரஸை வாசிங் மிஷினில் போடாதே என்று சொன்னாள் கேட்கமாட்டிக்கிறியே?” என்று வைதுகொண்டே அவளது துணிமணிகளை ஸ்திரி செய்து கொடுப்பது என்று கிரிஜா அதிகாரம் கலந்த அன்போடு உதவிகள் செய்திடுவாள்.
“ போதும். போதும்.. உன் அக்கா புராணம். உன் அம்மாகிட்ட சீக்கிரம் விஷயத்தைச் சொல்லு. ”
“சரி கார்த்திக் சீக்கிரம் சொல்லிடுறேன். நம்ம ட்ரூப் எப்படி போகுது? ஆர்ட்ஸ் காலேஜ் ப்ரோகிராமுக்கு அப்பா என்னை போகச்சொல்லிட்டார். அதுதான் என் கடைசி ப்ரோகிராம் என்று ஸ்டிரிக்ட்டா சொல்லிட்டார். ஒரு வாரம் பாடாமல் இருந்ததே என்னமோ மாதிரி இருக்கு. இந்த ப்ரோகிராமில் ஆசை தீரப்பாடணும் கார்த்திக். தருண்தான் அந்த காலேஜில் பெர்மிஷன் வாங்கிக் கொடுத்தானாமே? அவனோட ஏற்பாடா? அவனுக்கு தாங்க்ஸ் சொல்லிடு. ”
“ஆமாம் ஆமாம். அந்த எருமை ஏற்பாடுதான். என்றவன் கால்களால் எட்டி உதைத்து தருணை எழுப்பி டேய் ஸ்ருதி தாங்க்ஸ் சொல்லச் சொன்னா.. கேட்குதா ? ஸ்ருதி சத்தமாகச் சொல்லு அவனுக்கு கேட்கலையாம். ”
ஸ்ருதி சத்தமாக “தாங்க்ஸ் ” என்று சொல்லும்போது கைபேசியை தருண் காதினில் வைத்தான். தருண் கைபேசியை தட்டிவிட்டு போர்வையை இழுத்து முகம் வரை மூடும்முன் “எருமை மாடே ” என்றான்.
“என்னப்பா தருண் சொன்னான்? ” என்று அவன் பேசியது புரியாது ஸ்ருதி கேட்டாள்.
“ஓ தருணா? அவன் என்னை செல்லமாகக் கூப்பிட்டு வெல்கம் ” என்றான்.
“ஸ்ருதி நீ காலேஜில் பாடி முடித்துவிட்டு வரும்போது நீ ஒரு ஸ்டார் ஆகியிருப்ப. அந்த மாதிரி பாட்டுகள்தான் உனக்கு நான் பாடுவதற்கு எடுத்து வச்சிருக்கேன். ”
“முவாயிரம் காலேஜ் பசங்க பொண்ணுங்க முன்னாடி நீயும் நானும் சேர்ந்து பாடும்போது எப்படியிருக்கும்?”
“ ரொம்ப நல்லாயிருக்கும். ஆனால் அதைவிட ஒரு நல்ல ஸ்டேஜ் இருக்கு. ஆனால் அங்கே ஐயர் மட்டும்தான் பாடுவார். அந்த ஸ்டேஜ்தான் என் கண்ணில் எப்போதும் வருதுடி! ”
“ போ கார்த்திக்! போடா! ”
“ஏய்.. எத்தனை தடவை சொல்வது என்னை டாபோட்டுப் பேசாதே என்று. நீ அடங்க மாட்ட.. சரி நீ என்ன கலர் டிரஸ் போட்டிருக்க? ”
“ஏன் எதுக்கு கேட்குற? காரணம் சொல்லு..
“காரணம் சொன்னால் உன்னோட ரூல்ஸை மீறணும். எனக்கு ஓகே. உனக்கு எப்படி? ”
“ கலர் எல்லாம் சொல்ல முடியாது. நான் ஃபோனை வச்சிடப்போறேன். ”
“ ஏய். கலர் சொல்லிட்டு வை. ”
“ கார்த்திக் கிரிஜா முழிச்சிடுவா.. பை. நாளை நான் மிஸ்ட் கால் கொடுக்கிறேன். நீ கூப்பிடாதே.. சரியா? யாரும் பார்த்திட்டால்.. ”
கார்த்திக் பதில் சொல்லும் முன் எப்போதும் போல் எதிர்முனை துண்டித்துக்கொண்டது.
ஆனால் அவனுக்குத்தான் மிச்சம் மீதி உரையாடல் தெரியுமே.. “யாரும் பார்த்திட்டால்? என்ன பண்ண? நம்ம காதலைப் பற்றி சொல்லும்போது பரீட்ச்சைக்கு வானதிகிட்ட டவுட் கேட்கிறேன்னு சொல்லிட்டு அவன்கூடத்தான் தினம் தினம் அரட்டை அடிச்சியா? என்று கிரிஜா அக்கா எகிறுவாள்! அம்மா ‘என்கிட்டயே எத்தனை பொய் சொல்லிருக்க? ’ என்று கோபிப்பார்.. ”
“அப்புறம் இத்யாதி இத்யாதி BLA BLA.. ” என்று தனியே பேசிக்கொண்டான்.
என்னை என்னமாய் பாடுபடுத்துறா.. இவளை ஒரே ஒரு நாள்தான் ஹனிமூனுக்கு கூட்டிட்டு போகணும். என்று நினைத்தவன். அச்சச்சோ அது நமக்கும் கஷ்டமாச்சே என்று தண்டனையை மாற்றினான்.. எப்படி?
இவளை நாற்பது நாள் ஹனிமூனில் காஷ்மீர் குளிரில் நடுங்க வைக்கணும். அதன்பிறகு ஒரு பத்துநாள் கோவா வெயிலில் வறுத்து எடுக்கணும்.. அதன் பிறகு லட்சத்தீவுக்கு ஃபிளைட்டில் கூட்டிட்டு போகாமல் கப்பலில் கூட்டிட்டு போகணும்… ஒரு நாள் பயணத்தை ஆறு நாள் என்று இழுத்தடிக்கணும்.. அவள் கன்சீவ் ஆனபிறகுதான் ஹனிமூனையே ஸ்டாப் பண்ணணும்.. என்று தண்டனைகளை நினைத்தபோதே அவன் மனம் பித்து பிடித்தது.
ஆனால் தனது பொருமை மட்டும் காற்றில் பறப்பதை கார்த்திக் நன்கு உணர்ந்தான். அவர்களது உரையாடல் ஞாபகம் வந்தது.
ஒரு மாதம் அவள் காத்திருக்கச் சொன்னதும் ஞாபகம் வந்தது.
அவளது அபாரமான விளக்கங்களைக் கேட்டு கடுப்பில் இருந்தான்.
அவனும் பொருமையைக் கைவிட்டான்.
பொருமையும் அவனைக் கைவிட்டது.
எதிரே எது கிடைத்தாலும் அதனை ஓங்கி ஒரு குத்துவிட மனம் எண்ணியது.
ஆனால் அவன் கண் முன்னே பட்டது தருணின் தூங்கி வழியும் திரு உருவம் மட்டுமே!
அமைதியாக பூனைபோலச்சென்று காத்தாடி பட்டனை அணைத்தான் கார்த்திக். பத்து பேரை அடித்து வீழ்த்திவிட்ட பொருமை வந்தது. அமைதியாகத் தனது அறையில் தூங்கப் போனான்.
Comments are closed here.