Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

Hey! Nee Romba Azhaga Irukee – 04

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே! -04

வினிதா கார்த்திக்யின் புகைப்படத்தை பார்த்து மலைத்தது இல்லாமல் திகைத்தும் விட்டாள்.

ஏனென்றால் அப்படி ஒரு அழகன். மிகவும் அழகு.

நேரம் காலை 8 மணி

ஏய்! வனிதா இந்த அழகான அத்தானே எங்க புடிச்சா?

சரி நான் அதெல்லாம் சொல்றேன். இப்ப காலேஜ்க்கு நேரமாச்சு கிளம்பலாமா?

இன்னைக்கு நான் வண்டி ஓட்டுறேன் நீ பின்னால உக்கார்ந்து உன் காதல் கதையை சொல்லு.

சரி வா போலாம்!

கோபாலிடம் செல்வம் குமிந்து இருப்பதால் மகள் இருவருக்கும் எல்லா வசதிகளும் செய்து கொடுத்திருந்தார். இவர்களின் கோவை வீடு ஹட்சோ காலனி பார்க் அருகில் உள்ளது. வீட்டில் ஒரே மாதிரியான நிறத்தில் இரண்டு ஸ்கூட்டி பைக்குகள். சிவப்புநிற ஃபோர்டு கார் ஒன்று வீட்டின் வெளியே இருக்கும். வனிதா வினிதாயும் காலேஜ்க்கு சில நேரங்கள் ஒன்றாகும் போவார்கள், சில நேரம் தனித்தனியாகவும் போகக்கூடியவர்கள். ஊருக்கு செல்லும் போது காரை எடுத்து செல்வார்கள். இவர்கள் வீட்டில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் தான் காலேஜ் உள்ளது.

இருவரும் காலேஜ்க்கு தயாராகினார்கள். வினிதா பைக்கை ஓட்ட வனிதா கதை சொல்லத் தொடங்கினாள்.

வனிதாவின் காதல் பிளாஷ்பேக்:

Last month நம்ம காலேஜ்ல இன்டர்ணல் கிரிக்கெட் tournament நடந்தது. நம்ம சுமதி தான் ஒரு கிரிக்கெட் பைத்தியம் ஆச்சே! அவள் அன்னைக்கு என்னை அழைத்துகிட்டு போனாள். அங்குதான் அவனை முதல் முறை தொலைவில் இருந்து பார்த்தேன். நாங்கள் செல்லும்போது அவன் பேட்டிங் செய்து கொண்டிருந்தான். நாங்கள் போய் இருக்கையில் அமர்ந்தோம். சிறிது நேரத்தில் அவனுக்கு வந்த பந்தை துக்கி சிக்ஸர் அடித்தான். அடித்த பந்து என்னை நோக்கி வந்தது மட்டுமல்லாமல் எனது தலையை பதம் பார்த்தது. என்ன பாக்குற நீ!
அந்த பந்து டென்னிஸ் பந்து தான். ஹா ஹா

பந்து எனது தலையில் அடித்ததினால் இருக்கையில் இருந்தவர்களிடம் சிறு சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் கார்த்திக் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான். அவனுக்கு யாருக்கோ அடிபட்டுவிட்டது என்று மட்டும் தெரியும். ஆனால் அது எனக்கு என்று தெரியாது. பிறகு அந்த மேட்ச் முடிவதற்கு முன் நானும், சுமதியும் வகுப்புக்கு கிளம்பிவிட்டோம்.

என்னடி கதை சொல்றேன்னு மொக்க போடுற!

சரி காலேஜ் வந்துடுச்சு! ப்ரேக் டைமலா பேசிக்கலாம்!

இன்னும் காலேஜிக்கு பத்து நிமிஷம் இருக்கு. வா கேன்டீன் போலாம்.

இருவரும் கல்லூரி கேன்டீன் சென்றார்கள்.

இவர்களின் கல்லூரி நேரங்களை தெரிந்து கொள்ளுங்கள். பிற்பகுதி வரும் கதையில் நேரத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள உதவும்.

காலேஜ் ஃபர்ஸ்ட் பெல்: 8.30AM
மார்னிங் ப்ரேக்: 10.10AM to 10.30AM
Lunch Break: 12.10PM to 1.40PM
ஈவினிங் ப்ரேக்: 3.20PM to 3.30PM
ஈவினிங் பெல்: 4.20PM

வினிதா கதை கேட்கும் ஆர்வத்தில் மிகுந்து இருந்தாள். அதைவிட வருக்கால அத்தனை இன்று சந்தித்து விடலாம் என்று நினைத்து இருந்தாள். அதனால் வனிதாவிடம் கார்த்திகை வரச்சொல்லு என்று கால் செய்து Loud Speaker லா போட சொன்னாள். அவளும் அவள் பேச்சிற்கு மறுப்பு தெரிவிக்காமல் கார்த்திக்கு கால் செய்தாள்.

கார்த்திக் வனிதா போன் உரையாடல்:

சொல்லு வனிதா!

எங்க இருக்காடா!

I am on the way

இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்டா?

Maybe 15 minutes dear. என்ன விஷயம் போனில் சொல்லு?

ஒன்னும் இல்ல என் தங்கச்சி உன்னை பார்க்கணும்டு கேக்குற.

Sorry dear! நா வர எப்படியும் லேட்டா ஆகும். நா வந்து மார்னிங் பிரேக் லா பாக்குறேன்!

வினிதா இடையில் குறுக்கிட்டு

அப்ப எங்களைப் பார்க்க வர மாட்டீங்க!

Hi வினிதா! இப்போதான் வீட்டில் இருந்து கிளப்பி இருக்கேன். See you soon! சொல்லிவிட்டு காலை கட் செய்தான்.

வனிதா இருவருக்கும் ஜூஸ் வாங்க சென்றாள். வினிதாவின் யோசனை அவர்களின் காதலை நோக்கி போனது. எப்படியும் ஜூஸ் குடித்து முடிக்கிறதுக்குள்ள. அவளிடம் நடந்ததைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்று தயாராக இருந்தாள். வனிதா ஜூஸுடன் வந்து அமர்ந்தாள்.

அதற்கு தகுந்தது போல் காலேஜ் மார்னிங் பெல் ஒலித்தது…!!!

தொடரும்.




Comments are closed here.

You cannot copy content of this page