Share Us On
[Sassy_Social_Share]Hey! Nee Romba Azhaga Irukke – 01
4058
0
ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே! – 01
இரவு 12 மணி
வனிதா முடி இருக்கும் வீட்டின் காலிங் பெல்லை அழுத்துகிறாள்..!!
“கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” “கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”
எந்த பதிலும் இல்லாததால் மீண்டும் அழுத்துகிறாள்..!
“கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” “கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”
காலிங் பெல் சத்தத்தை கேட்டயுடன் வினிதா, வனிதா தான் வருகிறாள் என்று தெரிந்து கொண்டு மொபைலை வைத்து விட்டு போர்வை போர்த்திக் கொண்டு துங்குவது போன்று பாவனை செய்தாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சங்கிதாவின் தூக்கத்தை கலைத்தது காலிங் பெல் சவுண்டு. எழுந்து வந்து கதவை திறந்தாள்..!
சாரி அம்மா! கொஞ்சம் லேட் ஆகிடுச்சிமா!
என்ன பாப்பா! துணிலாம் இப்படி நனைச்சி இருக்கு!
ஒன்னும் இல்ல அம்மா! பிரிண்ட்ஸ்கள் கூட வெளியே போய் இருந்தேன். மழை பெய்தது அதுதான் நனைத்துட்டேன்!
சரிமா! உடைய மாத்திவிட்டு வந்து சாப்பிடும்மா!
இல்ல! நான் வெளியே சாப்பிட்டேன் அம்மா! வினிதா தூங்கிட்டலமா?
பாப்பா அப்பவே தூங்க போய்டுச்சிம்மா!
சங்கீதா அவளின் அறைக்குள் தூங்க சென்றுவிட்டாள்!
வனிதா தனது அறைக்கு சென்று புதிய உடைகள் மற்றும் துண்டை எடுத்துக் கொண்டு பாத்ரூம்க்கு சென்றாள்.
ஷோவேரை திறந்து ஒரு ஆனந்த குளியலை போட்டாள்!
வினிதா மீண்டும் மொபைலை எடுத்து நேரத்தை பார்த்து விட்டு உறங்கிவிட்டாள்!
வனிதா ரசித்து ரசித்து ஏதோ சிந்தித்து கொண்டு குளியலில் முழுங்கினாள்.
தனது இரு கைகளையும் முகத்தில் இருந்து முடிக்களை கோரிக்கொண்டு தனது தேகத்தில் தண்ணிரை முழுவதும் இயக்கச் செய்வதாள்.
அவளது சிந்தனை அவள் முகத்தில் மெல்லிய சிரிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது.
குளியலை முடித்து விட்டு துண்டை எடுத்து துவட்டி விட்டு உடைகளை அணிந்ததாள்.
பிறகு தனது காட்டிலில் துள்ளி குதித்து உடலை நீட்டி படுத்தாள். ஹன்ட்பாக்கில் இருந்து தனது மொபைலை எடுத்து நேராக வாட்ஸ் ஆப்க்கு சென்றாள்.
இரவு 1 மணி
சாட்ஸ்லில் கார்த்தியின் பெயரை ஓபன் செய்து
Love u dr 😘😘😘
Miss u dr 😢😢😢
gud ni8 💗💋
மெசேஜ்களை தட்டினாள்..!!
கார்த்திக்யின் வாட்ஸ் ஆப் last seen today at 12:30 AM என்று காட்டியது.
சிறிது நேரம் போனை பார்த்து கொண்டே இருந்தாள். ஆனால் பதில் எதுவும் வரல!
களைப்பில் போனை கைலே வைத்துக் கொண்டு உறங்கினாள்.
இரவு 1 மணி 30 நிமிடம்
GK Fruits Shop, கோவை
கடைக்கு வெளியில் கார்த்திக் தனது நிறுத்திய பைக்கில் அமர்ந்துகொண்டு நண்பர்கள் உடன் வாயால் புகை வண்டி விட்டு கொண்டு இருந்தான்.
முடிந்த சிகரட்டை அனைத்து விட்டு தனது போனை எடுத்தான்.
3 வாட்ஸ் ஆப் notification வனிதாவிடம் இருந்து காட்டியது.
வாட்ஸ் ஆப் சென்று வனிதாவின் மெசேஜ்களை கண்டு புன்முறுவல் காட்டினான்.
பதிலுக்கு…!
Love u honey 💋💋💗
Miss u honey 💔
gud ni8💝
மெசேஜ்களை அனுப்பிவிட்டு போனை தனது பேன்ட் பாக்கெட்டில் சொருகினான்.
அருண், காதர், ரவி bye டா மச்சான்!
டைம் ஆச்சி டா! விட்டுக்கு கிளபுறேன் டா! See you டா!
ஓகே take care டா கார்த்தி!
கார்த்தி பைக்கை ஸ்டார்ட் செய்து வேகமாக பைக்கை அவனது வீட்டிற்கு விட்டான்.
தொடரும்..!
Comments are closed here.