Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

Hey! Nee Romba Azhaga Irukke – 02

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே! -02

பொழுது விடிகிறது!!

சங்கீதா இருவருக்கு காலை உணவை தயார் செய்து முடிக்கிறாள்!

டீயை எடுத்துக்கொண்டு வனிதாவின் அறைக்கதவை தட்டுகிறாள். கதவு திறந்த பாடில்லை. 

பிறகு வினிதாவின் அறைக்கதவை தட்டுகிறாள். வினிதா எழுந்து வந்து கதவைத் திறந்து டீயை பெற்றுக்கொள்ளுகிறாள்.

காலை 7 மணி

வனிதாவும், வினிதாவும் காலை உணவை உண்ண தயாராக இருத்தென dinning table-யில். 

உணவை இருவருக்கு சங்கீதா பரிமாறினாள்.

ஏய்! வனிதா நேற்று இரவு எங்க போனா?

ஃப்ரெண்ட்ஸ் கூட வெளிய போனேன் டி!

அது தெரியுது எந்த பிரண்ட்ஸோட போன?

நம்ம அனிதா சுமதி கூடத்தான்!

நம்பிட்டேன் டி! உன் மூஞ்ச பார்த்தாலே தெரியுது! நீ பொய் தான் சொல்லுறாடு?
ஒழுங்கா உண்மையை சொல்லுறியா இல்ல அப்பாக்கு கால் பண்ணவா?

வினிதா போனை எடுத்து அப்பாவுக்கு கால் செய்தாள். அதைக் கண்டவுடன் வனிதாவின் முகம் பயத்தில் சுருங்கியது. வனிதா செய்கையில் நான் உண்மையைச் சொல்லுகிறேன் அப்பாட்ட ஒன்னும் சொல்லாத என்று செய்கை மொழியில் பேசினாள்.

அந்த செய்கையை வினிதா புரிந்து கொண்டாள். போன் அடித்து ஓய்ந்தது!

பொள்ளாச்சி:

கோபால் பரபரப்பாக தோட்டத்தில் தொழிலாளிகளிடம் வேலை வாங்கிக் கொண்டிருந்தான். 

டேய் சரவணா! திருச்சிக்கு அனுப்பவேண்டிய லோட அனுப்பிட்டியா?

அனுப்பிட்டேன் ஐயா!

மார்க்கெட்டுக்கு அனுப்பவேண்டிய தேங்காய் லோடு போயிடுச்சா?

அதுவும் அனுப்பிட்டேன் ஐயா!

கோபாலை பற்றிய முன் கதை:- 

கோவை மாவட்டத்தில், பசுமைக்கு பெயர் போனது பொள்ளாச்சி. இங்கு தென்னை மரங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த பகுதி கண்ணுக்கெட்டிய துாரம் வரை பசுமை காணப்படும். ‘தென்னை நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. 

கோபாலின் சொந்த ஊர் பொள்ளாச்சி தான். பல தென்னை தோப்புக்கு சொந்தக்காரன். தென்னை சார்ந்த தொழில்களில் முக்கிய புள்ளி. தென்னை நார் உற்பத்தி, ஏற்றுமதி என பல்வேறு தொழிற் சாலைகள். 

இவ்வளவு இருந்தும் இளம்வயதிலே மனைவியை இழந்தவன். வனிதா, வினிதா என்ற இரு அழகிய மகள்கள். வனிதாவுக்கும் வினிதாவுக்கும் இரண்டு வயது வித்தியாசம். வினிதாவின் பிரசவத்தின் போது தான் கிரிஜா இயற்கை எய்ந்தாள். அன்றிலிருந்து கோபால் தனது இரு மகளுக்காக மறுமணம் முடிக்காமல் இருந்தான். தனது கவனத்தை தொழிலிலும், தனது இரு மகள்களையும் வளர்ப்பதிலும் செலவிட்டான். தனக்கு சொந்தம் என்று யாரும் இல்லாததால் கிரிஜாவின் தங்கையை வனஜாவும் அவளது குடும்பத்தையும் தன் குடும்பமாக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். வனஜாவை தனது சொந்த தங்கையாகவே உறவாடுவான். வனஜாவின் கணவர் அருள் கோபாலின் அனைத்துத் தொழில்களுக்கும் உதவியாக இருந்தான். அவர்களுக்கு இரு ஆண் மகன்கள். இதுவே கோபாலின் சொந்தங்கள். கோபால் நல்ல மனம் கொண்டவன். தொழிலாளிகளை மிகவும் கரிசனத்துடன் நடத்துபவன். கோபாலுக்கு கோவையிலும் ஒரு சொந்த வீடு இருக்கிறது. அந்த வீட்டில் தங்கி தான் வனிதாவும், வினிதாவும் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு துணையாக சங்கீதா என்ற பெண்மணியை வேலையில் அமர்ந்திருந்தான். அதுபோன்றே கௌரி என்ற ஒரு அனாதை பெண்ணை வீட்டு வேலைக்காகவும், தோட்டவேலை உதவிக்காகவும் பணியமர்த்தி இருந்தான். 

வனிதா, வினிதாவின் முன் கதை:

வனிதா, வினிதா இருவரும் சகோதரிகள் என்றாலும் பழகுவதில் உற்ற தோழி போன்றே பழகுவார்கள். வனிதா தனது தந்தையை போன்று மாநிறம். வினிதா தனது தாயைப் போன்று நல்ல வெள்ளை நிறம். உருவத்திலும் உயரத்திலும் இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள். கோவை PSG கல்லூரியில் BE.ECE துறையில் வனிதா மூன்றாம் ஆண்டும், வினிதா முதலாம் ஆண்டும் படிக்கிறார்கள். இருவரும் எந்தக் குறையும் இல்லாமல் தந்தையின் செழிப்பில் வளர கூடியவர்கள். படிப்பிலும் இருவரும் நன்றாக படிக்கக் கூடியவர்கள். வீட்டிலும் இருவருக்கும் தந்தையின் அன்பு ஒருசேர கிடைக்கக் கூடியவர்கள். இவர்களைப் பற்றி மேலும் தகவல்கள் எல்லாம் கதை ஓட்டத்தில் தெரிந்து கொள்ளுங்கள்..!!

கோபாலின் தோட்டம்:

தனது வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு கோபால் கைப்பையில் இருந்த தொலைபேசியை எடுத்தான். தனது அன்பு மகளிடம் இருந்து அழைப்பு வந்து இருப்பதை பார்த்து, வினிதாவிற்கு கால் செய்தான்.

கோவை இல்லம்:

வனிதா நேற்று நடந்த விஷயத்தை வினிதாவிடம் கூற முற்படும்போது அப்பாவிடமிருந்து அழைப்பு வந்தது.

தொடரும்




Comments are closed here.

You cannot copy content of this page