Share Us On
[Sassy_Social_Share]Hey! Nee Romba Azhaga Irukke – 03
3773
0
ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே! -03
தந்தை மகள்கள் போன் உரையாடல்:
வினிதா தந்தையிடம் வந்த அழைப்பை ஏற்கிறாள்!
ஹலோ! வினிதா குட்டி எப்படி இருக்காமா!
நா நல்ல இருக்கேன் அப்பா!
அக்கா எப்படி இருக்காமா!
அவளும் நல்ல இருக்கா அப்பா!
சரி! ஏன்மா இந்த வாரம் ஊருக்கு வரவில்லை! அப்பாக்கு தான் வேல இருந்துச்சி! நீங்களாவது வந்து இருக்கலாமே!
இல்ல அப்பா! வனிதா நேத்து ஃப்ரெண்ட்ஸ் கூட வெளிய போயிட்டா!
அப்படியா! அக்கா எங்கே! அவள்ட போனை கொடும்மா?
இதோ பக்கத்துல தான் இருக்கா!
போனை வனிதாவிடம் நீட்டவே! வனிதாவின் முகம் பயத்தில் தோய்ந்திருந்தது.
இதுவரை அப்பாவிடம் ஏதுவும் மறைத்தது இல்ல. நேற்று நாம் செய்து தான் முதல் முறை. அது போன்று வினிதாவிடமும் பொய் சொல்லியது இல்ல. சோ! விஷயத்தை இப்ப அப்பாவிடம் மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி கொண்டு போனை வாங்கினாள்.
சொல்லுங்க அப்பா! நல்ல இருக்கீங்களா!
நா நல்ல இருக்கேன் வனிதா குட்டி!
சித்தி, சித்தப்பா, தம்பிலாம் நல்ல இருக்காங்களாப்பா!
எல்லாம் நல்ல இருங்கம்மா!
சரி! நாளைக்கு நா கோவை வர வேல இருக்கு! வேலையை முடிசிட்டு வீட்டுக்கு வரேன்மா!
சரிப்பா! வனிதா போனை துண்டித்தாள்.
வினிதா வனிதாவிடம் விஷயத்தை தெரிந்து கொள்ள முற்பட்டாள்!
ஆனால் வனிதா அறையில் போய் பேசிக்கலாம் என்று வினிதா உடன் தனது அறைக்கு புறப்பட்டார்கள்!
அறையில் கட்டிலில் அமர்ந்து இருவரும் பேச தொடங்கினார்கள்.
வனிதா நேராக விசயத்திற்கு வந்தாள்.
நா ஒரு பையனை லவ் பண்ணுறேன் டி!
அவனும் என்னை லவ் பண்ணுறான். நேத்து நாங்க இரண்டு பேரும் தான் வெளிய போனோம் டி!
அடிப்பாவி! எத்தனை நாளா நடக்குது இது!
போன வாரம் தான் அவன் ரோஸ் கொடுத்து ப்ரோபோஸ் பண்ணினான்!
நேத்து தான் பிரஸ்ட் டைம் வெளிய போனோம்!
அது தெரியிது! எப்போவும் இல்லாமல் லேட்டா வரும் போது!
நைட் நா வரும் முழிச்சிகிட்டா இருந்தா!
ஆமா ! காலையில் பேசிக்கலாம் என்று தான் விட்டேன்!
சாரி மை டியர் சிஸ்டர்! உன்னிடம் மறைக்கனும்டு மறைக்கலா டி!
பயமா இருந்துச்சி! எங்க அப்பாடா சொல்லிடுவாயா என்று தான்.
சரி! சரி! அப்பாடலாம் சொல்ல மாட்டான்! எங்க உன் ஆளோட போட்டோவா காட்டு பாக்கலாம்!
வனிதா கார்த்திக்கின் போட்டோவை காட்ட தனது போனை எடுத்தாள். ஆனால் வினிதா அவளின் கையில் இருந்த போனை புடுங்கிவிட்டாள்! போனை திறந்து முதலில் வாட்சப் உள்ளே சென்றாள். கார்த்திக் என்ற சாட்டை கிளிக் செய்து அவனின் ப்ரொபைல் போட்டோவை பார்த்து மலைத்துப் போனாள்.
தொடரும்!
Comments are closed here.