Share Us On
[Sassy_Social_Share]Hey! Nee Romba Azhaga Irukke – 05
2216
0
ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே! -05
மணி ஒலித்தயுடன் ஜூஸ்சை வேகமாக குடித்து விட்டு அவரவர் வகுப்பு அறைக்கு சென்றனர். கார்த்திக்கும் வகுப்பை வந்து அடைத்தான்.
வினிதாவின் முதல் வகுப்பு தொடங்கி போய்க் கொண்டிருந்தாலும் அவளின் முழு யோசனையும் அக்காவின் காதல் கதையை பற்றியே இருந்தது. இரு வகுப்புகளும் முடிந்து ப்ரேக் டைமும் வந்தது. வினிதா முதல் ஆளாக கேன்டீனை அடைந்தாள். பிறகு வனிதாவும் வர, இருவரும் கார்த்திக்காக காத்திருந்தார்கள். இவர்கள் இருவருக்கும் ஆண் நண்பர்கள் கிடையாது. யாரிடமும் அதிகமாக பழகமாட்டார்கள். ஆனால் இந்த விஷயத்தில் வினிதாவை வனிதா முந்திக் கொண்டாள். அதனால் வினிதாவிற்கே அதிக பரபரப்பு இருந்தது. அவன் வருவதை கண்ட அவள். அவளின் வாய் வாவ்க்கு(wow) போனது. ஆனால் சுதாரித்து கொண்டாள்.
ஒரு அழகிய ஹாய்! உடன் வந்து இணைத்தான்!
மூவருக்குமான உரையாடல் தூங்குவதற்கு முன் கார்த்திகை பற்றிய முன் கதையை தெரிந்துகொள்வோம்.
அழகு என்பது காண்போரின் பார்வையில் உள்ளது. காதலனின் கண்களுக்கு காதலி என்றுமே அழகு. காதலின் கண்களுக்கு காதலன். ஆனால் கார்த்திக்யை பார்க்கும் அனைத்து கண்களுக்கு அவன் ஒரு அழகானவனான தெரிவான். அவனின் வருணையை பொறுத்தவரை.
ஹண்ட்ஸோம் அண்ட் ஸ்மார்ட் பாய். கட்டுக்கோப்பான உடல் அமைப்பு. வெள்ளை நிறம். ஆல்வேஸ் கிளீன் ஷாவ் லே இருப்பான். சுமார் உயரம்: 165 செ.மீ இருக்கும். நல்ல பருவ வயதில் காட்சி அளிப்பான். சினிமாவின் நாயகனை போன்று. கார்த்திக்கின் தந்தை கோவையில் பெரிய பிசினஸ்மென். தாய் ஒரு இல்லத்தரசி. இவர்களுக்கு ஒரே பையன் கார்த்திக். அதனால் வனிதா வினிதா போன்றே சுகபோக வாழ்க்கை. கார்த்திக் BE. MECH 4th Year. நல்ல கிரிக்கெட் பிளேயர். அவனுடன் எப்பவும் ஒன்றாக சுற்று இரண்டு நண்பர்கள் ரவி, அருண். இருவரும் கல்லூரியில் ஒன்றாக படிக்க கூடியவர்கள். நேரத்திற்கு மட்டும் வரும் காதர். கார்த்திக்கு பற்றிய மேலும் தகவல்கள் கதையின் ஓட்டத்தில் தெரிந்து கொள்வோம்.
மூவருக்குமான உரையாடல்
அழகிய புன்முறுவலுடன் மட்டும் சூடான டீ யுடன் தொடங்கியது. மூவருமே டீ பிரியர்கள். வனிதா வினிதாவை கார்த்திக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். இருவரும் ஹேண்ட்ஷேக் செய்து கொண்டார்கள். வினிதா பற்றிய தகவல்கள் அனைத்தும் முன்பு வனிதா கூறியிருந்ததால் கார்த்திக் வினிதாவிடம் பெரிதாக ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை. வினிதாவும் முதல் சந்திப்பு என்பதால் அவளும் அதிகமாக உரையாடிக் கொள்ளவில்லை. ஆனால் அவளின் கண்கள் கார்த்திகை நல்ல ஸ்கேன் செய்து கொண்டது. சரியான புளியங்கொம்பை தான் அக்கா பிடித்திருக்கா என்று அவள் மனம் எண்ணியது. பிரேக் நேரம் முடியவே அனைவரும் வகுப்புக்கு சென்றார்கள்.
Lunch Break:
பொதுவாக லஞ்ச் நேரங்களில் வீட்டிற்கு உணவு உண்ண வந்துவிடுவார். மீண்டும் வினிதா வண்டி ஓட்ட வனிதா கதையைத் தொடர்த்தாள்.
அடுத்த நாள் கார்த்திக் அவனையே என்னை தேடி வந்தான். அப்போது என் கூட சுமதியும் இருந்தாள். அவளுக்கு கார்த்திகை முன்பே தெரியும். அவள் அவனின் கிரிக்கெட் ரசிகை. அவள் அவனிடம் ஹாய் சொன்னாள். அவளுக்கு பதிலுக்கு ஹாய் சொன்னாலும். அவனின் கண்கள் என்னை நோக்கி இருந்தது. என்னை பார்த்து சாரி கேட்டான். எனக்கு ஒன்னும் புரியவில்லை. அவனிடம் பேச எனது உடம்பு நடுங்கியது. அதை காட்டிக் கொள்ளாமல் பேசினேன் என்று நினைத்தேன். பிற்பாடு தான் தெரியும் முதல் சந்திப்பில் நான் எவ்வளவு சோதப்பினேன் என்று அவனையே என்னிடம் கூறினான்.
எதற்கு சாரி என்று கேட்டேன்!
I am கார்த்தி. 4th year Mech. நேத்து பந்தல அடித்தது நான் தான்.
அது தெரியும்!
அதுக்கு தான் சாரி.
நீங்க தான் என்னையே பார்க்கலையே!
ஆமா! அங்கே இருந்த என் ஃப்ரெண்ட்ஸ்டா விசரிச்சேன். பசங்காக உங்கள சொன்னனும்.
இட்ஸ் ஓகே யா!
We ஹவே கப் ஆப் டீ என்றான்!
எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை! ஆனா இந்த சுமதி கண்ணால் போலாம் என்று செய்கை செய்தாள்.
பிறகு மூவரும் கேன்டீன் போய் டீ குடித்து கொண்டே பேசினோம்.
நான் என்னை பற்றியும் அவன் அவனை பற்றியும் பேசிக்கொண்டோம்.
இதை சொல்லி முடிப்பதற்குள் வீடு வந்து விட்டது.
இருவரும் பிரேஷ் ஆகிவிட்டு Dinning டேபிளில் ஒருவரை ஒருவர் பார்த்து அமர்ந்தார்கள்.
சங்கீதா அம்மா மதிய உணவை பரிமாறி விட்டு சமையல் அறையில் நுழைந்தாள்.
வனிதா சமையல் அறையை தலையை சாய்த்து ஒரு பார்வை பார்த்து விட்டு.
வெளிய விட்ட அதையே இடத்தில் இருந்து ஆரம்பித்தாள்.
அன்று அவன் நேரிய பேசினான் டி!
ஆனா எனது மனம் என்னமோ அவனின் கண்ணையும், அவனின் அழகையும் மட்டுமே ரசித்து கொண்டு இருந்தது. முதல் சந்திப்பிலேயே அவன் என்னை காதல் வலையில் கட்டி போட்டுவிட்டான். இவனுக்காக தான் நான் காத்து இருந்தோமோ என்று எண்ண தோன்றியது. என் மனதில் ஓடிய பாடல் வரிகள் இதுவே.
எனக்காகவே பிறந்தான் இவன் எனைகாக்கவே வருவான் இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்.
வச்ச கண்ணு வாங்கமே அவனே பாத்து கொண்டு இருந்தேன். எனக்கு ஆச்சரியம் அவனின் கண்களும் அதை செய்தது. இடையில் சுமதி தான் பாவமாக எங்களையே பார்த்து கொண்டு இருந்தாள். அதை நினைத்தால் இப்ப கூட எனக்கு சிரிப்பு வருது. 😂 ஹாஹா
சரி அப்புறம் என்னா ஆச்சி! 😇
இருவரும் மொபைல் நம்பரை ஷார் செய்து கொண்டோம். பிறகு அந்த வீக் நீயும் லீவு எடுத்துகிட்டு ஊருக்கு போய் இருந்தா!
சோ! அந்த வீக் அவன்தான் எனக்கு கம்பெனியா இருந்தான். பிறகு வாட்ஸ் அப். கால் என்று பலதையும் பேசி தீர்த்தோம்.
சரி டி! யாரு ஃபர்ஸ்ட் புரபோஸ் பண்ண?
நீயா சொல்லு யார இருக்கோம்?
கண்டிப்பாக நீயா இருக்காது! அவன் தான் பண்ணி இருப்பான்!
யூர் வ்ரோங் டி! மீ ஒன்லி! 😍😃 ஹாஹா
அப்படியா அடிப்பாவி! அமுக்கினி மாதிரி இருந்துகிட்டு யெல்லாம் வேலையும் செய்றது நீ தானா? 😠
இப்படி ஒரு பையனை யாருக்காவது விட மனசு வருமா டி!
அதுவும் சரி!
இது தான் எங்க லவ் ஸ்டோரி டி!
அவளின் கதையும் முடிய. சாப்பிட்டு முடித்து மீண்டும் கல்லூரிக்கு கிளப்பினர்கள்.
வனிதா வண்டி ஓட்ட! வினிதா பின்னால அமர்ந்து வந்தாள்.
வினிதாவின் யோசனை முன்பே விட கூடுதலாக இருந்தது. 😇😇😇
அடியே! வினி என்னடி சவுண்ட்யே காணோம்? 😷
அவளிடம் பதில் இல்லை!!!!!! 😷
அவளின் யோசனை என்ன என்பது???? 🤠
😭😭😭
தொடரும்.
Comments are closed here.