Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

Hey! Nee Romba Azhaga Irukke – 06

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே! -06

 

நமது கதையின் முக்கிய திருப்பங்களை உள்ள பக்கங்களை இனி திருப்ப இருக்கிறோம். அதற்கு முன்பு வனிதா மற்றும் வினிதாவின் குணத்தையும் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

வனிதா மிகவும் அமைதியானவள். அன்பு, பாசம், அடக்கம், விட்டுக்கொடுக்கும் தன்மை, ஒழுக்கம், மானம், மன்னிப்பு ஆகிய குணங்களுக்கு சொந்தகாரி. இதற்கு எதிர்மறையானவள் வினிதா. 

வினிதா மிகவும் தைரியமனவள். அனைத்து விஷயங்களையும் துணிந்து முடிவுகள் எடுப்பவள். பேராசை, கோபம், பொறாமை, பொய் பேசுதல், பிடிவாதம், துரோகம், வஞ்சகம் ஆகிய குணங்களுக்கு சொந்தகாரி. இதற்கு எதிர்மறையானவள் வனிதா. 

குறிப்பு: மனித வாழ்க்கையில் பலவிதமான சிக்கல்கள், பிரச்சினைகள் எல்லாம் மனிதனுக்கு ஏற்படுகின்றன. அந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணமாக அவனுடைய உளவியல் தொடர்பான குணங்களே இருப்பதை நாம் காணமுடிகிறது.

வனிதா வினிதா உரையாடல்

மீண்டும் கூப்பிட்ட வனிதாவின் குரலில், யோசனையில் இருந்து விழித்தாள் வினிதா. 

என்னடி நான் கூப்பிடுறது காதில் விழாத அளவுக்கு அப்படி என்ன யோசனை?

அக்காவின் காதலனைத் தன்னுடையவனாக்கும் தன்னலம் அவள் யோசனையில் மிகுந்து இருந்தது. ஆனால் வனிதாவிடம் பொய்யான காரணங்களை கூறினாள். 

அடுத்த வாரம் அப்படா பிறந்த நாள் வருது. என்ன கிப்ட் வாங்கலாம் என்று யோசித்தேன்.

ஆமா! சூப்பர்! நல்ல கிப்ட்ட சொல்லு. நாளைக்கு போய் purchase பண்ணிடலாம்.

சரி! வனி!

கல்லூரி வரவே! வாகனத்தை நிறுத்தி விட்டு இருவரும் பிரிந்து சென்றார்கள். 

வனிதா தனது வகுப்புக்கு சென்றாள். ஆனால் வினிதா கார்த்திக்கின் வகுப்பு அறையை தேடித் சென்றாள்.

சினிமாக்களில் வரும் ஒரு அழகிய நாயகனை தன் காதலனாகக் கற்பனை செய்வது ஒரு பெண்ணின் குழந்தைத்தனமான கற்பனையாகவருக்கலாம். ஆனால் ஒரே வயிற்றிற் பிறந்த உடன்பிறப்பின் காதலனை அடைய நினைக்கும் வினிதாவின் மனநோயிலிருந்தது கார்த்திகை மீட்பாள வனிதா. 

பொறுத்திருந்து பார்ப்போம்!!!


தொடரும்.




Comments are closed here.

You cannot copy content of this page