Share Us On
[Sassy_Social_Share]முட்டக்கண்ணி முழியழகி-9
2253
0
அத்தியாயம் – 09
பூமிக்கும் வானுக்கும் இடையே வெள்ளிச்சரம் தொடுத்திருந்த பால்நிலா… அவனைப் போல் தனியாய் தவித்துக் கொண்டிருந்ததோ.! வெண்ணிலவின் சிந்திய குழுமை அவனது தனிமையை பெரிதும் பதம் பார்த்தது என்பதுதான் உண்மை…
நள்ளிரவில் பால்கனியின் சுவற்றில் சாய்ந்தபடியே அறையைப் பார்த்தவனுக்கு, சிரிப்பு பீறிட்டது… அவன் கூறியது போலவே குப்புறடித்து உறங்கிக் கொண்டிருந்தாள் மனையாள்… ‘என்ன பெண் இவள்..? எப்படி இவளிடம் மயங்கினேன்? வேண்டாம் வேண்டாம் என்றேன், பிறகு பெற்றோருக்காக என்றேன், இப்போது தனக்காகவே என்கிறேன்…! ஆமாம்.. எனக்காக மட்டுமே, எனக்கு அவளைப் பிடித்து இருக்கு அதற்காக மட்டுமே திருமணம்…’ என்று அவன் உணர்ந்த உண்மையை ஆழ்ந்து அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்…
அனைவரும் கூறுவது போல் இவள் தேவதைப் பெண்தான்… இவள் இருக்குமிடம் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும்… இல்லை என்றாலும் மகிழ்வாய் மாற்றிவிடுவாள்… மனம் நிறைந்திருந்தது அவனுக்கு… ஊரில் இருந்து வரும்போது இருந்த தயக்கங்களும், கோபங்களும், பயங்களும் இப்போது ஒன்றுமே இல்லை… நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே அவனிடம்…!
அவள் அசைவதுணர்ந்து அருகில் செல்ல, தலையனைத் தூரத் தள்ளி போயிருந்தது…. ஆடை அலங்கோலமாய், ‘ஒரே நாள்ல நம்மள பொங்கல் வைக்க வச்சிருவா போலயே… இந்த ட்ரெஸ்ச சரி பண்ணலாமா வேண்டாமா…? தொட்டா கையை உடைச்சு அடுப்புல வச்சுருவேன்னு வேற சொன்னாளே…’ என்று புலம்பியவனின் நினைவுகள் சில மணி நேரங்களுக்கு முன் நடந்ததை அசைபோட்டது…
பெரியவர்களிடமிருந்து தப்பித்து, அவனது அறைக்குள் வந்தவள், பின்னாடியே அவன் வருவதை உணர்ந்து, கதவை அடைத்துவிட்டு, “தயவுசெஞ்சு ஒரு ஒன் அவராச்சும் என்னைத் தூங்கவிடுங்க…” என அவனுக்கு கத்தி சொல்லிவிட்டு, சொன்னது போல் தூங்கியும் விட்டாள்…
உடனே கீழே போனால் எல்லாரும் இவனை வம்பிழுப்பார்களே, என நினைத்து, பக்கத்து அறையில் நுழைந்தான்… அவள் சொன்ன ஒரு மணி நேரம் கழித்து, போனுக்கு மேல் போன் மெசேஜீக்கு மேல் மெசேஜ் என செய்து ஒரு வழியாக அவளை எழுப்பி அழைத்து வந்தான்…
அடுத்து அவளைக் கிளப்பி முதலிரவு அறைக்குள் அனுப்ப ரெடியாக்க படாதபாடு பட்டுக் கொண்டிருந்தனர் அனைவரும். “கிழவி எதுக்கு இப்படி மேக்கப் போட்டு டைம் வேஸ்ட் பண்ற, அப்படியே அனுப்ப வேண்டியது தானே…” என எரிச்சலாய் கத்த,
“ஆனாலும் இப்போ இருக்கிற பொட்டச்சிங்களுக்கு எல்லாம் சொல்லியாத் தரனும், மொளச்சு மூனு இலை விடறதுக்குள்ள முத்திப் போயிடுதுங்க…” என பேச்சி இழுக்க,
“ஏய் கிழவி அம்மிக்கல்லைத் தூக்கி மண்டைல போடப் போறேன் பாரு, எதுக்கு இப்படி நீட்டி முழக்குற, சீக்கிரம் சொல்லித்தொல நான் போகணும்…” என்று கடுப்படிக்க,
“பொம்மி ஆடாம இரு, பூ விழுந்துரும்…” என சந்திரா அதட்ட,
“பாத்தியாக்கா உன் பேத்திய… அவளுக்கு இதெல்லாம் எதுக்குன்னுத் தெரியாதாக்கும்…” என்று மீண்டும் பேச்சி இழுக்க,
“சே.. சும்மா இரு பேச்சி, நல்ல நாளு அதுவுமா புள்ளய சீண்டிக்கிட்டு,” என தங்கையை அடக்கியவர்,
“அது கண்ணு, இதெல்லாம் சாங்கியம், இன்னைக்கு இப்படியெல்லாம் செய்யனும், நம்ம குலம் தழைக்க வேணாமா…” என பொறுமையாக கூற,
“போய் படுத்து தூங்குறதுக்கு எதுக்கு இவ்வளவு நகையும், பட்டுச்சேலையும்னு கேட்டா எல்லாரும் எவ்வளவு பேசுறீங்க, இதுக்கு நானே பரவாயில்லை, கம்மியாத்தான் பேசுறேன்…” என்றாளே பார்க்கலாம்… மற்றவர்கள் முகத்தில் ஈயாடவில்லை…
அவர்களின் முகத்தில் தெரிந்த ரியாக்ஷனை பார்த்து சிரிப்பு வந்தாலும், வெளிக்காட்டி கொள்ளாமல் ஒரு அப்பாவி லுக்…
“எக்கா…” என்று பேச்சி நெஞ்சைப்பிடிக்க,
“பொம்மிமா நெசமாவே உனக்குப் புரியலையா ராசாத்தி…” என மீண்டும் பாவமாய் சின்னம்மா இழுக்க,
“அப்பத்தா என்ன நீயும் இப்படி கேட்கிற, உன்கிட்ட நான் பொய் சொல்வேனா…? ஆமா ஏன் இதையே மறுபடியும் மறுபடியும் கேட்கிற…” என்றாள் அவரைவிட அப்பாவியாய்…
பெண்கள் நால்வரும் அடுத்து என்ன செய்ய, சொல்ல என்றுத் தெரியாமல் கையைப் பிசைய, உள்ளுக்குள் பொங்கிய சிரிப்பை வெளிக்காட்டாமல் மிகமிக பரிதாபமாய் பாவமாய் பார்த்து நின்றாள் அவள்.
ஏதோ ஐடியா தோன்றியது போல், “அவளுக்கு அதெல்லாம் தெரியலன்னா பரவாயில்லை. எம் பேரன் பார்த்துப்பான்… ரெடியாயிட்டா, அண்ணி முறையில யாரச்சும் இருந்தாக் கொண்டு போய் விடச்சொல்லு…” என பேச்சிக் காரியமாய் பேச,
“ஓ… மாமாவுக்குத் தெரியுமா…? நல்லவேளை” என்றவள் “மாமா” என்று சத்தமாக அழைக்க ஆண்கள் மட்டுமாக பேசிக் கொண்டிருந்த இடத்தில் இருந்து வேகவேகமாய் வந்த சாரதி, “என்ன பொம்மிம்மா…” என ஆவலாய் கேட்க, அப்போது நாயகிக்கு நேத்து வாங்கிய பல்பு ஞாபகம் வர, வேகமாய் அவரிடம் நெருங்கி, “அவ உங்களைக் கூப்பிடல…” என முணுமுணுக்க… “பின்ன” என்றார் அதிர்ச்சியோடு…
அதற்குள் “அய்யோ நான் மாமான்னு கூப்பிட்டதும் நீங்க வந்துடீங்களா… சாரி மாமா… இனிமேல் உங்களை பெரிய்ய்ய்ய மாமான்னு கூப்பிடறேன்… ம்ம்ம்” என பல்பை பிரகாசமாய் வழங்கிவிட்டு…
“மாமா…” என்று மீண்டும் கத்த, “என்ன பொம்மிம்மா…” என அதே டயலாக்குடன் நிலவன் வர, சாரதிக்கு அதிர்ச்சியைத் தாங்கவே முடியவில்லை… ‘என்னடா நடக்குது இங்க என்பது போல் மனைவியைப் பார்க்க…’ ‘நான் தான் சொன்னேனே’ என்று பதில் பார்வைப் பார்த்துவிட்டு கனலியைப் பார்த்தார்…
அங்கே அவள், “மாமா… இன்னைக்கு நாம இந்த புது ட்ரஸ், இந்த நகையெல்லாம் போடணுமாம், ஏன்னு கேட்டேன் உனக்குத் தெரியாதான்னு கேட்டாங்க, தெரியாதுன்னு சொன்னேன்… உனக்குத் தெரியல்லைன்னா பரவாயில்லை எம் பேரனுக்குத் தெரியும்னு கிழவி சொல்லுது… அதான் உனக்குத் தெரியுமா தெரியாதான்னு கேட்க கூப்பிட்டேன்….” என வாய் மூடாமல் பேச, பெண்கள் நால்வரும் தலையிலடித்துக் கொள்ள அதில் நாயகியும், சந்திராவும் இடத்தை விட்டே ஓடிவிட்டனர்… சாரதி கனலி வழக்கம்போல் ஏதோ கிண்டலில் இறங்கிவிட்டாள் என்பது புரிய, அவரும் சிரித்துக்கொண்டே நகர்ந்து விட்டார்.
“ஏய் லூசு… என்ன பேசுற…” என சுற்றிலும் பார்த்துவிட்டு, நிலவன் அவளிடம் எகிற,
“நீ தான் லூசு, உனக்கு எல்லாம் தெரியும்தான, தெரியாம வந்து முழிக்கக்கூடாது சரியா… எனக்கு வேற ஒன்னுமேத் தெரியாது, அதனால உனக்கு டவுட் இருந்தா, இந்த கிழவிங்ககிட்ட கேளு” என விடாமல் பேச
“அச்சோ… மானத்தை வாங்கதடி” என்று வேகமாய் வந்து அவள் வாயை மூடியவன்… “எனக்கு என்னத் தெரியும், தெரியாதுன்னு உனக்கு அப்புறம் சொல்றேன்… இப்போ நீ வாயை மூடு…” எனக் காதுக்குள் கிசுகிசுக்க,
அவன் வாயை மூடியிருந்தால் பேச முடியாமல், கண்ணில் பொங்கிய சிரிப்புடன் “தோடா..” என்பது போல் தோளைக் குலுக்க, ‘மகளே இன்னைக்கு நீ பொங்கச்சோறு தாண்டி…’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டு சுற்றியும் பார்க்க, இரண்டு அப்பாத்தாக்களையும் தவிர, வேறுயாரையும் காணோம்…
பெரியவர்கள் இருவரையும் இன்னும் அதே அதிர்ச்சியுடன் பார்ப்பதை உணர்ந்தக் கனலி, இரு அப்பாத்தாக்களையும் பார்த்து கண்சிமிட்டி விட்டு, வாய்மூடியிருந்த அவனது உள்ளங்கையில் முத்தமிட்டுவிட, சட்டென்று நடந்ததில் நிலவன் கையை எடுத்துவிட,
அவளோ “மாமா உன்னோட டவுட்ஸ் எல்லாம் கிளியர் பண்ணிட்டு வந்துசேரு… உன்கிட்ட நான் கொஸ்டின் கேட்பேன், கரெக்டா ஆன்சர் பண்ணனும், இல்லைன்னா பனிஷ் பண்ணுவேன்” என்றவள்…
அப்பாத்தாக்களிடம் திரும்பி, “கிழவிஸ் இன்னைக்கு எந்த சொதப்பல் நடந்தாலும் அது உன் பேரனால் தான் நடக்கும்… எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல… பாத்து புத்திமதி சொல்லி அனுப்புங்க…” என அவன் அடுத்து அவளைப் பிடிப்பதற்குள் ஓடியிருந்தாள் அறைக்கு…
“பேச்சி”
“அக்கா…” என இருவரும் அப்படியே நிற்க, நிலவன் இவர்களது முகத்தைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கி “அம்மத்தா… என்னாச்சு…:” எனவும்,
“கண்ணா… எங்களுக்குத் தெரியாம நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தீங்களா முன்னமே… கல்யாணம் வேணாம், வேணாம்னு சும்மா சொன்னீங்களா, எனக்கு உங்கமேல சந்தேகமாவே இருக்கு…” என பேச்சி ஆரம்பிக்க, சின்னம்மாவுக்கும் அதே சந்தேகம்தான்… அதனால் அவரும் நிலவனின் பதிலுக்காக காத்திருந்தார்…
‘என்னடா இது…’ என்பது போல் தான் இருவரையும் பார்த்தான்… நீ சொல்லித்தான் ஆகவேண்டும் என்பது போல் இருவரும் நிற்க, “அச்சோ அம்மத்தா அவகூட இத்தனை வருஷம் இருந்தும், அவளைப்பத்தி தெரியாம இருக்கீங்க… அவ உங்க எல்லார் கூடவும் சேர்ந்து என்னையும் கிண்டல் பண்ணிட்டு போயிருக்கா, அது புரியாம என்னை நிக்க வச்சுக் கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க… சரி போய் படுங்க, எனக்கும் தூக்கம் வருது…” என அடுத்து அவர்கள் பேசுவதற்குள் இவன் கிளம்பியிருந்தான்…
‘என்ன இவனும் தூங்க போறானா..?’ மீண்டும் இருவரும் “பே” வென முழித்துக் கொண்டிருப்பது, அவன் பார்வை வட்டத்தில் விழுந்தாலும் சிரிப்புடன், நிற்காமல் நடந்திருந்தான்…
‘எப்படிடா இவளை லைப் லாங்க் சமாளிக்கப் போறோம்… இதுதான் அவனது மனதில் உதித்த முதல் கேள்வி. பேசியே எல்லாரையும் ஒரு வழி பண்றா… இனி என்ன பண்ணுவாளோ…’ என பல சில புலம்பல்களுடன் அறைக்குள் நுழைய, பால்கனியின் சுவற்றைப் பிடித்துக் கொண்டு பனிப்பொழியும் முழுநிலவை வெறித்துக் கொண்டிருந்தாள் அவனவள்.
அவனது அரவம் உணர்ந்து முகபாவனையை மாற்றினாலும், பார்வை நிலவில் இருந்து மீளவில்லை… வெண்ணிறப் பட்டுத்தி, நீளக்கூந்தலை தளரப் பிண்ணி, அளவாய் மல்லிப்பூச்சுட்டி என மணப்பெண்ணின் அத்தனை லட்சணங்களும் பொருந்திப்போக, முதுகைக்காட்டி நின்றிருந்தவளை நெருங்க, காலையில் அவன் சூட்டிய மஞ்சள்கயிறும் அதன்வாசமும்… அவள் உன் மனைவிதான் என்று கட்டியம் கூற, அவனுக்குள் எழுந்த உணர்வுகளை பெரும்பாடுபட்டு அடக்கி அவளின் தோளில் கை வைக்க போக, அதை உணர்ந்ததாலோ என்னவோ பட்டென்றுத் திரும்பிவிட, அவனது கை இப்போது அவளது முன்பக்கம் கழுத்திற்கு கீழ்,
“ஏய்… என்ன பண்ற…” எனத் தட்டிவிட்டு நகரப்போக, “உன்னை யாரு திரும்பச் சொன்னா, இப்ப பாரு என் கை கண்ட இடத்துல இடிச்சுக்கிச்சு..” என நகர்ந்தவளின் தோளை இழுத்துத் தன் மேல் மோதவிட்டான்…
“ஓய்… என்ன கலாட்டா பண்ற நீ…” என்றபடியே அவன் இரு தோள்களையும் பிடித்து தன்னை நிதானப்படுத்தியபடியே கேட்க,
“அட என்ன மறந்துட்டியா நீதானே உனக்கு ஒன்னுமேத் தெரியாதுன்னு சொன்ன, அதான் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன்… இப்போ ஸ்டார்ட் பண்ணா தான் விடியறதுக்குள்ள ஃபர்ஸ்ட் பேஜாச்சும் முடிக்க முடியும்…” என்றபடியே, அவளை மீண்டும் இழுத்து, கழுத்து வளைவில் முகம் புதைக்க..
“அடப்பாவி… டேய் நான் கிழவிங்களைக் கிண்டல் பண்றதுக்கு சொன்னா, நீ லைவ்வா இப்படி ஷோ காண்பிச்சுட்டு இருக்க, ஒழுங்கா கையை எடுக்குறீயா இல்லையா…” என மூக்கு விடைக்க கத்த,
“என்னது கையை எடுக்கவா… பார்ரா… என் பொண்டாடிக்கு கோபமெல்லாம் வருது.. ஆச்சுவலா நீ என்னை டீஸ் பண்ணியிருக்க, அதுக்கு உனக்கு பதிலுக்கு நான் எதாவது செய்யனும், இல்லைன்னா என்னோட மனசாட்சியே என்னைக் கேவலமா காரித்துப்பும், சோ இப்போ உன்னை ரேப் பண்ண போறேன்…” என்றான் அசால்ட்டாய்…
“வாட்..? ரேப்பா…? அடிங்கொய்யால உன்னைக் கொல்லாம விட மாட்டேன்டா, எவ்வளவு தைரியமிருந்தா என்கிட்டையே ரேப் பண்ணுவன்னு சொல்லுவ…” என அவனை விரட்டி விரட்டி அடிக்கத் துவங்க, முதல் இரண்டு அடிகள் மட்டுமே அவன் மேல் விழ, மத்த அடிகளுக்கெல்லாம் அவளிடம் சிக்கவே இல்லாமல் போக்கு காட்டிக் கொண்டிருந்தான் நிலவன்…
ஓடி ஓடி ஓய்ந்து போனவள் ஒரு கட்டத்தில் முடியாமல் மெத்தையில் விழ அவனும் அங்கிருந்த சோபாவில் விழுந்து இவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்…
“ம்ப்ச்.. போடா லூசு… நான் தூங்குறேன், ப்ளீஸ் டிஸ்டர்ப் பண்ணாத, ரியல்லி ஐ யாம் சோ டயர்ட்..” என மூக்கை சுருக்க,
“ஓஹோ… அப்போ நீ ஏதோ எதிர்பார்த்திருக்க, அப்படித்தான… ஹா ஹா.. பட் மீ ஆல்சோ டயர்ட்… பயலாஜிகலா நமக்குள்ள நடக்கிற எந்த ரிலேஸன்ஷிப்பும் நம்ம வீட்ல தான நடக்கனும்னு எனக்கு ஒரு ஆசை இருக்கு. தென், உனக்கு என்னையும், எனக்கு உன்னையும் பிடிக்கட்டும். அப்புறம் இதைப் பத்தி யோசிப்போம்..” என்று நீளமாக பேசியவன், அவளது விழிகள் பளபளப்பதை பார்த்து, “எப்பவும் இந்த ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷனை ஃபால்லோ பண்ணுவேன்னும் சொல்ல முடியாது..” என்று முடிக்க,
பட்டமாய் வானில் பறந்தவள், அவனது கடைசி வரியில் தொபுக்கடீரென்று கீழே விழுந்து மூக்கை உடைத்துக் கொண்டாள், ஆனால் அதை வெளிக்காட்டினால், அவள் கனலி இல்லையே.. “அப்படி எதுவும் நடந்துச்சு, உன்னை சுக்கா பண்ணிருவேன் பார்த்துக்கோ…” என்று அவனை நேராகப் பார்த்து சொன்னவள், மனதுக்குள் ‘ஏ புள்ள கனலி, இவன் என்ன ஆவிய விட மோசமான பாவியா இருக்கான்.. எந்தப் பக்கம் போனாலும் கேட்ட போடுறானே, பயத்தைக் காட்டாத, ஸ்டெடியா இருக்கனும், நமக்கு பேஷ்மென்ட் வீக்குன்னு மட்டும் அவங்கிட்ட காட்டிரக்கூடாது, அப்புறம் இத்தனை நாள் சம்பாதிச்ச கெத்தெல்லாம் சொத்துன்னு போயிடும்.. ஏரியாக்குள்ள நீயும் ரவுடிதான்.. ரவுடிதான்’ என புலம்பியபடியே, கட்டிலில் ஒரு பக்கமாய் ஏறி அமர்ந்தாள்.
இவள் மனதுக்குள் புலம்பினாலும், அடுத்தது காட்டும் பழிங்கு போல, அவளது முகம் அனைத்தையும் காட்ட, நிலவனுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை, ஆனாலும் கட்டுப்படுத்திக் கொண்டு, கட்டிலின் இன்னொரு பக்கம் போய் அமர, அவன் அமரவும் பட்டென்று எழுந்தவள், “ஏய் இங்க என்ன பண்ற..?” என அலற,
“சும்மா.. சும்மா ஓவர் ரியாக்ஷன் காட்டாம தூங்கு, இப்போதைக்கு உன்னை ரேப் பண்ற ஐடியா எதுவும் இல்ல, இப்படி கத்தி கத்தியே அதை வர வச்சுருவ போல..” எனவும், கப்சிப்பென்று போர்வையை இழுத்து தலைவரை மூடி படுத்துவிட்டாள்.
அவளது செயலில் உண்டான புன்னகையில், தானும் உடலைத் தளர்த்தி சாய, மீண்டும் அதே மோடில் எழுந்தவள், “நான் தூக்கத்தில் இருக்கும் போது என் கை காலோ, இல்ல உன் கை காலோ என் மேல பட்டுச்சு, உன்னோட கையை உடைச்சு அடுப்புல வச்சுருவேன் பார்த்துக்கோ..” என வீராவேசமாய் பேசி, அவன் பதில் பேசும் முன், மீண்டும் போர்வைக்குள் நுழைந்திருந்தாள் பெண்ணவள்.
இன்னும் சற்று நேரத்தில், நடக்கும் நிகழ்வுக்குத் தானே பிள்ளையார் சுழி போடப்போவது தெரியாமல், படுத்த உடனே உறங்கிவிட்டாள். மனைவியின் ஒவ்வொரு செயலையும் நினைத்து பார்த்தவனுக்கு, உறக்கம் தூர போயிருந்தது. மெல்ல படுக்கையை விட்டு எழுந்து, அவள் நின்றிருந்த அதே பால்கனி சுவற்றில் சாய்ந்து அடுத்து என்ன செய்வது என்று யோசித்து, அதற்கான திட்டங்களையும் வகுத்துக் கொண்டான். நேரம் நள்ளிரவைத் தாண்ட, அறையைப் பார்க்க, அவளது அழகான கோலம் கண்டு, அனைத்தையும் மூட்டைக் கட்டி மூலையில் போட்டுவிட்டுத் தன் முட்டக்கண்ணியிடம் வந்தான்
Comments are closed here.