Share Us On
[Sassy_Social_Share]Hey! Nee Romba Azhaga Irukee – 07
4941
0
ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே! -07
கார்த்திக்யை தேடி போனவளுக்கு ஏமாற்றமே மிச்சம். அவன் மதிய வகுப்புக்கு வரவில்லை. அதிருப்தியில் தனது வகுப்புக்கு சென்றாள். நேரம் ஓடவே..!! இருவரும் கல்லூரியில் இருந்து வீடு திரும்பினார்கள். வீட்டில் இவர்களின் வருகைக்காக கோபால் காத்து இருந்தார். அவர்களின் வருகை கண்டு இருவரையும் ஆர தழுவி அன்பு முத்தங்களை இட்டான்.
இருவரும் ஃப்ரெஷ் ஆகிவிட்டு வந்து அப்பாயுடன் உறவு ஆடினார்கள். சங்கீதா கோபாலுக்கு காபியும், அவர்களுக்கு டீயும் கோபால் ஊரில் இருந்து எடுத்து வந்த பலகாரங்களை கொண்டு வந்து வைத்தாள்.
மூவருக்குமான உரையாடல்
அப்பா! வந்த வேல எல்லாம் நல்லபடியாக முடிச்சப்பா!
முடிச்சுடா! என் செல்லங்களே!
சரி! இந்த வாரம் ஒழுங்கா ஊருக்கு வந்துடுகோ! அங்கே உங்க சித்தியும், சித்தப்பாவும் கேட்டுகிட்ட இருங்கா!
வினி: சரிப்பா! வந்துடுறோம்!
வனி: monday உங்க பிறந்தநாள் அப்பா!
எப்படி வராம இருப்போம். காலேஜ்க்கு லீவு சொல்லிடுறோம்.
வினி: நாளைக்கு உங்களுக்கு கிப்ட் வாங்க போறோம் அப்பா. என்னோட கிரெடிட் கார்டல purchase பண்ணுறேன். நீங்க payment பண்ணிடுங்க அப்பா!
சரிடா செல்லம்! என்ன கிப்ட் டா? 😇
வனி, வினி: அது சஸ்பென்ஸ்! 😷
வனி: ராமும், சோமும் நல்லா இருங்களா அப்பா!
இரண்டு பேரும் நல்ல இருங்கமா!
வனிதா இந்த வினி குட்டி இப்பல்லாம் night சீக்கிரம் தூங்குறலா? இல்ல மொபைலை நொண்டிக்கிட்டு தான் இருக்கலாமா?
வனி: இல்ல! தூங்கிவிடுறாள்!
பிறகு பல விஷயங்களை பேசிக்கொண்ட இருந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை. சங்கீதாவும் இரவு உணவை தயார் செய்து விட்டு அனைவரையும் சாப்பிட அழைத்தாள்.
பேசியுடனும், சிரிப்புடனும் இனிதாக இரவு சாப்பாடு முடிந்தது. கோபால் இருவரிடமும் தன் விடியற் காலையில் எழுந்தது சென்று விடுவதாக சொல்லி தனது அறைக்கு சென்றான். வனிதா தனது அறைக்கு செல்லவே வினிதாவும் நாய்க்குட்டியை போன்று அவளை பின்தொடர்ந்து சென்றாள்.
அங்கு வனிதாவிடம் அப்பாவிற்கு வாங்க போகும் கிப்ட் பற்றி டிஸ்கஷனை தொடங்கினாள். கிப்ட் பொருளும் முடிவானது. வனிதா பாத்ரூம் செல்லவே!
சரி டி! நானும் என் ரூமுக்கு கிளப்புறேன் என்றாள் வனி.
வனிதா பாத்ரூம் உள்ளே போகவே வினிதா கார்த்திக்கின் போன் நம்பரை ஆட்டைய போட்டு விட்டு தனது அறைக்குள் நுழைந்தாள்.
சங்கீதா வீட்டில் எரித்த விளக்குகளை அமர்த்தி விட்டு தனது அறைக்கு உறங்க சென்றாள்.
வனிதா எப்பவும் சீக்கிரம் உறங்க கூடியவள். கார்த்தியுடன் சிறிது நேரம் Chat செய்து விட்டு உறங்கிவிட்டாள்.
ஆனால் நம்ம தலைவி அறையில் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தாலும் போர்வையில் மொபைல் உடன் குதுகாலத்தில் திகைத்து கொண்டு இருந்தாள்.
“அது உங்களுக்கு புரிந்தால் நீங்கள் பெரிய பிஸ்தா தான்” 😆😂
தொடரும்.!!
Comments are closed here.