Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 27

அத்தியாயம் – 27

உயிரை கையில் பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள் சுமன். சுஜித் இன்று கேஜ் ரிங் என்று அழைக்கப்படும் கம்பிக்கு கூண்டுக்குள் இறங்கி சண்டையிடப் போகிறான். போட்டியின் முடிவில் ஒன்று எதிரியை வேட்டையாட வேண்டும் அல்லது அவனுக்கு இரையாக வேண்டும். இரண்டுமே அவள் மனதிற்கு ஒப்பாத காரியங்கள் என்றாலும் காதல் கொண்ட மனம் அவன் பத்திரமாக திரும்ப வேண்டும் என்றே இறைவனை வேண்டியது.

 

“ஒன்னும் ஆகாது. தைரியமா இரு” – உற்ற தோழியாக அவளுக்கு தோள் கொடுத்தாள் மிருதுளா.

 

“ஆப்பொனென்ட் யாருன்னு தெரியல. சுஜித்தைவிட ஸ்ட்ராங்கான ஆளா கூட இருக்கலாம்…” – கலங்கினாள் சுமன்.

 

“நெகட்டிவா எதையும் யோசிக்காத சுமன். கொஞ்சம் அமைதியா இரு” – தோழிகள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது மேஜையில் இருந்த அலைபேசி பீப் ஒலியை எழுப்பியது.

 

சுமன் பதட்டமானாள். அவள் முகத்தில் கலவரம் தெரிந்தது. போட்டிக் களத்திலிருந்து வரும் செய்திக்காக காத்திருந்தவளுக்கு, அதை தெரிந்துகொள்ளும் நேரம் வந்த போது கலக்கம் அதிகமானது. அவளுடைய நிலையை உணர்ந்து மிருதுளாவே அலைபேசியை எடுத்து குறுஞ்செய்தியை வாசித்தாள்.

 

‘ஹி இஸ் அலைவ்’ – சட்டென்று அவள் முகம் பிரகாசமானது. மகிழ்ச்சியோடு தோழியை ஏறிட்டாள். அவளுடைய முகபாவம் செய்தியை உணர்த்திவிட்டாலும் அதை உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமாக, “சுஜித்துக்கு ஒண்ணும் இல்லைல?” என்றாள்.

 

மிருதுளா மேலும் கீழும் தலையசைத்துவிட்டு, “எஸ்… ஹி இஸ் ஆல்ரைட்” என்றாள் உற்சாகத்துடன். சட்டென்று பாய்ந்து வந்து அவளைக் கட்டிக்கொண்டு தேம்பினாள் சுமன். கோடிமுறை கடவுளுக்கு நன்றி கூறி ஓய்ந்தாள். சற்று நிதானமடைந்த பிறகு, “இன்னொரு பிளேயர் யாருன்னு தெரிஞ்சதா?” என்றாள் சற்று தயக்கத்துடன்.

 

மிருதுளா குறுக்காக தலையசைத்தாள். உதட்டைக் கடித்துக் கொண்டு தலைகவிழ்ந்தாள் சுமன். தன் காதலன் பத்திரமாக இருக்கிறான் என்றால் இன்னொருவன் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்கிற எண்ணம் அவள் மனதை குத்தியது. மிருதுளாவின் கையிலிருந்து அலைபேசியை வாங்கி, குறுஞ்செய்தி அனுப்பி உதவிய கோர்த்தா ஆளை தொடர்பு கொண்டாள். அவன் கூறிய விபரங்களை கேட்கக்கேட்க அவள் முகம் இருண்டது.

 

அலைபேசி கையிலிருந்து நழுவ தளர்ந்து போய் கட்டிலில் அமரும் தோழியை தாங்கிப்பிடித்த மிருதுளா என்ன ஆயிற்று என்று விபரம் கேட்டாள்.

 

மிராண்ட சிறுமி போல் தோழியை ஏறிட்ட சுமன், “சுஜித் ஜெயிக்கல…” என்றாள். அவள் கண்களில் அதீத பயம் தெரிந்தது. முகத்தில் ரெத்தபசையில்லை… உதடுகள் காய்ந்துப் போய்விட்டன. மிருதுளா திகைத்தாள். அவள் கூறியதை கிரகித்து எதிர்வினையாற்ற ஓரிரு நிமிடங்கள் பிடித்தது அவளுக்கு.

 

“இட்ஸ் ஓகே… இட்ஸ் ஓகே…” என்று தோழியை அணைத்துக் கொண்டாள். “ஹி இஸ் அலைவ்… உயிருக்கு ஆபத்து இல்ல. தைரியமா இரு” என்று ஆறுதல் கூறினாள். எதுவும் அவள் செவியை எட்டியதாக தெரியவில்லை.

 

“சுயநினைவு இல்லையாம். எது வேணா நடக்கலாம். எனக்கு பயமா இருக்கு. ரொம்ப பயமா இருக்கு…” என்று புலம்பினாள். கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்தது. அவளை பார்க்கவே பாவமாக இருந்தது மிருதுளாவிற்கு. அவளுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று புரியாமல் தடுமாறினாள்.

 

“நா சுஜித்தை பார்க்கணும்… இப்பவே பார்க்கணும்…” – விருட்டென்று எழுந்தாள்.

 

“சுமன்! எங்க போற!” – பதட்டத்துடன் அவளை தடுத்தாள் மிருதுளா.

 

“ஹாஸ்ப்பிட்டலுக்கு… ஹாஸ்லிட்டலுக்கு போறேன். ஐ நீட் டு ஸீ ஹிம்… நௌ…” – அடிவயிற்றிலிருந்து எழுந்த கேவல் பெரிதாக வெடித்து கதறலாக வெளிப்பட்டது. அவளை தேற்ற முயன்று தோற்றுப்போனாள் மிருதுளா.

 

நேரம் அதிகாலை இரண்டரையானது. இன்னும் சற்று நேரம் காத்திருந்தாள் விடிந்துவிடும். வெளியே செல்ல பயமேதும் இல்லை. ஆனால் அதுவரை இவளால் நிலைகொள்ள முடியாது போலிருந்தது. வேறு வழியில்லாமல் வீட்டில் பாதுகாப்புப்பணியில் இருந்த கார்ட் ஒருவனிடம் உதவி கேட்டாள்.

 

அவன் முடியவே முடியாது என்று அறுதியாக மறுத்தான். வேலை நேரத்தில் வெளியே செல்வது தவறு… அதிலும் இரண்டு பெண்களை அழைத்துக் கொண்டு வெளியே சென்றால் – காரணம் எதுவாக இருந்தாலும் பிரச்சனை வரும். எதற்கு வம்பு என்று ஒதுங்கிக்கொள்ள நினைத்தான். ஆனால் சுமன் நேரில் வந்து கேட்ட போது அவனால் பட்டுக்கத்தரித்தது போல் பேச முடியவில்லை.

 

கோர்த்தாவில் சுஜித் முக்கியமான ஆள். நாளைக்கே அவன் உயிர் பிழைத்து பழையபடி அதிகாரத்திற்கு திரும்ப வந்தால், சுமனுக்கு உதவி செய்ய மறுத்ததற்காக தன்னை தவறாக நினைப்பானே என்கிற எண்ணம் அவனை சங்கடப்படுத்தியது. இருதலை கொல்லி எறும்பாக இருபக்கமும் செல்ல முடியாமல் தடுமாறினான். அவனுடைய தடுமாற்றத்தை முடிவுக்கு கொண்டு வந்தது சுமனின் கண்ணீருடன் கூறிய வற்புறுத்தல்.

 

அவர்களுடைய கார் மெயின் கேட்டைவிட்டு வெளியேறிய பத்து பதினைந்து நிமிடத்தில் அவனுக்கு ஒரு போன் வந்தது. எடுத்து ‘ஹேலோ என்றவன் அந்த பக்கத்திலிருந்து சொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு, “என்ன!” என்றான் சிறு அதிர்ச்சியுடன். பிறகு ஒருவித அழுத்தமான மௌனத்துடன் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தவன் இறுதியாக, “ஓகே” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

 

அழைத்தது யார் என்ன என்று எதுவும் தெரியவில்லை என்றாலும் அந்த அழைப்பு வந்த பிறகு அவனிடம் ஒருவித இறுக்கத்தை உணர்ந்தாள் மிருதுளா. பின் இருக்கையில் அமர்ந்திருந்தவளுக்கு அவனுடைய முகத்தை பார்க்க முடியவில்லை என்றாலும் காதோரம் புடைத்த நரம்பும் கழுத்துப்பகுதியில் துளிர்த்து வடிந்த வியர்வையும் அவனுடைய இயல்பற்ற நிலையை எடுத்துக் காட்டியது. மிருதுளா சுமனை திரும்பிப் பார்த்தாள். நடப்பதை அவளும் கவனித்துக் கொண்டிருப்பதன் அறிகுறியாக அவளுடைய பார்வை ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருப்பவனையே வெறித்துக் கொண்டிருந்தது. அவன் ஏதாவது கூறுவான் என்று சற்றுநேரம் காத்திருந்த சுமன், “என்ன ஆச்சு?” என்று வாய்விட்டே கேட்டாள். அவன் பதில் சொல்லாமல் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.

 

“சுஜித்… சுஜித்துக்கு ஒன்னும் இல்லையே! போன்ல யாரு? ஹாஸ்ப்பிட்டல்லேருந்தா? ” – பயந்துபோய் கேள்விகளை அடுக்கினாள்.

 

அப்போதும் அவன் வாய் திறக்கவில்லை. ஆனால் வண்டியை ஓரம்கட்டி நிருத்தனான். சாலையின் இருபுறமும் மரங்கள் அடர்ந்த காடு. நகரத்திற்குள் செல்ல இன்னும் அரைமணிநேரமாவது பயணம் செய்ய வேண்டும். ஏன் இங்கு நிறுத்துகிறான்! – பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவன் ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கிவந்து பின்பக்க கதவை திறந்தான்.

 

“என்ன ஆச்சு?” – குழப்பத்துடன் கேட்டாள் மிருதுளா.

 

“இறங்கு…” – இயந்திர மனிதன் போல் உத்தரவிட்டான்.

 

“வாட்!” – மிரண்டு போனாள் மிருதுளா. கண்களில் கலவரத்துடன் அவனை பார்த்தாள். அவனுடைய முகமும் குரலும் முற்றிலும் மாறியிருந்தது. சற்று நேரத்திற்கு முன் மாளிகையில் பார்த்த ஒரு சாதாரண மனிதன் இல்லை இவன். மிருதுளா பயத்துடன் சுமனுடைய கையை பிடித்தாள். தோழியை இறுக்கமாக பற்றிக் கொண்ட சுமன், “என்ன பண்ற திலக்?” என்று சீறினாள்.

 

அவளுடைய சீற்றம் இவனை எட்டவே இல்லை. மிருதுளாவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன், “கீழ இறங்கு” என்று அடி குரலில் உறுமினான்.

 

மிருதுளாவின் இதயம் தாறுமாறாக துடித்தது. “நோ… நோ… நோ…” – உடல் வெடவெடக்க படபடத்தாள். “ப்ளீஸ்… லீவ் மீ…” பதறி அழுதாள்.

 

“திலக்… இவ்வளவு சீப்பானவனா நீ! போன வாரம் தானே ஒருத்தன் செத்தான். அறிவில்ல உனக்கு?” – அதட்டினாள் சுமன்.

 

அதுவரை ராட்சஸ தனமாக இருந்த அவன் முகத்தில் சட்டென்று மனிதம் தோன்றி நொடியில் மறைந்தது.

 

“பாபி… ஐம் நாட் ஸச் எ சீப் பர்சன். நா என்னோட டியூட்டியைத்தான் செய்றேன். நீங்க இதுல தலையிடாதீங்க”

 

“என்னது! டியூட்டியா! என்ன டியூட்டி?” – அவனுடைய உத்தேசம் புரிந்து பதறினாள்.

 

அவளுடைய பதற்றத்தை பொருட்படுத்த அவனுக்கு நேரமில்லை. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக வேலையை முடித்துவிட்டு கிளம்ப வேண்டும். காருக்குள் வைத்தே முடித்துவிடலாம். பிறகு சுத்தம் செய்வது பெரிய தலைவலி… காட்டுக்குள் வைத்து முடித்தால் பிணத்தை டிக்கியில் தூக்கிப் போட்டுக் கொண்டு போய்விடலாம்.

 

“கமான்… கெட் டௌன்…” – மிருதுளாவின் கையைப் பிடித்து வெளியே இழுத்தான்.

 

“ஐயோ! விடு… விடு என்னை. விட்டுடு” – கத்தியபடி அவன் பிடியிலிருந்து விடுபட திமிறி தோற்றாள் மிருதுளா. இடுப்பில் செருகியிருந்த துப்பாக்கியை கையில் எடுத்து அவளை குறிபார்த்த திலக், “நட” – அவளை காட்டுக்குள் வழிநடத்த முயன்றான். மிருதுளா வெலவெலத்துப் போனாள் மிருதுளா.

 

“திலக்… ப்ளீஸ்… விட்டுடு… டோண்ட் டூ திஸ் டு ஹர்… திலக்…” – சுமனும் கீழே இறங்கி தோழிக்காக போராடினாள். கெஞ்சி கதறி அவனுடைய எண்ணத்தை மாற்ற முயன்றாள். ஆனால் துளியளவும் அவனை அசைக்க முடியவில்லை.

 

குறிபார்த்திருக்கும் துப்பாக்கி எந்த நேரத்திலும் தன் உடலை துளைத்துவிடும் என்கிற அச்சத்துடன் அவனுடைய மிரட்டலுக்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல், “விட்டுடு… ப்ளீஸ்… ப்ளீஸ்…” என்று அழுதுகொண்டே காட்டை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தாள் மிருதுளா.

 

ஆபத்தின் விளிம்பிலிருக்கும் தோழியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமே என்கிற தவிப்புடன், “திலக்… திலக்…” என்று யாசித்தபடி அவர்களை பின்தொடர்ந்துக் கொண்டிருந்தாள் சுமன்.

 

************************

 

கோர்த்தாவில் ‘இது’ நடந்தால் ‘இதை’ செய்ய வேண்டும் என்கிற சிஸ்டம் முறைமைப் படுத்தப்பட்டிருந்தது. எனவே ஆட்களுக்கு அடிபடும் பொழுதெல்லாம் மருத்துவமனைக்கு சென்று அனுதாபம் காட்ட வேண்டும் என்கிற அவசியம் தலைமைக்கு இல்லை. நடக்க வேண்டியது அனைத்தும் தானாகவே நடக்கும். அதோடு இது ஆபத்தான இடம் என்பதையும் எச்சரிக்கையோடு வேலை செய்ய வேண்டும் என்பதையும் வீரர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பது கோர்த்தாவின் கொள்கை. அந்த கொள்கைக்கு விதிவிலக்காக வேலை செய்யும் தளபதிகளில் முக்கியமானவன் அர்ஜுன் ஹோத்ரா.

 

தனக்கு கீழே வேலை செய்யும் ஆட்களில் யார் பாதிக்கப்பட்டாலும் உடனே நேரில் சென்று பார்ப்பான். அவர்களுடைய உடல் நலனையும் மனோ திடத்தையும் வலு படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டுவான். அப்படித்தான் இன்றும் சுஜித்திற்கான முதற்கட்ட சிகிச்சை முடியும் வரையில் மருத்துவமனையில் இருந்துவிட்டு, மாலிக்கைச் சென்று பார்த்து வாழ்த்திவிட்டு அவனுடைய காயங்களை பற்றி விசாரித்துவிட்டு மாளிகைக்குத் திரும்பினான்.

 

நகரத்தைக் கடந்து காட்டுப் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த போது சற்று தூரத்தில், பரிச்சயமான ஒரு கார் நின்றுக் கொண்டிருப்பதை கவனித்தான். உடனே தன்னுடைய காரில் வேகத்தை வெகுவாய் குறைத்துவிட்டு, நிற்பது யாருடைய கார் என்று யோசித்தான். அதிக நேரம் எடுக்காமல் உடனேயே தெரிந்துவிட்டது அது, தனக்கு கீழ் வேலை செய்யும் திலக்குடைய வாகனம் என்று.

 

‘அது ஏன் இங்கு நிற்கிறது! அதுவும் இந்த நேரத்தில்!’ – நொடி பொழுதில் எச்சரிக்கையானான். ஒரே மாதிரியான காரை பயன்படுத்தி தனக்கு யாரேனும் பொறி வைத்திருக்கக் கூடும் என்கிற எண்ணத்தில் காரில் வேகத்தை அதிகப்படுத்தி அந்த வாகனத்தை கடந்தான். அப்படி கடக்கும் போது காருக்குள் யாரேனும் இருக்கிறார்களா என்பதை நோட்டம்விட்டவன், அதில் ஒருவரும் இல்லை என்றதும் சற்று தூரத்தில் தன்னுடைய காரை நிறுத்தினான். கீழே இறங்குவது உசிதமல்ல. தோட்டா எந்த திசையிலிருந்து வேண்டுமானாலும் பாயலாம். எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் காரை ரிவர்ஸ் எடுத்து, சூழலை கூர்மையாக கவனித்தான். காட்டுக்குள் தூரத்தில் ஏதோ ஒளிர்வது தெரிந்தது.

 

‘பகலில் புகையும் இரவில் ஒளியும் காட்டில் உன்னை வெளிக்காட்டும்’ என்கிற பொருளில் ஆங்கிலத்தில் ஒரு வாய்மொழி உண்டு. அது வெறும் வாய் மொழியல்ல. உண்மை… இரவு நேரத்தில் காட்டுக்குள் ஒளிரும் சிறு ஒளி வெகு தொலைவில் இருந்தாலும் பார்வைக்குப் புலப்படும். அப்படி ஒரு ஒளிதான் இப்போது அர்ஜுன் ஹோத்ராவின் கவனத்தை ஈர்த்தது.

 

‘என்னவாக இருக்கும்!’ – லேசாக… ஒரு நூல் இழையளவு கண்ணாடியை இறக்கி ஏதேனும் சத்தம் கேட்கிறதா என்று கவனித்தான்.

 

காடு மிகவும் விசித்திரமானது. இரைச்சலுக்கு மத்தியில் வாழும் நகரத்துவாசிகள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு, காட்டில் காதுக்குள் முணுமுணுக்கும் சின்ன கிசுகிசுப்பு வெகு தூரம் பயணம் செய்யும். ஒரு குழந்தையின் அழுகுரல் இடி முழக்கம் போல் பல மைல்கள் கடக்கக் கூடியதாக இருக்கும். அப்படியிருக்கும் போது மிருதுளாவின் அழுகுரலை அவன் அடையாளம் கண்டுகொண்டான் என்பதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

 

தலைதூக்கியிருந்த எச்சரிக்கை உணர்வு அவள் குரலை கேட்ட மாத்திரத்தில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. நொடி கூட தாமதிக்காமல் உடனடியாக காரிலிருந்து இறங்கி காட்டுக்குள் ஓடினான். இன்னொரு பெண்ணின் குரலும் கேட்டது. ‘திலக்… திலக்…’ என்று அழுகுரலில் புலம்பிக் கொண்டிருந்தாள். ஆம்… அது திலக்குடைய கார் தான். அவன் என்ன செய்கிறான் இங்கு… மிருதுளாவை ஏன் இங்கு கொண்டு வந்தான். தீயை பற்ற வைத்தது போல் நெஞ்சு எரிந்தது. கையில் துப்பாக்கியை பிடித்தபடி ஒளி தெரியும் திசையை குறிவைத்து ஓடினான்.

 

“வேண்டாம்… ப்ளீஸ்…” – மிருதுளா அழுகிறாள்.

 

“திரும்பு… டர்ன் அரௌண்ட்…” – திலக் அதட்டுகிறான்.

 

“விட்டுடு திலக்… உன்ன கெஞ்சி கேட்கறேன் ப்ளீஸ்…” – மூன்றாவது குரல்… சுமன்… சுமனுடைய குரல்தான் அது… அவள் கெஞ்சுகிறாள். அர்ஜுன் ஹோத்ராவின் வேகம் காற்றைக் கிழித்தது. தரையில் கொட்டிக் கிடைக்கும் சருகுகளின் சத்தம் சரசரத்தது.

 

சட்டென்று சுதாரித்தான் திலக். கையிலிருந்த அலைபேசி டார்ச்சை சுற்றும் முற்றும் சுழற்றினான். அதற்குள் மரத்தின் பின்னால் பதுங்கிய அர்ஜுன் அவனோடு வேறு யாரேனும் இருக்கிறார்களா என்று கவனித்தான். இல்லை… அவனைத் தவிர வேறு யாரும் அங்கே இல்லை…

 

“யாரு? யார் அது?” – அதட்டினான் திலக். அவனுடைய துப்பாக்கி இன்னமும் மிருதுளாவை குறிவைத்தபடியே இருந்தது.

 

மரத்திற்கு பின்னாலிருந்து வெளிப்பட்ட அர்ஜுனின் துப்பாக்கி திலக்கை குறி பார்த்திருந்தது.

 

“அர்ஜுன்!” – ரட்சகனைக் கண்டுவிட்டது போல் அலறினாள் மிருதுளா. அவன் பார்வை அணுவளவும் திலக்கை விட்டு அகலவில்லை.

 

“டிராப் யுவர் கன்” – கொடிய குரலில் எச்சரித்தான். திலக் துப்பாக்கியை இறக்கவில்லை.

 

“அர்ஜுன் பாய். ஐ வில் எக்ஸ்ப்லைன்…” – அடுத்த நொடி அர்ஜுன் ஹோத்ராவின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு அவன் கையை துளைத்துக் கொண்டு விளியேறியதில் அவன் பிடித்திருந்த துப்பாக்கி ரத்தத்தில் குளித்து கீழே விழுந்தது.

 

“ஆ… அர்ஜு…ன் பா…ய்… என்னை… பேச… விடுங்க…” – வலியுடன் கூடிய கோபத்தில் பெருங்குரலில் கத்தினான்.

 

“நீல் டௌன்…” – காலனின் குரல் அது.

 

“பாய்” – அடுத்த நொடி காலில் பட்ட குண்டு அவனை மண்டியிட வைத்தது.

 

“பாய் ப்ளீஸ்… நான் எதுவும் பண்ணல…” – துப்பாக்கியின் பிற்பகுதியால் அவனுடைய பின்னந்தலையை பலமாக தாக்கியவன், “உன்கிட்ட கேட்கும் போது மட்டும் பேசு” என்றான்.

 

அது கட்டளை. மீறினால் தண்டனை என்பதை திலக் நன்றாகவே அறிந்திருந்தான். எனவே வாயை இறுக்கமாக மூடிக் கொண்டான். உயிர் பயம் நெஞ்சை அடைத்தது.

 

அர்ஜுன் மிருதுளாவை பார்த்தான். “என்ன நடந்தது?” என்றான் அதே கொடுங்குரலில்.

 

அதீத அதிர்ச்சியில் திகைத்துப் போய் நின்ற மிருதுளாவிற்கு பேச்சு வரவில்லை. சுமன் சுருக்கமாக படபடத்தாள்.

 

“சுஜித்தை பார்க்க கிளம்பினோம். திலக் தான் கூட்டிட்டு வந்தான். திடீர்ன்னு ஒரு போன் வந்தது. மிருதுளாவை… மிருதுளாவை… கொலை… கொலை… செய்ய…” – இருளில் ஒளிரும் புலியின் கண்களை போல் பளபளக்கும் கண்களுடன் திலக் பக்கம் திரும்பினான்.

 

“யார் அது?”

 

“பெரியவர்… சுக்லா… சுக்லா ஜீ… அவர் தான்… அவர்தான் மிருதுளாவை முடிக்க சொன்னாரு… பாய் ப்ளீஸ்… எனக்கு மிருதுளாகிட்ட பர்சனலா எந்த பிரச்சனையும் இல்ல… நா… நா எனக்கு கொடுத்த வேலையை தான் செஞ்சேன்… பாய்… நம்புங்க…” – அவனுடைய வெறித்த பார்வையை கண்டு பதறினான் திலக்.

 

“போனை கொடு” – அவனுடைய அலைபேசியை பறித்து சமீபத்திய அழைப்புக்களை சோதனை செய்தான். உண்மைதான்… ராகேஷ் சுக்லாவின் உதவியாளரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது.

 

“சோ… என்கிட்ட இருந்துகிட்டு சுக்லா ஜிக்கு வேலை பார்க்கற! இல்ல?” – பெரிய தவறில் சிக்கிக் கொண்டவன் சிறிய தவறை மறந்துவிட்டான். ஆனால் பெரிதும் சிறுதும் அவன் முடிவு செய்வதில்லையே!

 

“இங்கிருந்து எல்லா நியூஸையும் பாஸ் பண்ணிக்கிட்டு இருக்க!”

 

“பாய்…” – பீதி தெரிந்தது அவன் குரலில்.

 

“எவ்வளவு நாளா நடக்குது இது?”

 

“ஒரு… இல்ல… ரெண்டு வருஷமா…”

 

“ஓ…ஹோ…!!!”

 

“பாய்… ஐம்… ஐம் சாரி…” – தவிப்புடன் மன்னிப்பை கோரினான்.

 

அவனை வெறித்துப் பார்த்த அர்ஜுன், “நீ என்ன பேசுறன்னு எனக்கு புரியல திலக். ரெஸ்ட் இன் பீஸ்…” என்று இலகுவாக கூறிவிட்டு ட்ரிகரை அழுத்தினான். துப்பாக்கி வெடிக்கும் ஒலியில் உடல் தூக்கிப் போட மிருதுளா கண்களை மூடிக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

நெற்றியில் குண்டடிபட்டு தடாரென்று தரையில் சாயும் மனிதனை சலனமில்லாமல் பார்த்த சுமன், ஓ வென்று வீறிட்டு அழும் தோழியிடம் பாய்ந்து அவளை அணைத்துக் கொண்டாள். அவள் உடல் வெடவெடவென்று நடுங்கியது.

 

அர்ஜுன் அவள் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. கர்மமே சிரத்தையாக அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்து ஏதோ பேசியவன் இறுதியாக, “சீக்கிரம் வந்து இதை கிளீன் பண்ணு” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான். பிறகு திலக்கின் அலைபேசியையும் கை துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு அவனுடைய பாக்கட்டை சோதனை செய்து பர்ஸையும் கைபற்றிக் கொண்டு, “ஃபாலோ மீ” என்று கட்டளையிட்டபடி முன்னோக்கி நடந்தான்.

 

அவர்கள் சாலையை வந்தடைந்த போது அர்ஜுன் அழைத்த கோர்த்தா ஆட்கள் வந்து சேர்ந்துவிட்டார்கள். பொழுதும் பளபளவென்று விடிய துவங்கிவிட்டது.

 

“கெட் இன்” – வண்டியில் ஏறும்படி பெண்கள் இருவருக்கும் பொதுவாக கூறியவன், அவர்கள் தன்னுடைய காரில் ஏறும் வரை அமைதியாக இருந்துவிட்டு பிறகு ஆட்களிடம் திரும்பி, “உங்களுக்கு நேரம் அதிகம் இல்ல. வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடி பாடியை க்ளீயர் பண்ணிடுங்க. பப்லிக் கண்ணுல எதுவும் பட வேண்டாம். மூணு தரம் சுட்டேன். ரெண்டு புல்லெட் பாடியில இருக்கும். ஒரு புல்லெட் கைல பட்டு வெளியே வந்திருக்கும். மூணு புல்லெட் கேஸ், ஃபயர் ஆனா புல்லெட் ஒன்னு… நாலுமே எனக்கு வேணும். எவிடென்ஸ் எதுவும் மிஸ் ஆகக் கூடாது. அவனோட கார் சாவி கார்ல இருக்கான்னு பாருங்க. இல்லைன்னா அதுவும் இங்கதான் எங்கேயாவது கிடக்கும். தேடி பார்த்து காரையும் இங்கிருந்து கிளியர் பண்ணிடுங்க. டேக் கேர்” – அறிவுறுத்தல்களை கொடுத்துவிட்டு தன்னுடைய காரில் வந்து ஏறினான்.

 




21 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    NN fan says:

    Nithya mam neenga ipdi one week break edukradhuku pathila ella eps um eludhi mudichitu aprom daily updates thanga wait panna mudila romba kashtama iruku


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      கரெக்ஷன் பண்ணறேன்… இம்ப்ரூவ் பண்ணறேன்னு எழுதின எபிசோடையே திரும்ப திரும்ப மாத்தி மாத்தி டைப் பன்னுகிட்டு இருப்பேன் பா… அப்படி ஒரு கதை பாதியிலேயே நின்னு போச்சு… 🙁 எனக்கு அப்பப்போ எழுதி போட்டுடறதுதான் செட் ஆகும்… மொத்தமால்லாம் சரி வராது… ஆனா எபிசோட் இன்னும் கொஞ்சம் சீக்கிரம் கொடுக்க ட்ரை பண்ணறேன். வீட்டு வேலை அதிகமாயிடிச்சு ப்பா… சமாளிக்க முடியல…


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        NN fan says:

        Thanks for considering mam . 🙏🏻


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    JAYALAKSHMI PALANIAPPAN says:

    Next episode post soon. Waiting


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    sandiya saravana says:

    super epi paa


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Bhuvi says:

    Next epi seekram podunga. Eagerly waiting


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anjali Suresh says:

    Ajuuuuuu ….. yen unaku ivlo otharuthu, mrithuvoda azhukural ketta???


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Afrin says:

      Namakku puriyudhu.. avanukku purileye


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Anjali Suresh says:

        Correct u. Avlo peria kortha gang head pola ulla aaluku ithu purila, eppaparu gun, kathi, kapadavoda suthuna epdi puriyum..


        • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
          Afrin Zahir says:

          Nammalam edhuku irkom??
          Nithya sis ya solli puriya vachirlam


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sumithra Ramalingam says:

    correct ah vanduttan.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rinu says:

    Please update the next ep soon


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rajee Karthi says:

    Interesting and thrilling. Super


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya Ganeshan says:

    😢😢😢😢


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    hooooo just miss miruthuuuuuuuuuuu


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rosy says:

    Total how many episodes


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      I don’t know… 🙁


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Latha says:

    Super pa next ud plse


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Umamanoj says:

    Sema fast update…poruthu irunthu padichalum nalla theeni thaan.. superb Nithya…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kurinji says:

    Talau talapathiyai nambama Tani thittama…ini


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vidya Priyadarsini says:

    Paavam mirthu… ore blood kaatureenga… konjam payamathan iruku…. anyways worth episode for waiting. But very small…

You cannot copy content of this page