Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 28

அத்தியாயம் – 28

உயிரோடு இருக்கிறோம் என்பதையே சிரமப்பட்டு நினைவிற்கு கொண்டுவர வேண்டியிருந்தது மிருதுளாவிற்கு. சாவின் விளிம்பை தொட்டுவிட்டு மீண்டிருக்கிறாள். அவன் மட்டும் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால் இந்நேரம் பிணமாகியிருப்பாள். நினைக்கும் போதே உடல் சில்லிட்டது. சுமனோடு மேலும் ஒண்டிக்கொண்டபடி கண்ணாடியின் வழியே அர்ஜுனை ஏறிட்டாள். சிவந்திருந்த கண்களை மட்டும் தான் காண முடிந்தது அந்த கண்ணாடியில். அதுவே அவனுடைய மனநிலையை ஊகிக்க போதுமானதாக இருந்தது. ஆயாசத்துடன் கண்களை மூடினாள். சற்று நேரத்திலேயே மாளிகை வளாகத்திற்குள் வந்து நின்றது வாகனம்.

 

“சுஜித் எப்படி இருக்கான்?” – கீழே இறங்குவதற்கு முன் தயக்கத்துடன் கேட்டாள் சுமன்.

 

“ஆபத்து எதுவும் இல்ல. ஒரு மணிநேரம் ரெஸ்ட் எடு. ஹாஸ்ப்பிட்டலுக்கு கூட்டிட்டு போக ஆள் வர சொல்றேன்” – கரகரத்த குரலில் கூறிவிட்டு கீழே இறங்கி விறுவிறுவென்று மாளிகைக்குள் நுழைந்தான். அவன் தன்னை ஒருமுறை கூட ஏறிட்டு பார்க்கவில்லை என்கிற உறுத்தலுடன் அவனை பின்தொடர்ந்தாள் மிருதுளா.

 

தளபதி – இது வெறும் பட்டம் அல்ல. பொறுப்பு… லட்சத்தில் ஒருவன் மட்டுமே தேர்ந்தெடுக்கும் தொழிலை அவன் தேர்ந்தெடுத்திருக்கிறான். ஒருமுறை விட்டு மறுமுறை பிடிக்க இது ஒன்றும் பணத்தை பணயம் வைக்கும் தொழிலல்ல. உயிரை பணயம் வைக்கும் தொழில். போனால் வராது. கரணம் தப்பினால் மரணம். அவ்வளவுதான். இதில் துணிவும் துரிதமும் எந்த அளவு முக்கியமோ அதே அளவு நிதானமும் எச்சரிக்கையும் முக்கியம்.

 

இன்று அவனுடைய எச்சரிக்கை எங்கு போனது? நிதானம் எங்கு போனது? அனைத்தும் மிருதுளாவின் அலறலோடு காற்றில் கரைந்து போய்விட்டது. அவள் குரலை கேட்டதும் எத்தனை துரிதமாக எதிர்வினையாற்றினான்! எப்படி வந்தது இந்த பலவீனம் அவனுக்குள்! – கைகள் இரண்டையும் சுவற்றில் ஊன்றி, ஷவருக்கு கீழே நின்று ஊற்றாக பீறிடும் குளிர்ந்த நீரை மொத்தமாய் உச்சந்தலையில் வாங்கியும் அவனுடைய உஷ்ணம் குறையவில்லை.

 

திலக்கின் நியாயத்தை காது கொடுத்து கேட்கவே அவன் தயாராக இல்லை. அவனை கொலை செய்ததற்காக வருந்தவில்லை. ஆனால் கட்டுப்பாடற்று – நிதானமிழந்து – மிருதுளாவிற்காக கொலை செய்ததைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவனால். தொற்றுக்கு கிருமி போல் அவனுக்குள் ஊடுருவிவிட்டாள். உடனடியாக சிகிச்சை செய்தாக வேண்டும். இல்லையென்றால் அழிவு அவனுக்குத்தான். – ஷவரை அணைத்தான்.

 

ஈரத்தலையை துவட்டியபடி அவன் குளியலறையிலிருந்து வெளியே வந்த போது அறைக்கதவு தட்டப்படும் மெல்லிய ஓசை அவன் செவியை எட்டியது. உத்தரவில்லாமல் வேலைக்காரர்கள் கூட மேல்தளத்திற்கு வர முடியாத நிலையில், வந்திருப்பது மிருதுளாவாகத்தான் இருக்க முடியும் என்பதை தர்க்கரீதியாக மூளை அறிவுறுத்துவதற்கு முன், அவன் உள்ளம் அவள் வரவை உணர்ந்தது. உடல் விறைத்து நிமிர கதவையே வெறித்துப் பார்த்தான். தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள் மிருதுளா.

 

வெகு நேரம் சுய அலசல் செய்து திடப்பட்டிருந்தவன் அவளைக் கண்டதும் நீர்த்துப்போனான். சுவாசத்தின் வேகம் சீரற்று போனது. இதயத்துடிப்பு அதிகரித்தது. உள்ளம் தடுமாறியது. அதை வெளிக்காட்டாமல் இருக்க முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டான்.

 

அவளும் குளித்திருந்தாள். ஈரம் காயாத கேசம் பளபளத்தது. முகத்தில் குழப்பம் சூழ்ந்திருந்தது.

 

“இந்நேரம் செத்துப்போயிருப்பேன்” – முணுமுணுத்தாள்.

 

அவனுக்குள் சுருக்கென்று தைத்தது அந்த வார்த்தை. அவன் தடித்த உதடுகள் அழுந்த மூடின.

 

“நீங்க… காப்பாத்தீட்டிங்க…” – நடந்த சம்பவத்தின் தாக்கம் இன்னமும் அவளுக்குள் இருப்பதன் அடையாளமாக உடல் வெளிப்படையாக நடுங்கியது. உயிர் பயம் பொல்லாதது. அது அவ்வளவு விரைவாக விட்டுப்போய்விடுமா என்ன? கைகளை குறுக்காகக் கட்டிக் கொண்டு, “தேங்க் யூ…” என்றவளின் குரலும் உணர்ச்சிவசத்தில் கரகரத்தது.

 

அர்ஜுன் ஹோத்ராவின் கட்டுப்பாட்டில் கீறல் விழுந்தது. மரத்துப்போயிருந்த மனதில் உணர்வுகள் ஊற்றெடுக்கத் துவங்கின. அவளுடைய கலக்கமும் பயமும் அவனை கரைத்தது.

 

“ரிலாக்ஸ்… அதெல்லாம் முடிஞ்சிடிச்சு ஓகே.. யு ஆர் ஆல்ரைட் நௌ… யு ஆர் ஆல்ரைட்” – அவளிடம் நெருங்கி அவளுடைய கலக்கத்தை களைய முனைந்தான்.

 

“சுக்லா ஜீன்னா யாரு? அவரு ஏன் என்னை கொலை செய்ய சொன்னாரு?” – அப்படி கேட்கும் போது அவன் கண்களுக்கு அவள் சிறு குழந்தை போல் தோன்றினாள். அவன் மனம் உருகியது.

 

“ராகேஷ் சுக்லா கோர்த்தாவோட தலைவர். என்னோட பாஸ்…”

 

மிருதுளாவின் கண்கள் பெரிதாக விரிந்தன. மிரட்சியில் முகம் வெளிறியது. அவர்! அந்த மனிதர்! இந்த மாளிகையில் ஒருமுறை அவரை பார்த்திருக்கிறாள். பெரிய மீசையும்… உருட்டிய விழிகளும்… அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்று அவர் அவளை பார்த்த பார்வை! ஓ காட்! அந்த பார்வைக்கான பொருள் இதுதானா! அன்றே அவளை கொலை செய்ய முடிவெடுத்துவிட்டாரா! கடவுளே! – “நா… நா என்ன பண்ணினேன்? என்னை ஏன்?” – கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்தது.

 

அவளுடைய கண்ணீர் அவனை நிலையிழக்கச் செய்தது. சட்டென்று அவளை இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான். “நோ… நீ எதுவும் செய்யல… அது ஒரு மிஸ்டேக்… பிலீவ் மீ… இனி அப்படி நடக்காது… நா இருக்கேன்ல. காம் டௌன்…” – அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

 

இதையெல்லாம் அவன் திட்டமிட்டோ, விரும்பியோ செய்யவில்லை. அந்த ஒரு நொடியில் மனதில் தோன்றிய உணர்வுகளின் வெளிப்பாடு அது. அவனை மீறி நடந்துவிட்டது. மிருதுளாவின் உடல் அழுகையில் குலுங்கிய போது அவனால் அவளிடமிருந்து விலக முடியவில்லை. மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

 

“ஹி லூக்ஸ் வெரி டேஞ்சரஸ். எனக்கு பயமா இருக்கு…” – உறுதியான மரத்தை சுற்றிப்படரும் கொடி போல் அவளுடைய கரங்களும் அவன் முதுகில் படர்ந்தன.

 

“ஷ்ஷ்… ஒரு பயமும் இல்ல… ரி…லா..க்ஸ்…” – அவளை தேற்றினான்.

 

“என்னை… கண்டிப்பா… கொன்…னு…டுவாங்க…” – தேம்பியழுதபடி பயந்த முயல்குட்டி புதருக்குள் பதுங்குவது போல் அவனுக்குள் பதுங்கிக்கொள்ள முயன்றாள்.

 

“ப்ச்… மிருதுளா… என்னை பாரு… லுக் அட் மீ… நா யாரு… ம்ம்ம்? ஹூ ஆம் ஐ?” – முகத்தை மட்டும் விளக்கி அவளை பார்த்துக் கேட்டான். அவனுடைய கேள்வியின் உள்ளர்த்தம் புரியாமல் விழித்தாள் மிருதுளா. புருவம் உயர்த்தி பதில் சொல்ல உந்தினான் அர்ஜுன்.

 

“அர்…ஜு…ன் ஹோ…த்…ரா… கோர்த்..தா மே..ன்” – நலிந்த குரலில் தேம்பியபடி முணுமுணுத்தாள் மிருதுளா.

 

“அது மத்தவங்களுக்கு. உனக்கு யாரு?” – அவனுடைய கேள்வியில் தீவிரம் கூடியது. நெருக்கம் அதிகரித்தது. அப்போதுதான் மிருதுளா தன்னிலைக்கு வந்தாள். அவள் இதயம் ட்ரம்ஸ் வாசிக்க துவங்கியது. காது மடல் சூடாகி சிவந்தது. எச்சிலை கூட்டி விழுங்கினாள். வறண்டுபோன இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டாள். தொண்டைக்கு குழிக்குள் காற்றுப்பத்து அடைத்துக் கொண்டது போல் தோன்றியது. பேச முடியவில்லை.

 

அவளுடைய தடுமாற்றத்தை உணர்ந்து பிடியை தளர்த்தியவன், அவளை கட்டிலில் அமரச் செய்து, அவள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து அவள் கைகளை பிடித்தபடி கண்களை கூர்ந்து நோக்கினான். அவனுடைய கேள்விக்கு பதிலை அவனிடமே எதிர்பார்ப்பது போல் அவளும் அவன் முகத்தை ஏறிட்டாள்.

 

“ஐம் யுவர் புல்லெட் கேட்சர்” என்றான்.

 

அவளுடைய புருவங்கள் சுருங்கின. அவளுக்கு புரியவில்லை.

 

“உன்னோட ஆபத்தை என்னோடதா ஏற்றுக்கறவன். உன்னோட உயிரை எடுக்கணும்னா அதுக்கு முன்னாடி என்னோட உயிரை எடுத்திருக்கணும். காட் இட்?” – அவனுடைய வார்த்தையில் தீவிரம் இருந்தது. கண்களில் உண்மை இருந்தது. அவள் தடுமாறினாள்.

 

“ஏன்… ஏன் அப்படி?” – வெகு சிரமப்பட்டு அந்த வார்த்தை வெளிப்பட்டது அவளிடமிருந்து.

 

அவளுடைய கேள்விக்கு அவன் உடனே பதில் சொல்லவில்லை. ஓரிரு நொடிகள் அவள் முகத்தை பார்த்தபடி அமைதியாக இருந்தான். பிறகு இடதுபுற நெஞ்சில் கைவைத்து, “ஐ ஃபீல்… யு ஆர் இம்பார்டென்ட் டு மீ… நீ எனக்கு முக்கியமானவள்” என்றான். அவன் குரல் இழைந்து.

 

மிருதுளாவின் உள்ளம் கரைந்தது. இதயத்திற்குள் ஆழமாய் ஓர் இனிய உணர்வு ஊடுருவியது. அந்த இன்பத்தை அவளால் முழுமையாக அங்கீகரித்து அனுபவிக்க முடியவில்லை. அவன் சொல்வதெல்லாம் உண்மையா என்கிற சந்தேகம்… அவளுடைய புரிதல் சரிதானா என்கிற குழப்பம்… இது நிலைக்குமா என்கிற பயம்… அவனுடைய தொழில் மீதான அதிருப்தி… பலவிதமான எண்ணங்கள் அவள் மனதை புகை மூட்டம் போல் சூழ்ந்துக் கொண்டன.

 

அவளுடைய கலங்கிய முகத்தைப் கவனித்தவன், அவள் நெற்றியோடு நெற்றி வைத்து, “ரிலாக்ஸ்” என்றான். அவள் மனதில் மூட்டம் போட்டிருந்த அனைத்து எண்ணங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு மகிழ்ச்சியை மேலெழச் செய்தது அவனுடைய செய்கை.

 

***********************

 

அர்ஜுன் ஹோத்ராவின் மாளிகைக்கு பின்னால் உள்ள திடலில் தரையிறங்கிய ஒரு தனியார் ஹெலிகாப்டரிலிருந்து கீழே இறங்கினார் ராகேஷ் சுக்லா. தான் வரப்போகும் செய்தியை முன்கூட்டியே அர்ஜுனுக்கு தகவல் அனுப்பிவிட்டார். வரட்டும் என்று தான் அவனும் காத்துக் கொண்டிருந்தான். இதோ அவனுடைய அலுவலக அறையில் இருவரும் எதிரும் புதிருமாக நின்றுக் கொண்டிருக்கிறார்கள்.

 

“அவன் என்னோட ஆள். எனக்காக வேலை செஞ்சவன். அவன் மேல எப்படி நீ கைவச்ச?” – கடுங்கோபத்தில் கர்ஜித்தார் ராகேஷ் சுக்லா.

 

ஓரிரு நிமிடங்கள் அவரை வெறித்துப்பார்த்த அர்ஜுன், “இங்க எல்லாருமே உங்க ஆளுங்கதான். எல்லாரும் உங்களுக்காகத்தான் வேலை பார்க்கறோம்” என்றான் இறுகிய குரலில்.

 

அவன் வார்த்தையில் இருந்த உண்மை குத்த அவர் முகத்தில் ஒரு சின்ன அதிர்வு வந்து போனது. இமைக்காமல் அர்ஜுன் ஹோத்ராவை பார்த்தவர், “திலக் அந்த ஹைரார்கில வரமாட்டான். அது உனக்கும் தெரியும்” என்றார்.

 

“எக்ஸ்கியூஸ் மீ… என்ன சொன்னீங்க!” – அவன் குரலிலும் முகத்திலும் கோபம் தெறித்தது.

 

அவர் அலட்சியமாக தோளை குலுக்கினார். “உங்க ஒவ்வொருத்தரையும் நா ஃபாலோ பண்ணிதான் ஆகணும். என்னோட வேலையில அதுவும் ஒரு பகுதி” என்றார்.

 

“ஓ ரியலி! என்னை ஸ்பை பண்ண வேண்டிய அவசியம் இல்லைன்னு சொன்னீங்களே!”

 

“அன்னைக்கு நான் சொன்னது உண்மை இல்லைன்னு உனக்கு தெரியும். உனக்கு தெரியும்ங்கறது எனக்கும் தெரியும். அதனால வார்த்தை ஜாலம் செய்யிறதையெல்லாம் விட்டுட்டு நேர்பட பேசு” என்று அதட்டினார்.

 

“ஃபைன். என்ன தெரியணும் உங்களுக்கு?”

 

“திலக்கை ஏன் கொன்ன?”

 

“அவன் எனக்கு உண்மையா இல்ல. என்னோட சோர்ஸை அழிக்கப்பார்த்தான். அதை நான் செஞ்சே ஆக வேண்டிய சூழ்நிலை”

 

“ஏன் அப்படி பண்ணினான்னு விசாரிச்சிருக்கலாமே?”

 

“கைல துப்பாக்கியோட நின்னுகிட்டு இருக்கான். அப்பவும் நா விசாரணைதான் செஞ்சிருக்கணுமா? அதுதான் கோர்த்தாவோட நடைமுறையா?” – எள்ளலாகக் கேட்டான்.

 

“நீ எப்பவும் கோர்த்தாவோட நடைமுறையை தான் ஃபாலோ பண்றியா?” – அவரும் பதிலுக்கு ஒரு எள்ளல் கேள்வியை வீசினார்.

 

‘இல்லை’ என்கிற உண்மையை சொல்ல முடியாமல், “ஐ ஹேட் திஸ் இண்டராகேஷன். ஷூட் பண்ணறதுக்கு முன்னாடி அந்த இடியட் உண்மையை சொல்லியிருந்தான்னா எனக்கு இந்த தொல்லையே இருந்திருக்காது” என்று முணுமுணுத்தான்.

 

“நீ அவனுக்கு அந்த வாய்ப்பை கொடுத்தியா?”

 

“நிச்சயமா கொடுத்தேன். ஆனா அவன் துப்பாக்கியை இறக்கவே இல்ல. என்கிட்ட பேசவும் முயற்சி பண்ணல” – அடித்துப் பேசினான். அவன் முகத்திலிருந்த தீவிரம் அவரை அவனுக்கு சாதகமாக யோசிக்க வைத்தது.

 

மூச்சுக்காற்றை ஆழமாக உள்ளிழுத்து வெளியேற்றி மனநிலையை சமன்படுத்த முயன்ற சுக்லா, “சில நேரங்கள்ல ஃபிரண்ட்லி ஃபயரை தடுக்க முடியாம போயிடுது” என்றார் முணுமுணுப்பாக.

 

எதிரி என்று நினைத்து சொந்த படைவீரனை தவறுதலாக சுட்டுவிடுவதையே ஃபிரண்ட்லி ஃபயர் என்பார்கள். அர்ஜுன் திலக்கை சுட்டது கூட தவறுதலாக நடந்த ஃபிரண்ட்லி ஃபயர் என்று நம்பினார்… இல்லை… நம்ப வைக்கப்பட்டார் ராகேஷ் சுக்லா.

 

“திலக்கிற்கு நா கொடுத்த வாய்ப்பை நீங்க எனக்கு கொடுத்திருந்தீங்கன்னா இந்த முறை நடந்த ஃபிரண்ட்லி ஃபயரை நிச்சயமா தடுத்திருக்கலாம்” – சிறிதும் தாட்சண்யமின்றி அவரை நேரடியாக குற்றம்சாட்டினான். அதில் ஒரு நொடி திகைத்துத் தடுமாறிய சுக்லா, “என்ன சொல்ற?” என்றார்.

 

“மிருதுளாவை ஷூட் பண்ணறதுக்கு ஆள் அனுப்பறதுக்கு முன்னாடி நீங்க என்னை கூப்பிட்டு பேசியிருக்கணும்”

 

“இங்க யார் பாஸ். நீ எனக்கு வேலை செய்றீயா… இல்ல நா உனக்கு வேலை செய்றேனா?” – கடுப்படித்தார்.

 

“நிச்சயமா நான் தான் உங்களுக்கு வேலை செய்றேன். ஆனா நா செய்யிற வேலையில உங்களோட குறுக்கீடு அதிகமாயிருக்கு”

 

“அப்படியா?” – புருவம் உயர்த்தினார்.

 

“நிச்சயமா. மிருதுளா என்னோட கஸ்டடில இருக்கா. அவளை வச்சு எனக்கு சில பிளான்ஸ் இருக்கு. அதுல நீங்க குறுக்கிட நினைக்கிறீங்க. எனக்கு தெரியாம என்னோட இடத்துல இயங்க நினைக்கிறீங்க. ஏன்?” – கத்தி போல் பாய்ந்தது அவன் கேள்வி.

 

“ஏன்னா அந்த மிருதுளா விஷயத்துல நா உன்ன நம்பலை. அவளோட வலையில நீ விழுந்துட்ட. உன்னால அவளை எதுவும் செய்ய முடியாது. புரியுதா?”

 

அர்ஜுன் அவருடைய குற்றச்சாட்டிற்கு பதில் சொல்லாமல் சிரித்தான். அந்த சிரிப்பு அவரை மேலும் ஆத்திரப்படுத்தியது.

 

“அர்ஜுன், எனக்கு வயசாயிருக்கலாம். ஆனா நானும் ஆம்பளைதான். என்னால உன்ன ஜட்ஜ் பண்ண முடியும்”

 

“அப்படினா என்னோட நடிப்புத்திறமையை நீங்க பாராட்டியிருக்கணுமே! ஏன் கோவப்படுறீங்க?”

 

இருவரும் பேசிக் கொண்டிருந்த போது கதவிற்கு அருகில் ஏதோ அரவாரம் தெரிந்தது. அர்ஜுன் பேச்சை நிறுத்திவிட்டு கவனித்தான். சற்று நேரத்தில் உள்ளே நுழைந்த டேவிட் சுக்லாவை கண்டு வியந்தான். பிறகு உடனே தலையை தாழ்த்தி அவருக்கு மரியாதை செய்தான்.

 

“ஐம் சாரி… நீங்க இருக்கது தெரியாம வந்துட்டேன்” என்றான் வருத்தத்துடன்.

 

“தட்ஸ் ஓகே… நீ உன்னோட ரூம்ல வெயிட் பண்ணு. கொஞ்ச நேரத்துல நானே வர்றேன்” என்று நண்பனுக்கு பதில் கூறி அவனை அனுப்பிவிட்டு சுக்லாவிடம் திரும்பினான் அர்ஜுன்.

 

“என்னை முட்டாளாக்க நினைக்காத. உன்னால முடியாது” – கோபத்துடன் கூறினார் சுக்லா.

 

“அங்கிள், இதுதான் என்னோட ஸ்டைல் ஆஃப் ஒர்க். நம்பிக்கை இருந்தா என் விருப்பப்படி என்னை வேலை செய்ய விடுங்க. இல்லைன்னா நீங்க சொல்றபடி வேலை செய்ற யாரையாவது என்னோட இடத்துக்கு கொண்டு வாங்க. நா விலகிக்கறேன்” – கராறாகப் பேசினான்.

 

அவனை எரித்துவிடுவது போல் முறைத்துப் பார்த்தார் சுக்லா.

 

“விலகிக்கிறதுக்குத்தான் உன்ன வளர்த்துவிட்டேனா?” – பற்களைக் கடித்தார்.

 

“எனக்கு வேற வழியில்லை. ஐ நீட் மை ஸ்பேஸ்”

 

“என்னோட டெல்லி பயணத்தை பற்றி எதிரிகளுக்கு ஏதாவது க்ளூ கொடுத்துட்டான்னா என்னோட உயிருக்கே ஆபத்து. அதுகூட புரியலையா உனக்கு?” – எரிந்து விழுந்தார்.

 

“இங்க எனக்குத் தெரியாம ஒரு அணுவும் அசையாது. திலக்கோட மரணம் கூட அதை உங்களுக்கு உணர்த்தலையா?” – இலகுவாக பதில் கேள்வி கேட்டான்.

 

“விதண்டாவாதம் பண்ற. அதை கூட அவளுக்காகத்தான் பண்ணுறியோன்னு நினைக்க தோணுது”

 

“சந்தேகத்துக்கு மருந்து நம்பிக்கை. ஒன்னு எம்மேல நம்பிக்கை வைங்க… இல்ல…” என்று ஓரிரு நிமிடங்கள் தாமதித்தவன், தன்னுடைய கை துப்பாக்கியை எடுத்து அவர் கையில் கொடுத்து, “மேல தான் இருக்கா. இப்பவே போயி ஷூட் பண்ணுங்க. எனக்கு எந்த அக்கறையும் இல்ல. ஆனா அதுக்குப் பிறகு நாயக் ஃபேமிலியை ட்ரேஸ் பண்ணி ஃபினிஷ் பண்ற வேலையையும் நீங்களே பார்த்துக்கோங்க” என்றான்.

 

“அவளுக்காகத்தானே இப்படி பேசுற?” – அவனை துளைப்பது போல் பார்த்தார்.

“ம்ஹும்… என்னோட எபிலிட்டியை ப்ரூஃப் பண்றதுக்காக” – நீண்ட பெருமூச்சுடன் வழுக்கை விழுந்த தன் தலையை அழுந்த தடவினார் சுக்லா.

 

அனுபவம் தந்த நுண்ணறிவு எச்சரித்தாலும் அர்ஜுன் மீது கொண்டிருக்கும் அபிமானமும் நம்பிக்கையும் அவரை அமைதிப்படுத்தியது.

 




17 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Reena says:

    Nithya sis .. where are you ???


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      updated.. 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Shalini Murale says:

    Waiting for epi 29


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Shalini Murale says:

    Nice story. Excellent update waiting for next update eagerly


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anjali Suresh says:

    Theivame, nee yenpa irpdi kolapra. Mrithuvoda sernthu nangalum paavam nu unaku thonala??? Ipo enna solra IRUKKA? ILLAYA???? IRUKU AANA ILLA nu mattum sollatha. Nan gaandaiduven.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sumithra Ramalingam says:

    Nice ud. Arjun semmaiya pesuran sukla vidam.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Uma maheswari says:

    ஏனோ தெரியவில்லை, மிருதுவின் மேல் ஆரம்பம் இருந்தே சந்தேகம் இருக்கிறது எனக்கு. My intuition says she is the one acting here against Arjun. And Arjun feelings r real அப்படினு தோணுது. Want to wait and watch what is next.. Delhi plans la nichayam miruthu part iruku..


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Priya says:

      Different angle Uma. I like it……:)


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Uma maheswari says:

        Thanks Priya😊


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Anjali Suresh says:

      Aju va parthale otharuthe mrithu ku. Avalaya suspect panringa. Enakennamo athuku ava set aga matta nu than thonuthu pa..


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Uma maheswari says:

        Nithya stories la yethuvenum naalum நடக்கலாம் யா.. வெயிட் pannuvom என்ன நடக்குதுன்னு பார்க்க.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kurinji says:

    Vidamaal vaathaaduraan..suklaajee UNGA maranam yaar kaiyil


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Afrin says:

    Awesome episode.Such powerpacked ! Loved it nithya sis


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priyaganeshan says:

    Nice ud sis👍👍👍👍


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vidya Priyadarsini says:

    Mirthu pali aada….. waiting for the next storm eagerly. Post soon pa wait pana mudiyala… unga story kaha every day oru 10 20 times sahaptham kulla enter aakuren. U r making me addicted to ur stories….


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Afrin says:

      En mind voice ah apdiye soliteenga


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Arul Selvi says:

    Very interesting!

You cannot copy content of this page