முட்டகண்ணி முழியழகி-12
2798
2
முட்டக்கண்ணி – 12
இரவு முடிந்து விடியலின் அடர்த்தியான நிசப்தத்தை ஒரு லயத்துடன் கூவி கலைத்தது ஒரு முகம் தெரியாத வண்ணப்பட்சி ஒன்று. தரையில் பச்சைப் பட்டாய் பறந்து விரிந்திருந்த புற்களின் மூக்கு நுனியில் அதிகாலைப் பனித்துளிகள் வைர மூக்குத்திகளாய் மினுக்கிக் கொண்டிருந்தன.
விடியலின் அனைப்பில் உறங்கும் மனிதர்களை எப்படி எழுப்புவது என்ற தீவிர யோசனையுடன் உக்கிரமாக உதித்துக் கொண்டிருந்தான் ஆதவன், காலைத் தென்றல் குளிர்ச்சியை சுமந்து வந்து நரம்புகலை நலம் விசாரிக்க, அந்த தென்றலின் தாலாட்டில் சுகமாக தன்னை குலுக்கிக் கொண்ட மரங்கள், பூத்திருந்த மலர்களை தென்றலின் சுகமான வருடலுக்கு காணிக்கையாக உதிர்த்தன.
அங்குமிங்கும் அசைய முடியாதபடி, தன்னை இறுக்கியனைத்தபடி உறங்குபவனையே பார்த்திருந்தாள் கனலி. ஆடைகளற்ற உடல்கள் இரவின் மிச்சத்தை நினைவூட்ட, அதிகாலை ஆதவனாய் உடலெங்கும் சிவந்து போனதவளுக்கு.
ஜன்னலின் வழியே புகுந்திருந்த வெளிச்சத்தை உணர்ந்தவள், இப்போது தன்னால் கணவனை சாதரனமாக எதிர்கொள்ள முடியாது என்றுத் தோன்ற, மெதுவாக அவனிடம் இருந்து தன்னைப் பிரித்துக் கொள்ள முயன்றாள்.
முயன்றாள் தான் ஆனால் முடியவில்லை, உறக்கத்திலும் கணவனது பிடி இரும்புப் பிடி. அவனில் இருந்து பிரித்தெடுக்க முயன்று முடியாமல், சலித்தவாறு மீண்டும் அவன் மார்பில் சாய, “கனிம்மா.. இப்பவே எழுந்து என்ன செய்ய போற..” என்றவனின் ஹஸ்கி வாய்ஸில் பட்டென்று அவனிடமிருந்து பிரிந்தவள், அனாதையாய் கிடந்த போர்வையில் தன்னை சுருட்டிக்கொண்டு, “ஏய் திருட்டுப் பூனை இவ்வளவு நேரம் முழிச்சிட்டுத்தான் இருந்தீங்களா..” என்று புசுபுசுவென்று மூச்சுவிட,
அவனோ “அடியேய் மானம் போகுதுடி..” என்றபடியே அவள் போர்த்தியிருந்த போர்வையை இழுக்க, அவன் இப்படி இழுப்பான் என்று அறியாதவள் “ஏய்.. ஏய்..” என்றுக் கத்திக் கொண்டே, இழுத்த இழுப்பில் மொத்தமாய் விழுந்திருந்தாள் அவன் மீது.
“ஏன்டீ விடிய, விடிய என் கூட இப்படித்தான இருந்த, அப்போ போகாத மானம் இப்போ போகுதா..? அப்புறம் நான் பார்த்தா உன் மானம் போயிடுதுன்னா, நீ பார்த்தா என் மானம் போயிடாதா..” என்று அவளை சீண்ட…
“அடச்சீ.. என்ன நீ இப்படியெல்லாம் பேசுற, அதெல்லாம் ரகசியம், வெளியே சொல்லக்கூடாது, புரியுதா..? இனி இப்படி பேசினா… நீ தனியா தான் தூங்கனும் சொல்லிட்டேன்..” என சினுங்க..
“கெட்டது குடி.. நமக்குள்ள இப்படித்தான் பேசனும், இது கூட தெரியாத தத்தியா இருக்க நீ…” என அவளைக் கீழேத் தள்ளி, அவள் சுருண்டிருந்த போர்வைக்குள் இவனும் நுழைந்து கொள்ள,
“ஐயோ.. மாமா ப்ளீஸ்… விடிஞ்சிருச்சு மாமா.. மறுபடியும் ஆரம்பிச்சிடாத..” என்றவளின் எதிர்ப்பில்லாத சினுங்கலிள் தொலைந்தவன்,
“ம்ம்.. ம்ம்ம்… நீதான் மாமாவ ப்ளீஸ் பண்ணனும்..” என்றபடியே இதழை சுவைத்து, மீண்டுமாக ஒரு கூடலுக்குள் அவளை இழுத்துச் சென்றான். அனைத்தும் முடிந்து கலைந்துக் கிடந்த கூந்தலை ஒதுக்கி நெற்றியில் முத்தமிட்டவன், “கனிம்மா, நாளைக்கு நாம கிளம்பலாமாடா.. இன்னும் ஒன்வீக் தான் இருக்கு ரிசப்ஷனுக்கு, ஆர்கனைசர்கிட்ட எல்லா பொறுப்பும் கொடுத்தாச்சுதான் இருந்தாலும், நாமளும் கூடவே இருக்கனும். எனக்கும் நெறைய கால்ஸ் பெண்டிங்க்ல இருக்கு..” என்றான். அவள் மனம் வருந்திவிடக் கூடாதே என்பதை மனதில் வைத்து.
“ஓ.. எஸ்.. போலாமே மாமா… ஆனா நாளைக்கு வேண்டாம், அடுத்தநாள் போகலாம், நாளைக்கு மதுரைக்குப் போகனும், இன்னைக்கு என்னோட ப்ரன்ட்ஸ் இன்ட்ரடியூஸ் பன்றேன் ஓகேவா…”
இந்தளவிற்கு ஒத்துக் கொண்டாளே அதுவே போதும், என்பதால் அவனும் சரியென்று விட, அன்றைய நாள் இருவருக்கும் அழகாய் நகர்ந்தது. வருசனாட்டை அடுத்த வெள்ளிமலைக்கு அழைத்துச் சென்றாள். சில வருடங்களுக்கு முன் இருந்ததற்கும், இப்போது இருப்பதற்கும் பெரும் வித்தியாசத்தைக் காட்டியது வெள்ளிமலை. அங்கு நடக்கும் ஆக்கிரமிப்புகளையும், வனத்துறையினரே நடத்தும் கொடுமைகளையும், மலைவாசிகளும், பழங்குடி மக்களும் படும் கஷ்டங்களையும் விவரித்துக் கொண்டே வந்தாள்.
இதுவரை இருந்த இலகுத் தன்மை முற்றிலும் போய், முகத்தில் தீவிரம் வந்திருந்தது. தார்சாலை முடிந்த இடத்தில் காரை நிறுத்தி பூட்டியவள், “மாமா இதுக்கு மேல மண்ரோடு தான். கார் போகும் தான். ஆனா கதிர் என்னைக் கந்தல் ஆக்கிடுவார். சோ பொறுமையா, ஜாலியா நடந்து போவோம், வாங்க..” என அவன் ககைக்குள் தன் கையைக் கோர்த்துக் கொண்டு நடந்தாள்.
“மரங்கள் மண்ணின் மைந்தர்கள். மரங்கள் நம் தேசத்தின் தியாகிகள். தியாகிகள் இல்லையென்றால் நம் வாழ்வில் திருப்பங்கள் ஏது? மரங்கள் இல்லையென்றால் நம் வாழ்வில் மகிழ்ச்சி ஏது? நம் உடலும் உள்ளமும் உறுதி பெற நமக்காக தவம் செய்யும் முனிவர்கள் இந்த மரங்கள். நம்மை மகிழ்விக்கும் அந்த மரங்களின் சந்ததி நம்மோடு கடைசி வரை பயணித்தால், நமது வாழ்க்கைப் பயணம் வளமாக நலமாக இருக்கும். நாம் பெருக்கச்சொன்னதைச் சுருக்கினோம்; அது மரம். சுருக்கச் சொன்னதைப் பெருக்கினோம்; அது மக்கள் தொகை. பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப மரங்களும்பெருகினால்தான் மனித குலம் தழைக்கும், பிழைக்கும், நிலைக்கும்.
இந்த மரங்கள் சுற்றுச்சூழலின் அரண்கள். வாகனப் புகையில் உள்ள கார்பன் மோனாக்சைடு வளிமண்டலத்தில் அதிகமாகி, ஒரு படலமாக உருவாகும். இந்தக் கரிய படலம் காற்று மண்டலத்தில் மாறுதல்களை ஏற்படுத்தும். இது உயிரினங்களுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும். இந்த ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பதில் மரங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. அரசாங்கமும், தன்னார்வ அமைப்புகளும் ஊடகங்களின் வாயிலாக இது தொடர் பான விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகிரறோம்..” என நிறைய நிறைய இயற்கையைப் பத்தி, மரங்களைப் பத்தி பேசிக்கொண்டே வந்தாள்.
இரண்டு கிலோமீட்டர் தாண்டி சில அரசாங்க குடியுருப்புகளும், குடிசைகளுமான ஒரு பகுதி. மக்களும், வாண்டுகளும், சிண்டுகளும் என அந்த ஊரின் மத்தியில் இருந்த ஒரு மரத்திற்கு அடியில் கூடியிருந்தார்கள். இவளைப் பார்த்ததும் கூட்டத்தின் மத்தியில் ஆராவாரம். இவளுக்காகத் தான் அவர்கள் காத்திருக்கிறார்கள் என்று புரிந்து விட்டது அவனுக்கு.
அவள் முகத்திலும் அளப்பரியா மகிழ்வு.. கோர்த்த கைகளோடு நின்றிருந்தவர்களை அவர்கள் வழிமுறையில் ஆரத்தி எடுத்து, குடிக்க கொடுத்து அந்த மர நிழலின் மத்தியில் உட்கார வைத்தனர்.
அதன்பிறகு அவர்களது ஒவ்வொரு சடங்கிலும், மகிழ்ச்சியாகவே கலந்து கொண்டனர் கணவர் மனைவி இருவரும். இடையில் அவள் மட்டும் ஒரு குடிசைக்குள் நுழைந்தாள், அங்கிருந்தவர்கள் அவள் காலில் விழுந்து அழுவதும் இவள் ஆறுதல் படுத்துவதும் இங்கிருந்த அவனுக்குமேத் தெரிந்தது. ஆனால் ஏன் என்றுத் தெரியவில்லை. தேவையென்றால் அவளே சொல்வாளே என்று அமைதியாகிவிட்டான்.
வெளியில் வரும்போது அவளது முகத்தில் ஒரு கோபமும், ஆத்திரமும் கூடிய இறுக்கம் குடியிருந்தது. பின் அவர்கள் அன்பாய் கொடுத்த மதிய சாப்பாட்டையும் உண்டு அவர்களது ஆசிகளையும், வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு கனிந்த மனதோடு கிளம்பினர் வீடு நோக்கி.
“கனிம்மா… உன்னையும், உன்னோட இந்த சேவைகளையும் நினைக்கும் போது பெருமையா இருக்குடா.. அதேசமயம் எந்தக்கவலையும் இல்லாம, யாரைப்பற்றியும் கவலைப்படாம நம்ம லைபை மட்டும் பார்த்துட்டு இருக்குற சாதரன மக்கள் மாதிரி நானும் இது நாள் வரைக்கும் இருந்திருக்கேனேன்னு நினைக்கும் போது கொஞ்சம் அவமானமாவும் இருக்குடா… இனி நானும் உன் கூட ஜாய்ன் பன்னிக்கலாம்ன்னு யோசிக்குறேன்.” என்றான் தீவிரமாக.
“மாமா… நீங்க இதை செய்யனும்ன்னு நான் சொல்லல, இதுவரைக்கும் ஏன் இப்படி இருந்தீங்கன்னும் கேட்கல, இனி செய்ங்கன்னும் சொல்லமாட்டேன். செய்தா சந்தோசம்தான்..” என்றாள் முகம் மலர.
பிறகு இந்த மக்களைப் பற்றி தனக்குத் தெரிந்த தகவல்களை அவனுக்கு சொல்லிக்கொண்டே வந்தாள். இங்குள்ள மக்கள் பளியர் இன பழங்குடி மக்கள் என்றாள்.
மலைப்பகுதிகளிலேயே வாழ்ந்து பழகிவிட்ட பளியர் இனமக்கள் இன்றும் மலைப்பகுதிகளுக்குச் சென்று மலைப்பொருட்களைக் கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அங்கிருந்து கொண்டு வரும் தேன், கிழங்கு, மரப்பட்டை, சாரனத்தி வேர், முறுங்கை இலை, பெரண்டை, துளசி, ஆவாரம் பூக்கள், வெள்ளறிக்கலச்செடியின் வேர், சிறுகுறிஞ்சி, பெரியாநங்கை, கொடி சங்கை, மிளகு நங்கை, வெள்ளைநாகைதலைவேர், வண்டுகொள்ளிபட்டை ஆகிய மூலிகைப் பொருட்களைச் சேகரித்து வைக்கின்றனர்.
மலைப்பகுதிகளிலிருந்து கொண்டு வரும் பொருட்களை வாங்கிச் செல்ல இடைத்தரகர்கள் மலைவாழ் மக்கள் வசிக்கும் குடியிருப்பான யானைகஜம் என்ற ஊருக்கு, நேரடியாகச் சென்று அம்மூலிகைப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.
மருத்துவ குணம் மிகுந்த சில மூலிகைப் பொருட்கள்
தலைவலி, இருமல், காய்ச்சல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவமனைக்குச் செல்லாமல் இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்துகின்றனர். சிறுகுறிஞ்சி, பெரியாநங்கை, கொடி சங்கை, மிளகு நங்கை, வெள்ளைநாகைதலைவேர், வண்டுகொள்ளிபட்டை ஆகிய மூலிகைச் செடிகளைப் பாம்பு மற்றும் பூரான், தேள், விசவண்டுகளின் கடிகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
ஒரு காலத்தில் வேட்டையாடுவதையும், தேன் எடுப்பதையும், மரம் வெட்டுவதையும் முக்கியத் தொழிலாக வைத்திருந்த இம்மக்கள் காலப்போக்கில் வேட்டையாடும் தொழில், மரம் வெட்டும் தொழில் ஆகியவைகளை விட்டுவிட்டு இன்று தேன் எடுக்கும் தொழிலை மட்டுமே தங்கள் குலத் தொழிலாக வைத்திருக்கின்றனர். ஷாம்பூ தயாரிக்கப் பயன்படும் இன்டா பட்டை, நன்னாரி வேர்களைச் சேகரித்தல் போன்ற பணிகளிலும் இவர்கள் ஈடுபடுகிறார்கள்.
கற்களால் செய்யப்பட்ட அடுப்பில் விறகுகளைப் பயன்படுத்தி உணவு சமைக்கின்றனர். வீட்டில் தங்கள் மனைவிகளுக்கு உடல்நிலை சரியில்லாத காலங்களில் ஆண்கள் சமையல் வேலைகளைச் செய்கின்றனர். அதில் அவர்கள் சங்கடங்கள் பார்ப்பதில்லை. வீட்டில் ஆணும் பெண்ணும் சமம் என்ற பண்பாட்டை நிலை நாட்டுகின்றவர்களாக பளியர் இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர்..” என மூச்சு விடாமல் கட்டுரைப்போல் பேசி முடிக்க, நிலவன் ஆவென்று பார்த்திருந்தான் அவளை. அன்றைய இரவும் அவர்களுக்கு இன்பமாய் கழிந்தது.
அடுத்த நாள் காலை விடிந்த சில மணி நேரங்களிலேயே கனலியும், நிலவனும் மதுரையை நோக்கிப் பயனித்துக் கொண்டிருந்தனர். இந்த முறை கதிரவன் கார் ஓட்ட, அவருக்கருகே சாரதி.. பின்னிருக்கையில் கணவன் மனைவி இருவரும். வழக்கமான குறும்பு பேச்சு இல்லாமல் முகம் வெகு தீவிரமாக இருந்தது.. அப்போது ஒரு அனோன் நம்பரிலிருந்து வந்த காலை அட்டெண்ட் செய்தவள் ராங்க் நம்பர் என்று வைத்துவிட்டாள். அடுத்து மதுரை வரை அமைதிதான்.
மதுரை மாவட்ட உயர் நீதிமன்றம்:
தொடர்ந்து இருபது நிமிட வாதி–பிரதிவாதி விவாதங்கள். குண்டூசி விழுந்தாலும் கேட்குமளவிற்கான நிசப்தங்கள். நீதிபதி மிகவும் கூர்மையாக இருவரின் வாதங்களையும் கேட்டிருந்தார். கனலியின் ஒவ்வொரு வார்த்தைகளும் அங்கிருந்தவர்களை கைத்தட்ட வைத்தது என்பதுதான் உண்மை. நீதிமன்றம் என்பதை மனதில் வைத்து அமைதி காத்தனர்.
நீதிபதிக்கஏ அவளது வாதத்தில் ஆச்சரியம் ஏற்பட, தன் இடம் உணர்ந்து உணர்ச்சிகளைக் காட்டாமல் அமைதியான முகத்துடன் இருந்தார்.
தொடர்ந்து “பெண்குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்புணர்வுகளுக்கு உரிய விதத்தில் உடனுக்குடனேத் தண்டனை வழங்க வேண்டும் என்ற என்னுடைய முதற்கருத்தை மேலும் அழுத்திக் கூறி என் வாதத்தை முடித்துக் கொள்கிறேன் யுவர் ஆனர்..” எனக் கனலியின் பேச்சு முடிய அந்த அரங்கமேக் கைத்தட்டலில் எதிரொலித்தது.
“சைலன்ட்… சைலன்ட்.. என்ற அமீனாவின் குரலைத் தொடர்ந்து அரங்கம் மெல்ல அமைடியாக, ஆனால் அதன் பிரதிபலிப்புக் கொஞ்சமும் இல்லாமல், தனக்குத்தான் இந்தக் கைத்தட்டல்களும், பாராட்டுக்களும் என்ற எந்தக் கர்வமும், அலட்டலும் இல்லாமல் ஜட்ஜ் என்ன சொல்லப் போகிறார் என்றதிலயே கவனமாய் இருந்தாள் கனலி.
மெல்ல தன் உரையை ஆரம்பித்தார் நீதிபதி, “வழக்குக்குத் தேவையான ஆதாரங்கள் தேவைக்கு அதிகமாகவே கிடைத்து விட்டன. இத்தனை ஆதாரங்களை சேகரிப்பதற்கு எவ்வளவு சிரமங்களை கடக்க வேண்டியிருக்கும் என்று எனக்குப் புரிகிறது. இதை துணிந்து செய்த வழக்கரிஞர் கனலி அவர்களை இந்த நீதிமன்றம் மனதார பாராட்டுகிறது.
மேலும் ஒரு பெண்ணாக முன்வந்து இத்தனை சாதனைகளை நிகழ்த்தியதற்காகவும், மென்மேலும் இதுபோல பல சாதனைகளைப் படைக்கவும், இந்த நீதிமன்றம் வாழ்த்துகிறது..” என்றவர் “இந்த வழக்கின் இறுதிக்கட்டத் தீர்ப்பு வரும் இருபத்தி மூன்றாம் தேதி வைக்கப்படுகிறது..” என முடித்துவிட்டு எழுந்து விட்டார்.
மற்ற வழ்க்கறிஞர்கள் அனைவரும் அவளிடம் வாழ்த்து சொல்லிக் கிளம்பிவிட, எதிர்க்கட்சி வக்கீலை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினாள் கனலி. அவரும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார் கனிவோடு.
அருகில் சென்றவள், காலில் விழுந்து வணங்க, “சொன்ன மாதிரியே என்னை ஜெயிச்சுட்ட….” என்றவரிடம் தோற்றுப்போன உணர்வு சிறிதுமில்லை. தன்னுடைய குழந்தை ஒன்று மேடையேறி பரிசு வாங்கினால், ஒரு தந்தையின் மனநிலை எப்படி இருக்குமோ அதுபோல் உள்ளம் பூரித்துப் பெருமை கொண்ட மலர்வு அவர் முகத்தில்.
தலையை வருடிவிட்டவர், தன் கேஸ் கட்டை எடுத்துக் கொண்டு நடந்துவிட்டார். அவர் கிருபாகரன். கனலியின் குரு. அவளது ஆரம்பம் அவரிடம் தான். ஆரம்பித்தது அவரிடம் தான் சட்டங்களைக் கற்றுக் கொண்டாள் முழுமையாக. இப்போது எதிரியாக எதிரணியில்.
கிருபாகரன் கடந்ததும் வேகமாக அவளிடம் வந்த செந்திலையும், நிலவனையும் பார்த்து புன்னகைத்துவிட்டு, இருவருக்கும் நடுவே ஒரு ராணியின் தோரனையில் நடந்து வந்தவள், வெளியே அவளைச் சுற்றி சூழ்ந்த மீடியாக்களைப் பார்த்து எளிமையக புன்னகைத்தாள்.
“நிமிர்ந்த நன்னடை… நேர்கொண்ட பார்வை..” என்ற முண்டாசுக் கவிஞனின் வரிகள் இவளூக்கு மட்டுமே பொருந்தும், என்று அங்குள்ளவர்கள் அவர்களுக்குள்ளாகவேப் பேசிக்கொண்டனர்.
கனலி மைக் முன்னே நிற்க, அவளைக் கடந்து நான்கு பேரை போலீசார் அழைத்து சென்றனர். அப்போது அந்த போலீசில் ஒருவர் இவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிவிட்டு சிரித்துப்போக, இவளும் பதிலுக்கு புன்னகைத்தாளோ என்று மற்றவர்கள் நினைக்கும் முன்னே புன்னகையை மாற்றி, நிமிர்ந்து மீடியாக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தாள்.
மீடியா : மேடம் உங்க குருநாதரையே எதிர்த்து வாதாடுறீங்க.. இது அவருக்கு செய்ற தொழில் துரோகம் இல்லையா..?
கனலி : நிச்சயமா இல்லை.. தவறு யார் செய்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யனும் என்று என் குருனாதர் தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவர் மேல் எனக்கு மதிப்பும், மரியாதையும் நிறையவே இருக்கு. இந்த ஒரு கேஸ்னால அது மாறிடாது. எங்களுக்குள்ள அந்த மாதிரி சில்லியான ரிலேசன் பாண்டிங்க் இல்ல..
மீடியா : இதுவரைக்கும் மணற்கொள்ளை, வனம் காத்தல், நில ஆக்கிரமிப்பு, சாதியக் கொடுமைகள், ஆணவக் கொலைகள் இப்படி பொது நல வழக்குகள் மட்டும் தான் நீங்க வாதாடிருக்கீங்க, இந்தக் கேஸ் எப்படி உங்க லைப்க்கு வந்துச்சு..?
“வாயில்லாதோர், கதியில்லாதோர், ஆதரவில்லாதோர் கிடைத்துவிட்டால் ஆழ்மனதில் பதுங்கிக் கிடக்கும் எத்தனை குரூரங்கள் வெளிப்படுகின்றன! அதிலும் அவர்கள் பெண் குழந்தைகளாகவும் சமுதாயத்தின் அடிமட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருந்துவிட்டால் வக்கிரங்கள் எடுக்கும் அவதாரங்களுக்கு எல்லையோ, எண்ணிக்கையோ இல்லை. பலியானவர்களுக்கு அன்றி, குற்றவாளிகளுக்குச் சாதகமான சாதி – வர்க்க – சட்ட – அரச – அதிகாரச் சூழல் குற்றவாளிகள் தப்பிவிடுவதற்கு ஆயிரம் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறது.. அப்படி அவர்கள் தப்பித்து விடக்கூடாது என்ற எண்ணத்திலும், பாதிக்கப்பட்ட பெண்கள், எனக்கு வேண்டியவர்கள் என்ற முறையில் இந்தக் கேசில் நான் ஆஜரானேன்.
மீடியா: இந்த மக்களுக்காக நீங்க சில பெட்டிசனும் போட்ருக்கீங்க, இல்லையா..? இந்தப் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுக் கொடுப்பதன் நோக்கம் என்ன..?
கனலி : நோக்கம் என்ன..? என்ன செஞ்சாலும் வெளிய சொல்ல மாட்டாங்க, இவங்க இந்தப் பிரச்சினையை சொன்னாலும் யாரும் கேட்கவும் மாட்டாங்க.. பழங்குடி மக்கள் தானே, ஒடுக்கப்பட்ட மக்கள் தானே, ஏழை பெண்கள் தானே என்ற அகம்பாவ மனோப்பாங்கு இந்திய காவல்துறையிடமும், மத்திய, மாநில அரசுகளிடமும் ஓங்கிக் கிடக்கிறது. இதனை ஒழித்திடாமல் இந்த சம்பவங்கள் தொடர்வதை நிறுத்திட முடியாது. அதனால் அவர்களுக்கு ஆதரவாக நான் இறங்கியிருக்கிறேன்..
மீடியா: பெண்குழந்தைகள் இவ்வாறு பாதிக்கப்படுவதை நீங்கள் எப்படி உணருகிறீர்கள்..?
கனலி : இந்தக் கேள்வி அவசியமற்றது.. நானும் ஒரு பெண்தான். அரபு நாடுகளைப் போல் தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். குறைந்த பட்சம், மக்களின் முன் தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பாலியல் ரீதியான குற்றங்கள் அன்றாடம் அரங்கேறுவதைப் பார்க்கிறோம். அப்படி மீண்டும் மிகக் கொடூரமான தாக்குதலுக்குத் பெண் குழந்தைகள் உள்ளாகியிருப்பதை எண்ணிப் பார்க்கும் போது கண்களில் கண்ணீர் கொட்டுகிறது.
பெண் விடுதலையில் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாட்டில் இந்நிலை தொடர்வது நாம் மேற்கொள்ள வேண்டிய பரப்புரையை, விழிப்புணர்வை இன்னும் பன்மடங்கு வீரியமாகக் கொண்டு செல்ல வேண்டியதை உணர்த்துகிறது. ஒரு பெண்ணின் உடல் போகப் பொருளாகவும், யார் வேண்டுமானாலும் அதற்கு உரிமை கொண்டாடலாம் என்கிற மனப்போக்கிற்கு உரியதாகவும், மதம் என்ற பெயரில் மக்களைச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது சமுதாயம்.
மீடியா : ஒரு பெண்குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்..?
கனலி : கிட்டத்தட்ட கற்கால பாதுகாப்பு முறைக்கு பெற்றவர்கள் போய்விட்டார்கள். அவர்கள் பெண்குழந்தையை சரியாக வளர்க்கிறார்கள். ஆனால் ஆண் குழந்தையை..?
பெண்களையும், பெண்குழந்தைகளையும் பாதுகாப்பாக இருக்க வற்புறுத்துவதைவிட, ஆண் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டிய வழிமுறைகளையே நாம் பெற்றோர்களுக்கும், சமூகத்திற்கும் பரப்புரை செய்ய வேண்டியிருக்கிறது. “அடிடா அவள, வெட்ரா அவள” என்கிற பாடல் வரிகளை இரசிக்கும் சமூகத்தில் வளரும் ஆண் குழந்தைகள் ஆபத்தானவர்களாக உருவாக்கப்படுகிறார்கள்.
அவர்களிடம் ஒரு பெண் குழந்தையை எப்படி பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு வரவேண்டும். அவர்கள் திருத்துவார்கள், இவர்கள் திருத்துவார்கள் என்ற நினைப்பை நாம் அடியோடு விட வேண்டும்.
மீடியா : இன்னைக்கு கேஸ் முடிஞ்சு தீர்ப்பும் கொடுத்துடுவாங்கன்னு மக்கள் எதிர்பார்த்த நேரத்துல தீர்ப்பை தள்ளி வச்சதுல உங்களுக்கு வருத்தமா இல்லையா..?
கனலி : இல்லை கண்டிப்பா இல்லை… இந்தக் கேஸ் ஆறுமாசமா நடந்து தீர்ப்பும் வரப்போகுது.. ஆனா ஆறு வருசமா நடக்குற கேஸ்க்கு இன்னும் தீர்ப்பு வரல.. காலதாமதம் ஆனாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என நம்புறேன்.
மீடியா: உங்களுக்கு சமீபத்துல தான் திருமணம் நடந்தது. கணவரோட நீங்களும் பாண்டிச்சேரி போயிடுவீங்க, அப்போ உங்க சமூக சேவை பாதிக்காதா..?
“நோ மோர் பெர்சனல் கொஸ்டீன்ஸ்..” பளிச்சென்ற புன்னகையோடு கூற, அதேப் புன்னகை அங்கிருந்த எல்லாரிடமும் பரவியது.. அவளை அப்படியே அள்ளிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது நிலவனுக்கு. இடமும் சூழலும் அவனை அமைதிப்படுத்த, கையைக் கட்டிகொண்டான்.
அப்போது அவளுக்கு ஒரு மெசெஜ் வர, அதை எடுத்தவள் கட் செய்ய, அந்த நீதிமன்ற வளாகமே பரபரப்பானது. கைது செய்து அழைத்துச் சென்ற நால்வரும் சாராமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
இன்னும் முழிப்பாள்….
2 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
superrrrrrrrrrrr
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Superb episode n waiting for the next episode eagerly