Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 29

அத்தியாயம் – 29

“ஹேய்… எப்படி இருக்க? பீலிங் பெட்டர்?” – ஜன்னல் பக்கம் நின்று வெளிப்புறத்தை வெறித்துக் கொண்டிருந்த டேவிட், நண்பனின் குரல் கேட்டு திரும்பினான்.

 

உற்சாகமாக உள்ளே வந்த அர்ஜுன், டேவிட்டின் முகத்திலிருந்த இயல்பற்ற தன்மை உறுத்த, “ஆர் யு ஆல்ரைட்?” என்றான்.

 

நெரிந்த புருவங்களுடன் தோழனை உறுத்து விழித்த டேவிட், “வாட் த ஹெல் இஸ் கோயிங் ஆன் இன் யுவர் ப்ளடி மைண்ட் மேன்?” என்று பற்றவைத்த சரவெடி போல் தடித்த வார்த்தைகளை படபடவென்று வீசினான்.

 

சட்டென்று துடைத்துவிட்டது போல், முகத்திலிருந்த சினேக உணர்வு மொத்தமும் மறைந்து போனது அர்ஜுன் ஹோத்ராவிற்கு. தாடை இறுகி கண்களில் கடுமை கூடியது.

 

“வார்த்தையை கவனமா சூஸ் பண்ணு டேவிட்” – ஆணியடித்து போல் அழுத்தம் திருத்தமாக கூறினான்.

 

அவனுடைய முகமாற்றம் குரல் அழுத்தம் எதுவும் டேவிட்டின் சிந்தையை எட்டவில்லை. ‘மிருதுளா விஷயத்துல நா உன்ன நம்பல. அவளோட வலையில நீ விழுந்துட்ட. உன்னால அவளை எதுவும் செய்ய முடியாது’ – ராகேஷ் சுக்லா. ‘என்னோட நடிப்புத்திறமையை நீங்க பாராட்டியிருக்கணுமே! ஏன் கோவப்படுறீங்க?’ – அர்ஜுன் ஹோத்ரா. இவருடைய குரலும் செவியில் மாறிமாறி எதிரொலிக்க, தீப்பற்ற வைத்தது போல் அவன் உள்ளம் எரிந்தது.

 

“மிருதுளாகிட்ட நடிக்கிறியா? அவ எமோஷன்ஸோட விளையாடறியா நீ?” – பொங்கும் ஆத்திரத்தை உள்ளுக்குள் அடக்கி வைக்க முடியாமல், சிவந்த விழிகளுடன் சீறினான்.

 

அர்ஜுன் ஹோத்ராவின் புருவம் சுருங்கியது. குண்டடி பட்டு ஓய்வில் இருந்துவிட்டு இன்றுதான் பணிக்கு திரும்புகிறான். முதல் நாளே மிருதுளாவின் விஷயத்தில் தலையிடுகிறான். அதுவும் வெகு தீவிரமாக…

 

பற்கள் நறநறக்க, “உனக்கு சம்மந்தம் இல்லாத விஷயம்” என்றான் எச்சரிக்கும் தொனியில்.

 

“மிருதுளா மேல எனக்கு அக்கறை இருக்கு… அவளுக்காக நா கேட்பேன்” – நாசியை விடைத்துக் கொண்டு நண்பனிடம் நெருங்கினான் டேவிட்.

 

நாண் அறுந்த வில்லை போல விறைத்து நிமிர்ந்தது அர்ஜுன் ஹோத்ராவின் உடல். பாறை போல் இறுகிய கை முஷ்டிகள், அடுத்து ஒரு வார்த்தை பேசினாலும் அவன் முகத்தை சிதைத்துவிட தயாராகிவிட்டன. ஏதோ நல்ல நேரம்… அவன் வாய் திறந்து எதுவும் பேசவில்லை… முறைத்த பார்வையோடு நிறுத்திக் கொண்டான்.

 

“ஹூ ஆர் யு? அவ மேல அக்கறை காட்ட நீ யாரு? உன்னோட அக்கறை எந்த விதத்துல அவளுக்கு உதவும்… ம்ம்ம்? டெல் மீ…” – கத்தினான்.

 

பதில் பேச முடியாமல் திகைத்தான் டேவிட்.

 

“அவ என்னோட கண்ட்ரோல்ல இருக்கா. நா என்ன வேணுன்னாலும் செய்வேன். யாரும் கேட்க முடியாது. முக்கியமா நீ…” – வெறுப்பில் தோய்ந்த வார்த்தைகளை உமிழ்ந்தான்.

 

“அர்ஜுன்…!”

 

“ஷடப்… ஷ..ட்..அப்…” – அறையே அதிர்ந்தது அவனுடைய அகங்காரமான அதட்டலில்.

 

அதற்கெல்லாம் டேவிட் அசைந்து கொடுக்கவில்லை. எப்படியாவது மிருதுளாவை இந்த குழப்பத்திலிருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்கிற உந்துதல் அவனை அடுத்த நிலைக்கு தள்ளியது.

 

“ப்ளீஸ் அர்ஜுன்… ப்ளீஸ்… இந்த அணுகுமுறையை விட்டுடு. அவ மனசு உன் பக்கம் சாய ஆரம்பிச்சிடுச்சு. இதை என்கரேஜ் பண்ணாத. அவ அப்பாவி. உன்னோட உண்மையான நோக்கம் தெரிஞ்சா உடைஞ்சு போயிடுவா” – வெளிப்படையாக கெஞ்சினான். அர்ஜுனின் ஆத்திரம் அதிகமானது.

 

“ஓ ரியலி! அப்போ அதுதான் எனக்கு வேணும். ஐ லவ் டு பிரேக் மை எனிமீஸ்…” என்றான் குரோதத்துடன்.

 

“அவ உன்னோட எனிமி இல்ல அர்ஜுன்”

 

“ஹா… உனக்கு ரொம்ப நல்லா தெரியுமோ!” – பார்வையாலேயே உதாசீனப்படுத்தினான்.

 

“அர்ஜுன்… ப்ளீஸ் லீவ் ஹர் அலோன். அவளை விட்டுடு”

 

“ஏன்? உனக்கு ஏதும் ஐடியா இருக்கா?” – வெகு நேரமாக மனதை நெருஞ்சி முள்ளாக உறுத்தி கொண்டிருந்த கேள்வியை எள்ளல் தொனியில் கேட்டுவிட்டான்.

 

“ஓ மேன்! ஏன் இப்படி திங்க் பண்ற? ஐ ஜஸ்ட் ஃபீல் சாரி ஃபார் ஹர். வேற எதுவும் இல்ல” – சிறு பதட்டத்துடன் கூறினான் டேவிட். மிருதுளாவின் மீதான நாட்டம் அவனை பதட்டப்பட வைத்தது. அவனுடைய அசைவுகளை துல்லியமாக கவனித்த அர்ஜுன், அவனுடைய வார்த்தையை துளியும் நம்பவில்லை. மிருதுளாவின் மீதான விருப்பம், ஆசை, நாட்டம் அனைத்தும் அப்பட்டமாக அவன் கண்களில் தெரிந்தது.

 

அடிநெஞ்சிலிருந்து கோபம் தாறுமாறாக பொங்கியது. அதை மூர்க்கத்தனமாக வெளிப்படுத்துவதில் பயனில்லை. சில சமயங்களில் எதிரிலிருப்பவர்களின் பலத்தை பலவீனமாக மாற்ற வேண்டும். அவர்களுடைய பலவீனத்தை தன்னுடைய பலமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இப்போது டேவிட்டை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமானது. ஆனாலும் எச்சரிக்கையும் முக்கியமல்லவா. எனவே, “உன் வார்த்தையை நா நம்பறேன்” என்றான் கபடமாக.

 

டேவிட்டின் புருவம் சுருங்கியது. “என்ன! என்ன வார்த்தை” என்றான் புரிந்தும் புரியாத குழப்பத்துடன்.

 

“உனக்கு மிருதுளா மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்லைன்னு நீ சொன்னதை நா நம்பறேன்” என்றான் தெள்ளத்தெளிவாக.

 

டேவிட் திகைப்புடன் நண்பனைப் பார்த்தான். வாய் வார்த்தையாக சொன்னதை வாக்குறுதி கொடுத்ததாக அறிவித்துவிட்டான் அர்ஜுன். அதை ஆமோதிக்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் திணறிப்போனான். ‘வார்த்தையை கவனமா சூஸ் பண்ணு டேவிட்’ – அர்ஜுனின் குரல் அவன் செவியில் எதிரொலித்தது.

 

எச்சிலை கூட்டி விழுங்கி நெஞ்சுக்குள் பொங்கும் உணர்வுகளுக்கு சமாதி கட்டிவிட்டு, “என்னோட அடுத்த அசைன்மென்ட் என்ன?” என்றான். தன்னுடைய ரூட் க்ளீயர் ஆகிவிட்டது என்கிற திருப்தியில் அர்ஜுனின் முகம் பளபளத்தது.

 

***********************

 

அன்று மிருதுளாவை கீழே இறங்கக் கூடாது என்று கண்டித்துக் கூறிவிட்டான் அர்ஜுன். உணவு கூட வேலைக்காரர்கள் மூலம் மாடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவளுக்கு காரணம் புரியவில்லை. ஆனால் அவனுடைய செயல்கள், அவளுடைய நலனை கருத்தில் கொண்டதாகவே இருக்கும் என்று முழுமையாக நம்பினாள். அந்த நம்பிக்கையில் அமைதியாக கட்டிலில் சாய்ந்தாள். இரவெல்லாம் உறங்காத களைப்பில் கண்கள் செருகின.

 

ஆழ்ந்த உறக்கத்தில் தோன்றிய அவள் கனவை அவன் மட்டுமே ஆக்கிரமித்திருந்தான். சில மணிநேரங்களை அவனோடு கனவில் கழித்துவிட்டு விழித்தால் நினைவுகளையும் அவனே ஆக்கிரமித்தான். பழகிக்கழித்த நிமிடங்களை அசைபோட்டபடி நேரத்தை நெட்டித்தள்ளியவள் அவனை அடுத்து சந்திக்கும் தருணத்திற்காக காத்திருந்தாள். காத்திருப்பு நிமிடத்தை நீட்டித்தது…

 

இரவு பியானோ அறைக்கு வந்தாள். வழக்கமாக அவன்தான் அவளுக்காக அங்கே காத்திருப்பான். இன்று அவள் முறை… இசைப்பெட்டகத்தை தீண்டினாள். விசைகளை மென்மையாய் அழுத்தி இசைத்தாள். கடந்த சில நாட்களில் அவன் அறிந்த வித்தையில் ஒரு பகுதியை அவளுக்கும் கடத்தியிருந்தான். அதன் பலனாக அவள் விரல்கள் இன்று, இழையும் இனிய ஓசையை காற்றில் எழுப்பிக் கொண்டிருந்தன.

 

மூன்று பாடல்கள் முடியும் வரை இமைமூடி இசையோடு லயித்திருந்தவள் நான்காவது பாடலின் துவக்கத்தில் அவன் அருகாமையை உணர்ந்தாள். அவனை தீண்டிய காற்று அவளிடம் தூது வந்தது. அவன் பூசும் நறுமண திரவியம் அவள் நாசியோடு கூடிப் பேசியது. அவன் மூச்சுவிடும் ஓசை அவள் மீட்டும் இசையையும் தாண்டி அவள் செவியை தீண்டியது. ஆஜானுபாகுவான அவன் உருவம் மறைத்த மின்விளக்கின் ஒளி நிழலாய் மாறி அவள் மேனியில் படர்ந்தது. உள்ளம் சிலிர்க்க பரவசத்துடன் விழிதிறந்தாள் மிருதுளா. அகலா பார்வையுடன் அவள் முகத்தில் ஆழ்ந்திருந்தான் அர்ஜுன்.

 

இவள் இசைத்தாள்… அவன் ரசித்தான்… பாடல் முடிந்தது… அவர்களுடைய மோனம் கலையவில்லை. ஆழியில் மூழ்குவது போல் இருவரும் ஒருவருக்குள் ஒருவர் மூழ்கிப்போனார்கள். மேகக்கூட்டத்தில் தொலைந்து போன மழைத்துளி போல் எங்கோ தொலைந்து போனார்கள். நேரம் நகர்ந்துக் கொண்டிருந்தது… காலம் கழிந்து கொண்டிருந்தது. ஏசி அறையில் குளுகுளு காற்றில் உறைந்து போன சிலை போல் விழி பேசும் மொழியில் புதைந்து போனவர்களை மீட்டெடுக்கவே ஒலித்தது அந்த அலைபேசி.

 

அவள் முகத்தோடு ஒட்டிக் கொண்ட பார்வையை பிய்த்து எடுத்து அலைபேசியின் திரையை நோக்கினான். அழைத்தது டேவிட் தான். அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்தான்.

 

“ஆல் செட்” – அனைத்தும் தயாராகிவிட்டது என்றான் அடுத்த முனையிலிருந்து. அர்ஜுனின் பார்வை சுவர் கடிகாரத்துக்கு பாய்ந்தது. நேரம் இரவு பதினோரு மணியானது. “சரி” என்று பதிலளித்துவிட்டு அழைப்பை துண்டித்தவன் மிருதுளாவின் பக்கம் திரும்பினான்.

 

“ஒரு வாரம் வெளியே தங்கணும். இங்கிருந்து ஏதாவது தேவைன்னா பேக் பண்ணிக்க” என்றான்.

 

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எங்கே… எதற்கு… என்று பல கேள்விகள் மனதில் எழுந்தாலும் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, “என்னைக்கு கிளம்பனும்?” என்றாள்.

“இப்போ” – அவன் கூறிய துரிதத்தில் மலைத்தாலும் மறுப்பேதும் இல்லாமல் தலையை மேலும் கீழும் அசைத்தாள்.

 

அவர்கள் புறப்பட்டு கிட்டத்தட்ட ஒன்று அல்லது ஒன்றரை மணிநேரம் இருக்கும்… ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த டேவிட் கவனமாக காரை செலுத்திக் கொண்டிருந்தான். பின் இருக்கையில் அர்ஜுனுக்கு அருகில் அமர்ந்திருந்த மிருதுளா, சுழட்டியடித்த தூக்கத்தில் இருமுறை கதவில் மோதி நிமிர்ந்து மூன்றாம் முறை அருகிலிருந்தவனின் தோளில் சாய்ந்தாள்.

 

சட்டென்று சுவாசத்தை இழுத்துப் பிடித்தான் அர்ஜுன். மூச்சுவிடும் அசைவில் விழித்து விலகிவிடுவாளோ என்கிற எச்சரிக்கையில் விழைந்த அனிச்சை செயல் அது. மெல்ல குனிந்து அவள் முகத்தை பார்த்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இன்னும் வசதியை நாடி அவனோடு ஒண்டினாள். ‘தலையணை என்று நினைத்திருப்பாளோ!’ – சிதறும் மழை முத்துக்கள் மொத்தமாய் வந்து மேனியை முத்தமிட்டது போல் சிலிர்த்துப்போனான். மெலிதாய்… மிக மெலிதாய் மூச்சுக்காற்றை வெளியேற்றி அவள் உறக்கத்தை பாதுகாத்தான். அப்படியே அடுத்த அரைமணிநேரம் கழிந்தது.

 

அவர்களுடைய பயணம் புறநகரை எட்டியது. புழக்கமற்ற பகுதி… கரடுமுரடாக சாலை… கார் குலுங்கியது. மிருதுளாவின் உறக்கம் கலைந்தது. ஏதோ பெரிய – வசதியான கரடி பொம்மையை கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்திருப்பது போல் தோன்றியது. ஆனால், கரடி பொம்மை ஏன் பஞ்சு போல் பொசுபொசுவென்று இல்லாமல் கற்களை போட்டு கட்டிவைத்த மூட்டை போல் கரடுமுரடாக இருக்கிறது! – எங்கிருக்கிறோம் என்கிற குழப்பம் தீர மெல்ல கண்விழித்தாள். அரை நொடி பொழுதிலேயே மூளை மொத்தமாக விழித்துக் கொண்டது. பளிச்சென்று அனைத்தும் விளங்கிவிட்டது.

 

‘ஈஸ்வரா…!!’ – அந்த ஈசனைதான் உதவிக்கு நாட வேண்டும். எத்தனை வாகாக அவன் மார்பில் தலையை சாய்த்திருக்கிறாள்! அதுமட்டுமா… அவள் கை கொடி போல் அவன் வயிற்றை வளைத்திருக்கிறதே! பார்த்தால் என்ன நினைப்பான்!

 

‘வெயிட்… வெயிட்… இது யாருடைய கை!’ – தன் முதுகை சுற்றி படர்ந்திருந்த மலைப்பாம்பை மெல்ல திரும்பிப் பார்த்தாள். ‘அவ..னு..ம்! கடவுளே!…!’ – சங்கடத்துடன் கண்களை இறுக்கமாக மூடி உதட்டை கடித்தாள். சட்டென்று விலகிவிட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அப்படி செய்தால் அவன் விழித்துவிடுவான்… எச்சரிக்கையுடன் மெல்ல விலக முயன்றாள். உடனே அவன் அணைப்பில் அழுத்தம் கூடியது. பகீரென்றது அவளுக்கு. ‘முழிச்சிட்டானா!’ – சட்டென்று அசைவுகளை முடக்கி உறைந்தாள். இதயம் மட்டும் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.

 

“இன்னும் டைம் இருக்கு… தூங்கு” – கரகரத்த குரலில் இயல்பாக கூறினான்.

 

‘வாட்! முழிச்சுதான் இருக்கானா!’ – பிடிபட்ட பறவையின் இறகு போல் படபடத்தது அவள் உள்ளம்.

 

மெல்ல தலையை நிமிர்த்தி கள்ளத்தனமாக அவன் முகத்தை பார்த்தாள். உறங்கும் பாவனையில் கண்களை மூடியிருந்தான். ஆனால் அவன் புலன்கள் அனைத்தும் விழித்திருப்பதை அவள் நன்றாக உணர்ந்தாள்.

 

‘இது நாகரீகம் அல்ல. மரியாதையாக விலகிவிடு’ என்று மூளை அறிவுறுத்தியது. அதை செயல்படுத்துவதற்கு முன், “தூங்குன்னு சொல்றேன்ல” என்று அவள் தலையில் கைவைத்து தன் நெஞ்சோடு அழுத்தினான் அர்ஜுன்.

 

இப்போது அவன் இதயத்திற்கும் அவள் செவிக்கும் இடையே நெஞ்சுக்கூடு மட்டுமே தடையாய் இருந்தது. அந்த தடையை தாண்டி அவன் இதயம் அவள் செவியிடம் ஏதோ கிசுகிசுத்தது. அவர்களுடைய ரகசிய பேச்சை ஒட்டுக் கேட்பதில் மும்மரமாக இருந்த மூளை அவளுக்கு நாகரீகத்தை நினைவூட்ட மறந்துவிட்டது. அனிச்சையாய் செயல்படும் உணர்வுகளும் அவனை அந்நியனாக அவளுக்கு எடுத்துக் காட்டவில்லை. அதற்கு மேல் அவள் என்ன செய்வாள்… அவன் மார்போடு அடங்கிப்போனாள். அவன் இதழ்கடையோராம் தோன்றிய பெருமித புன்னகையை ரியர்வியூ கண்ணாடியில் கண்ட டேவிட்டின் உள்ளம் வெந்து தணிந்தது.

 

அதன் பிறகு கழிந்த மௌன பயணம் கடற்கரையோரத்தில் வந்து முடிந்தது. காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு மூவரும் கீழே இறங்கி நடந்தார்கள். எங்கிருந்தோ ஓடிவந்த ஒருவன் அவர்களை எதிர்கொண்டு வணங்கினான். அவனிடம் கார் சாவியை ஒப்படைத்துவிட்டு காத்திருந்த எந்திரப்படகில் ஏறினார்கள். படகோட்டி இஞ்சினை ஸ்டார்ட் செய்தான்.

 

“ரொம்ப நேரம் ட்ரைவ் பண்ணியிருக்க… கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு” – டேவிட்டிடம் கூறிவிட்டு மிருதுளாவின் பக்கம் திரும்பிய அர்ஜுன், “தூக்கம் வருதா?” என்றான்.

 

“ம்ஹும்…” – தலையை குறுக்காக அசைத்தாள்.

 

“சரி வா…” – அவளை படகின் முன்புறத்திற்கு அழைத்துச் சென்றான். எதிர்க்க முடியா இயலாமையுடன் அவன் முதுகை வெறித்துப்பார்த்த டேவிட் பெருமூச்சுடன் உள்ளே சென்று படுத்தான்.

 

படகின் முன்புறம் – பாதுகாப்பு கம்பிகளுடன், ஆங்கில எழுத்து ‘V’ வடிவிலான வராண்டா போலிருந்தது. குளிர்ந்த கடல்காற்று சில்லென்று முகத்தில் வந்து மோதியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்நீர் பறந்து கிடந்தது. கீழ்வானம் கடலோடு கூடும் முனையில், கடல் நீரில் முளைக்கும் தங்க புற்கள் போல் பகலவனின் கதிர் முனைகள் முளைவிட்டன. கவிழ்ந்திருந்த கருமை மெல்ல கரைந்துக் கொண்டிருந்தது. இருளோடும் பகளோடும் சேராத அந்த இனிய பொழுதில் லயித்திருந்த மிருதுளாவிடம் நெருங்கி வந்தான் அர்ஜுன். அவள் பார்வை அவன் பக்கம் திரும்பியது. இவருடைய பார்வையும் பின்னிக்கொண்டன.

 

அர்ஜுன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறு பெட்டியை எடுத்தான். நகைப்பெட்டி போல் இருந்தது. எதிர்பார்ப்பில் படபடக்கத் துவங்கியது அவள் இதயம். சிரமப்பட்டு இயல்பாக இருப்பது போல் பாசாங்கு செய்தாள்.

 

“இது உனக்காகத்தான் வாங்கினேன். ரொம்ப நாளா என் பாக்கெட்லேயே இருக்கு. அக்செப்ட் பண்ணிக்குவியா?” – பண்போடு கேட்டபடி பெட்டியை திறந்து அவளிடம் நீட்டினான். அழகிய லாக்கெட்டுடன் கூடிய மெல்லிய சங்கிலி அது.

 

படபடத்துக் கொண்டிருந்த அவள் இதயம் இப்போது ட்ரம்ஸ் வாசிக்க துவங்கியது.

 

‘ப்ரப்போஸ் செய்கிறானா! அல்லது சாதாரண பரிசுதானா! இதை எப்படி எடுத்துக்கொள்வது? இந்த பெட்டிக்குள் பரிசோடு சேர்த்து எதை வைத்து அவளிடம் நீட்டுகிறான்? நட்பையா – காதலையா?’ – பதட்டமானாள் மிருதுளா.

 

“ரிலாக்ஸ்… ரிலாக்ஸ் ஓகே… ரிலாக்ஸ்…” – முகமாற்றத்திலேயே அவளுடைய மனநிலையை துல்லியமாக கண்டு கொண்டான்.

 

“மிருதுளா, ஒரு முக்கியமான வேலைக்காக நா வெளியே கிளம்பறேன். போறதுக்கு முன்னாடி இதை உன்கிட்ட கொடுத்துடனும்னு தோணிச்சு. நீ அக்சப்ட் பண்ணிக்கிட்டா நிம்மதியா கிளம்புவேன். இல்லைனாலும் பரவால்ல… நா உன்ன புஷ் பண்ண மாட்டேன்” – அவன் குரலிலிருந்த வாட்டம் மிருதுளாவின் இதயத்தை துளைத்தது.

 

வறண்டு போன உதட்டை ஈரப்படுத்திக் கொண்டாள். வெறும் கையை பிசைந்தாள். பேசுவதற்கு வார்த்தை கிடைக்காமல், யோசிக்க முடியாமல் திணறி தடுமாறி அவன் கண்களை சந்திக்க முடியாமல் பார்வையை அங்கும் இங்கும் அலையவிட்டாள்.

 

“என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு டென்ஷன்?” – இணக்கமாகக் கேட்டான்.

 

“இல்ல… அது… ம்ம்.. வந்து… என்ன திடீர்ன்னு…?”

 

“இதை உன்கிட்ட கொடுக்க இன்னொரு வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியல… அதான்…” – சட்டென்று நிமிர்ந்து அவன் கண்களை பார்த்தாள் மிருதுளா.

 

‘ஏன் இப்படி சொல்கிறான்!’ – அவனுடைய வார்த்தை அவளை உறுத்தியது.

 

“எங்க போறீங்க? என்ன வேலையா போறீங்க?” – கலவரத்துடன் கேட்டாள்.

 

அர்ஜுன் அவளை கனிவுடன் பார்த்தான். “எனக்காக கவலைப்படறியா?” என்றான்.

 

மிருதுளா பதில் சொல்லவில்லை. ஆனால் தன்னுடைய கேள்விக்கு அவன் பதில் சொல்ல வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளுடைய பிடிவாதத்தையும், செல்ல திமிரையும் கண்டு அவன் கண்கள் சுருங்கியது. இதழ்கடையோராம் வளைந்தது.

 

“யு ஆர் சோ பியூட்டிஃபுல்…” – தேனுண்ட வண்டின் ரீங்காரம் போல் கிசுகிசுத்து அவன் குரல்.

 

மிருதுளாவின் கண்கள் விரிந்தன. வாய் பிளந்து கொண்டது.

 

அர்ஜுன் கீழுதட்டை மடித்துக் கடித்து புன்னகையை அடக்கினான். மிருதுளா தன்னிலைக்கு மீள சில நிமிடங்கள் பிடித்தது.

 

“ஆர் யு ஓகே?”

 

“ஹாங்… ஐம்… க்ஹும்… ஐம்… ஆல்ரைட்…”

 

“ஐ நோ… உனக்கு என்னை பிடிக்கும். ரொம்ப பிடிக்கும். அந்த நம்பிக்கையில…” என்று கூறியபடி, எந்த பதட்டமும் இல்லாமல் மிக சாதாரணமாக அந்த சங்கிலியை அவள் கழுத்தில் அணிவித்தான்.

 

அதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியும் திகைப்பும் ஆக்கிரமிக்க உறைந்து போனாள். அவனை தடுக்கவோ அவன் வார்த்தைக்கு மறுப்பு கூறவோ அவளிடம் திராணியில்லை என்பது ஒருபுறமிருக்க அதை அவள் மனம் விரும்பவும் இல்லை என்பதும் உண்மை.

 

“இந்த செயின் உன் கழுத்துல இருக்கறது நானே உன் பக்கத்துல இருக்க மாதிரி. சரியா?” – அவள் தாடையை நிமிர்த்தி கண்களை பார்த்தான். கண்ணீர் பளபளத்தது.

 

அவள் முகத்தை கைகளில் ஏந்தி நெற்றியில் இதழ்பதித்து, “பயப்படாத… குழப்பிக்காத… உனக்கு விருப்பம் இல்லைன்னா எப்போ வேணுன்னாலும் நீ இதை கழட்டிடலாம்” என்றான். மிருதுளாவின் பார்வை தாழ்ந்தது. கண்ணீர் மணிகள் உதிர்ந்தன. அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் அர்ஜுன்.

 

“எப்போ திரும்பி வருவீங்க?” – கனகனத்த குரலில் மூக்கை உறிஞ்சியபடி கேட்டாள்.

 

அவளை விளக்கி நிறுத்தி சில நொடிகள் நிலைத்து முகம் பார்த்தவன், “மிருதுளா, நீ ஸ்ட்ராங்கா… தைரியமா இருக்கணும்னு நா விரும்பறேன். இருப்பியா?” என்றான் கத்தி போன்ற கூர்மையான பார்வையுடன்.

 

மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் தலையை மேலும் கீழும் ஆட்டினாள் மிருதுளா. அவனுடைய வார்த்தைக்கு அவளிடம் மறுப்பேது?

 

“குட்… உன்னோட போன் எங்க?”

 

“பேக்ல…”

 

“அது எப்பவும் உன் கைல… ஆக்டிவா இருக்கணும். சரியா?”

 

“ம்ம்ம்”

 

“நா திரும்பி வர ஒரு வாரம் ஆகும். இந்த ஒரு வாரமும் உன்ன டேவிட் பாதுகாப்பான். உனக்கு இங்க எந்த ஆபத்தும் வராது” என்று கூறியவன் சற்று தயங்கி, “ஒருவேளை… ஒருவேளை நா வரலைன்னா, உன்னோட போனுக்கு ஒரு கால் வரும்” என்றான். மிருதுளாவின் முகத்தில் கலவர ரேகை படர்ந்தது. அதை கவனித்தபடியே தொடர்ந்தான் அர்ஜுன்.

 

“உனக்கு கால் பண்ணறவர் தன்னை ப்ளூ ஸ்டார்ன்னு அறிமுகப்படுத்திக்குவார். நீ இங்கிருந்து பாதுகாப்பா தப்பிக்கிறதுக்கு அவர் ஹெல்ப் பண்ணுவார். அவரை நீ முழுசா நம்பனும். அவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்யணும். ப்ளூ ஸ்டார் பத்தி டேவிட்டுக்கு எதுவும் தெரியக் கூடாது” என்றான்.

 

“ப்ளூ ஸ்டாரா! இங்கிருந்து தப்பிக்கிறதா! எனக்கு எதுவும் புரியல. நீங்க ஏன் திரும்பி வரமாட்டீங்க? எங்க போறீங்க?” – பதறினாள்.

 

“மிருதுளா… ஹனி… தெரிஞ்சோ தெரியாமலோ நீ கோர்த்தா கோட்டைக்குள்ள வந்துட்ட. இங்க, நா இருக்கற வரைக்கும்தான் உனக்கு பாதுகாப்பு. நா இல்லைன்னு ஆயிட்டா எதுவும் நடக்கலாம்” – மிருதுளாவின் முகம் வெளிறியது. ‘நா இல்லைன்னு ஆயிட்டா’ – அவள் மூளை அந்த இடத்திலேயே மரத்துப்போய்விட்டது. ‘இல்லை என்று ஆகிவிடுவானா… அர்ஜுன் இல்லை என்று ஆக முடியுமா! – தவித்தது அவள் உள்ளம்.

 

“நோ… நீ பயப்படாத… உனக்கு எதுவும் ஆக நா விடமாட்டேன். மகல்பாட்னால இருந்து உன்ன வெளியே கொண்டு வர்றது கஷ்டம். அதனாலதான் இப்பவே கூட்டிட்டு வந்துட்டேன். இங்கிருந்து நீ ஈஸியா தப்பிச்சிடலாம். பாதுகாப்பான இடத்துக்கு போயிடலாம். சரியா?” – அவளுக்கு தைரியம் கொடுப்பதாக நினைத்து தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். ஆனால் ‘அவன் இல்லாமல் போய்விடுவான்’ என்கிற எண்ணமே அவள் தைரியத்தை நொறுக்கிவிட்டது.

 

“நீங்க ஏன் இந்த மாதிரி ஆபத்தான கேங்ல இருக்கீங்க? ஏன் இவங்களோடல்லாம் சேர்ந்தீங்க?” – கபடமில்லாமல் கேட்டவளின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

 

“இப்படி ஒரு அழகான பொண்ணு இங்க வந்து மாட்டிக்க போறா… அவளை போயி காப்பாத்துடான்னு பட்சி சொல்லிச்சு. அதான் ஓடி வந்து கோர்த்தால சேர்ந்துட்டேன்” என்று புன்னகைத்தபடி அவள் நுனிமூக்கை பிடித்து ஆட்டினான்.

 

அவனுடைய உல்லாசம் அவளை எட்டவில்லை. மனதை பிழியும் வருத்தத்துடன் பார்வையை அவனிடமிருந்து பிரித்தாள். கரை கண்ணுக்கு எட்டியது.

 

இன்னும் எவ்வளவு நேரம் அவனோடு இருக்க முடியும் என்று தெரியவில்லை. மீண்டும் பார்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை…

 

“அர்ஜுன்” – மெல்ல அழைத்தாள்.

 

“ம்ம்ம்” – அவள் பக்கம் திரும்பினான்.

 

“ஆனந்த்பூர்ல உங்க ஆளுங்க செஞ்ச ஒரு கொலைக்கு நா விட்னஸ். அவங்ககிட்டேருந்து தப்பிக்கும் போதுதான் உங்க கார்ல ஏறிட்டேன். நா அனாதை இல்ல. எனக்கு அப்பா அம்மா இருக்காங்க. நா ஹாஸ்ப்பிட்டள்ள ஒர்க் பண்ணல. யூனிவர்சிட்டில ஸ்டுடென்ட்…” – பல நாள் மூடி மறைத்து வைத்திருந்த உண்மையை ஒரு நொடியில் பட்டென்று போட்டு உடைத்தாள்.

 




24 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rajirithic says:

    Very interesting story


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Reena says:

    Nithya sis … 10 days aachu .. please upload next episode


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      updated Reena…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Selvalakshmi Suyambulingam says:

    When will be the next Update?


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      updated pa


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kurinji says:

    Inru UD undaa nitya


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Sorry Kurinji… innokku thaan post poda mudinjadhu…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sug says:

    Hi nithya very thrilling…good story flow…but amma character mattum dan previous a irunda madriiruku…appa irukangala?heroine one time kuda hero kitta, avan nalla behave panalum, enna release pannunu kekkeve ila first lendu


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Sug,
      Amma char patri mattum thaan ava think pannuva… Appa va patri yosikka maattaa… reason next epi la theriyum pa.

      //enna release pannunu kekkeve ila first lendu// – No No… She asked once. But he questioned why she wanted to go from here as she has nobody in Anandhpur and also she doesn’t have any safety over there. She couldn’t answer him. so stopped asking him and tried to escape by herself and got caught. after that incident She was extremely frightened, not even Arjun’s behavioral change helped her enough to open up until he said this may be our last meet.


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Sug says:

        Ok…waiting for next ud….regular a kudunga…i started reading yesterday 1y and finished at a stretch…suspense la ninna waiting romba kadiya iruku


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Reena says:

    WAiting …. 😑😑😑😓😓😓😓😓😓


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Selvi says:

    I started reading this novel yesterday based on RC ma’m FB group. Interesting story. Could not keep the phone down till I read the 29th episode. Suspense is maintained till now. Waiting for the next episode. Blue star Arjun…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anjali Suresh says:

    Enna da aju kannalam kalanga vekkira….

    Adappavi, 4 vartha serthu softa pesnathumolaritiye. Enna panna porano??

    Nithya ka please please please. Bp yethama seekram next ud potrunga pa…..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vidya Priyadarsini says:

    Ore confusion iruku…. save panrana ila cheat panrana theriyala.. But neenga readers a vachu seyreenganu theriyuthu Nithya ji. Late potathuku compromise paniteenga.. But wait pana mudiyala adithu ena nu ore thinking a iruku…. athunala naanga romba romba paavamnu nenachu next epi quick a poda try panuga pa….. Always rocking….


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      // But neenga readers a vachu seyreenganu theriyuthu Nithya ji// – அவ்வளவு படாதியாவா இருக்கு!!! 😮 😮

      //Always rocking….// – 😍😍😍


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Anjali Suresh says:

        Paadavathiya ithuva. Avva, avva vaila adinga, vaila adinga. Ud ya seekram podama neenga paduthringa ji.


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Uma maheswari says:

        வச்சு seireengale நித்யா என்ன சொல்ல..
        Expect pannathu onnu, நடக்கிறது ஒன்னு.
        Next ennanu தெரிஞ்சிக்க மீ waiting


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Vidya Priyadarsini says:

        Next epi podarathuku than vachu seyreenga sis… u r fabulous writer…. I unfortunately came across this site and read ur novel kanal vizhi kadhal… I just hats off u. Earlier I m wattpad reader. Now I’m only enjoying tamil stories bcoz of ur story only….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Reena says:

    Awesome episode .. I guess arjun thandha chain la some tracking device irukum nu ..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Umamanoj says:

    Super update Nithya… please konjam seekiram podunga Pa… Roomba long ah iruku.. story Vera sema interesting ah poguthu… good Nithya 😊


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    adhira shana says:

    super ud……..bt ud late ah podreenga….konjam seekiram ud poda try pannunga pls


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya Ganeshan says:

    Nice ud sis👌👌👌👌


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    superrrrrrrrrrrrrrrr


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kurinji says:

    Arjun Delhi poriyee..unmaiyileye avalai save panriyaa…

You cannot copy content of this page