Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 30

அத்தியாயம் – 30

சிலிகா ஏரி – வங்காள விரிகுடா கடல் முகத்துவாரத்தில் அமைந்திருக்கும், ஆசியாவின் மிகப் பெரிய உப்பு நீர் ஏரி. ஒரிசாவின் கன்ஜாம், குர்தா, பூரி ஆகிய மூன்று மாவட்டங்களில் கிட்டத்தட்ட 1100 சதுர கிலோ மீட்டர் பரப்பிற்கு இயற்கை எழில் கொஞ்சும் அழகோடு பறந்து விரிந்துக் கிடக்கும் இந்த ஏரியில், அள்ளித் தெளித்தது போல் ஆங்காங்கே மிதக்கும் பல தீவுகளில் ஒன்றான மிராஜ்பாடா, இடம்பெயர் பறவைகளின் புகலிடமாக இருந்தாலும் மனிதர்களின் புழக்கம் அதிகம் இல்லாமல் ‘ஓ’-வென்றிருந்தது. பல நூற்றாண்டு பழமையான மாகாளி கோவிலை பார்வையிட வரும் சில வெளிநாட்டுப் பயணிகளைத் தவிர வெகு சொற்பமான மக்களே வசிக்கும் அந்த தீவில், தனித்துவிடப்பட்ட குழந்தை போல், கீழ்வானில் தேய்ந்து மறையும் மாலைநேர சூரியனை விழியாகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மிருதுளா.

 

அவள் அமர்ந்திருக்கும் மணல்மேட்டில், நண்டு ஒன்று அவளை நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது. பல்லாயிரம் மைல்கள் கடந்து வந்த வெளிநாட்டு பறவை கூட்டம் ஒன்று அவள் தலைக்கு மேல் பறந்து சென்றுக் கொண்டிருந்தது. கடல்நீரோடு உறவாடிய உப்புக்காற்று அவள் மெல்லிய மேனியை மோதிக் கடந்து சென்றது. எதுவும் அவளை பாதிக்கவில்லை. பாறையை சுமந்துக் கொண்டிருப்பது போல் கனத்துப்போயிருந்த மனம் அவனையே சுற்றிக் கொண்டிருந்தது.

 

அன்று எதைப்பற்றியும் யோசிக்காமல் உண்மையை பட்டென்று போட்டு உடைத்துவிட்டாள். என்ன இருந்தாலும் அவன் ஒரு மாஃபியா மனிதன். அவனுடைய எதிர்வினை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்… அவனுடைய அன்பும் அக்கறையும் அப்படியே தலைகீழாக மாறியிருக்கலாம். அவளிடம் கடுமையாக நடந்து கொண்டிருக்கலாம். ஏன், அவளை கொலை கூட செய்திருக்கலாம். ஆனால் அவன் அப்படி எதையும் செய்யவில்லை. அவள் எதிர்பார்த்த அதிர்ச்சி, கோபம், ஆத்திரம் எதுவும் இல்லை அவனிடம். மிகவும் அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தான். பார்வை மட்டும் ஓரிரு நிமிடங்கள் அவள் முகத்தில் நிலைத்திருந்தது. பிறகு, “செத்தவனை உனக்கு முதல்லயே தெரியுமா?” என்றான்.

 

அவள் மறுப்பாக தலையசைத்தாள். மீண்டும் ஒரு உணர்வற்ற பார்வைக்குப் பிறகு, “உன்னோட பேரன்ட்ஸ் ஏன் உன்ன தேடலை?” என்றான்.

 

“அம்மா கண்டிப்பா என்னை தேடியிருப்பாங்க. ரீச் பண்ண முடிஞ்சிருக்காதா இருக்கும்” – தாயின் நினைவில் அவள் குரல் நைந்தது.

 

“அப்பா? வாட் அபௌட் ஹிம்?”

 

அவனுடைய கேள்விக்கு அவள் பதில் சொல்லவில்லை. மெளனமாக தலை கவிழ்ந்து நின்றாள். சற்று நேரம் கழித்து, “அவர் ஒரு ஆர்மி மேன். சர்வீஸ் முடிஞ்சு வந்து லோக்கல்ல வேலை பார்த்துகிட்டு இருந்தார். அங்கதான் ஏதோ ஒரு லேடி கூட… ஐ டோன்ட் நோ… ஹி ஜஸ்ட் லெஃப்ட் அஸ். என்னையும் அம்மாவையும் அப்படியே விட்டுட்டு போய்ட்டாரு. நாலஞ்சு வருஷம்… இல்ல… ஆறு வருஷம் கூட இருக்கலாம். எங்க இருக்காரு… எப்படி இருக்காரு எதுவும் தெரியாது. அம்மா அவரை தேடி ஊர் ஊரா அலைஞ்சுக்கிட்டு இருக்காங்க. இப்போ… என்னையும்…” – பேச முடியாமல் தொண்டையை அடைத்த ஆத்திரத்தை விழுங்கி கொண்டாள். கண்களில் கண்ணீர் கோர்த்து நின்றது. ஆதரவாக அவள் கரம் பற்றினான் அர்ஜுன்.

 

“உன் அப்பாவை மிஸ் பண்றியா?”

 

“நோ…” – உடனடியாக மறுத்தாள். அந்த மறுப்பில் இருந்த கோபத்தை அவன் உணர்ந்தான்.

 

“சின்ன வயசுலேருந்து நா ஹாஸ்ட்டல்ல தான் இருக்கேன். அவர் அவரோட வேலையில எப்பவும் பிஸியா இருப்பாரு. எங்க ரெண்டுபேருக்கும் பெருசா எந்த அட்டாச்மென்ட்டும் இல்ல. ஆனா அம்மா… நாங்க ரெண்டு பேரும் ரொம்ப கிளோஸ். தினமும் நாலஞ்சு தடவையாவது எனக்கு போன் பண்ணிடுவாங்க. எம்மேல அவ்வளவு பாசம்… அக்கறை… ஐ மிஸ் ஹர் சோ மச்”

 

“நீ என்கிட்ட இதைப்பற்றி முதலிலேயே பேசியிருக்கணும்” – சின்ன கடுமை எட்டிப்பார்த்தது அவன் குரலில்.

 

சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் மிருதுளா. “துப்பாக்கி, ரெத்தம், கொலை இதெல்லாம் சினிமால கூட நான் அதிகம் பார்த்ததில்லை. இங்க அதெல்லாம் ரொம்ப சாதாரணமா இருக்கு. என்னோட மனநிலை எப்படி இருந்திருக்கும்? ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் மீ”

 

“ஐம் சாரி…” – உடனே தணிந்தான். பிடித்திருந்த அவள் கரத்தில் இதழ்பதித்தான். “உன்னோட அம்மாவை நீ சீக்கிரமே சந்திக்கிறது ஏற்பாடு செய்றேன்” – பிடியில் அழுத்தம் கொடுத்து அவளுக்கு நம்பிக்கையூட்டினான். மிருதுளா தன்னிச்சையாக அவன் தோளில் தலை சாய்த்தாள்.

 

இப்போது கூட அவன் அருகில் அமர்ந்திருப்பது போல் – அவன் தோளில் சாய்ந்திருப்பது போல் தான் தோன்றுகிறது. ஆனால் அவனைப் பார்த்து… அவன் குரலை கேட்டு… இன்றோடு மூன்று நாட்களாகிவிட்டது. அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை. பத்திரமாக திரும்பி வந்துவிடுவான் என்கிற நம்பிக்கை ஒருபக்கம் இருந்தாலும், அவன் எந்த சூழ்நிலையில் இருக்கிறானோ! எவ்வளவு ஆபத்தான வேலையில் ஈடுபட்டிருக்கிறானோ! எத்தனை நெருக்கடியில் இருக்கிறானோ! என்கிற யோசனையை தவிர்க்க முடியவில்லை. மன அழுத்தத்திலிருந்தும் விடுபட முடியவில்லை.

 

“பூஹ்…!!” – அவளிடம் நெருங்கி வந்த நண்டை கையில் பிடித்து அவள் முகத்திற்கு அருகே கொண்டு சென்று பயம் காட்டி, “ஆ…!” என்று அவள் அலறுவதை ரசித்து சிரித்தபடி அவளுக்கு அருகில் அமர்ந்தான் டேவிட்.

 

“ச்சே… ஆளப்பாரு… சின்ன பிள்ளை மாதிரி நண்டு பிடிச்சு விளையாடிகிட்டு…” – அவனுடைய உருட்டலுக்கு பயந்துவிட்ட தன் தோல்வியை சங்கடத்துடன் மறைத்து அவனை கடிந்தாள். அதையும் ரசித்து சிரித்த டேவிட், “கொஞ்சம் விட்டிருந்தா கடிச்சிருக்கும்” என்றபடி கையிலிருந்த நண்டை தூர தூக்கியெறிந்தான்.

 

அருமையான மனிதன். இந்த மூன்று நாட்களாக அவளை கண்ணுக்குள் வைத்து பாதுகாப்பது போல் பாதுகாக்கிறான். ஒரு நிமிடம் கூட அவளை தன் பார்வையிலிருந்து விளக்கவிடமாட்டான். எதிரிகளை மட்டும் அல்ல… ஈ எறும்பைக் கூட அவளிடம் அண்ட விடமாட்டான். இந்த நண்டை மட்டும் விட்டுவிடுவானா என்ன? – மிருதுளா புன்னகைத்தாள். அவளுடைய அழகிய புன்னகையில் அவன் மனம் இலவம்பஞ்சு போல் காற்றில் மிதந்தது.

 

“அப்படி என்ன யோசனை?”

 

“ம்ஹும்…” – எதுவும் இல்லை என்று தலையை குறுக்காக அசைத்தாள்.

 

“சரி வா, டின்னர் ரெடி. டிஃபரெண்ட் ரெசிபி ட்ரை பண்ணியிருக்கேன். டேஸ்ட் எப்படி இருக்குன்னு சொல்லு”

 

“பாமிம்மாவையே செய்ய சொல்லியிருக்கலாமே! நீங்க ஏன் சிரமப்படறீங்க?” – பாபிம்மா என்பவர் அவர்கள் தங்கியிருக்கும் பீச் ஹௌஸின் கேர் டேக்கர். இங்கு வந்த முதல்நாள் அவர்தான் சமைத்துக் கொடுத்தார். என்ன… சாப்பிடத்தான் முடியவில்லை. எனவே மறுநாளிலிருந்து டேவிட் தன் கைவண்ணத்தை காட்ட துவங்கிவிட்டான்.

 

“பாபிம்மா சமையலையே சாப்பிடுன்னு விட்டிருக்கணும். அப்போ தெரிஞ்சிருக்கும்…” – கிண்டலடித்தான்.

 

“உங்க அளவுக்கு ஒன்னும் அவங்க மோசமா சமைக்கலா… ஷி இஸ் பெட்டர்” – பதிலுக்கு அவளும் வாரினாள். இருவரும் சிரித்துக் கொண்டே வீட்டிற்கு வந்தார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்குள் நல்ல நட்பு உருவாகியிருந்தது.

 

இரவு உணவு முடிந்த பிறகு மீண்டும் தனியாக வந்து வராண்டாவில் அமர்ந்துவிட்டாள் மிருதுளா. வழக்கம் போல அவளை பின்தொடந்து வந்தான் டேவிட்.

 

“தூங்கலையா?”

 

“ம்ஹும்… தூக்கம் வரல” – கனகனவென்று மூக்கால் பேசினாள்.

 

‘அழுதிருக்காளா!’ – பதட்டத்துடன் அவள் முகத்தை பார்த்தான். “என்ன ஆச்சு? ஏன் என்னவோ போல இருக்க?”

 

“ஒன்னும் இல்ல… லேசா சளி பிடிச்சிருக்கு”

 

“ஓ…! அப்போ உள்ள போயி படு… மருந்து எதுவும் வேணுமா?”

 

“இல்லல்ல… அதெல்லாம் வேண்டாம்…” என்று மறுத்தவள், சற்று சந்தித்துவிட்டு “டேவிட்…” என்று இழுத்தாள்.

 

அவள் எதை பற்றி பேசப் போகிறாள் என்று டேவிட் நன்றாகவே அறிந்திருந்தான். என்னதான் திசைதிருப்பினாலும் இறுதியில் ஒரே புள்ளியில் வந்து நிற்கும் அவளுடைய சிந்தனை அவனை சலிப்படையச் செய்தது.

 

“ம்ம்ம்…” என்றான் ஆர்வமற்று.

 

“அர்ஜூன்கிட்டேருந்து… ஏதாவது… மெசேஜ் வந்ததா?” – தயக்கத்துடன் கேட்டாள். தினமும் இந்த கேள்வியை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறாள். அவனும் ஒரே பதிலை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

 

“இல்ல…”

 

அவள் முகம் வாடியது. அதை காணும் பொழுது அர்ஜுன் மீதுதான் அவனுக்கு கோபம் வந்தது. இவளுடைய ஈடுபாட்டையும் அவனுடைய கபடத்தையும் ஒப்பிட்டுப்பார்த்து உள்ளுக்குள் வெம்பினான்.

 

“எந்த ஊருக்கு போயிருக்காங்க? கார்ட்ஸ் எல்லாம் கூட இருப்பாங்கல்ல? பாதுகாப்பாத்தானே இருப்பாங்க?”

 

“அதெல்லாம் யாருக்கும் தெரியாது மிருதுளா. இங்க ஒருத்தருக்கு அஸைன் ஆகற வேலையும் அவங்களோட மூவ்ஸும் மத்தவங்களுக்கு தெரியிற மாதிரி வெளிப்படையா இருக்காது. இது அண்டர் வேர்ல்ட். இங்க நீ பார்க்கற எல்லாமே நிழல். இங்க நிஜத்தை தேடாத… ஏமாற்றம் உன்ன முழுங்கிடும். காணாம போயிடுவ… புரியுதா உனக்கு?” – அவளுடைய கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தவன் தன்னுடைய ஆதங்கத்தையும் சேர்த்து கொட்டித் தீர்த்தான்.

 

அவன் என்ன சொல்கிறான் என்பதை அவள் சிந்தித்து புரிந்துகொள்வதற்குள் அவனுடைய அலைபேசி ஒலித்தது. எடுத்து பார்த்தவன் சட்டென்று மிருதுளாவின் பக்கம் திரும்பினான்.

 

“அர்ஜுன் தானே?” – கண்களில் ஆர்வம் மின்ன கேட்டாள். அவனுடைய நீண்ட டயலாக்கை புரிந்து கொள்ளாதவள், இதை மட்டும் ஒற்றை பார்வையில் புரிந்து கொண்டுவிட்டாள்.

 

‘ஒரு அலைபேசி அழைப்பை மறைக்க தெரியவில்லை. பெரிய மாபியா மனிதனாம்!’ – தன்னைத்தானே வெறுத்தவன் அவளுடைய கேள்விக்கு ஆமோதிப்பாக தலையசைத்துவிட்டு அழைப்பை ஏற்றான்.

 

********************

 

அர்ஜுன் ஹோத்ரா ஒரு சாதாரண மனிதன் தான். ஆனால் அவனிடம் ஒரு அசாத்திய திறமையிருந்தது. சூழ்நிலையோடு பொருந்திப்போவது. ஆம்… எங்கு சென்றாலும் அந்த இடத்தில் தன்னை கரைத்துவிடக் கூடியவன் அர்ஜுன். மகல்பாட்னாவைவிட்டு வெளியேறிவிட்டால் அவனை டிராக் செய்வதென்பது இயலாத காரியம்.

 

அவன் பயணம் செய்வது, எந்த விதமான ஜிபிஎஸ் கருவியும் இல்லாத ரீமாடல் செய்யப்பட்ட அதிவிரைவு கார். அவசிய தொடர்புக்கு பயன்படுத்துவது, சிக்னலை பின்தொடரமுடியாத சேட்டிலைட் அலைபேசி. அதுமட்டும் அல்ல… சரளமான பலமொழிப் புலமையும், இயல்பான பாவமும் அவனை மக்கள் காட்டுக்குள் மறைத்துவிடும். தனித்துக் காண்பது சாத்தியமற்றது.

 

இப்போதுகூட அவன் திடீரென்று அந்த பெண்ணோடு எங்கு மறைந்து போனான் என்கிற கேள்வி கோர்த்தாவின் முக்கிய புள்ளிகள் பலரையும் குடைந்துக் கொண்டிருந்தது. அவனுடைய மனமோ மிராஜ்பாடா தீவையே சுற்றிக் கொண்டிருந்தது. மூன்று நாட்களாக ஈடுபட்டிருந்த வேலையில் தீவிரமாக மூழ்கியிருந்தவன், அன்று இரவு உறங்குவதற்கு முன் அங்கு நிலவரம் என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்பினான். உடனே அலைபேசியில் டேவிட்டை தொடர்புகொண்டான்.

 

“எஸ் அர்ஜுன்…”

 

“அங்க என்ன ஸ்டேட்டஸ்? மிருதுளா எப்படி இருக்கா?”

 

“எவரித்திங் அண்டர் கண்ட்ரோல். ஒன்னும் பிரச்சனை இல்ல”

 

“குட்… யு காட் எனி அதர் கால்ஸ்?”

 

“நோ”

 

“சரி… இன்னும் மூணு நாள்தான்… கவனமா இரு” – அவன் டேவிட்டிடம் சீரியஸாக பேசிக் கொண்டிருந்த போது இடையில் ஒரு தும்மல் ஒலி கேட்டது.

 

“யார் அது? மிருதுளாவா?” – அவன் கவனம் நொடியில் சிதறியது.

 

“ம்ம்ம்… ஆமாம்” – சிறு தயக்கத்துடன் கூறினான்.

 

“டைம் ஆச்சு! இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்ருக்கா?”

 

“ஒன்னும் இல்ல… சும்மா… ஜஸ்ட் பேசிட்டிருந்தோம்” – இயல்பாக இல்லாமல் ஏதோ சமாளிப்பது போலிருந்தது அவனுடைய பதில்.

 

அர்ஜுனின் தசைகள் இறுகின. இரத்தத்தில் அழுத்தம் கூடியது. “போனை அவகிட்ட கொடு” – கடுகடுத்தான்.

 

அடுத்த சில நொடிகளில், “ஹலோ…” என்று ஒலித்த மெல்லிய குரல் அவனுடைய டென்ஷனை இன்னும் அதிகமாக்கியது. அதை அப்படியே அவளிடம் கொட்டிவிடக் கூடாதே எச்சரிக்கையுடன் அமைதியாக இருந்தான். அவன் குரலை கேட்கும் ஆவலுடன் காத்திருந்த மிருதுளாவிற்கு, ‘உஸ்-புஸ்’ என்று சீரும் அவனுடைய மூச்சுக்காற்றின் சத்தத்தை மட்டுமே கேட்க முடிந்தது.

 

“அர்ஜுன்…?” – அவள் குரலில் அவன் பெயரின் உச்சரிப்பு மிகவும் அழகாக இருந்தது. அதை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை.

 

ஏதோ வழக்கத்திற்கு மாறான பயம்… கோபம்… அவனை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. டேவிட் அவள் மனதை கலைத்துவிடுவான் என்று நினைக்கிறானோ! அவனுடைய திட்டங்கள் பாழாகிவிடும் என்று அஞ்சுகிறானோ! – எதையும் தெளிவாக யோசிக்க முடியவில்லை. கோபமும் மூர்க்கமும் மூளையை மழுங்கடித்துவிட்டது போல் தோன்றியது.

 

“இருக்கீங்களா?” – மீண்டும் அவள் குரல்.

 

“தூங்காம இன்னும் என்ன பண்ணிட்டிருக்க நீ?” – அழுத்தம் திருத்தமாகக் கேட்டான். அவன் குரலிலிருந்த கடுமை மிருதுளாவை திகைப்படையச் செய்தது.

 

“இல்ல.. தூக்கம்… வரல… அதான்…” என்று கோர்வையற்று தடுமாறினாள். அந்த தடுமாற்றம் அவன் அமைதியை இன்னும் குலைத்தது.

 

“கதையடிச்சுக்கிட்டு இருந்தா எப்படி தூக்கம் வரும்?”

 

“எக்ஸ்கியூஸ் மீ?”

 

“கோ டு ஸ்லீப்… நௌ…” – அதிகாரம் தெறித்தது அவன் குரலில்.

 

அவனிடம் அன்பான வார்த்தையை எதிர்பார்த்த மிருதுளாவின் மனம் காயப்பட்டது.

 

“என்கிட்ட சொல்ல… இல்ல கேட்க வேற எதுவும் இல்லையா?”

 

“காது கேட்கும்ல? சொன்னதை செய்” – சிறிதும் இளகவில்லை அவன். அப்படி என்ன கோபம்! அவள் என்ன தவறு செய்தாள்? – அவளுக்கு ஆத்திரம் தொண்டையை அடைத்தது. கண்ணை கரித்தது. சமாளித்துக் கொண்டு, பதில் பேசாமல் அலைபேசியை டேவிட்டிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு அறைக்கு திரும்பினாள்.

 

*******************

 

கேஜ் ஃபைட்டிங் முடிந்து ஒருவாரம் கழிந்தும் கூட அவன் இன்னும் அமைதியடையவில்லை. இடது கையில் இரண்டு எலும்பு முறிவு. தாடை எலும்பில் லேசான தெறிப்பு… கழுத்துப்பகுதியில் சதை பிடிப்பு… அனைத்தையும் ஓரம்கட்டிவிட்டு தன்னை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யும்படி ரௌண்ட்ஸ் வந்த மருத்துவரிடம் சீற்றத்துடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான் சுஜித்.

 

இங்கு இருக்கும் வரை கோர்த்தாவின் ஆட்கள் அவனை பார்க்க வந்து கொண்டுதான் இருப்பார்கள். அவர்களை சந்திக்க அவன் விரும்பவில்லை. அவர்களுடைய கண்களில் தெரியும் ஏளனத்தையும் அனுதாபத்தையும் அவனால் எதிர்கொள்ள முடியவில்லை.

 

தோல்வியை ஏற்றுக்கொள்ளாத குணம் அவனை இன்னும் ஆக்ரோஷ மனநிலைக்கு இட்டுச் சென்றுக் கொண்டிருந்தது. அதை சரிசெய்வதற்கான மனநல சிகிச்சைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் இவன் அறவே ஒத்துழைக்க மறுத்தான். மருத்துவர்களுக்கு இவனை கையாள்வது சற்று சிரமமாக இருந்தது. சுமன் மட்டும் இல்லையென்றால் இந்த ஒருவாரம் கூட அவன் மருத்துவமனையில் தாக்குப்பிடித்திருக்க மாட்டான். எப்போதோ கம்பியை நீட்டியிருப்பான். அவனை அமைதியாக வைத்திருக்க வேறு வழியில்லாமல் அடிக்கடி ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அன்றும் அதைத்தான் செய்தார் அந்த மருத்துவர்.

 

சுஜித் உறங்கி கொண்டிருந்த வேளையில் அவனைப் பார்க்க வந்தான் மாலிக். சுமன் அவனை இயல்பாக வரவேற்றாள். அவனுடைய உடல்நிலைப் பற்றி விசாரித்தாள். அவன் மீது அவளுக்கு எந்த வருத்தமும் இல்லை. நடந்ததை ஒரு போட்டியாக மட்டுமே பார்க்கும் மனப்பக்குவம் அவளுக்கு இருந்தது. அதை தனிப்பட்ட முறையில் எடுத்து பகைப்பாராட்ட அவள் விரும்பவில்லை. அவளுடைய முதிர்ச்சி மாலிக்கை ஆச்சரியப்படுத்தியது. அவளுடைய புரிதலுக்கு நன்றி கூறி நண்பனின் உடல்நிலையைப் பற்றி விசாரித்தான்.

 

“உடம்பு பரவால்ல… மனசுதான் சரியில்ல. ரொம்ப அக்ரெஸிவா பிஹேவ் பண்றான். கௌன்சிலிங் போயிட்டிருக்கு”

 

“ஐம் சாரி…”

 

“நோ நோ… நீங்க சாரி சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. கேஜ் பைட்டிங் பற்றி எனக்கு தெரியும். நீங்க நெனச்சிருந்தா சுஜித்தை கொன்னுருக்கலாம். சுஜித் ஜெயிக்கற நிலைமை இருந்திருந்தா அதைத்தான் செஞ்சிருப்பான். ஆனா நீங்க அப்படி செய்யல. ஐம் கிரேட்ஃபுல் டு யு. தேங்க்ஸ்” – உண்மையை உணர்ந்து அவனுக்கு மனமார நன்றி கூறினாள்.

 

அடுத்த நொடியே நோயாளி படுக்கையை ஒட்டியிருந்த மேஜையில் இருந்த மருத்துவ உபகாரணங்களெல்லாம் பயங்கர சத்தத்துடன் தரையில் உருண்டன. உடல் வலியையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆவேசத்துடன் எழுந்த சுஜித், “ஏய்… நீ ஏன் இங்க வந்த? என்னோட தோல்வியை என்ஜாய் பண்ண வந்தியா? உன்னோட வெற்றியை கொண்டாட வந்தியா? யு ப்ளடி சீட்டர்… வெளியே போ… வெளியே போடா ராஸ்கல்…” என்று மாலிக்கை பிடித்துத் தள்ளினான்.

 

சுமன் அவனை தடுக்க முயன்றாள். மாலிக் தன்னிலை விளக்கம் கொடுக்க முயன்றான். எதுவுமே அவனிடம் எடுபடவில்லை. கரைபுரளும் காட்டு வெள்ளம் போல் கட்டவிழ்த்து கொண்டு சீறினான். ஒரு கட்டத்திற்கு மேல் செவிலியர்கள் தலையிட்டு மாலிக்கை அங்கிருந்து அனுப்பிவிட்டு சுஜித்தை அமைதிப்படுத்த முயன்றார்கள். ஆனால் அவனுடைய கோபம் சுமனின் பக்கம் திரும்பியது.

 

“என்ன சொன்ன? என்ன சொன்ன நீ? டெல் மீ நௌ…”

 

“என்ன? என்ன சொன்னேன்?”

 

“அவன்கிட்ட ஏதோ சொன்னியே…”

 

“சுஜித் ப்ளீஸ்… கொஞ்சம் அமைதியா இரு… காம் டௌன்…” – அவனை அமைதிப்படுத்த முயன்றாள்.

 

“ஐம் கம்ப்ளீட்ல்லி சில் டார்லிங்… யு ஜஸ்ட் டெல் மீ… இன்னொரு தரம் அந்த வார்த்தையை உன் வாயிலிருந்து கேட்கணும் போல இருக்கு” – கொலை வெறி தெரிந்தது அவன் கண்களில்.

 

“நீ எதை கேட்கற? எனக்கு புரியல… நீ முதல்ல உட்காறேன்… இந்தா இந்த தண்ணிய குடி”

 

“நோ…” – அவன் தட்டிவிட்டு வேகத்தில் தம்ளர் தரையில் தெரித்துவிழ தண்ணீர் அறையெங்கும் சிதறியது. “நடிக்கிறியா? நடிக்கிறியா நீ… ம்ம்ம்?” – அவள் தோள்களை பிடித்து ஆவேசமாக உலுக்கினான். அவன் முகம் சிவந்துவிட்டது… மூச்சு வாங்கியது. நெற்றியில் அரும்பிய வியர்வை முத்துக்கள் காதோரம் வடிந்தது.

 

அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்தாள் சுமன். இந்த மூட் ஸ்விங்… இந்த கோபம்… இந்த பதட்டம்… ஏதாவது சீரியஸான உடல்நிலை கோளாறை கொண்டு வந்துவிடுமோ என்று அஞ்சினாள்.

 

“நல்லவ மாதிரி… என்மேல அக்கறை இருக்க மாதிரி… நம்பிட்டேனே… நீயும் என்னை ஏமாத்துற… யு ஆர் ஜஸ்ட் மேனிபுலேட்டிங் மீ… ஹனிபாட்டிங் மீ… ஐ நோ…” – அவளை பின்னுக்கு தள்ளிவிட்டு தளர்ந்து கட்டிலில் அமர்ந்தான்.

 

மாலிக் அவனுடைய நெருங்கிய நண்பன். அவன் தனக்கு எதிராக மாறாக கூடும் என்கிற சந்தேகம் சிறிதும் இல்லாமல் அவனிடம் வெளிப்படையாக இருந்தான். ஆனால் அவனுடைய நம்பிக்கையை மாலிக் அந்த இரும்பு கூண்டுக்குள் சிதைத்துவிட்டான். தன் காதலியைக் கூட சந்தேகிக்கும் அளவுக்கு பலமான சிதைவு…

 

சுமன் அவனை பார்த்து பரிதாபப்பட்டாள். அவனுடைய மனநிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுவிட்டதே என்று எண்ணி வேதனைப்பட்டாள்.

 

“அவனுக்கு… நீ… கடமைப்பட்டிருக்க? யு ஆர் கிரேட் ஃபுல் டு ஹிம்… ம்ம்ம்?” – குனிந்த தலை நிமிராமல் தனக்குத்தானே பேசிக்கொள்வது போல் கேட்டான்.

 

“சுஜித்… நா…” – அவள் விளக்கம் கொடுப்பதற்குள் குறுக்கிட்டு, “ஏன்?” என்று நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். அவன் பார்வையில் வருத்தம் இருந்தது… இயலாமை இருந்தது… அவனை அப்படி பார்க்க உள்ளே வலித்தது அவளுக்கு.

 

“எனக்கு உயிர் பிச்சை போட்டிருக்கான்… இல்ல? அவன் இடத்துல நா இருந்திருந்தா அவனை கொன்னுருப்பேன் இல்ல?” என்று தளர்வுடன் கேட்டவன் திடீரென்று உக்கிரமானான். “எஸ்… கொன்னுருப்பேன்… நிச்சயமா கொன்னுருப்பேன்… ஏன்னா நா நேர்மையா மோதினேன்… என் மனசுல எந்த அழுக்கும் இல்ல… குற்ற உணர்ச்சியும் இல்ல… இப்படி உயிரோட விட்டு அவமானப்படுத்தறதுக்கு பதிலா கொன்னுப்போட்டுடறது எவ்வளவோ மேல்… அவன் ஒரு ஏமாத்துக்காரன்… ஃப்ராட்… அதனாலதான் அவனால என்னை கொல்ல முடியல”

 

“கொஞ்சம் பொறுமையா திங்க் பண்ணு சுஜித். அவர் உன்னோட ஃபிரண்ட். அதனாலதான்…”

 

“துரோகி… பச்சைத்துரோகி…” – அவள் முடிப்பதற்குள் ஆக்ரோஷமாக கத்தினான்.

 

“வெற்றி தோல்வியெல்லாம் சகஜம்தானே. ஸ்போர்ட்டிவா எடுத்துக்கோ” – அவள் அமைதியாகவே எடுத்துக்கூறினாள்.

 

“எதை ஸ்போர்ட்டிவா எடுத்துக்கணும்? அவன் என் முதுகுல குத்துனதையா? என்னோடயே பிராக்டிஸ் பண்ணி… என்னோட டெக்னிக்ஸையெல்லாம் என்கிட்டயே கத்துக்கிட்டு… என்னோட மைனஸையெல்லாம் என் மூலமாவே தெரிஞ்சுக்கிட்டு என் முதுகுல குத்தி ஜெயிச்சிருக்கான். இதுதான் வெற்றியா? இப்படித்தான் ஒரு ஸ்போர்ட்ஸ் பர்சன் ஜெயிப்பானா?” – விரக்தியும் கோபமும் விரவியிருந்தது அவன் பேச்சில்.

 

“இதை வெறும் ஸ்போர்ட்டு மட்டும் சொல்லிட முடியாது சுஜித்… இதுல உங்க ரெண்டு பேரோட உயிரும் சம்மந்தப்பட்டிருந்தது. இது ஒரு யுத்தம்… வார்… நத்திங் இஸ் ராங் இன் வார் ரைட்?”

 

அப்படி அவள் கேட்டதும் அவனுடைய பார்வை மாறியது… ஒருவித அலட்சியமும் நக்கலும் கலந்த மலிந்த பார்வை பார்த்தான்.

 

“ப்ச்… ப்ச்… நத்திங் இஸ் ராங் இன் ‘லவ்’ அண்ட் வார்… அதுதான் கரெக்ட்டான ஃப்ரேஸ் இல்ல?” – லவ் என்கிற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து குத்தலாகக் கேட்டான்.

 

சுமனின் முகம் மாறியது. “மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாத…” – அவன் எங்கு வருகிறான் என்பதை உடனே புரிந்து கொண்டு கண்டித்தாள்.

 

“ஹி வாஸ் இன் லவ் வித் யு ரைட்?”

 

“பழைய குப்பையை எதுக்கு இப்ப கிளர்ற? நா உன்னைத்தானே சூஸ் பண்ணினேன்”

 

“ஆனா அவன்தான் பெட்டர்… பாரு… பிராடு பண்ணியாவது யுத்தத்துல ஜெயிச்சுட்டான்… இப்போ… தியாகி வேஷம் போட்டு அடுத்த நாடகத்தை ஆரம்பிச்சிருக்கான். நடிப்புலேயும் சார் கிங்கு. கண்டிப்பா உன்ன கவுத்துடுவான்…”

 

“சுஜித் ப்ளீஸ்…”

 

“நீ என்னை கவுத்துடுவ…”

 

“போதும் நிறுத்து…”

 

“ஐ ஹேட் யு” – பற்கள் நறநறக்க வெறுப்பை உமிழ்ந்தான்.

 

“ஐ லவ் யுடா..” – காதலில் கசிந்தாள் சுமன்.

 

“ஓ ரியலி!!!”

 

“எஸ்… ஐ லவ் யு… அண்ட் யு நோ தட்…” – அவன் மனதில் பதியவைப்பது போல் அழுத்தம் திருத்தமாக கூறினாள்.

 

“அப்படின்னா எனக்கு நிம்மதியை கொடு… அமைதியை கொடு…” – திட்டமாகக் கோரினான்.

 

“எப்படிடா?” – புரியாமல் கேட்டாள்.

 

“பை லீவிங் மீ…”

 

“வாட்!!!”

 

“ஐ வாண்ட் பீஸ்… ப்ளீஸ் லீவ் மீ”

 

“லூசு மாதிரி பேசாதடா”

 

“சோ… நீ நடிக்கிற… பொய் சொல்ற… இல்ல?”

 

“ஐயோ! ஏண்டா இப்படி படுத்துற? என்னைய விட்டுட்டு நீ எப்படி இருப்ப? பைத்தியம் பிடிச்சுப் போயிடுவ… சொன்னா கேளு. பேசாம கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கு. எல்லாம் சரியாயிடும்” – அவனை படுக்க வைக்க முயற்சி செய்து, போர்வையை அவன் மீது இழுத்துவிட முயன்றாள்.

 

அவள் கையை தட்டிவிட்டு போர்வையை இழுத்து வீசிவிட்டு, “நீ இங்க இருந்தா எனக்கு தூக்கம் வராது சுமன். ஐ ரியலி வாண்ட் திஸ் பிரேக்… ப்ளீஸ்… என்னை விட்டுப்போ… போயிடு…” என்று ஆவேசமாக கத்தினான். அவன் ஏதோ கோபத்தில் பேசவில்லை. தீவிரமான முடிவோடு தான் பேசுகிறான் என்பதை புரிந்துகொண்ட சுமன் கலங்கிப்போனாள்.

 

 




11 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rusha Seevaamirtham says:

    Nithu… frequent updates please dear


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      innikku ud update pannuven pa…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anjali Suresh says:

    aju ne nejama madayan than. 3 naala pesma yengi poirukra ponnukita ipdiya pesuva. Mrithu yaarpakkam nu than unaku theriji poche. Aparam yethuku boat la avlo scene potta. Innum enna thittam vechirkka. Enna panna pora avala. Athan ava elathayum solitale…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Afrin Zahir says:

    Nice episode ! But please konjam seekrama updates kudunga


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vidya Priyadarsini says:

    Ovoru epi kum tension ekuruthu ji. Readers paavam thana athunala neenga seekirama enga tension a full a koraika try panuga ji.
    Miruthu n suman rendu perume avangaloda position la correct a irukuratha pola arjun n sujith rendu perum avanga point of view la correct than. But david n malik than konjam ila nerayave mirchi ya iruku.
    Mafia s a irunthalum they r human beings nu avanga pakkava proof panuranga. Ena than brain variety variety a think panunalum manusan manusan than.
    Miruthu n suman rendu perum affect akha koodathu. Anyways fantastic and fabulous episode ji. Waiting for the next episode eagerly pa.


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Krishna Moorthy says:

      Nice sister waiting for the next episode


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        admin says:

        ok ok… innikku pottudalaam…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya Ganeshan says:

    Nice ud sis👌👌👌👌


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kurinji says:

    Arjun nee mirukku kaalaanaa
    Kaalvalanaa…Sujith vaalvin nimathiyai Neeye kuli thondi puthaikire…..thik thik,……..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ahi Gokul says:

    Nice…superb very thrilling …,very interesting&good story flow as like in your previous novel ‘ithayathil our yutham’.but can give regular update &avoid long…waiting time
    All the best Nithiya👍


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Samri Thi says:

    Very interesting sis👏 Arjun ta miru unmaiya sollium Avan avanoda plan la erunthu maralaiya? Avonoda no reaction nuku enna artham? David Manasa entha vithatula kalaipanu kopapatran? Unmailaiye Arjun character suthama purunchuka mudila…:but miru remba pavam😩 Malik cheat Pani Sujith tha win Panna nala avanalaa Malik ah mannika mudila but ethukalam karanam aju thana… Avan tha avanoda weak point la adika sonnan, epo Suman love um usaladuthu… Eagerly waiting for your next ud… Plz sis nxt ud quick ah kodunga …

You cannot copy content of this page