Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

காஜலிட்ட விழிகளே 13

நண்பனின் உரையாடல் பல குழப்பத்தைத் தர ஸ்ருதியை சந்தேத்தே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பிரசாத் மூலமாக கிரிஜாவிடம் பேசி சம்மதம் வாங்கி ஒரு ஃபுட்கோர்ட்டிற்கு வரவழைத்தான்.
ஸ்ருதி கார்த்திக்கிடம் “கார்த்திக் ஒரு மூன்று நாள் பொறு நான் நார்மல் ஆகிடுவேன். என்னால் இந்த ஏமாற்றத்தை தாங்கவே முடியல்லை. இரண்டு வருஷங்கள் நாம எவ்வளவு கட்டுப்பாடாக இருந்தோம். நான் உன்னை எப்போதாவது தப்பான வழியில் தூண்டியிருப்பேனா? ”

“என்னைப் பற்றியும் சொல்லு! இந்த ஒரு வருஷ காலத்தில் என் கை உன் மீது தப்பா பட்டிருக்குமா? சொல்லு ஸ்ருதி. எத்தனைமுறை நான் என்னை எவ்வளவு கட்டுப் படுத்திக்கொண்டேன் என்று உனக்கு நல்லா தெரியும்! நான் அவசரப்பட்டது ஒரே ஒரு முறைதான். ”

“ப்ளீஸ். அந்த நாளைப்பற்றி பேசாதே. அப்புறம் நீ பிரசாத் மாமாகிட்ட நாம் பீச் ரெசார்ட்டில் டேட்டிங் போனதாக சொல்லியிருக்க. அவர் என்னைத் தனியாக கூப்பிட்டு அட்வைஸ் செய்தார். ஏன் மாமாகிட்ட அப்படி சொன்ன? ”

“ஸ்ருதி நான் என் ஃப்ரண்ட்ஸ்சிடம் சும்மாதான் கதைவிட்டேன். பிரசாத்தும் அதை நம்பிட்டான். பிறகு நமக்குள்ள அந்த மாதிரி எதுவும் இல்லை என்று சொல்லிப் புரியவச்சிட்டேன். அவன் நம்பவில்லை என்றால் நான் என்ன பண்ணட்டும்? ஸ்ருதி அந்த நாள் நான் நடந்துகொண்டவிதம் தப்புதான். ”

“ரொம்பப் பெரிய தப்பு கார்த்திக்! ”
“ஆமாம்டா ரொம்ப பெரிய தப்புதான். ஆனால் ஒரு உணர்ச்சி வேகத்தில் நடந்த பிழை. உன்னை தனியே பிடித்துவைக்கும் தனிமை கிடைத்ததால் நேர்ந்த தப்பு. நீ அதை மறந்திடணும்.. ”

“இரண்டு வருஷம் நாம காப்பாற்றிய பெயரை ஒரு மணி நேரத்தில் அழித்தபிறகு அதைப்பற்றி பேசி என்ன ஆகப்போகுது? கிரிஜா அக்கா என்னைத் தனியாக கூப்பிட்டு என்னவெல்லாம் கேட்டா தெரியுமா? அதெல்லாம் நம்ம கல்யாணத்திற்கு அப்புறம் கேட்டிருக்க வேண்டியது.. ”

“ஸாரிப்பா.. ஸ்ருதி நீ ரொம்ப அழுதியா? ”

“ஆமாம் அழுதேன். இப்ப அதுக்கு என்னன்னு சொல்ற? அன்றைக்கு நாம் தனியாக இருந்தது தப்பு. தனிமைதான் தவறுக்கு முழுக்காரணம் என்று நானும் நம்புறேன் அவுங்களும் நம்புறாங்க. தொட்டுக்கிட்டு இடிச்சிக்கிட்டு பேசுறது சரின்னு படுவதுபோல் கட்டிப் பிடிச்சிக்கிட்டு முத்தம் கொடுத்திட்டு பேசுறதும் ஏதோ ஒரு நிமிஷம் சரின்னு பட்டிடும். இப்ப நானும் இமோஷனலா இருக்கேன். நீயும் தவிக்கிற.. திரும்பத் திரும்ப தப்பு நடந்திடுமோன்னு பயமா இருக்கு. அதான்.. ப்ளீஸ்… ”

“ப்ளீஸ் இப்ப போயிடுன்னு சொல்றியா? ”

“ப்ளீஸ் கார்த்திக். நாம இப்ப சண்டை போட வேண்டாமே? ”

“அப்படின்னா போ என்றுதான் சொல்கிற? என்கிட்ட நாலு லைன் மட்டும்தான் பேசுவ? ”

“கார்த்திக் நீயும் என்னை டார்ச்சர் பண்ணாத! ”

“சரி உன் மூடு சரியாகட்டும். நீ சொன்ன மாதிரி இப்ப பேசினால் சண்டைதான் வரும். நான் கிளம்புறேன். ஆனால் பேசாமல் இந்த மூன்று நாட்கள் நான் செய்த தவுறுக்காக தண்டனை கொடுத்திட்ட. இனியும் கொடுக்காதே. நான் கூப்பிட்டால் பேசு. என்ன சரியா? ”

“ம். கார்த்திக் நாலு நாளைக்கு நான் ஒருத்தி இருப்பதையே மறந்திடு! ”

“நீயும் நாலு நாளைக்கு நான் இருப்பதையே மறந்திடுவியா ஸ்ருதி? என்னால் முடியாது. நாம் சேர்ந்து பாடிய ஒரே ஒரு இளையராஜா பாட்டு கேட்டுட்டா எனக்கு உன் ஞாபகம் வந்திடும் ஸ்ருதி. ஏதாவது சானலில் கமல் பாட்டு கேட்கும்போது உன்னால் என்னை நினைக்காமல் இருக்க முடியுமா? ” என்ற கேள்விக்கு பதில் தராமல் ஸ்ருதி நகர்ந்தாள். அவளால் அந்த கேள்வியின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் அவன் முன்னே நிற்காமல் மறைந்தாள்.
ஆனால் கார்த்திக் மனதில் ஸ்ருதியின் அழுது வீங்கிய கண்கள் அழுத்தமாக இடம்பெற்றன. கண்ணீரே பார்த்திராத கன்னங்கள் கண்ணீரினால் நன்றாகவே பாதிக்கப்பட்டிருந்தது.

 

கண்பட்டைகள் உப்பியிருந்தன. அழுது அழுது கஷ்டப்பட்ட ஸ்ருதியை நாமும் கடினமாகப் பேசிவிட்டோமே என்று அந்த ஷனத்தில் அந்த நிமிடத்தில் பச்சாத்தாபம் அடைந்தான். ஸ்ருதி அவன் அழைத்தபோதெல்லாம் பேசினாள். மற்றவர்கள் முன்பாக அன்பு இல்லத்தில்கூட பேசினாள். ஆனால் முகத்தில் சிரிப்பு இல்லை.
கைபேசியில் பேசுவதையே தொடர்ந்தார்கள் இருவரும்.

நாட்கள் நகர்ந்தபோதும் ஸ்ருதியின் தோற்றம் மாறவேயில்லை. அவ்வப்போது கடைவீதிகளில் கோயில்களில் அவளைப் பார்க்கும்போது கார்த்திக் தன்னை நொந்துகொள்ளாமல் இருக்கவும் முடியவில்லை.

ச்ச அந்த ஒரு நாள் மட்டும் நம்மைக் கட்டுப்படுத்தியிருந்தால்.. என்று நினைக்காமலும் அவன் இல்லை.

ஸ்ருதி நாலு வரிகளில் தனது உரையாடலை முடித்துக்கொண்டது அவனக்கு என்னமோ செய்தது. அவன் என்ன செய்தாலும் அவள் அதற்கு மேல் பேசப்போவதில்லை என்று புரிந்துகொண்டான்.
அவளது கண்களில் மகிழ்ச்சி இம்மியளவுகூட இல்லை. எட்டடி தள்ளி நிற்பவளை எட்டிப்பிடிக்க அவனிடம் கருவிகள் இல்லை.
கோபத்தில் அவன் தனது பைக்கில் ஏறி உதைத்தஉதையில் அந்த வாயில்லா ஜீவன் விர்ரென்று சென்றது. அடையார் தாண்டிச்செல்லும்போது சிக்னல் அவனை நிற்கச் சொன்னது.
எழுபது விநாடிகள் நிற்கச் சொன்ன சிவப்பு விளக்கு அறுபத்தி ஒன்பது அறுபத்தி எட்டு என்று தனது கணக்கை குறைத்துக்கொண்டே போனது… அப்போது தன் அருகே ஒரு மாருதி கார் வந்து நின்றதைக் கவனித்தான். அதில் ஒரு தகப்பன் தனது இரண்டு வயதே முடிந்திருக்கக்கூடும் மகளிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.
அந்தப் பிள்ளைக்கு எதிலோ கோபம் போல. அழுது கொண்டேயிருந்தது. அந்தப் பிள்ளையின் தந்தை சளைக்காமல் அவளிடம் பேசிக்கொண்டேயிருந்தான்.
“என்னடா ப்ரியாகுட்டி? அப்பா வாங்கித்தர்றேன் என்று சொல்றேன். நீ அம்மாகிட்ட போகாதே. அவள் ரொம்ப மோசம். அப்பாவையும் தினம் தினம் அடிச்சிட்டேதான் இருக்காடா. அவள்கூட நானும் டூ போடவா? ” என்று கேட்டுப் பார்த்தான் கார்காரன்.
பொண்ணு ஜான் அளவுகூட அசைந்து கொடுக்க வில்லை.
மெல்ல தனது கைகளால் அவள் இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டினான். குழந்தை அழுகையை கொஞ்சம் விட்டது.

ஒரு ஜோக் சொன்னான். சரியான கடி ஜோக். “காக்கா வானத்தில் பறக்கும்போது முட்டை போடுது ஆனால் முட்டை கீழே விழவில்லை. ஏன்? ப்ரியாகுட்டிக்கு பதில் தெரியுதா? ”

குழந்தை பதில் தெரியாமல் தந்தையைப் பார்த்தது.
தந்தை சொன்னான் “காக்கா ஜட்டி போட்டிருந்தது! ”

குழந்தையின் கோபம் குறைந்தது. அந்த ஆண் தனது ஜோக்குகளைத் தொடர்ந்தான்.
அதன் விளைவாக குழந்தை சிரித்த சிரிப்பு சத்தத்தில் அருகில் இருந்தவர்கள் திரும்பிப் பார்த்தனர்.

சிக்னலில் பச்சை விளக்கு விழுந்தது. இறந்துவிட்ட போக்கு வரத்து உயிர்பெற்றது. கார்த்திக் தனது வாகனத்தை மௌள மௌள நகர்த்தினான்.

தருண் இரவு தூங்கும் முன்னே அவன் கார்த்திக்கிடம் சொல்லிவிட்டான், “டேய் இன்றைக்கு நான் என்னோட குரூப் லீடர்கிட்ட நல்லா மூடை மூடையாக வாங்கிக்கட்டிக்கொண்டு வந்திருக்கேன். நான் எப்போதும் ஸைட் அடிக்கும் பொண்ணு முன்னே திட்டிட்டான் அந்தப் பாவி. அதான்டா ஆர்த்தி சிம்ஹான்னு ஒரு பொண்ணு பற்றி சொல்லியிருக்கேன்தானே? ”

“ஆமா ஆர்த்தி பற்றி என்கிட்ட சொன்ன. ”

“ரொம்ப கடுப்பாகிடுச்சுடா. நீயும் என்னிடம் ஸ்ருதியை என்கூட பேச வைக்க ஒரு வழி சொல்லு.. என்று கேட்டு நச்சரிச்ச.. மவனே நான் உன் கண்ணைக் கடிச்சிடுவேன். ”
கார்த்திக் அவன் பேசியதை காதில் வாங்கவேயில்லை.

 

ஆனால் விளக்குகளை அணைத்தபிறகும் சிரித்துக் கொண்டே தனது கைப்பேசியில் வேலை செய்து கொண்டிருந்தான். அவன் கைகளில் HOW TO LAUGH, JUST FOR FUN, ADULT JOKES என்ற தலைப்புகளில் பல ஆங்கில புத்தகங்கள் இருந்தது.
தருணிற்கு கார்த்திக்கை திட்டுவதா? என்றும் தெரியவில்லை இல்லை ஆறுதலாக ஏதேனும் பேசவேண்டுமா என்றும் தெரியவில்லை. அன்றைக்கு என்ன நடந்திச்சுன்னு சொல்லவும் மாட்டேன் என்கின்றான் சொன்னால்தானே நானும் ஏதாவது உதவி செய்ய முடியும்? ஃபூல். எனக்கு இப்படி ஒரு கேர்ள் ஃப்ரண்ட் இருந்தால்.. நான் போடின்னு போய்கிட்டே இருப்பேன். என்று தூங்கும் முன் ஒரு மூச்சு புலம்பியவன் தூங்கிப் போனான் இரண்டே நிமிடங்களில்.

அவனது கனவில் ஆர்த்தி அம்சமாக புடவையில் வந்து நின்றாள்.

கார்த்திக் பகலில் எழுந்திட வெகுநேரம் ஆனது. தருண் கார்த்திக் தலைமாட்டிலே வைத்திருந்த ADULT JOKES புத்தகத்தை எடுத்து தனது பைக்குள் வைத்துக்கொண்டான்.
“இந்த புக்கை வாசித்து வாசித்து அவனும் தூங்கவில்லை என்னையும் தூங்கவிடவில்லை. அப்படி இதில் என்ன இருக்குன்னு சிரிச்சிட்டே இருந்தான்?” என்றவன் ஆர்வக்கோளாறில் புத்தகத்தின் முதல் பக்கத்தைப் எடுத்து வாசித்துப்பார்த்தான்..

அதிலிருந்த முதல் உரையாடல்

 

“மேடம் நீங்க டூ பீஸ் டிரஸ் அணிந்து குளிக்கிறீங்க.. இங்கே இந்த பூலில் டூ பீஸ் டிரஸ் போடக்கூடாது. “

“ஓ! அப்படியா? அப்படின்னா நான் இதில் எதை ரிமூவ் பண்ணணும் என்று சொல்றீங்களா? “
….

பாவிப் பயல் எவ்வளவு நல்ல விஷயத்தை தனியே படித்து விடிய விடிய சிரித்திருக்கான். இவனுக்கு எதுக்கு இந்த புக்? நாம வச்சிக்குவோம் என்று தனது பைக்குள் அதனை மீண்டும் திணித்துக்கொண்டான்.

 

தூங்கிக்கொண்டிருந்த கார்த்திக் , “டேய் அந்த புக் நல்லாவே இல்லை. முதல் பக்கத்தை வாசித்தியா? வாந்தி வருது! அந்த புக்கை நீயே வச்சிக்கோ! உன் டேஸ்ட் சகிக்கலை! ” என்றான் கண்களைத் திறக்காமல்.
குடிக்கிறது கஞ்சி அதிலே நக்கலைப் பார். உப்பில்லை காரமில்லை என்று என் டேஸ்ட் பற்றி குறையடிக்கிறான். ஸ்ருதி உன்னை இன்னும் இரண்டு வருஷத்திற்கு காதல் கோட்டைக் காதலில் வறுத்து எடுக்கட்டும் என்று முணு முணுத்துவிட்டு நகர்ந்தான்.




Comments are closed here.

You cannot copy content of this page