நிழல்நிலவு- 33
10811
37
அத்தியாயம் – 33
திட்டப்படி அன்று இரவு சுக்லா, தன் பாதுகாப்பு குழுவோடு டெல்லியில்தான் தங்க வேண்டும். ஆனால் கழுவிய கை காயும் நேரத்திற்குள் அவருடைய பயணத்திட்டங்கள் அனைத்தும் திடீரென்று மாறிவிட்டது. காரணம் புரியாமல் திகைத்தவருக்கு விளக்கம் கேட்கும் அவகாசம் கூட கொடுக்கப்படவில்லை. அவருடைய மீட்டிங் நேரமாற்றம் செய்யப்பட்டு துரிதமாக முடிக்கப்பட்டது. அவர் மீட்டிங்கில் இருக்கும் நேரத்தில் புக் செய்யப்பட்டுவிட்ட விமான டிக்கெட்டுகள், மீட்டிங் முடிந்ததும் அவரை உடனடியாக விமான நிலையத்திற்கு இழுத்துக் கொண்டு வந்தன.
“என்னப்பா… என்ன அவசரம்?” என்று பதறியவரிடம், “செக்கியூரிட்டி ரீசன்ஸ்” என்றதோடு வார்த்தையை கத்தரித்துக் கொண்டான் அர்ஜுன்.
இரண்டு மணிநேர வான்வழிப் பயணம்… ஒரிசா மண்ணில் இறங்கியதும், சுக்லாவை பாதுகாவலர்கள் பொறுப்பில் அவருடைய மாளிகைக்கு அனுப்பிவைத்துவிட்டு, ஆழியிலிருந்து சுழன்றுக் கிளம்பி ஊருக்குள் வந்து மோதும் சூறாவளியை போல் அத்தனை வேகமாக மிராஜபாடாவில் வந்து மோதினான் அர்ஜுன் ஹோத்ரா.
காலடி ஓசையில் கவனம் ஈர்க்கப்பட்டு வாயில் பக்கம் திரும்பிய மிருதுளாவின் கண்கள் வியப்பில் விரிந்தன… டேவிட்டின் புருவம் சிந்தனையில் சுருங்கியது.
இன்னும் இரண்டு நாட்கள் கழித்து வர வேண்டியவன் இன்றே வந்துவிட்டதன் காரணம் என்னவாக இருக்கும் என்கிற சிந்தனையோடு, “ஹேய்… அர்ஜுன்!” என்றான் டேவிட்.
அவனை சட்டைசெய்யாமல் மிருதுளாவின் முகத்தை பார்த்தபடியே உள்ளே வந்தான் அர்ஜுன்.
கடைசி நாள் அவள் உருகி கறைந்ததெல்லாம் மின்னல் போல் மனதில் தோன்றி மறைந்தது. போனில் கேட்டதெல்லாம் உண்மை அல்ல… நாம்தான் தவறாக நினைத்து குழப்பிக்கொள்கிறோம் என்று வரும் வழியெல்லாம் உருப்போட்டுக் கொண்டே வந்தான். நமக்காக காத்திருப்பாள் என்கிற எதிர்பார்ப்பை இழுத்துப் பிடித்து வைத்திருந்தான். அனைத்தையும் சற்றுமுன் அவன் கண்ட காட்சி தரைமட்டமாக்கிவிட்டது.
‘அவள் ஊட்டுவதென்ன…! அவன் வாயை பிளந்துகொண்டு வாங்குவதென்ன! ஹா…!’ – உள்ளே அரக்கன் ஒருவன் ருத்ர அவதாரமெடுத்து ஆடினான். இரத்தம் சீறிப்பாயும் வேகத்தில் நரம்புகளெல்லாம் புடைத்து முகம் சிவந்துவிட்டது. கண்களில் கனல் தெறித்தது. மிருதுளா துணுக்குற்றாள். அவனுடைய கோபத்திற்கான காரணத்தை துல்லியமாக உணர்ந்தவளுக்கு அவன் கண்களை சந்திக்க முடியவில்லை. உள்ளே ஒரே படபடப்பு… மனசாட்சி குத்தியது… அவசியமே இல்லாத பதட்டம்தான்… டேவிட்டோடு அவள் தவறு செய்யவும் இல்லை… அர்ஜுனோடு கமிட் ஆகவும் இல்லை… அப்படியிருந்தும் அந்த பதட்டத்தை அவளால் தவிர்க்க முடியவில்லை.
பொங்கப்போகும் பெருங்கடல் உள்வாங்குவது போல உணர்வுகள் அனைத்தையும் உள்ளே அடக்கிக் கொண்டு அமைதியாக வந்து டைனிங் டேபிளில் அவளை உரசிக் கொண்டு அமர்ந்தான் அர்ஜுன்.
அத்தனை நாட்களும் அவனுக்காகவே காத்துக் கொண்டிருந்தவளுக்கு, அந்த நேரத்தில் அவனை வரவேற்பது என்ன… நிமிர்ந்துப் பார்த்தது ஒரு ‘ஹாய்’ சொல்லக் கூட முடியவில்லை. திகைத்துப்போய், மெழுகு பொம்மை போல் அசைவற்று அமர்ந்திருந்தாள்.
“மிஸ்ட் மீ… டார்லிங்?” – ‘டார்லிங்’ – ல் அழுத்தம் கொடுத்து தோளோடு தோள் இடித்து, நக்கலாக சிரித்தான்.
அவனுடைய ஏளன குரலும் மலிந்த பார்வையும் மிருதுளாவை காயப்படுத்தியது. கையிலிருந்த ஃபோர்க்கை அழுத்திப் பிடித்துக்கொண்டு, மேலும் கேழும் தலையசைத்து “எஸ்….” என்று காற்றுக்குரலில் கூறினாள்.
“ஆ…ங்….????” – அவளுடைய பதில் காதில் விழவில்லையாம். காதை அவள் வாயருகே கொண்டுச் சென்று கத்தினான்.
“ஐ… மிஸ்ட் யு…” – புன்னகைக்க முயன்றாள் மிருதுளா.
அவன் அவளிடம் காட்டும் நெருக்கமும்… உரிமையும்… அதற்கு அவளின் இசைவும், நெஞ்சுக்குள் கத்தியை இறக்குவது போல் இருந்தது டேவிட்டிற்கு. அவர்களிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டு, “என்ன ஆச்சு அர்ஜுன்? திடீர்ன்னு வந்துட்ட?” என்றான் உணர்வற்ற குரலில்.
“ஏன்? ஏதாவது இடைஞ்சலா வந்துட்டேனா? அப்படியா மிருதுளா…?” – கோணல் புன்னகையுடன் புருவம் உயர்த்தினான். சுருக்கென்றது அவளுக்கு. அழுந்த மூடிய உதடுகளுக்குள் வலியை மறைத்துக் கொண்டாள்.
அவளுடைய முகவாட்டத்தில் சங்கடப்பட்டு, “இல்லல்ல… முக்கியமான வேலையா போயிருந்தியே… ஒருவாரம் ஸ்கெடியூல்… சீக்கிரம் வந்துட்டியேன்னு கேட்டேன்” என்றான் டேவிட்.
வெடுக்கென்று நிமிர்ந்தாள் மிருதுளா. ‘அர்ஜுனின் பயணத்தை பற்றி எதுவுமே தெரியாது என்றானே! சிரித்துக் கொண்டே இருந்தாலும் காரியத்தில் கண்ணாக இருந்திருக்கிறான்!’ – மீண்டும் ஒரு முள் தைத்தது அவள் இதயத்தில்.
‘ஹெல்…’ – தன் குட்டு உடைபட்டு போய்விட்டதை உணர்ந்து கண்களை மூடி பெருமூச்சை வெளியேற்றிய டேவிட், மிருதுளாவை பாவமாக பார்த்தான். கண்கள் மன்னிப்பை இறைஞ்சின.
அரைநொடி பார்வை பரிமாற்றம் என்றாலும் அர்ஜுன் ஹோத்ராவின் கண்களிலிருந்து தப்பிவிடுமா என்ன? – நாசி விடைத்தது… தாடை இறுகியது… ரத்தத்தில் அழுத்தம் கூடியது… – ‘இல்லை… அல்ப உணர்வுகளுக்கு ஆட்பட்டு காரியத்தை கோட்டைவிட்டுவிடக் கூடாது…’ – அறிவு எச்சரித்தது. நாற்காலியில் நன்றாக சாய்ந்து, கால்களை நீட்டி, தலையை பின்னுக்கு சாய்த்து, கண்களை மூடி அமர்ந்து சுவாசத்தை சீராக்க முயன்றான். ம்ஹும்… பிரயோஜனமில்லை… மனநிலை மட்டுப்பட மறுத்தது.
“அப்பறம்…? எனக்கு ஏதாவது செய்தி இருக்கா டேவிட்?” – கண்களை மூடிய நிலையிலேயே கரகரத்தான்.
“என்ன… என்ன செய்தி?” – டேவிட்டிற்கு அவனுடைய கேள்வி புரியவில்லை.
“ஏதாவது நல்லது… இல்ல… கெட்டதாவது? ம்ம்ம்?” என்றபடி சட்டென்று நிமிர்ந்து அமர்ந்து அவனை நிலைத்துப் பார்த்தான். அவனுடைய பார்வையிலும் குரலிலும் தெரிந்த வித்தியாசம், அவன் வம்பை கொக்கிப்போட்டு இழுக்க முயல்கிறான் என்பதை எடுத்துக் கூறியது.
டேவிட் தணிந்தான். “இல்ல… அப்படில்லாம் எதுவும் இல்ல” – அமைதியாக பதிலளித்தான்.
“குட்… வெரி குட்…” – எள்ளல் தெறித்தது.
அதை புறந்தள்ளி, “பாபிம்மா, அர்ஜுனுக்கு ஒரு பிளேட் கொண்டுவாங்க” என்று உள்நோக்கி குரல் கொடுத்தான் டேவிட்.
“ம்ம்ம்!!! ஸ்பெஷல் டின்னர்!!! ஏதாவது விசேஷமா… இல்ல… கொண்டாட்டமா?” – கேள்வியை டேவிட்டிடம் கேட்டுவிட்டு பார்வையை அவள் புறம் திருப்பி, ஏளனமாக சிரித்தான். அதற்குள் பாபிம்மா தட்டோடு வந்துவிட்டார்.
“வாங்க தம்பி… நல்லா இருக்கீங்களா?”
“அடடே!!! பாபிம்மா, நீங்க வீட்லதான் இருக்கீங்களா! உங்களுக்கு லீவ் கொடுத்து அனுப்பிட்டானோன்னு நெனச்சேன்…” – பாபிம்மாவுடன் பேசும் போதும் கூட அவர்கள் இருவரையும் குத்த தவறவில்லை அவன்.
“இல்லைங்க தம்பி இங்கதான் இருக்கேன்”
“உள்ளேயே என்ன பண்றீங்க? வேலை ஜாஸ்த்தியோ! சமையலெல்லாம் கலக்குறீங்க போலருக்கு!”
“டேவிட் தம்பிதான் வந்ததுலேருந்து சமைக்குது… நா கூடமாட நிக்கிறதோட சரிங்க…”
“ஓ!! அப்படியா!!! ரியலி!” – மூவரையும் மாற்றிமாற்றி பார்த்துவிட்டு, “ராக் பண்ற மேன்… இன்னும் என்னென்னலாம் பண்ணினான் மிருதுளா?” – இருபொருள்பட பேசினான். அவளுக்கு உயிரே போவது போலிருந்தது.
அர்ஜுனின் விளிம்புநிலை மனநிலை டேவிட்டிற்கு நன்றாகவே புரிந்துப்போய்விட, “சாப்பிடு அர்ஜுன்” என்று பொறுமையாக கூறியபடி அவனுக்கு பரிமாற எத்தனித்தான்.
“ஐம் ஃபுல் மேன்… யு என்ஜாய்… நீயும்தான் மிருதுளா… என்ஜாய் யுவர் டின்னர்” – அவள் தட்டில் கூடுதலாக உணவை அள்ளிவைத்தான்… வைத்தான்… வைத்துக் கொண்டே இருந்தான். அத்தனை வெறுப்பிருந்தது அவன் செயலில்.
“போதும் அர்ஜுன்…” – நலிந்து ஒலித்தது அவள் குரல்.
“நோ நோ… சாப்பிடும்மா… உனக்காகத்தானே இதெல்லாம்… நீ சாப்பிடு” – மேலும் மேலும் அவள் தட்டை நிரப்பினான். மது அருந்தியவன் போல் நிதானத்தை இழந்துக் கொண்டிருந்தான். ஏதோ நடக்கப்போகிறது என்று உணர்ந்த மிருதுளாவின் உடலில் நடுக்கம் பிறந்தது.
டேவிட் மிகவும் சங்கடப்பட்டான். மிருதுளாவின் முகவாட்டத்தை சகிக்க முடியவில்லை அவனால். வேறு வழியே இல்லாமல், “அர்ஜுன்…” என்று அழுத்தமாக அழைத்து அவன் கவனத்தை தன் பக்கம் திருப்பினான்.
“எஸ்…” – பரிமாறுவதை நிறுத்திவிட்டு திரும்பினான். மிருதுளாவிற்கு ஆதரவாக பேசப் போகிறான் என்கிற எண்ணத்தில் கொடூரமாக மாறியது அவன் முகம். வாயைத்திற… உன் முகரையை பெயர்த்துவிடுகிறேன் என்றது பார்வை.
“எல்லாத்தையும் அங்கேயே வச்சசுட்டா எப்படி? எனக்கும் வேணும்ல…” – மிருதுளாவிற்கு சாதகமாக வாய்திறந்தால்தானே என் முகரையை பெயர்ப்பாய் என்கிற எச்சரிக்கை இருந்தது அவனிடம்.
அர்ஜுனின் முகத்திலிருந்த கடுமை நக்கலாக மாறியது. “கம்மான் மேன்… இவ்வளவு எஃபோர்ட்டும் மிருதுளாவுக்காகத்தானே… லெட் ஹர் என்ஜாய்…” – அவள் தட்டு நிறைந்து, நூடுல்ஸ் டேபிளில் நழுவிவிடும் போலிருந்தது..
“அர்ஜுன் ப்ளீஸ்…” – டேவிட்.
“என்னடா?”
“என்ன பண்ற நீ?”
“தெரியல? சர்விங்…”
“அவளுக்கு போதுமாம்… விடு…”
நங்கென்று பாத்திரத்தை டேபிளில் போட்டுவிட்டு, “உன்கிட்ட சொன்னாளா?” என்று அமர்ந்திருந்த சேரை பின்னால் உதைத்துத்தள்ளிவிட்டு எழுந்தான். பயந்து போனமிருதுளா, “அர்ஜுன்-அர்ஜுன்… அர்ஜுன்…” என்று தவிப்புடன் இருவருக்கும் இடையில் புகுந்து அவன் கைகளை பிடித்துக் கொண்டாள்.
என்ன நடக்கிறது என்றே புரியாமல் திகைப்புடன் ஒதுங்கி நின்றார் பாபிம்மா…
டேவிட் எதற்கும் அசைந்துக் கொடுக்கவில்லை. அவனும் களம்கண்டவன் தானே… அழுத்தமாக அமர்ந்திருந்த நிலையிலேயே, “என்கிட்ட சொல்லல அர்ஜுன்… உங்கிட்ட சொன்னா… உனக்குத்தான் காதுல விழல” என்றான்.
கொதிப்புடன், “அதுக்கு…? நீ இடையில புகுந்துடுவியாடா…?” என்று சீறி கொண்டு அர்ஜுன் அவனிடம் பாய, அடிதடியாகப்போகிறது என்று நடுங்கிப் போன மிருதுளா, “ஐயோ… அர்ஜுன்… ப்ளீஸ்…” என்றபடி என்று அவனை கட்டிப்பிடித்து டேவிட்டிடம் நெருங்கவிடாமல் தடுத்தாள். அட்டை போல் ஒட்டிக் கொண்டவளை தன்னிடமிருந்து பிய்த்து தள்ள முயன்றபடி, “பேசு… ஸ்பீட் அவுட் யு டாஷிங் டாஷ்…” என்று கட்டிடமே அதிரும் வகையில் கெட்ட வார்த்தைகளை உதிரவிட்டபடி அவன் சட்டையை பிடித்தான்.
“வி ஆர் ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ் அர்ஜுன்… ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ்… அவ்வளவுதான்… ப்ளீஸ்… விட்டுடு… ப்ளீஸ்… ப்ளீஸ்… விட்டுடு… ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ்…” – அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு மீண்டும் மீண்டும் கத்தினாள். உடல் வெடவெடத்தது… கண்ணீர் அவன் சட்டையை ஈரமாக்கியது… அவன் உடல் இறுக்கம் மெல்ல தளர்ந்தது.
அடிபட்ட வேதனையுடன் முகம் சுருங்க தன் சட்டையை வெடுக்கென்று பிடுங்கி கொண்ட டேவிட் நெஞ்சை நீவினான். அவன் நிச்சயமாக சட்டையின் சுருக்கத்தை நீவவில்லை…
தொலைந்து மீண்ட குழந்தை போல் உடல் நடுங்க அர்ஜுனின் மார்பில் முகம் புதைத்து, கண்களை இறுக்கமாக மூடியபடி, ‘ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ்… ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ்…’ என்று மீண்டும் மீண்டும் முணுமுணுத்து கொண்டிருப்பவளை ஓரிரு நொடிகள் நிலைத்துப் பார்த்த டேவிட், டைனிங் டேபிளில் இருந்த தட்டை கோபத்துடன் விசிறியடித்துவிட்டு வெளியேச் சென்றான். இறுகிய முகத்தோடு அவளை தன்னிடமிருந்து விளக்கித் தள்ளிவிட்டு உள்ளே சென்றான் அர்ஜுன். தலையை பிடித்துக் கொண்டு தளர்ந்து போய் அங்கேயே அமர்ந்தாள் மிருதுளா.
37 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kurinji says:
Inru epi undaa nitya
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
post pannittene…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rusha Seevaamirtham says:
Hey Nithu sweety…
You are blessed with extreme skills of writing…
Just superb.. excellent…what a writing..what a way!!! Wow!!!
Amazing dear…
Every episode is making me to sit in the edge of the chair…
Only you can do this to me.. interesting and im impressed as usual..
My beloved writer friend God bless you dear..
Waiting for your next rocking episode .
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
Thank you So much Rusha… Happy to see you here… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rusha Seevaamirtham says:
Where ever your story is,il be there dear
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Leela R says:
Arjun vantha tension kuraiyum nu ninaicha ippadi tension ah yethi vitutane Arjun… Waiting for next ud nithi sis…..😃😃
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
Thank you Leela… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kurinji says:
Inru epi irukka nitya
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
late aagum pa… night ezhudhinadhu morning satisfied ah illa… so again correction pannikittu irukken… mudinjadhum poduven…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sug says:
Ppodunga podunga fasta podunga…appa oru oru epi padikum podu Bp raise agudu…thrilling nithya
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
Pottachchu… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
NAYA NAYA says:
pls kanal vili kathal page open pannugal pathil nirkuthu story supera poituirunthathu pls open
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
ippo try pannunga pa… Very sorry for the inconvenience…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Anjali Suresh says:
Oru sec bakkunu aidchu😰😰😰.
Page not found nu pathathumm……
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
Sorry… url change panni paarththen… adhula vandha confusion. ini appadi aagaama paarththukkaren.. 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ramanujam Iyer says:
Appa enna avesam.. miru meruntu poita enda ippidi arjun. Nice epi sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
Thank you Ramanujam Iyer..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rozmin Shafina says:
Very interesting . Waiting for next epi.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
Thank you Rozmin
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Selvalakshmi Suyambulingam says:
Short update. But Sema. Waiting for the next update.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
Thank you Selvalakshmi… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Priya Ganeshan says:
Nice ud sis👌👌👌👌
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
Thank you Priya
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sug says:
Super thrilling….ud mattum regular a kudunga nithya…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
Thank you Sug… Kadippa regular update ku try pannaren pa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
UmaManoj says:
Yarum sapidalaiyaa…Aiyo noodles pochey😝😋
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Afrin says:
Ungaluku unga kavala 😂😂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kurinji says:
Puyal vegathil vanthu puyal kaatru pol sulandradicittan Arjun..Miri avanodau sernthaal nee robovaa than irukanum.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
Thank you Kurinji… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Samri Thi says:
Oh god😥 sis enga enna nadakuthu… Aju ethallam enna arthatula panran? Avala love panrana? Pannalaiya? Adikadi etho visayathukaka avala use panra mathiri panran sila Neram ava tha avanuku ellamnra madhiri panran ..: nadikaranu yochicha love piliuran love panranu yochicha avala ethuko use panra Pola nadakuran… Mm ata motham avanum happy ah ila happy erukavangalaium happy ah eruka Vida matran.. so sad… NXT enna?but I like devid very much… Lovely character…remba careing miru mela.. plz nalla frdz ah epavum erukanum piriyama… life partner ana ennum happy… aju Sariyana saiko….Eagerly waiting for your next ud….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
Wow… Nice comment… Thank you pa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
சின்ன அத்தியாயம் தான்… சைட்ல வேலை இருந்ததால் கதை எழுதுவதில் கவனம் போகல… நாளைக்கு இதே நேரம் அடுத்த அத்தியாயம் பதிவிடுகிறேன்… நன்றி ஃபிரண்ட்ஸ்…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Latha says:
Ok mam tnk u
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Afrin Zahir says:
Sis %% iniku update panlaya 😩
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
innum mudikkala da… corrections irukku… 🙁