நிழல்நிலவு- 34
11537
38
அத்தியாயம் – 34
மேடும் பள்ளமும் நிறைந்த கரடுமுரடான பூமி, அடர்ந்து உயர்ந்து வளர்ந்திருக்கும் லட்சக் கணக்கான மரங்கள், குளிர்ந்த காற்று, சலசலக்கும் ஓடை, இயற்கையின் வாசம், கூவும் குயில், ஆடும் மயில், துள்ளி குதிக்கும் முயல், தாவி ஓடும் மான்… கூடவே கொடூர மிருகங்கள்… அனைத்தையும் உள்ளடக்கிய கம்பீரமான காடுதான் அவன். அர்ஜுன்… ஹோத்ரா… அவன் அர்ஜூனாக மட்டும் இருந்தால் அமைதியான ஓடை… கூட ஹோத்ரா சேர்ந்துவிட்டால் ஆர்ப்பரிக்கும் ஆழி… கட்டுப்படா காட்டுத்தீ… ஆழம் பார்க்க எண்ணி காலை வைத்தாலோ, அழகாய் ஜொலிக்கிறதே என்று எண்ணி தலையை கொடுத்தாலோ காணாமல் போக வேண்டியதுதான். – பெருமூச்சுடன் புரண்டுப் படுத்தாள் மிருதுளா.
கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் பொய் என்று சொல்லுவார்கள். இன்று அவன் கண்ட காட்சி சற்று எசகுபிசகானது தான் என்றாலும், அவளை தனியே அழைத்து விளக்கம் கேட்டிருக்கலாம் அல்லவா? அதற்கெல்லாம் அவனிடம் பொறுமை இல்லை. ‘ஆ-ஊ’ என்றால் துப்பாக்கியை வேறு எடுத்துவிடுகிறான்.
அன்று அவள் கண் எதிரிலேயே ஒருவனை குருவியை சுடுவது போல் சுட்டுப் பொசுக்கினானே! என்னதான் அவன், அவளை கொலை செய்ய முயன்றவனாக இருந்தாலும், அவனும் மனிதன் தானே! ஒரு மனித உயிரை பறிப்பதென்பது அவ்வளவு எளிதா! சிறு தயக்கம் கூட இல்லாமல் மரத்தை வெட்டி சாய்ப்பது போல் ஒரு நொடியில் அவனை மண்ணில் சாய்த்துவிட்டானே! – அன்று நடந்த சம்பவத்தின் பயங்கரத்தை இன்றுதான் முழுமையாக உணர்ந்தாள்.
‘எப்படி அந்த கொடூரத்தை புறந்தள்ளி… அவனை மனதில் வரித்தோம்! கொலை என்பது அவ்வளவு சாதாரணமாகிவிட்டதா நமக்கு!’ – சுயஅலசலில் கிடைத்த பதில் அவளுக்கு உவக்கவில்லை.
அன்று இருந்த ஹைப்பர் மனநிலையில், ‘அவன் நமக்காக எதை வேண்டுமானாலும் செய்வான்… கொலை கூட…’ என்று பெருமையாக எண்ணினாள். அவனுடைய செயலில் பாதுகாப்பை உணர்ந்தாள். ஆனால் இன்று அந்த உணர்வு அப்படியே தலைகீழாகிவிட்டது.
அன்று நடந்தது போலவே இன்றும் துப்பாக்கியை எடுத்துவிடுவானோ… டேவிட்டை ஏதேனும் செய்துவிடுவானோ என்று துடித்த துடிப்பு இன்னும் அடங்கவில்லை அவளுக்கு. – உடல் சிலிர்த்துத் தூக்கிப் போட பொசுக்கென்று எழுந்து அமர்ந்தாள். மன உளைச்சல் உறக்கத்தை ஓடஓட விரட்டிவிட்டது.
அந்த கொலை அவளுக்காகத்தான் நடந்தது என்றாலும் அது அவன் உணர்வின் உச்சத்தில் நடந்துவிட்ட ஒரு அசம்பாவிதம் அல்ல… அவனுடைய வழக்கமே அதுதான்… அவனுடைய தொழிலே அதுதான் என்பதை, அறிவைத் தாண்டி இன்று அவள் மனமும் உணர்ந்தது.
‘அர்ஜுனின் உலகம் வேறு… நம்முடைய உலகம் வேறு… இரண்டும் ஒன்று சேர முடியாது. நாம் தவறான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறோம்…’ – உண்மை உள்ளத்தை நெருஞ்சிமுள்ளாக குத்தியது.
‘இது சரிவராது… நிச்சயம் சரிவரவே வராது…’ – மொத்தமாய் குழம்பிப்போனவள் விருட்டென்று கட்டிலிலிருந்து எழுந்து மின்விளக்கின் விசையை அழுத்தினாள். அறையில் படர்ந்த வெளிச்சம் அவள் மனதில் படரவில்லை.
ஏதேதோ சிந்தனையுடன் அறையை குறுக்கும் நெடுக்குமாக அளந்தவளுக்கு நாவறண்டது. தண்ணீர் பாட்டில் காலியாக இருந்தது. நடந்த களோபரத்தில் அருந்த தண்ணீர் கூட எடுத்து வரவில்லை என்பது அப்போதுதான் நினைவிற்கு வந்தது. நிமிர்ந்து சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் நள்ளிரவை தாண்டிவிட்டது. அர்ஜுனோ டேவிட்டோ விழித்திருக்க வாய்ப்பில்லை என்கிற தைரியத்துடன் அறையிலிருந்து வெளியேறினாள். விடிவிளக்கின் வெளிச்சம் தெளிவாக வழிகாட்ட கூடத்தை தாண்டி சமையலறைக்குள் நுழைந்தாள்.
கையிலிருந்த பாட்டிலை உயர்த்திப்பிடித்து பில்டரை திறந்துவிட்டாள். தண்ணீர் விழும் சத்தம் சூழ்ந்திருந்த நிசப்தத்தை கிழித்து அறையை நிறைத்தது. அவள் அந்த கவனத்தில் இருக்கும் வேளையில் திடீரென்று யாரோ அவள் பின்னாலிருந்து இடுப்பை வளைத்துப் பிடித்து, கழுத்துவலைவில் முகம் புதைத்தார்கள்.
அதிர்ந்து போன மிருதுளா, “ஹே… யாரு…” என்றபடி துள்ளிக்குதிக்க அவள் கையிலிருந்த பாட்டில் தரையில் விழுந்து தண்ணீர் தெறித்தது சிதறியது.
“ஷ்ஷ்ஷ்… காம் டௌன் ஹனி… நான்தான்…” – மிகச் சாதாரணமாக காதோரம் கிசுகிசுத்தது அந்த குரல். அர்ஜுன் ஹோத்ராவின் குரல்.
அதுவரை துள்ளித் திமிறிய மிருதுளா மெல்ல அடங்கினாள். சற்று நேரத்திற்கு முன் உறங்க முடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தது… மூளையை கசக்கியது… சிந்தித்து குழம்பியது… சுய அலசல் செய்தது… எதுவுமே அவள் நினைவிற்கு வரவில்லை.
“அ..ர்..ஜுன்…!!!” – நடுக்கத்துடன் காற்றாய் வெளியேறியது அவள் குரல்.
அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மாறாக அணைப்பில் இறுக்கமும், மூச்சுக்காற்றில் வேகமும் கூடியது. மிருதுளாவின் பெண்மை விழித்துக் கொண்டது.
“அ…அர்ஜுன்… ப்ளீஸ்… என்ன… என்ன இது…” – திக்கித் திணறியபடி திமிறினாள். முன்பக்கம் கிட்சன் கவுண்டர், பின்பக்கம் அர்ஜுன்… விலக வழியில்லாமல் சிறைபட்டுப் போனவளுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.
“விடுங்க… ப்ளீஸ் அர்ஜுன்… லீவ்… மீ…” – சிக்கிக் கொண்ட வார்த்தைகளை தொண்டைக் குழியிலிருந்து பிடுங்கி வெளியே எறிந்தாள். குரல் நடுங்கியது… உடல் வெடவெடத்தது.
“ஸ்டே காம் ஹனி… ப்ளீஸ்…” – கரகரத்த அவன் குரலில் என்ன இருந்தது! கெஞ்சலா! – மூளை செய்த ஆராய்ச்சியில் மீண்டும் அவள் எதிர்ப்பு சற்று குறைந்து போக, கழுத்து வலைவிலும் காது மடலிலும் சூடான மூச்சுக்காற்றையும் சின்ன ஈரத்தையும் உணர்ந்து வெலவெலத்துப்போனாள்.
உடலின் சக்தியெல்லாம் வடிந்துவிட்டது… கால்கள் வலுவிழந்து துவண்டன… நெஞ்சே வெடித்துவிடும் போல் இதயம் அடித்துக் கொண்டது.
“அ…ர்…ஜு…ன்…” – அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை. அவனுடைய இதழ்கள் எல்லை மீறின. தடுக்க முடியாமல் தளர்ந்தாள் மிருதுளா.
“ஐம் சாரி.. ஐம் சாரி… வெரி சாரி…” – இதழொற்றல்களுக்கு இடையே முணுமுணுத்தான். தொண்டை அடைத்துக் கொண்டது போல்… கறகறப்பது போல்… அழுகிறானா! – நம்ப முடியாத ஆச்சரியத்துடன், அவன் கைவளைவில் இருந்தபடியே ஒருவாறு அசைந்து முன்பக்கம் உடலை திருப்பி அவன் முகத்தை பார்க்க முயன்றாள். காட்ட மறுத்து மீண்டும் அவள் கழுத்துக்குள் புதைந்துக் கொண்டான்.
அப்போதுதான் அவள் இன்னொன்றையும் உணர்ந்தாள். அவன் வெறும் சபலத்தில் அவளை கட்டிக்கொண்டிருப்பது போல் தோன்றவில்லை. எதற்காகவோ உணர்ச்சிவசப்பட்டவன் போல் தெரிந்தான். ஆத்திரம் அடைப்பது போல் தொண்டை கூட கரகரத்ததே! என்னவாக இருக்கும்? நம் சம்மந்தமாகதான் எதையாவது கற்பனை செய்து கொண்டு மனதை குழப்பிக் கொள்கிறானா! – அதுவரை அவனிடமிருந்து விலகும் நோக்கத்தோடு திமிறி கொண்டிருந்தவள், மெல்ல கைகளை அவன் முதுகில் படரவிட்டு அவனை அரவணைத்துக் கொண்டாள்.
“அர்ஜுன்…” – மெல்லிய குரலில் அழைத்தாள்
“ப்ளீஸ் ஹனி… எதுவும் பேசாத… ஜஸ்ட் ஸ்டே காம்” வார்த்தைகள் தடுமாற சற்று குளறலாக கூறியபடி அவளோடு மேலும் ஒண்டிக்கொண்டான்.
ஏதோ தாயின் அணைவில் பிணங்கிக்கொள்ளும் குழந்தை போல் இருந்தது அவனுடைய செய்கை. மெல்லிய புன்னகையுடன் அவன் முதுகை மெல்ல வருடி, பின்தலையை கோதினாள் மிருதுளா. அவனுடைய இறுக்கம் மெல்ல தளர்ந்தது…
“அர்ஜுன்…” – மீண்டும் அழைத்தாள்.
“ம்ம்ம்” – முனகலாக ‘ம்ம்ம்’ கொட்டினான்.
“ஆர் யு ஓகே?”
“நோ”
“என்ன ஆச்சு?”
“ஐம் கன்ஃபியூஸ்ட்… டிஸ்டர்ப்ட்…” – நான் குழம்பிப் போயிருக்கிறேன்… என்னுடைய அமைதி குலைந்து போயிருக்கிறது என்றான் துக்கத்துடன்.
மிருதுளாவிற்குள் சின்னதாய் ஓர் அதிர்வு தோன்றியது. அவனால் தான் பட்ட மனவேதனை… அவன் நடந்துகொண்ட விதம் அனைத்தும் மறந்து போனவளாக, “என்னால தானே?” என்றாள் வருத்தத்துடன்.
அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் இதயத்தின் துடிப்பு அதிகரித்துவிட்டது… அதை அவளால் உணர முடிந்தது.
அவன் துன்பத்தை தனதாக உணர்ந்தவள், “பார்க்கறதெல்லாம் உண்மை ஆயிடுமா அர்ஜுன்? ஐ கேன் எக்ஸ்பிளைன்” என்றாள் அமைதியாக.
“நோ… நீ எதுவும் சொல்ல வேண்டாம்” என்றபடி மெல்ல அவளிடமிருந்து விலகினான். பார்வை அவள் முகத்தில் நிலைத்திருந்தது. அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
முகம் ஜிவு-ஜிவுவென்று சிவந்திருந்தது… கண்கள் மிதந்தன… குடித்திருக்கிறானா! ஆமாம் தான் போலிருக்கிறது… ஏதோ வாடை கூட வந்ததே! – அவள் விழிகள் பெரிதாக விரிந்தன.
‘கொலையே செய்கிறவன் குடிக்க மாட்டானா?’ என்கிற எண்ணம் அவளுக்கு தோன்றவே இல்லை. இதுவரை அவன் புகை பிடித்தோ போதையில் இருந்தோ அவள் பார்த்ததே இல்லை… அதனால்தான் அந்த வியப்பு.
அவளுடைய விரிந்த கண்களையும், ‘ஓ’வென்று பிளந்த வாயையும் பார்த்து புன்னகைத்த அர்ஜுன், “நீ ரொம்ப அழகு மிருதுளா…” என்றான்.
அவள் முகத்தை நாணம் மேலும் அழகாக்கியது. அதை ஆசையோடு பார்த்தவனின் முகம் ஏதோ நினைவில் வாடியது. பிறகு, “இது உன்னோட உலகம் இல்ல… போயிடு…” என்றான் நிதானமாக.
“என்ன!” – அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.
விளக்கம் கொடுக்க முடியாமல் உதடுகளை அழுந்த மூடினான். முகத்திலிருந்த உணர்வுகளெல்லாம் வடிந்து… உடல் விறைத்து நிமிர, ஏதோ கல்லில் செய்த சிலை போல் தோற்றமளித்தான். மிருதுளா அவனை புரியாமல் பார்த்துக்கொண்டிருக்க அவன் வாய் திறந்தான்.
“இப்போ… இந்த நிமிஷம் நா உனக்கு ஒரு சான்ஸ் தரேன் மிருதுளா… நீ என்கிட்டேருந்து விலகி போயிடு… தப்பிச்சு போயிடு… இதோ… இங்க… பக்கத்து ரூம்ல தான் டேவிட் தூங்கறான். அவனை எழுப்பி கூட்டிட்டு போ… உன் அம்மாகிட்ட… இல்ல அப்பாகிட்ட… எங்கேயாவது… நா உன்ன ஃபாலோ பண்ணி வரமாட்டேன்… போயிடு… என் மனசு மாறுறதுக்குள்ள போயிடு…” – படபடவென்று வார்த்தைகளை கொட்டியவன் அவளிடமிருந்து பார்வையை விளக்கி முகத்தை திருப்பிக் கொண்டான்.
மிருதுளா அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள். ‘நிஜமாகவே நமக்கும் டேவிட்டிற்கும் ஏதோ சீரியஸான ரிலேஷன்ஷிப் என்று நினைத்துவிட்டானா!’ – ஏனோ அந்த எண்ணமே அவளை வதைத்தது.
சுற்றிவந்து அவனை நேருக்கு நேர் பார்த்தாள். “டேவிட் என்னோட ஃபிரண்ட்… ஜஸ்ட் ஃபிரண்ட்… புரியில உங்களுக்கு?” என்றாள் ஆத்திரத்துடன்.
அவன் சிரித்தான்… உயிர்ப்பற்ற சிரிப்பு… “எனக்கு தெரியும் மிருதுளா… நீ அப்படிப்பட்ட பொண்ணு இல்ல…” என்றான்.
உண்மைதான்… ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களோடு பழகும் மட்டரகமான பெண் மிருதுளா அல்ல என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் டேவிட்டோடு அவளை மகிழ்ச்சியாக பார்க்கும் போது அவனுக்கு கோபம் வந்தது. கட்டுப்படுத்த முடியாத கோபம்… – பெருமூச்சு விட்டான்.
“அப்புறம் ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?” – கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தப்பித்து ஓடாமல் குழந்தை போல் எதிர்கேள்வி கேட்டுக் கொண்டு அவள் நின்ற விதம் வழக்கம் போல் அவனை வசீகரித்தது.
கனிந்த முகத்துடன் அவளிடம் நெருங்கி அவள் முகத்தை கைகளில் ஏந்திநெற்றியில் முத்தமிட்டு கண்களுக்குள் பார்த்து, “யு ஆர் எ பியூட்டிஃபுல் ஸோல். நா உன்ன புண்படுத்த பண்ண விரும்பல… நீ காயப்படறதை பார்க்க விரும்பல… போயிடு…” என்றான்.
அவன் கண்களில் தெரிந்த வலி மிருதுளாவை மொத்தமாய் சாய்த்துவிட்டது. அவள் சிந்தனையை மழுங்கடித்துவிட்டது.
‘உன்ன புண்படுத்த பண்ண விரும்பல… நீ காயப்படறதை பார்க்க விரும்பல’ என்று சொல்கிறானே… அப்படியென்றால் காயப்படுத்தும் நோக்கம் இருக்கிறதா என்கிற கேள்வியே அவளுக்குள் எழவில்லை. அதுமட்டுமல்ல… பெற்ற தாயைக் கூட அவள் நினைக்கவில்லை… ஹிப்னாட்டிஸத்தில் சிக்கிக்கொண்டவள் போல் அவனைத்தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாதவளாக, “நோ… நா எங்கேயும் போகல…” என்றாள் அடத்துடன்.
அர்ஜுனின் பார்வை அவள் முகத்தில் அழுத்தமாக பதிந்தது. “வெறும் வார்த்தைக்காக என்கிட்ட எதையும் சொல்லாத… உன்னோட ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு சத்தியம்” – உறுதியாகக் கூறினான்.
“சத்தியம் தான்… எனக்கு உங்களை விட்டு எங்கேயும் போக வேண்டாம்…”
“நல்லா யோசிச்சுக்கோ மிருதுளா… பிறகு நீயே போகணும்னு நினைச்சாலும் முடியாது… என்னால உன்ன விட முடியாது… விட மாட்டேன்….” – ஒருவித பிடிவாதத்துடன் கூறினான்.
மேலும் கீழும் தலையசைத்து சம்மதம் என்றாள். அவனுக்கு அந்த பதில் போதுமானதாக இல்லை.
“வாய்விட்டு சொல்லு… என் கூட இருப்பியா?”
“எஸ்…”
“கடைசி வரைக்கும்…?”
“எஸ்…”
“என்ன பிரச்சனை வந்தாலும்?”
“எஸ்…”
“இன் வர்ட்ஸ்…”
“என்ன பிரச்சனை வந்தாலும்… கடைசி வரைக்கும்… உங்க கூடவே… இருப்பேன்… ஹாப்பி…?” – பல்வரிசை பளீரிட அழகாக சிரித்தாள்.
38 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Daisy Mary says:
முட்டாள்…. சரியான முட்டாள்… மிது….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ambika V says:
Today ud erukka mam
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
illa pa… nalaikku undu
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Nithya ji…. kaviyo amutho story a discontinue paniteengala….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Reena says:
Akka.. iniku epi podalaya
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
innum one hour agum da… correction pannikittu irukken
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
vats says:
arjun love panra madiri ipavum nadkirada nenachitu irukana? miru matna po… avan anda pakam ponapiragu avan kola panravan nu niyabagathuku varum
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
செல்வா கனேஷ் says:
நித்தியா வதனங்கள்னா முகங்கள்ன்னு தானே அர்த்தம் இறுதி வரி சரியாக உள்ளதா என்று சரி பார்க்கவும். நான் கூறியதில் பிழை இருப்பின் மன்னிக்கவும்.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
Thank you… I’ll correct it…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Ya.. it means face only…… it’s a Sanskrit word but fit to many languages. In telugu also it means face…
But for lips that is atharam.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Is there any app for tamil font typing in our mob
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Geethanjali Rajan says:
Google indic try பண்ணுங்க
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Selvalakshmi Suyambulingam says:
Surprise. Why do Arjun ask the same question again and again to her. Expecting another Valcano to erupt.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Anitha says:
Nithya mam சூப்பர் epi tq so much
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rusha Seevaamirtham says:
Hey nithu dear
Thank you so much for the quick episode…
These possessive and loving nature of Arjun is fantastic..
Nice way of expressing ur story characters…👌👍👌👍
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rozmin Shafina says:
Ayyo Aju nee nallavana? Kettavana? Miruthu onna nenacha than pavama irukku. Nice epi sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Bala says:
Very nice. Brilliant
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Afrin says:
AMazing epi 😍…..but am really worried for mridhula 😔
And happy bday nithya sis 🎂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Semma episode pa…… Mirthu volunteer poyi maaturale….. ena pana poranu theriyala…..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
INIYA PIRANTHANAAL VAALTHUKAL NITHYA DEAR……🎂🎂🎂🎂🍰🍰🍰🍰🍫🍫🍫🍫🍬🍬🍬🍬🍨🍨🍨🍨🍦🍦🍦🍦🥞🥞🥞🥞🍔🍔🍔🍔🍇🍇🍇🍇🍓🍓🍓🍓🥑🥑🥑🥑🥝🥝🥝🥝
Mela irukkurathu matum pothum dear treat ku……..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sug says:
Kudikaran pechu vidincha pochu….mithu ennama ipdi fragile a iruka….ungaku oru amma ,veedu onu irukunu nyabagam iruka?stockholm syndrome dan po unaku…happy birthday nithya
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Afrin says:
Kudikaaran pechu vidinja pochu 😂😂🤣🤣👏🏻👈🏼👌
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
UmaManoj says:
பயபுள்ள சரக்கடிச்சுட்டு கிஸ் அடிக்கிறான்… வாந்தி எடுக்கப் போறாடா 😝😋
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நித்யா…
Birthday special innoru update kidaikuma😍
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Afrin says:
Idhu nallarke !! Please sis 😁😄😄
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Afrin says:
Uma sis .. indha vomit matter nanum yosichen 😄😄
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
ayyo… naan yosikkaama poittene!!! 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
uvve… ippo ninachchaa 🤮🤮… 😀 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
vats says:
avaluku ellam marandurichi avan kural la karakarapa pathadum… so vomit lam varadu
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Samri Thi says:
Oh god 😱😥 aju en adikadi unna kastapadutha virumpalanu solran sis?Avan manasula enna plan tha eruku? Entha Miri enn evlo weak ah eruka Ava amma va marakura alavuku Avan mela paithiyama??? So sad… Avala ninacha remba varuthama eruku… Avanga appa Pola evalum evanga amma va maranthutu vakkukala evanta Alli vitutu eruka…. Aju ne nallavana ila kettavana?😵 HAPPY BIRTHDAY sis💐😍 many more happy returns of the day 😃
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
செல்வா கனேஷ் says:
மிகவும் அருமையான பதிவு
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Anjali Suresh says:
Matikitye mrithu. Avanukula unna aarathikra bakthanum irukan. Alakazhikra ratchanum irukan. Epo purinjipaa atha
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Priya Ganeshan says:
Nice ud sis…..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Woww lovely epi … Arjun enna da seiya pora … Mrithu romba namburale
Wish you many more happy returns of the day nithya
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Wowww lovely epi … Arjun enna panna porannu theriyalaiye …
Wish you many more happy returns of the day nithya
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kurinji says:
Miri ippo than konjam sinthishe.atarkul avanai paarthathum ulagam maranthuruchu. So vaakku kod uthu vagaiyaa maattikitte… iniya pirantha NAAL vaalthukkal nitya.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Uma maheswari says:
Omg Arjun intha Chinna பொண்ணை இன்னும் என்ன செய்ய காத்து இருக்கிறாய்?. நித்யா பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் . Stay happy and blessed dear..🎂🎂🍬🍬💐💐
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
Thank you So much Uma… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
செல்வா கனேஷ் says:
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நித்யா