ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க -08
1986
0
ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே! -08
வினிதாயும் மொபைல் போனும்!
கார்த்திக்கின் போன் நம்பரை தனது மொபைலில் save செய்தாள். வாட்சப் அப்பில் எவ்வளவு நேரம் வனிதாவுடன் chat செய்கிறான் என்று நோட்டம் இட்டாள். அப்ப அப்ப கார்த்திக்கின் ப்ரொபைல் போட்டோவை பார்த்து பரவசம் அடைத்தாள். இரவு முழுவதும் யோசித்து வனிதாவையும், கார்த்திக்கையும் பிரிப்பதற்கு திட்டம் திட்டினாள். பிறகு அவள் அன்றாட ஆன்லைனின் பண்ணும் விஷமங்களை செய்ய தொடங்கினாள்.
வினிதாவின் உயிர் தோழிகள் மூன்று பேர்கள் அனிதா, ஜென்னி, திவ்யா. இவர்கள் அனைவரும் பள்ளியில் இருந்தே தோழிகள். உறவினர்கள் வீட்டில் தங்கி படிக்க கூடியவர்கள். வினிதாயை போன்ற “ராக்கோழிகள்” விடிய முழிச்சிருப்பவர்கள்.
இவர்களுக்கு facebook – யில் “Gray Devils Girls” (சாம்பல் நிற பெண் பேய்கள்) என்ற பக்கம் (page) உண்டு. இந்த போலி பக்கத்தை வைத்து ஆபாச புகைப்படங்கள், விடியோவை பதிவு செய்வது, இதில் வரும் ஆண்கள், பெண்களின் ஆபாச உணர்வுகளை தூண்டிவிடுவது போன்ற செயல்களை செய்வது இவர்களின் பொழுதுபோக்கு. தங்களது உண்மை முகத்தை வெளிப்படுத்தாமல் போலி முகத்துடன் திரிவார்கள். இவர்களை நெருங்குவது மிகவும் கடினம். அனைவர்க்கும் ஹேக்கிங் (hacking) தெரியும். ஹேக்கிங் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொண்டுவிட்டு மீண்டும் கதைக்கு செல்வோம்.
பொதுவாக ஹேக்கிங் என்பது ஒரு தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனத்தின் தகவல்களை அவர்கள் அனுமதியில்லாமல் எடுப்பது ஹேக்கிங் எனப்படும். இதனை செய்பவர் ஹேக்கர் என அழைக்கப்படுவர்.
சிலர் பொழுதுபோக்குக்காவும், பலர் தகவல்களைத் திருடுதல் அல்லது இணையதளத்தை முடக்கி அதனை விடுவிக்க பணம் கேட்பதற்காகவும் தான் பெரும்பாலான ஹேக்கர்கள் இணைய தளங்களில் ஊடுருவுகின்றனர்.
ஹேக்கிங் பொதுவாக 3 வகைப்படும்.
1. Black hat hacker – கருப்பு தொப்பி ஹேக்கர்
2. White hat hacker – வெள்ளை தொப்பி ஹேக்கர்
3. Gray hat hacker – சாம்பல் தொப்பி ஹேக்கர்
Black hat hacker (கருப்பு தொப்பி ஹேக்கர்):-
இந்த வகையான ஹேக்கர் அவர்கள் குறி வைத்த கம்பெனியின் தகவல்களை திருடியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர். தாங்கள் திருடிய தகவல்களை தீமைக்கே பயன்படுத்துவார்.
உதாரணங்கள்:-
கம்பெனியை பணம் கேட்டு மிரட்டுதல்.
தங்களிடம் உள்ள தகவல்களை கருப்பு சந்தையில் விற்பது.
திருடிய தகவல்களை web site-ல் வெளியிடுதல்.
கம்பெனிக்கு நஷ்டத்தை ஏற்படுத்துதல்.
White hat hacker (வெள்ளை தொப்பி ஹேக்கர்):-
இவர்கள் black hat hacker-க்கு நேர் எதிர் மாதிரியான எண்ணம் கொண்டவர்கள்.
இவர்களும் ஹக்கர்கள் தான் ஆனால் மாறுபட்ட எண்ணம் கொண்டவர்கள். தகவலின் பாதுகாப்பை உறுதி செய்ய ஹேக்கிங் செய்வர்கள்.
இவர்கள் ethical ஹேக்கர்கள். இவைகள் தகவலின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க உதவுகின்றனர். Facebook, whats app, twitter போன்ற சமூக வலைத்தளங்களின் தனி நபர் தகவல்கள் பாதுகாப்பிற்க்கு இவர்கள் உதவுகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் இவர்களின் தேவை அதிகமாக உள்ளது. இவர்களுக்காக பெரும் அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது.
Gray hat hacker (கிரே தொப்பி ஹேக்கர்):-
இவர்கள் நல்லவர்களும் இல்லை கெட்டவர்களும் இல்ல. இரண்டும் கலந்தவர்கள் இவர்கள். தான் கற்று கொண்டதை கொண்டு கம்பெனி அல்லது தனிநபர் தகவல்களை திருடுட முயல்வார்கள். ஆனால் அதனை எந்த தீய செயலுக்கும் பயன்படுத்தமாட்டார்கள். இவர்கள் நோக்கம் ஒன்று மட்டுமே தான் கத்துக்கொண்டதை செயல்படுத்திப் பார்க்க வேண்டும். இவர்களால் கம்பெனி அல்லது தனிநபர் என்று யாருக்கும் தீங்கு இல்லை. சரி வாங்க கதைக்கு செல்வோம்.
Gray Devils Girls இந்த மூன்றாம் வகைத்தான். தனிநபர் தகவல்களை திருடி அவர்களை பயப்படுத்தி வேடிக்கை பார்ப்பார்கள். அதனால் வினிதா வனி மற்றும் கார்த்தியின் மொபைலை ஹேக் செய்ய முடிவு எடுத்தாள்.
வினிதாயின் தீய வேட்டைகள்..!
தொடரும்
Comments are closed here.