Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 35

அத்தியாயம் – 35

விடிந்து வெகுநேரம் ஆகிவிட்டது. படுக்கையிலிருந்து எழவே மனமில்லை அவனுக்கு. நேற்று நடந்த சம்பவங்கள் அனைத்தையும் நினைவுகளாக அசைபோட்டபடி படுத்திருந்தான். இந்த சோம்பல் புதிது… சிந்தனை புதிது… முடிவுகள் புதிது… மிருதுளா…!!! – பெருமூச்சுடன் எழுந்து கண்ணாடிக்கு முன் வந்து நின்றான்.

 

நேற்று அருந்திய மதுவின் தாக்கம், வீங்கியிருந்த அவன் முகத்தில் இன்னும் மிச்சமிருந்தது. மேல்ச்சட்டை அணியாத அவன் அகண்ட மார்பில் இடதுபுறமிருந்த அந்த வட்டத் தழும்பில் பதிந்தது அவன் பார்வை. வலதுகை தானாக உயர்ந்து அந்த தழும்பை தொட்டு வருடியது… முகம் உணர்வுக்குவியலாய் மாறியது… அந்த குண்டு இன்னும் இரண்டு இன்ச் இறக்கி பாய்ந்திருந்தால் அன்றே அவன் உயிர் பிரிந்திருக்கும். விதி!!! யார் கையால் யார் சாக வேண்டும் என்று இருக்கிறதல்லவா? – ஏளன சிரிப்பில் உதடு வளைந்தது.

 

சில வருடங்களுக்கு முன் நடந்த அந்த தாக்குதலுக்குப் பிறகு குடிக்கவே கூடாது என்கிற முடிவை எடுத்திருந்தான். நேற்று அவன் முடிவு தகர்ந்துவிட்டது…

 

அசோசியேட்ஸை பயன்படுத்திக்கொள்வதும் பிறகு வேலை முடிந்ததும் வெட்டிவிடுவதும் இயல்பு… அப்படித்தான் அவளை பயன்படுத்திக்கொள்ள விரும்பினான். அந்த எல்லையில்தான் அவளை வைத்திருக்க நினைத்தான். ஆனால் அது நடக்கவில்லை.

 

ஒவ்வொரு முறையும் அவனுடைய சிந்தனைகளும் செயல்களும் ஒருங்கிணைய மறுத்து முரண்பட்டுக் கொண்டே இருந்தன. காரணம் அவள்.. மிருதுளா…

 

எப்போது…? எப்படி…? – எதுவும் புரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே சிறிது சிறிதாக அவனுக்குள் மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். நேற்றுதான் முழுமையாக உணர்ந்தான். உணர்ந்த விஷயம் அப்படி ஒன்றும் மகிழ்ச்சிக்குரியதல்ல…

 

சுயத்தை இழக்கிறோமே என்கிற எச்சரிக்கையும்… இழக்கச் செய்கிறாளே என்கிற கோபமும் தான் வந்தது. சரி, ஆரம்பத்திலேயே அவளை ஒதுக்கிவிடலாம் என்று எண்ணினான். எண்ணமே பெரும் பாரமாய் அவனை அழுத்தியது. வருடக்கணக்கில் தொடாமல் தள்ளி வைத்திருந்த மதுவை மீண்டும் கையில் எடுத்தான்.

 

எதிர்பார்த்த அளவுக்கு போதையும் பெரிதாக உதவிவிடவில்லை… மதுவின் தாக்கத்தில் மனம் திடப்படுவதற்கு பதில் மேலும் நெகிழத்தான் செய்தது. அப்படியும் அவன் நினைத்ததை செய்தான். விலகிச்செல்ல அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தான். அவள் மறுத்துவிட்டாள். இறுதிவரை விளகமாட்டேன் என்று வாக்கும் கொடுத்துவிட்டாள். ஆஹா!!! எத்தனை சுலபமாக சுவாசிக்க முடிகிறது! மூச்சுக்காற்றை சுதந்திரமாக உள்ளிழுத்து வெளியேற்றியபடி மீண்டும் மீண்டும் அவளிடம் உறுதி செய்து கொண்டான். இனி அவளால் பின்வாங்க முடியாது… அதற்கு அவன் விடப்போவதும் இல்லை… இனி அவன் கட்டுக்குள் – அவன் விருப்பப்படி அவள். – மகிழ வேண்டிய மனம், ஏனோ எதிலோ சிக்கிக் கொண்டது போல் முரணாக உணர்ந்தது. தலையை உலுக்கிக் கொண்டு குளியலறைக்குள் சென்றவன் சற்று நேரத்தில் டிராக் சூட்டுடன் வெளியே வந்தான்.

 

அவன் அறையிலிருந்து வெளியேறிய போது பாபிம்மா எதிர்பட்டார். “எழுந்துக்க லேட் ஆயிடிச்சுங்களா தம்பி… சாப்பாடு எடுத்து வைக்கவா?” – அவருடைய கேள்விக்கு பதில் சொல்ல தோன்றாமல் விழிகளை சுற்றும்முற்றும் சுழலவிட்டவன், “மிருதுளா எங்க?” என்றான்.

 

“தண்ணி பக்கம் போயிருக்கும். அங்கதான் அதுக்கு பிடிக்கும்”

 

அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெளியே வந்துவிட்டான். தூரத்தில் கடல் போல் பரந்திருக்கும் ஏரியில், குளிர்காற்றையும் காலை வெயிலின் மிதமான வெப்பத்தையும் உள்வாங்கியபடி, முழங்கால் நனையும் வரை நீருக்குள் செல்வதும் வெளியே வருவதுமாக விளையாடிக் கொண்டிருந்தாள் மிருதுளா. அவளை பார்த்த கணத்திலேயே அவன் முகத்தில் எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொண்டது புன்னகை.

 

“ஹேய்…” – அவனுடைய ரசனையில் குறுக்கிட்ட குரலுக்கு சொந்தக்காரன் வேறுயாருமல்ல… டேவிட் தான்….

 

திரும்பிப் பார்த்தான் அர்ஜுன். வியர்வையில் நனைந்த ஆடையுடன் அவன் எதிரில் நின்றான் டேவிட்.

 

நேற்றுவரை மிருதுளாவை விட்டு இம்மியும் அசையாமல் அடைகாத்தவன் இன்று அதிகாலையிலேயே ஜாகிங் சென்றுவிட்டான்.

 

முதல்நாள் இரவு உணவின் போது நடந்த சம்பவத்திற்குப் பிறகு கோபமாக வெளியேறியவன் திரும்பி வந்த போது நேரம் நள்ளிரவை தாண்டிவிட்டது. அர்ஜுன் வெளி வராண்டாவில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தான். அவனிடம் பேச்சுக் கொடுக்காமல் உள்ளே வந்துவிட்டான் டேவிட்.

 

அர்ஜுன் எத்தனையோ குரூரமான சம்பவங்களை பார்த்திருக்கிறான். கொடூரமான கொலைகளை செய்திருக்கிறான். அப்போது கூட உறக்கத்திற்காக என்று சிறிதளவில் கூட மதுவை நாடாமல் உறுதியோடு இருந்தவன் இன்று இப்படி குடிக்கிறான் என்றால் மிருதுளா அவனை எந்த அளவுக்கு பாதிக்கிறாள் என்பதை அவனால் புரிந்துக்கொள்ள முடிந்தது. அதே சமயம் அவனுடைய நோக்கமும் சரியில்லாதது போல் தோன்றுகிறது. இவன் மிருதுளாவை என்னதான் செய்ய காத்திருக்கிறான் என்று எண்ணியவனுக்கு நிம்மதியே இல்லாமல் போய்விட்டது.

 

போதையில் இருப்பதால் உறங்கி கொண்டிருப்பவளைக் எழுப்பி கூட ஏதேனும் தொந்தரவு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எதற்கும் அவன் உறங்கும் வரை கண்ணை மூட கூடாது என்கிற முடிவோடு, உறங்குவது போன்ற பாவனையில் விளக்குகளையெல்லாம் அணைத்துவிட்டு, வெளியே அமர்ந்திருக்கும் அர்ஜுனை நோட்டம்விட்டபடி இருட்டில் அமைதியாக அமர்ந்திருந்தான் டேவிட்.

 

அந்த நேரத்தில்தான் மிருதுளா சமையலரைப் பக்கம் போனாள்.

 

‘இவள் இன்னும் உறங்காமல் என்ன செய்கிறாள்!’ – பகீரென்றது அவனுக்கு. அர்ஜுன் இவளை பார்த்துவிடக் கூடாதே என்கிற பதட்டத்தோடு அமர்ந்திருந்தவனுக்கு ஏமாற்றம் தான் கிட்டியது. அர்ஜுன் அவளை கவனித்துவிட்டான். கவனித்தோடு நிற்காமல் அவளை பின்தொடரவும் செய்தான்.

 

அதற்குப் பிறகும் அவனால் இருளுக்குள் பதுங்கியிருக்க முடியுமா என்ன… வெளியே வந்தான். ஆனால் அவன் சமையலறையை அடைவதற்கு முன்பே அர்ஜுன் மிருதுளாவை பின்னாலிருந்து அணைத்திருந்தான்.

 

திடுக்கிட்டுப்போன டேவிட், வந்தது வரட்டும் என்று எண்ணி அவனை துவம்சம் செய்ய துணிந்துவிட்டான். ஆனால் மிருதுளாவின் எதிர்வினை அவனை செயலற்ற நிலைக்குத் தள்ளியது.

 

அவள் அர்ஜுனை எதிர்க்கவே இல்லை… தெரிந்த விஷயம்தான்… அவளுக்கு அர்ஜுனின் மீது பிரியம்… ஆனால் அதை நேரில் பார்க்கும் போது… அதுவும் இப்படி பார்க்கும் போது அவனால் தாங்க முடியவில்லை. நெஞ்சுக்குள் ஏதோ அடைப்பது போல்… அலற வேண்டும் போலிருந்தது… அந்த உணர்வு விடியும்வரை குறையவேயில்லை…

 

ஓடிக் களைத்து திரும்பி வந்திருக்கிறான். இப்போதும் கூட உள்ளுக்குள் ஒரு வலி இருந்துக் கொண்டே தான் இருக்கிறது… ஆனால் நேற்று இரவு போல் மரண வலி இல்லை. சமாளித்துக்கொள்ளும் அளவிற்கு குறைந்திருந்தது… அதனால் தான் அர்ஜுனை அவனால் இயல்பாக எதிர்கொள்ளவும் முடிந்தது.

 

“மாலிக் கால் பண்ணியிருந்தான்… நீ எங்க இருக்கேன்னு கேட்டான். உன்கிட்ட பேசணுமாம்” – டேவிட்.

 

“ம்ம்ம்… புது நம்பர் மாத்திட்டேன். என்ன விஷயம்னு சொன்னானா?”

 

“சொல்லல… ஆனா சுமன்… இல்லன்னா சுஜித் சம்மந்தப்பட்ட விஷயமா இருக்கலாம்னு நினைக்கிறேன்” என்றான் தன்னுடைய ஊகத்தை.

 

அதற்குப் பிறகு சற்று நேரம் இருவரும் சுஜித்தைப் பற்றியும் தொழில் தொடர்பான மற்ற சில விஷயங்களை பற்றியும் பேசினார்கள்.

 

தனிப்பட்ட முறையில் இருவருக்கும் மனத்தாங்கல் இருந்தாலும் வேலை என்று வந்துவிட்டால் ஒன்றுபட்டுவிடுவார்கள். அந்த தொழில் பக்தி தான் இப்போதும் அவர்களுக்கிடையில் பாலம் போட்டது.

 

பேச்சு முடிந்து டேவிட் விலகி வீட்டுக்குள் சென்ற பிறகு மிருதுளாவிடம் நெருங்கினான் அர்ஜுன். இப்போது அவள் அலைபேசிக்கு சிக்னல் கிடைக்காமல் போனை உயர்த்திப் பிடித்துக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாள்.

 

“என்ன பண்ணிக்கிட்டிருக்க?” – பூனை போல் வந்து திடீரென்று பின்னாலிருந்து பேசினான்.

 

திடுக்கிட்டு திரும்பியவள், “ப்பா… இப்படித்தான் பயமுறுத்தறதா?” என்றாள் கடிந்துகொள்ளும் விதமாக.

 

சிரித்தவன், “என்ன பண்றேன்னு கேட்டேன்?” என்றான் மீண்டும் அழுத்தமாக.

 

“அம்மாவுக்கு ட்ரை பண்ணலாம்னு பார்த்தா சிக்னல் இல்ல…”

 

“சரி, நம்பர் சொல்லு…” என்றபடி தன்னுடைய போனை எடுத்தான்.

 

“உங்க போன்ல டவர் இருக்கா!”

 

“சேட்டிலைட் போன்… நம்பரை சொல்லு” – அதட்டி வாங்கி அவள் அன்னைக்கு முயன்று பார்த்துவிட்டு, “சுவிட்ச் ஆஃப்” என்றான்.

 

அவள் முகத்தில் கவலை சூழ்ந்தது… “என்ன ஆச்சுன்னு தெரியல… ஏன் போன் ஆஃப்லேயே இருக்குன்னு தெரியல”

 

“ஒன்னும் ஆயிருக்காது… டோண்ட் ஒர்ரி… சீக்கிரமே நீ உன் அம்மாவை பார்க்கலாம்” என்றபடி அவள் தோள் மீது கை போட்டு அருகே இழுத்துக் கொண்டான். அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. அவன் கையனைவில் இன்னும் அணைந்து கொண்டாள்.

 

அவளுடைய தாய் எங்கிருக்கிறாள்… என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்கிற விபரத்தையெல்லாம் கேட்டான். அவளும் அவனுடைய கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னாள். இன்னும் ஏதேதோ பேசியபடி, பாதம் நனையும் அளவிலான தண்ணீரில் கரையோரமாகவே நடந்துச் சென்றுக் கொண்டிருந்தார்கள்.

 

“எங்க போறோம்?”

 

“சும்மா… அப்டியே ஒரு வாக்…” – அவனோடு சேர்ந்து நடப்பது அவளுக்கும் சுகமாகத்தான் இருந்தது.

 

ஒரு மணிநேரம் ஒரு நொடி போல் கரைந்துவிட்டது.

 

“ரொம்ப தூரம் வந்துட்டோம்… திரும்பிடலாமா?” – மிருதுளா.

 

“இல்ல… உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு… வா என்கூட” – இன்னும் சற்று தூரம் அழைத்துச் சென்றான். அங்கே படகு நிறுத்தத்தில் இருந்த ஒரு படகில், “ஏறு…” என்று அவளை கை பிடித்து ஏற்றிவிட்டு அவனும் ஏறினான். பார்க்க மீன் பிடி படகு போல் தெரிந்தது. வலை கூட இருந்தது.

 

படகில் அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லாததைக் கண்டு, “போட்-மேன் எங்க?” என்றாள்.

 

“உன் கண்ணு முன்னாலதானே இருக்கேன்”

 

“ஆங்!!!”

 

“ஏன்? இப்படி கண்ணை விரிக்கிற?” என்றபடி இன்ஜினை ஸ்டார்ட் செய்தான்.

 

“சீரியஸ்லி! என்னை உயிரோட கரைக்கு கொண்டு போய் சேர்த்துடுவீங்களா?”

 

அவன் சிரித்துவிட்டு, “அந்த லைப் ஜாக்கெட்டை எடுத்து போடு” என்றான். சொன்னபடியே அவள் செய்ததும், “வா இப்படி” என்று அழைத்து படகின் திருப்பங்கள் மற்றும் அசைவுகளை எப்படி கட்டுப்படுத்த வேண்டும், முன்னோக்கி பின்னோக்கி செலுத்துவது எப்படி என்று சொல்லிக் கொடுத்தான். படகு பாதுகாப்பான பகுதியை அடைந்த போது அவளை முயற்சி செய்து பார்க்கச் சொன்னான்.

 

புது அனுபவம் பேரின்பமாக இருந்தது அவளுக்கு. கார் ட்ரைவ் செய்வது போலத்தான் இருந்தது. ஆனால் படகின் அசைவுகளை கட்டுப்படுத்தும் போது தானே நீரில் மிதப்பது போன்றதொரு உணர்வு அவளை சிலிர்க்கச் செய்தது.

 

“வாவ்!!! சூப்பர்… ஆஸம்” என்று அவனை பாராட்டிக் கொண்டே அவனுடைய வழிகாட்டுதலின் படி படகை செலுத்திக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் சந்தோஷத்தையும் தாண்டி சிறு கலைப்புத் தெரிந்தது. அப்போதுதான் அவனுக்கு அந்த சந்தேகம் வந்தது.

 

“மார்னிங் சாப்பிட்டியா?”

 

“ம்ம்ம்” – முணுமுணுத்தாள். சாப்பிடுவதாக பெயர்பண்ணியது என்னவோ உண்மைதான். ஆனால் அவள் சரியாக உண்ணவில்லை. காலை எழுந்ததிலிருந்து அர்ஜுன் டேவிட் இருவரையுமே பார்க்க முடியவில்லை… நேற்றைக்குப் பிறகு அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும்… என்று ஏதேதோ சிந்தனைகளில் அவளுக்கு உணவு இறங்கவில்லை. இப்போது பசிக்க துவங்கிவிட்டது. அதை அவனிடம் சொல்ல சங்கடப்பட்டுக் கொண்டு ‘ம்ம்ம்’ என்று முணுமுணுத்தாள்.

 

அவள் சொல்லவில்லை என்றாலும் அவளுடைய பசியை அவன் புரிந்துக் கொண்டான். படகை நடு ஏரியிலேயே நிறுத்திவிட்டு, பாட்டிலில் இருந்த குடிநீரை எடுத்து அவளுக்கு பருகக் கொடுத்தவன், வலையை எடுத்து தண்ணீரில் விசிறிவிட்டான்.

 

பத்து நிமிடத்தில் மீண்டும் வலையை சுருக்கி எடுத்தான். உள்ளே மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன. படகில் இருந்த வாளி ஒன்றில் தேவையான அளவு மீன்களை அல்லிப் போட்டுக் கொண்டு மீதியை தண்ணீரிலேயே வீசியெறிந்துவிட்டு, கத்தியை எடுத்து பரபரவென்று மீன்களை சுத்தம் செய்தான். ஏரி தண்ணியை வாளியில் மொண்டு மீன்களையும், மீன் சுத்தம் செய்த இடத்தையும் கழுவினான். பிறகு, படகில் உள்ள வலைப்பள்ளத்திற்குள் இறங்கினான். அங்கே ஒரு மண்ணெண்ணெய் ஸ்டவ், சில பாத்திரங்கள், மலாசா மற்றும் எண்ணெய் பேக்கெட்டும் இருந்தது. ஸ்டவை பற்ற வைத்து மீனை மசாலாவில் முக்கி, பொறித்து எடுத்து சுடச்சுட தட்டில் அடுக்கி அவளிடம் நீட்டினான்.

 

மிருதுளா அவனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அத்தனை சுலபமாகவும் சுத்தமாகவும் அவன் வேலை செய்தான்.

 

“ஓய்…” என்று சொடக்குப் போட்டவன், “ஹேவ் இட்…” என்று தட்டை அவள் கையில் திணித்துவிட்டு அருகிலேயே அமர்ந்துக் கொண்டான். ஒரே தட்டில்தான் இருவரும் உன்ன வேண்டும். மிருதுளாவிற்கு என்னவோ போல் இருந்தது… சந்தோஷமும் தயக்கமும் கலந்த கலவையான உணர்வு… மனதிற்கு இதமான உணர்வுதான்… அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது…

 

“ம்ம்ம்… சாப்பிடு…” – தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவளை புன்சிரிப்புடன் உந்தினான். அவனும் அந்த சூழ்நிலையை ரசிக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது.

 

ஒரு மீனை கையில் எடுத்து சூடு போக ஊதி, லாவகமாக முல்லையும் சதைப்பற்றையும் தனியாகப் பிரித்துக் கொண்டிருந்த அர்ஜுனை வியந்துப் பார்த்தவள், “நீங்க மீன் சாப்பிடுவீங்களா?” என்றாள்.

 

“ஏன் மாட்டேன்? நல்லா சாப்பிடுவேன்… அதுவும் இந்த மாதிரி பிரெஷ் மீன் சாப்பிட யாருக்கு பிடிக்காது?”

 

“இல்ல… பேரு ஹோத்ரான்னு முடியுதே…” – அவள் சந்தேகத்தை கேட்டு முடிப்பதற்குள் அவன் விரல்கள் அவள் இதழ்களை தொட்டுநின்றன. விஷயம் புரிய சில நொடிகள் பிடித்தது அவளுக்கு. தித்திக்கும் உள்ளத்தோடு வாய்திறந்து அவன் ஊட்டிய மீனை பெற்றுக்கொண்டாள். இதைவிட சுவையான உணவை யாராலும் சமைக்க முடியாது என்று தோன்றியது.

 

காற்றில் மிதப்பது போன்ற உணர்வில் அவள் லயித்திருந்த போது அவன் பேசினான்.

 

“நான் ஹோத்ரா ஃபேமிலிதான்… ஆனா அசைவம் நல்லா சாப்பிடுவேன்” – அடுத்த மீனை எடுத்து முல்லையும் சதைப்பற்றையும் பிரிக்கத் துவங்கினான். அவளும் தன் பங்கிற்கு ஒரு மீனை கையிலெடுத்தாள். பத்து நிமிடத்தில் தட்டு காலியாகிவிட்டது. சாதம் ரொட்டி என்று எதுவும் இல்லாமல் மீனை மட்டும் வயிறு முட்ட உண்பது இதுதான் முதல் முறை அவளுக்கு. திகட்டவே இல்லை… ரசித்து உண்டாள்…

 

அவர்களுடைய பயணம் தொடர்ந்தது. சுற்றும்முற்றும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர் மட்டும்தான் தெரிந்தது. எப்படி திசை தெரிந்து படகை செலுத்துகிறான் என்கிற சந்தேகத்துடன் அவள் அவனைப் பார்க்க, அவன் படகில் பொருத்தப்பட்டிருந்த, ‘ஜிபிஎஸ்’ கருவியை கைகாட்டினான்.

 

இப்போது படகு ஒரு குறுகலான கால்வாயில் சென்றுக் கொண்டிருந்தது. இருபுறமும் கரையோரம் நிறைய மரங்கள் இருந்தன. ‘கீச்-கீச்’ என்று பறவைகள் கூச்சலிட்டன. அணில்கள் மரங்களில் தாவியோடின. சில குரங்குகள் கூட கண்ணில் பட்டது.

 

“இந்த பக்கம் வந்த மாதிரியே தெரியலையே அர்ஜுன்! வழி மாறிட்டோமா?” – சந்தேகத்துடன் கேட்டாள் மிருதுளா.

 

“ஷ்ஷ்ஷ்…” – வாயில் விரல் வைத்து அமைதியாக இருக்கும்படிக் கூறினான் அர்ஜுன்.

 

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்ன?’ என்பது போல் சைகை செய்தாள்.

 

அவன் எதுவும் பேசாமல் கரையில் சுற்றி சுற்றி எதையோ தேடுவது போல் பார்வையை சுழலவிட்டபடி படகை மெதுவாக செலுத்திக் கொண்டிருந்தான்.

 

அவளுக்கு பயமாக இருந்தது… யாரேனும் ஒளிந்திருப்பதாக நினைக்கிறானோ! தாக்கப்போகிறார்களோ! – மிரட்சியுடன் சுற்றும் முற்றும் பார்த்தவளின் விழிகள் விரிந்தன.

 

“அர்ஜுன்…”- குரலே எழும்பாமல் அழைத்தாள். அவன் திரும்பினான்.

 

“அது… அது என்ன?” – அவள் கைகாட்டிய திசையில் பார்த்தவனின் முகம் பிரகாசமானது.

 

“எஸ்… தேர் இட் இஸ்…” என்றபடி படகை நிறுத்தியவன் அவளிடம் திரும்பி, “உப்புத் தண்ணி முதலை… ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். ட்ரை பண்ணலாமா?” என்றான் மின்னும் கண்களுடன்.

 

தூக்கிவாரி போட்டது அவளுக்கு. “என்னது!” என்றாள் அலறாத குறையாக.

 

அவன் கண்கள் குறும்பு சிரிப்பில் சுருங்கின. அதை கண்டுகொண்டவள், “சீட்டர்..” என்று சிரித்துக்கொண்டே அவன் முதுகில் போட்டுவிட்டு, “ட்ரை பண்ணி பாருங்க… அப்புறம் இன்னைக்கு நீங்கதான் அதோட லன்ச்” என்றபடி மீண்டும் அந்த முதலையைப் பார்த்தாள்.

 

மர நிழலில், சின்ன பள்ளத்தில் தேங்கி கிடந்த நீரில் அசைவே இல்லாமல் படுத்திருந்தது. பார்க்க மண்ணின் நிறத்தில் கல் போலவே இருந்தது. மூடிமூடி திறக்கும் கண்களை மட்டும் கவனிக்கவில்லை என்றால் மிருதுளாவும் கண்டுபிடித்திருக்க மாட்டாள்.

 

அந்த முதலையின் தலையில் ஏறி துள்ளித் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது ஒரு அணில்…

 

“தூங்குதா? அந்த அணில் இப்படி விளையாடுதே!” – வியப்புடன் கேட்டாள்.

 

“அப்படிதான் தூங்கற மாதிரியே இருக்கும்… சரியான நேரத்துல இரையை டக்குன்னு கேட்ச் பண்ணிடும்…” – அவன் சொல்லி முடிப்பதற்குள் லபக்கென்று அந்த அணிலை கவ்விவிட்டது… ஒரு நொடிதான்… துள்ளிக் கொண்டிருந்த அணில் முதலையின் வயிற்றுக்குள் அரைபடத் துவங்கிவிட்டது.

 

மிருதுளாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அவள் வாடிய முகத்தைக் கண்டு, “என்ன?” என்றான் அர்ஜுன்.

 

“பாவம்…” – சோகமாகக் கூறினாள்.

 

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாம மீன் சாப்பிட்டோமே… அதெல்லாம் பாவம் இல்லையா?” – புருவம் உயர்த்தினான்.

 

அவளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. “இதுதான் இயற்கை… ஒன்ன ஒன்னு அடிச்சு சாப்பிட்டுத்தான் வாழ்ந்தாகணும்…” என்றான் சுலபமாக.

 

அவன் சொன்ன நியதி உண்மை என்றாலும் அதை அவன் இலகுவாக கூறிய விதம் அவளுக்கு பிடிக்கவில்லை. அவன் செய்யும் தொழில் அவனை அப்படி பேச வைக்கிறது என்று எண்ணியபடி அமைதியாகிவிட்டாள்.

 

அவளுடைய திடீர் அமைதிக்கு காரணம் புரியாமல், “ஆர் யு ஓகே?” என்றான் அர்ஜுன்.

 

“லேசா தலை வலிக்குது” – அவள் கூறுவதை உண்மை என்றே நம்பினான்.

 

“ரொம்ப நேரமா தண்ணிலேயே இருக்கோம். வெயில் வேற… அதான் அப்படி இருக்கும். சீக்கிரம் கரைக்கு போயிடலாம். கண்ணை மூடி கொஞ்ச நேரம் சாஞ்சுக்கோ” – தன் மீது அவளை சாய்த்துக் கொண்டு படகை செலுத்தினான்.

 




16 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sug says:

    Ven s d next ud..pls update regularly nithya


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      nalaikku pottuduven pa…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kurinji says:

    Inru epi undaa nitya


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anjali Suresh says:

    Haiyoo ivan nallavana kettavana ne therilaye.. kolapputhe..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Selvalakshmi Suyambulingam says:

    Suspense is extending.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sug says:

    Mithu u confessed ur love in an emotional state, but now realising the fact, vat the world around arjun and who he is?reality vl hurts……


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya Ganeshan says:

    Nice ud sis👍👌👍👌👍


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rusha Seevaamirtham says:

    Nithu…
    Thank you so much da…y.day i really searched for your ud …
    This is a story, im living in….i can feel everything as real..not as just a imagination story..
    That is the success of writing.. you have it..
    You are blessed..
    👍👍👍👌😍


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Samri Thi says:

    Nice going sis 😍👍


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Samri Thi says:

    Nice going sis😍👍


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vidya Priyadarsini says:

    Commit panitan mirthu va. Avalum thanoda family pathi yosikama commit ayita. But I feel innum etho oru nerudal story la. But ithu thanu catch pana mudiyala. Antha alavukku story a semmaya kondu poreenga da. Excellent writing skills…. face la kannu kaathu mookku nu irukka vendiya edathula iruka vendiya size la oru sculpture sethukkuna mathiri pisir ilama storyoda ovoru epi m ezhuthureenga pa….. ithuku mela ena solanu theriyala….. keep it always with u and don’t give it up for anyone or anything else….. anyways waiting for the next episode eagerly pa…..


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      OMG!!! Thank you so much Vidya… such an encouraging comment… I’m very glad to have lovely readers like you all… Thank you so much all my readers and commenters… Thank you friends… love you all…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kurinji says:

    Miri netre oru chance kodutan.ini.ithu than life.un amma visayathai karandutaan..


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Afrin says:

    😍


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      🙂

You cannot copy content of this page