Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க – 09

பொழுது விடிந்தது!

வனிதா காலையில் எழுந்து எப்போதும் போல் கல்லூரிக்கு கிளம்பினாள். சங்கீதா அம்மாவிற்கு வனிதாவின் மீது தனி பாசம் உண்டு. சங்கீதாவை மிகவும் பாசமாகவும் கனிவாகவும் வனிதா நடத்துவாள். ஆனால் வினிதா சங்கீதா மீது அதிகமாக எரிந்து விழுவாள். வனிதா வினிதா விற்காக காத்திருந்து பார்த்தாள். அவள் தூக்கத்திலிருந்து எழாமல் உறங்கிக் கொண்டே இருந்தாள். வனிதா தனியாக கல்லூரிக்கு கிளம்பி விட்டாள்.

கல்லூரி கேன்டீன்:

வனிதா கல்லூரியின் கேன்டீன் இருந்து கார்த்திக்கு கால் செய்து வர சொல்ல, அவனும் கேன்டீனை வந்து அடைந்தான். இருவரும் உரையாடலை தொடங்கினார்கள்.

வனிதா நா ஒன்னும் உன்னட சொல்லலாமா?

ஹ்ம்ம் சொல்லு கார்த்தி!

நம்ம சந்திப்பை கல்லூரிக்கு வெளிய வச்சிகலமா?

ஏன்டா கார்த்தி?

உனக்கே தெரியும் நா காலேஜ்ல பேமஸ்டு. பசங்க கிண்டலாக பேசுரங்க அதுதான்!

ஆமா! நீ சொல்லுறதும் சரிதான் டா! எனக்கும் பயமாக தான் இருக்கு. அப்பாக்கு விஷயம் தெரிந்துவிடும் என்று. சரி நீ சொல்லுற மாதிரியாக பண்ணிக்கலாம்.

சரி டா! நானும் ஒன்னும் உன்னட கேக்கலாமா?

கேளு வனி.

உனக்கு இது லாஸ்ட் இயர். சோ நெஸ்ட் என்ன பண்ண போரா? அப்பாடா பிசினஸ்ல joint பண்ணுவியா?

கண்டிப்பா வனி. அப்பாக்கு உதவியாக இருக்கனும்.

அவனின் பொறுப்பான பதில்கள் வனிதாவிற்கு ஆல மரத்தின் வேர்களை போன்று நம்பிக்கை அவள் மனதில் ஏற்படுத்தியது. கார்த்தியை தனது மனதில் அடுத்த இடத்தில் வைத்து அழகு பார்க்க தொடங்கினாள்.

கோவை வீடு:

நம்ம தலைவி உறக்கத்தில் இருந்து எழுந்தாள். சங்கீதா வந்து “கல்லூரிக்கு கிளப்பவில்லையா பாப்பா” என்று வினவ “வினிக்கு அவளின் கேள்வி கோவத்தை வர செய்து “உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க” என்று கடித்தாள். “சரி பாப்பா மன்னிச்சிகோமா” என்றவளுக்கு தன்னை அறியாமல் கண்ணீர் மல்கியது. சங்கீதாவிற்கு இவள் வயதில் மகள் இருக்கு.

காலேஜ்க்கு லீவு போட்டாச்சு! அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்த நம்ம வினிதா விரைந்து சென்று தனது Lappy-ய (லேப்டாப்) On செய்தாள். கிழிந்தது வனிதாவின் காதல்!
😰😵😢

அவளின் மூளை நரம்புகள் எல்லாம் மிகவும் யோசித்தது. அவர்களின் பிடித்த விஷயத்தை வைத்தே அவர்களை தனது வலையில் சிக்க வைக்க முடிவு செய்தாள்.

தனது இணைய நிழல் வலையமைப்பில் ஊடுருவி தகவல்களை திருட code-களை உருவாக்கினாள். வனிதாவிற்கு அழகு சாதன பொருட்கள் சார்ந்தும், கார்த்திக்கு கிரிக்கெட் சார்ந்தும் வினாடி வினாக்களுக்கு (Quizzes) விடை அளித்தல் போதும் அவர்களின் மொபைலை ஹேக் செய்ய code-களை உருவாக்கி பேஸ்புக்கின் ஊடாக அனுப்பினாள். கார்த்திக்கின் முக நூலை வனிதாவின் பக்கத்தில் இருந்து கண்டறிந்து கொண்டாள்.

கல்லூரி கேன்டீன்:

ட்விங்..! ட்விங்..! அவர்களின் மொபைலில் நொடிபிகேஷன் ஒலித்தது..!!

முதலில் வனிதா கிளிக் செய்தாள். அதற்க்குள் கார்த்திக்கின் போன் ஒலித்தது..! ரவியிடம் இருந்து அழைப்பு..!

கார்த்தி கிளிக் செய்து வினியின் வலையில் சிக்குவான என்று நாளை பாப்போம்…!! 👹

தொடரும்.


Tags:


Comments are closed here.

You cannot copy content of this page