Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மெய்

மெய்

அப்போ, நான் summer vacations ல வீட்டுல தான் இருந்தேன், அது மட்டும் இல்ல எங்க அப்பாக்கு Promotion வந்ததுனால நாங்க வீடு காலி பண்ணிட்டு சொந்த ஊரு திருச்சிக்கே போக போறோம்னு ஒரே சந்தோஷசமா இருந்துச்சி, அப்பா தடவியல் துறையில பெரிய பதவியில இருந்ததால அடிக்கடி இப்படித்தான் transfer வந்து கிட்டே இருக்கும் இருந்தாலும் இதுதான் last transfer எங்க அப்பாக்கு என்னா, இன்னும் 6 மாசத்துல அப்பாக்கு retirement. அன்னக்கி வீட்ட மொத்தமா காலி பண்ணியாச்சி, பீரோவ தூக்கியாச்சினா கிளம்பிடலாம், துாக்க வந்தவங்க சாப்பிட போயிட்டாங்க வர அரை மணி நேரமாகும்னு அம்மா அப்பாகிட்ட சொல்ல சொன்னாங்க அதனால அப்பாவ தேடிக்கிட்டு வீட்டுக்குள்ள போனா, அப்பா மரபீரோகிட்ட ஏதோ கவர பாத்துக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்தாரு.

என்னை பத்தி சொல்லனும்னா எனக்கு ஆவிங்க மேல பெருசா interest இல்ல, 6 மாதத்துக்கு முன்னாடி, நாங்க வீட்ட காலி பண்ணுற வரைக்கும், அந்த கதைய எங்கப்பா சொல்லுற வரைக்கும், ஆமா, ஏன்னா எங்க அப்பா அந்த பீரோக்கு முன்னாடி அந்த கவரை வச்சிக்கிட்டு நிக்கும் போது நான் போயி அப்பானு குப்பிட்டதும் அவருக்கு துாங்கிப்போட்டுச்சி, அப்பா என்னப்பா ஆச்சினு கேட்டேன், அப்பா தண்ணீ எடுத்துட்டு வாமானு சொன்னாரு நான் தண்ணீ எடுத்துட்டு போகும் போது அப்பா தோட்டத்துல இருந்தாரு, அப்பா என்னப்பா ஆச்சி என் ஏதோ restless  இருக்கிங்கனு கேட்டேன். “அம்மாடி, நம்ப இந்த பீரோவ எடுக்க வேண்டாம்மா, நம்ம உடனே கிளம்பலாம்னு அம்மாகிட்டு சொல்லு, அம்மா எங்கன்னு கேட்டாரு” “அப்பா அம்மா பவானி ஆன்ட்டி வீட்டுக்குபோயிருக்காங்க,” (அம்மாவோட close friend) சொன்ன.” எப்ப வருவானு கேட்டாரு 30 minutes ஆகுப்பானு சொன்னேன்”

அப்பா என்னாச்சு கேட்கும் போதுதான் அப்பா அந்த கதைய என்கிட்ட சொன்னாரு, 2016ல அப்பா செங்கல்பட்டு officela வேலை பாத்துக்கிட்டு இருந்தாராம், அந்த timela காவ்யா னு ஒரு பொண்ணு கல்யாண மண்டபத்துல மணமகன், மணமகள் இரண்டு பேரையும் துப்பாக்கியால சுட்டு கொன்னுட்டா, போலீஸ் கையோட புடிச்சிட்டாங்க, துப்பாக்கியும் கைப்பற்றியாச்சி, அந்த spot ku வந்து அந்த roomமையும் துப்பாக்கியில இருக்கிற கை ரேகைய check பண்ணுனு அந்த case அப்பா table க்கு வந்துருக்கு,

அப்போ, அப்பாவும் அவங்க கூட இருந்தவங்கதான் அந்த spot க்கு போயி அங்க சில details collect பண்ணிருக்காங்க, ஆனா, துப்பாக்கில இருக்கிற கைரேகையும், காவ்யாவோட கை ரேகையும் ஒத்துப்போகலனு இவங்க report கொடுத்துட்டாங்க. அடுத்தகட்டமாக, போலீஸ் காவ்யாவோட mobile phone call history check பண்ணும் போது காவ்யா ஒரே ஒரு நம்பருக்கு தான் last one week ல more than 100 time call பண்ணியிருக்கா அந்த நம்பர் மாதவன்னு save ஆயிருக்கு. இப்போ, செத்துப்போன பையன் பேரும் மாதவன் தான், இந்த நம்பா் அவனோட நம்பா் தானா check பண்ணிப் பாத்தா இரண்டு பேரும் ஒன்னும் தான்.

போலீஸ் காவ்யாக்கு மாதவனுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க, ஆனா, காவ்யா எதுவுமே பேசல, பிரம்ம பிடிச்ச மாதிாியே இருந்தா, எவ்வளவோ அடிச்சும், கேட்டுப்பாத்தும் அவ எதுவுமே பேசல, அவ health conditionனும் மோசமானதும், போலீஸ் அவள hosptial சோ்த்தாங்க, அவ health condition இன்னும் இன்னும் மோசமாகிட்டே போச்சி, doctor காவ்யா மனது,உடல் அளவில ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கா, கொஞ்ச நாள் ஏதும் disturb பண்ணாதிங்கனு சொன்னாரு, நீங்க தொடா்ந்து disturb பண்ணுனா அவ உயிருக்கே ஆபத்தா கூட போயிடும் னு சொன்னாரு,

சாின்னு போலீஸ் கொஞ்ச நாள் அந்த case  பத்தி ஏதும் பேசாம இருந்தாங்க, ஆனா, இந்த கேஸ் பெரிய தலைவலியா இருந்துச்சி. போலீஸ் காவ்யாவை அந்த spot ல துப்பாக்கியோட புடிச்சாங்க, அத தவிர, வேற எந்த ஆதாரமும் இல்ல, ஆனா, துப்பாக்கில காவ்யாவோட கைரேகையும் இல்ல, இது இன்னும் சிக்கலா போச்சி S.I மட்டுமில்ல department தலைய பிச்சிக்கிட்டு இருந்துச்சி.

மாதவன் கிட்ட காவ்யா என்ன பேசுனா னு check பண்ணாலம்னு போலீஸ் side ல நினைச்சாங்க, சாி phone ல call recording இருக்கானு check பண்ணுனா ஏதாவது தெரியவரும்னு நினைச்சாங்க, ஆனா, call recording எல்லாம் delete ஆயிருந்துச்சி, போலீஸ் க்கு மேல மேல ஏமாற்றம் மட்டும் தான் கிடைச்சிச்சு, ஆனா, whatsapp voice msg ல audio conversation இருந்துச்சு, அது காவ்யாவும், மாதவனும் பேசிக்கிட்ட தான்.

போலீஸ் அந்த audio ல என்ன கேட்டாங்க தொியுமா,

காவ்யா:- “Please மாதவன் நீ மதி (செத்துபோன கல்யாண பொண்ணு பெயர்) ய கல்யாணம் பண்ணிக்காத, நீ தப்பா புாிச்சிக்கிட்ட மாதவன், நான் சொல்லுறத காது கொடுத்துக்கேள், நீ கல்யாணம் பண்ணிக்கிட்டனா நம்ம காதலுக்கு என்ன அர்த்தம் மாதவன், கல்யாணத்தை நிறுத்து மதி உனக்கு ஏத்த ஜோடி இல்ல மாதவன், புாிச்சிக்கோ please உன்னை நான் நேரில் பார்க்கனும் மாதவன், உனக்காக நான் நம்ம எப்பவுமே meet பன்ணுற cold house coffee shop ல வெயிட்டு பண்ணுவேன் நீ வரனும்” (audio cut ஆகுது)

மாதவன்:- “நீ என்ன சொன்னாலும் நான் மதிய கல்யாணம் பண்ணிப்பேன், உங்கள மாதிாி இல்ல மதி, நான் கண்டிப்பா அவள கல்யாணம் பண்ணிப்பேன். என்ன சொன்ன நம்ப காதலா அது செத்துப்போச்சி, 1 மாதத்துக்கு முன்னாடி, dont disturb me”

இந்த audio க்கு அப்புறம் மாதவன் காவ்யா நம்பர whatsapp ல block பண்ணிட்டான், அதுக்கு அப்புறம் எந்த message வரவும் இல்ல, காவ்யாவும் வேற நம்பர்ல கூட மாதவன contact பண்ணல, இது கல்யாணத்துக்கு முத நாள் மதியம் 3.30 நடந்த சம்பவம்னு போலீஸ் சொன்னாங்க.

போலீஸ் அந்த audioல கேட்ட cold house coffee shop ல போயி விசாரிச்சாங்க, சாியான பதில் ஏதும் கிடைக்கல, ஏன்னா, coffee shop முன்னாடி வச்சிருந்த owner 10 நாளைக்கு முன்னாடி தான் இந்த coffee shop பை வித்துட்டு, அவங்க பையனோட canada க்கு போயிட்டாருனு அங்க இருந்தவங்கதான் சொன்னாங்க, புது owner பழைய ஆள் எல்லாரையும் வேலையை விட்டு எடுத்துட்டு, புது ஆட்களை வேலைக்கு எடுத்துக்கிட்டாரு னு சொன்னாங்க.

போலீஸ்க்கு, இது முடிவுக்கு வராம இழுத்து அடிச்சிக்கிட்டே இருந்துச்சி, அதனால, அவங்க பேசுன audioவை ஆதாரமா காட்டி, போலீஸ் காவ்யா case முடிக்க நினைச்சாங்க.காவ்யா, மாதவன் இரண்டு பேரும் lovers. ஒரு மாதத்துக்கு முன்னாடி அவங்க love breakup ஆனதும், மாதவன் மதிய கல்யாணம் பண்ணிக்கிறது பிடிக்காம காவ்யா துப்பாக்கியால கொன்னுட்டானும், காவ்ய மனநிலை பாதிக்கப்பட்டு மனநிலை மருத்துவமனையில் சேர்த்துட்டதா, மனநிலை பாதிக்கப்பட்டதால் காவ்யாவ விடுதலை பண்ணியாச்சி, S.I case முடிச்சிட்டாரு.

காவ்யாவோடு கை ரேகையும், துப்பாக்கில இருக்கிற கை ரேகையும் ஒன்னு இல்லனு S.I press & courtல சொல்லல, court க்கு கைரேகை இருக்குனு நானும்,S.I சோ்ந்து document submit பண்ணிட்டோம்.

S.I எங்கிட்ட(நான் +எங்க department members அன்னக்கி spot ல இருந்தவங்க) personnal ல இத்தப்பத்தி பேசுனாரு, நாங்களும் அந்த பொண்ணு தண்டிக்கப்படலனு ஒத்துக்கிட்டோம்.

அந்த case முடிச்சிப்போச்சி, ஆனா, கொலையாளி யாருனு மட்டும் கடைசிவரை கண்டுபிடிக்க முடியல.

ஆனா, எனக்கு மட்டும் தொியும் அந்த கொலையை பண்ணுனது யாருனு.

எப்படினா, மாதவன் சுட்டப்பட்டது பின் கழுத்துல ஆனா, அவரு திரும்பி கிடந்தாா்.

அது மட்டும் இல்ல அவரோட 2 shrit button ல முடி மாட்டிக்கிட்டு இருந்துச்சி. அது ரொம்ப நீட்டு முடி எப்படினா, அந்த முடி சாியா உயரத்துல இருக்குற பொண்ணோட கணுக்கால் தொட்டும், அந்த அளவுக்கு நீட்டு, ஆனா, மதிக்கும், காவ்யாக்கும் சராசாிய விட கம்மியான கூந்தல் தான், அப்பவே, முடிவு பண்ணிட்டேன் வேற யாரோதான் கொலையாளின்னு.

அந்த முடி எதுவரைக்கு போகுதுனு பார்த்தேன், அங்க ஒரு இரத்தம் படிஞ்ச கை ரேகை ஒன்னு இருந்துச்சி, அத நான் பிரதி எடுத்தேன். நான் எடுத்த பிரதியையும், முடியையும் நான் யாருகிட்டை காட்டல, நான் தனிய எடுத்துட்டு, வீட்டுக்கு வந்துட்டேன்.

அந்த கை ரேகையில் கட்டை விரல் பாதி துண்டாகி சதை மட்டும் ஒட்டிக்கிட்டு இருந்துச்சி., உடனே இரண்டு பேரோடு விரலை பாத்தேன், ஆனா, இரண்டு போ் கையிலையும் அப்படி ஒரு தடமே இல்லை. அது மட்டுமில்ல மூன்னு பேரு கையிலையும் இரத்த கரையும் இல்ல அப்பவே, முடிவு பண்ணிட்டேன் வேற யாரோதான் கொலை பண்ணியிருக்காங்க, ஆனா அது ஒரு பொண்ணா இருக்கலாம்னு முடிவும் பண்ணினேன்.

மறு நாள், காலையில நான் officeku போகும் போது என் table ல ஒரு portrait இருந்துச்சி, அது என்ன னா. ” கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பது பொய், தீர விசாாிப்பதே மெய்”

மெய் னு இருக்கிற இடம் இரத்தக்கறையா இருந்துச்சி, நேத்து நான் பாா்த்த அதே இரத்த கறை, உடனே, அதையும் பிரதி எடுத்தேன்.

இதுல ஏதோ மா்மம் இருக்குனு நினைச்சி இந்த case இரகசியமா handle பண்ண ஆரம்பிச்சேன்,

கொலை நடந்த இடத்துல இந்த தடயம் கிடைச்சிச்னா அப்ப கொலையாளி செத்தவங்களுக்கும், காவ்யாவுக்கும் நல்ல பழக்கப்பட்டவங்களா தான் இருக்கனும் முடிவு பண்ணினேன், காவ்யா வை meet பண்ணலானு போன ஆனா, அவங்க சுய நினைவிலே இல்ல.

Last One month அவங்க facebook, instagram, எல்லாத்தையும் check பண்ணுன அது எல்லாதையும் அவங்க last one month எந்த ஒரு update பண்ணல, அவங்க whatsapp மட்டும் தான் use பண்ணியிருக்காங்க, message and voice record எல்லாம் மாதவன் கிட்ட மட்டும் தான் பண்ணியிருக்காங்க. இப்படி தேடுறது சாிப்பட்டு வராது னு முடிவு பண்ணுன,

காவ்யாவோட close friend யாராச்சம் இருக்காங்களானு விசாாிச்சா எதாச்சம் detail கிடைக்கும் நினைச்சேன், காவ்யாவோட full detail collecte பண்ண ஆரம்பிச்சேன். காவ்யா வீடு எங்க இருக்குனு S.I கிட்ட கேட்டேன்.

அப்பதான், காவ்யாவோட detail கிடைச்சிச்சு, காவ்யாக்கு அப்பா, அம்மா இல்ல Littlebee charity house ல தான் வளர்ந்து இருக்கா, Mary Nun வோட incharge ல இருந்திருக்கா, அதனால நான் Little bee charity house போனேன், mary காவ்யாவை நினைச்சி ரொம்ப வருத்தப்பட்டாங்க.

Mary காவ்யா பத்தியும் வேணி பத்தியும் சொன்னாங்க, “காவ்யா ரொம்ப நல்ல பொண்ணுங்க, அவ கொலை பண்ணிருக்க மாட்டா, வேணி இருந்திருந்தா இப்படி ஆயிருக்காது, யாரு வேணி காவ்யாவோடு close friend, இரண்டு பேரும் ஒன்னாதான் வளா்ந்தாங்க ஒரே room தான், வேணியும், காவ்யாவும், எங்க trinity college ல தான் M.A Applied linguistics final year படிச்சாங்க, last exam முடிஞ்சி வெளியில போயிட்டு வரேன்னு போனவங்க தான். அன்னக்கு road accidentல வேணி spot out அப்ப இருந்தே ரொம்ப distrub ah தான் இருந்தா, அது தான் அவள ரொம்ப பாதிச்சி இருக்கனும்”.

அவங்க தங்கி இருந்த room நான் பார்க்கலாமா னு கேட்டேன். “ஓ! தாரளமா வாங்க போகலாம்,” அந்த room நான் பார்த்தேன், அங்க அந்த நீட்டு முடியவும் பார்த்தேன், அது மட்டுமில்ல A symbol போட்ட key chain, greeting card ல lovely A னு இருந்துச்சி, அப்போதான் எனக்கு காவ்யாவோடு mobile password A pattern எனக்கு ஞாபகம் வந்துச்சி.

வேணியும்,காவ்யாவும் சோ்ந்து எடுத்த photo எதாச்சம் இருக்கா, “இல்ல சார், அவங்க இரண்டு பேரும் சோ்ந்து photo எடுத்தா பிாிச்சிருவோம்னு எடுக்கலங்க சாா்”. அவங்க செலவுக்கு காசுக்கு எல்லாம் என்ன பண்ணுவாங்க னு கேட்டேன், அதுக்கு அவங்க இரண்டு பேரும் vita spoken english class எடுக்கிறாங்கன்னு mary சொன்னாங்க .

அவங்க வேலை பாா்த்த vita spoken english class இருக்கிற lakshmi complex க்கு போனேன், ஆனா, அது May 01 government holiday close ah இருந்துச்சி.

என் secretary மயில்சாமி யை உடனடியா நான் பாா்க்கனும்னு Office௦க்கு வர சொன்ன, மயில் office வந்துட்டாரு,

“மயில் சாமி வேணியின் எதாவது road accident case 01 முன்னாடி நடந்துச்சா, அதாவது நான் joined பண்ணுருத்துக்கு முன்னாடி”.

சாா், ஆமாங்க 23.03.2016 வேணி,அஜய் road accident case தானங்க சாா்.

அஜய்?

எனக்கு A Symbol ஞாபகம் வந்துச்சி, நான் அவங்க accident spot report இருந்தா எடுத்து கொடுத்து கிளம்புங்க மயில் leave ல rest எடுங்கனு சொல்லிட்டேன், அவரும் report எடுத்து கொடுத்துட்டு கிளம்பிட்டாரு.

ஒரு white paper எடுத்து செத்துப்போனவங்க name எல்லாத்தையும் எழுத்துன,

Spot ல செத்து போனது அஐய், வேணி.போனல மாதவன்கிட்ட பேசுனது காவ்யா. அப்போ மதி யாரு?னு என்னக்குள்ளே கேள்வி கேட்டேன்.

வேணிக்குதான் நீட்டு முடி, மாதவன் செத்த இடத்துல இருந்த முடியும்,கை ரேகையும் வேணி தான் அப்படினா அப்ப கொலை செய்யது வேணினா, வேணி உயிரோட இருக்காளா, ஆனா, road accidentல போலீஸ் collect பண்ணு sample வேணி செத்து அப்புறம் எடுத்து, ஆனா மாதவன் dead body கிட்ட எடுத்த samples 2 மணி நேரத்துக்கு முன்னாடி உதிருன முடி, சாி idential twins இருந்து வந்து பழி வாங்குனானு நினைச்சிப்பாா்த்தா கூட கை ரேகை எப்படி ஒன்னா இருக்க முடியும்.

அப்ப ஆவி வந்து கொல்லுதுன்னா அதுக்கான valid reason என்னவா இருக்கும், பதில் காவ்யாவ தவிர யாருக்கிட்டை இல்லனு, நான் collect பண்ணுன details எடுத்துக்கிட்டு காவ்யாவை பாா்க்க அவள Admit பண்ணிருக்க hosptial க்கு போனேன், காவ்யா hosptial inner gardenல இருக்குற stone bench ல உட்காா்ந்து இருந்தா.

அம்மாடி காவ்யானு குப்பிட்டேன். “சாா், நீங்களா”, எப்படிம்மா இருக்கு உடம்புனு விசாாிச்சேன். பரவா இல்லங்க சாா்,

காவ்யா, எனக்கு கொலையாளி யாருனு தொியும், உன் friend வேணி தானே, எனக்கு என் அவ கொலை பண்ணுனானு மட்டும் தெரியனுமா உனக்கு தொிந்தா சொல்லுமா,

சாா், வேணி சாகல சார், கொன்னுட்டாங்க சாா்.

3 months before,

மாதவன், வேணி,நான்,அஜய்,மதி எல்லாரும் ஒன்னாதாங்க சாா், trinity collegeல M.A. Applied linguistics படிச்சோம், மாதவன் மதி பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தான், மதிக்கு மாதவன பிடிக்கல, மாதவனும் frustration ல விட்டுட்டான், ஆனா, வேணி மாதவன உயிருக்கு உயிரா love பண்ணுனா மாதவன் இல்லனா செத்துடுவேன் இருந்தா, மாதவன்கிட்ட love சொல்லிட்டா, மாதவன் வேணிய வெறுத்துகிட்டே இருந்தான், வேணி suicide try பண்ணிட்டாஅவ கையை அறுத்துகிட்டா, அவ கட்டை விரல் ஆழமா பட்டு பாதி சதை தொங்கிடுச்சி,

மாதவன் அப்புறமா ஏத்துக்கிட்டான் இரண்டு பேரும் உயிருக்கு உயிரா love பண்ணுனாங்க, என்னையும் ajayயும் போல, அஜய் என் மேல உயிரே வச்சிருந்தான்.

ஆனா, அஜயோட love பத்தி சொல்லி மதி அஜய் வீட்டுல பிரச்சனை பண்ணிக்கிட்டு இருந்தா, அஜய் & மதி cousins. அஜய்க்கு மதிய சுத்தமா பிடிக்காது, அஜய் மதிய college canteen ல வச்சி அசிங்கப்படுத்திட்டான்,  அதுல மதி அஜய் பழிவாங்கனு திட்டம் போட்டா,

மாதவன் மதிய கண்டுக்காம போனது மதிக்கு அசிங்காமாபோச்சி, வேணியையும் மாதவனையும் பிரிக்க நினைச்சா, வேணியும், அஜய் love பண்ணுறாங்க, suicide பண்ணிக்கிட்டது கூட உனக்காக இல்ல, அஜய் காக னு சொன்னா, மாதவன் தண்ணீ போட்டு வேணிய தரக்குறைவாக பேசிட்டான், வேணி ரொம்பவே மனசு ஒடஞ்சி போயிட்டா, அதனால கோவத்துல மாதவன் call சுத்தமா avoid பண்ணுனா, collegeல பேசுரதையும் avoid பண்ணா, இதை மதி பயன்படுத்திக்கிட்டா வேணி மேல தப்பான எண்ணத்தை ஏற்படுத்தினா, அது காட்டு தீ  போலபரவி, வேணி மேல இருந்த அன்ப மொத்தமா எரிஞ்சிப்போச்சி,

Cold house coffee shop அஜய்,வேணியும் இருக்கிறது தொிஞ்சிக்கிட்டு மாதவன,கூட்டிக்கிட்டு மதி coffee shop வந்தா, மாதவன கால பண்ணச் சொன்னா வேணிக்கு அவனும் பண்ணுனா, வேணி போன எடுத்தா எங்க இருக்கனு கேட்டான்,இவ room ல னு சொல்லிட்டு cut பண்ணிட்டா,

அஜய்&வேணியும், பேசிக்கிட்டு இருக்கிறத மதியும், மாதவனும் கேட்டுகிட்டு இருந்தாங்க பக்கத்து tableல இருந்து,

அஜய் சொன்னான், நம்ம 2 பேரோட love ah இன்னைக்கு open பண்ணிடுரேன், கவலை படாதனு சொல்லரத, மதி வேற விதமா மாதவன் கிட்ட convey பண்ணிட்டா,

பாத்திய, மாதவன் அவங்க love matter இன்னைக்கு open பண்ணுறாங்கலாம், மாத்தி சொல்லிட்டா, மாதவன் கோபத்துல எழுந்து போயிட்டான்,

மதி அவ plan execute பண்ணிட்டா, காா் accident மாதிாி set பண்ணி இரண்டு பேரையும் கொல்ல சொல்லிட்டா,

வேணியும், அஜயும் brother and sister மாதிாி ஆனா, தப்பா சொல்லிக் கொடுத்து வாழ்க்கையை கெடுக்க பாத்த்து மட்டுமில்லாம, உயிரையே எடுக்க துணிச்சா, காா் accidentல எங்க இரண்டு பேரு காதலும் செத்துப்போச்சி,

நான் பின்னாடி scootyல தான் வந்துட்டு இருந்தேன், actually நாங்க மூன்னு பேரும்தான் அங்க இருந்தோம், நான் washroom போன நேரத்துல தான் மதியும்,மாதவன் வந்திருக்காங்க , scootyல tyre காத்து இல்லனு, நான்தான் அவள வண்டியில போக சொன்னேன். வேணி உயிா் இருக்கும் போதே கழுத்துல கால வச்சி மதிதான் கொன்னா, என் அஜய பொிய rod ஆல மண்டையிலே அடிச்சிக்கொன்னா சாா்.

அததான் மாதவன் கிட்ட பல முறை சொல்ல try பண்ணினேன் ஆனா மதி கெட்டுத்துட்டா, மதி parents கிட்ட மாதவன், மதியும் love பண்ணுறத சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு, அன்னைக்கு கல்யாணத்தை நிறுத்த தான் போனேன் வேணி தான் எனக்குள் புகுந்து மதிய  கொல்ல வந்தா, மாதவனுக்கு உண்மை தொிஞ்சி அவனே வேணி கையாளே பின்வாக்கில் சுட்டு கிட்டான் சாா்,

இதான் நடந்துச்சினு அவ சொல்லி முடிக்கும் போது, என் தோள் மேல் யாரோ கைய வைத்த மாதிாி இருந்துச்சி, யாருனு பாா்த்தா S.I என்ன சார் நானே உங்கள குப்பிட்டாலுனும் இருந்தேன்,

என்ன விசயம் சாா்

மாதவன் murder case மொத்தமா முடிவுக்கு வந்துருச்சி சாா்.

ஆமா, முடிவுக்கு வந்துருச்சி,

எப்படி உங்களுக்கு தொியும்,

இப்பதான் காவ்யாகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்  சொன்னாங்க,

காவ்யாகிட்டையா, சாா்  காவ்யா செத்து 2 weeks ஆகுது, அவங்க Death certificate வாங்கிட்டு போகதான் நானும் வந்தேன், நீங்க இந்த case பத்தி நிறையா think பண்ணி இப்படி பேசுறீங்க,

வாங்க சாா், நம்ம ஜீப்ல drop பண்ணுரேன்னு சொன்னாரு,

கையில இருக்கிற கவரை பக்கத்தில இருந்த குப்பைத்தொட்டில நான்தான் துாக்கிப் போட்டுட்டு வந்துட்டேன் அம்மா,

ஆனா, அந்த கவா் நம்ம பபீரேல இருக்கு, எப்படி. அப்பா பயமா இருக்குப்பா பேய் இந்த வீட்டுல இருக்காப்பா, இல்லம்மா நீ போயி கிளம்புனு சொல்லிட்டாரு அப்பா.

அம்மாடி, அம்மா voice

அப்பா அம்மா வராங்க, சாி சிக்கிரம் கிளம்பு,

ஏங்க ஆளங்க வந்துட்டாங்க பீரோவ துாக்க சொல்லுங்க, வேண்டாம் கிளம்புனு வேலைப்பாத்தவங்கிட்ட  கொடுத்துட்டு நாங்க அங்கிருந்து கிளம்பிட்டோம்.

வீட்டு கேட்ட தாண்டும்போது பிரோவச்சிருந்த roomல துப்பாக்கியில சுட்ட சத்தம் கேட்டுச்சு, என் மேல ஒரு portrait விழுந்துச்சி, அதுல அப்பா சொன்னமாதிாி வாசகம் எழுதுன photo”கண்ணால் காணப்பதும் பொய், காதால் கேட்பது பொய், தீர விசாாிப்பதே மெய்”.

அப்ப பயந்து கண்ண மூடின நான் கண்ண முழிக்கும் போது 10 நாள் ஆகி இருத்திச்சி, நான் hospital இருந்தேன், fever 128° ஆம்,

என்ன fever வரமாதிாி இருக்கா,

இதுக்குதான் நான் யாருகிட்டை இதப்பத்தி சொல்லுறத இல்ல, பயமா இருக்கு போல.

-மீனாகூஷி சிவக்குமாா்




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vidya Priyadarsini says:

    Nice ………

You cannot copy content of this page