ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க – 10
2096
0
ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே! – 10
கார்த்திக்: சொல்லு மச்சான்
ரவி: எங்கடா இருக்க?
கார்த்திக்: கேன்டீன் டா. நீ எங்க இருக்கடா?
ரவி: நா காலேஜ் பைக் பார்க்கிங். உடனே இங்க வாடா!
கார்த்திக்: சரிடா வரேன்.
அழைப்பை துண்டித்த கார்த்தி ரவியை காண கிளப்பினான். வனிதா கார்த்திக்கின் இரு கைகளையும் பிடித்து “கார்த்தி உன்னை எந்த அளவுக்கு காதலிக்குறேன் என்று உனக்கு தெரியும். இன்று நான் பிடித்த உனது கைகள் என்றுமே என் கைகளை விட்டு விலகதே” என்று வினவ கார்த்திக்கும் அதற்கு கண்டிப்பாக “நீரடித்து நீர் விலகாது” அதுபோல எனது உயிர் உள்ள வரை உன்னை விலகமாட்டேன் என்று பதில் அளித்தான்.
கோவை வீடு:
வலையை விரித்துவிட்டு இரைக்காக பசியுடன் காத்து இருந்த சுறாவுக்கு ஏமாற்றமே மிச்சம். அவளோட டார்கெட்டை கார்த்திக் தான். ஏனென்றால் வனிதாவிடமிருந்து தகவல் பெறுவது எளிது. அவளின் மொபைல் பாஸ்வேர்டுயை வினிதாவின் பிறந்த ஆண்டு தான்.
சிறிது நேரத்தில் வினிதாவின் போன் ஒலிக்கிறது….!!
அனிதாவிடம் இருந்து அழைப்பு.
சில வினாடிகள் யோசித்தாள். கார்த்திக் பற்றிய செய்தியை சொல்லலாமா? வேண்டாமா?
அழைப்பை எடுத்தாள்.
அனிதா: என்ன மச்சி காலேஜ்க்கு லீவா?
வினிதா: ஆமாடி. டயர்டா இருந்துச்சு அதான் லீவ் போட்டேன்.
அனிதா: டயடா? நைட் என்னடி பண்ண?
வினிதா: அடச்சீ! ஒன்னும் பண்ணல டி!
பேசிக்கொண்டிருக்கும்போதே வினிதாவின் யோசனை கார்த்திக்கின் முகநூலில் பார்த்த அவனின் நண்பர்களே டார்கெட் பண்ணலாம் என்று யோசனை உதித்தது.
வினிதா: மச்சி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறியா?
அனிதா: சொல்லுடி மச்சி உனக்கு இல்லாமையா?
வினிதா: ஒன்னும் இல்லடி! என் அக்கா நம்ம காலேஜ்ல ஒரு பையன லவ் பண்ணுறடி?
அனிதா: யாரு நம்ம வனிதா அக்காவா? என்னடி இந்த பூனையும் பால் குடிச்சாச்சா?
வினிதா: ஆமாடி! சரி நான் அவனோட facebook profile யின் லிங்க் அனுப்புறேன். அதுல ரவி மெக் (Ravi Mech) என்று ஒரு ஐடி இருக்கும். அவனுக்கு உன் பேக் (fake) ஐடில இருந்து ஒரு ரெக்யூஸ்ட் அனுப்பு. அப்படியே அவனைப் பத்தி full details கரெக்ட் பண்ணுடி.
அனிதா: சரி ஆகட்டும் டி!
என்றவுடன் அழைப்பு துண்டித்தது.
காலேஜ் பைக் பார்க்கிங்:
கார்த்திக்: என்னடா மச்சான்?
ரவி: மச்சான் ஜாஸ்மின்டு. ஒரு செம ஃபிகர் பேஸ்புக்ல ரெக்யூஸ்ட் கொடுத்திருக்கிறாராடா?
கார்த்திக்: அடச்சீ இதுக்குத்தான் கூப்பிட்டியாடா?
ரவி: ஆமாடா. உனக்கும் வந்திருக்கா என்று பாருடா?
கார்த்திக்: நான் ஏண்டா பார்க்கணும். எனக்குத்தான் என் தேவதை வனிதா இருக்காளாடா?
ரவி: சரி உன் போனை கூடு நான் பார்க்கிறேன்.
கார்த்திக்கு உடைய போனை திறந்து பார்த்த ரவி. அதில் எந்த ரெக்யூஸ்ட் இருக்கும் வரவில்லை. ஆனால் இன்பாக்ஸ்க்கு Gray Devils Girls என்ற ஐடியில் இருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது. என்ன மெசேஜ் என்று பார்க்காமல் அதனை கிளிக் செய்து விட்டான். கார்த்திக் அவன் கையிலிருந்த போனை பிடிங்கி தனது பாக்கெட்டில் வைத்து விட்டு. அவனை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டான்.
இனி வினிதாவின் வேட்டை ஆரம்பம்.
தொடரும்.
Comments are closed here.