நிழல்நிலவு – 36
8367
15
அத்தியாயம் – 36
மிருதுளாவை உறங்க வைக்கும் வரை இயலபாக இருந்த அர்ஜுனின் முகம் அதன் பிறகு கருங்கல் போல் இறுகியது. அவன் கண்கள் கழுகு போல் சுற்றும்முற்றும் வட்டமிட்டுக் கொண்டே இருந்தன. ஆம்… மிருதுளாவின் கணிப்பு சரிதான். தங்களை யாரோ பின்தொடர்வதாக அவன் சந்தேகப்பட்டது உண்மைதான். அவள் முகத்தில் மிரட்சியைக் கண்டதும், இலகுவாகி சூழ்நிலையின் தீவிரத்தை குறைத்து அவளை உற்சாகப்படுத்தினான்.
அதன் பலனாகத்தான் இப்போது அவன் தோளில் சாய்ந்து நிம்மதியாக அவள் உறங்கி கொண்டிருக்கிறாள். அதீத எச்சரிக்கையோடு மிக மெதுவாக படகை செலுத்திக் கொண்டிருந்தவனின், புலன்கள் வெகு கூர்மையாக சுற்றுப்புறத்தை கவனித்துக் கொண்டிருந்தன.
டெல்லியிலிருந்து நேராக மிருதுளாவை பார்க்க வருவதில் அவனுக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. நாயக் குழு ஒருவேளை டெல்லியில் அவனை அடையாளம் கண்டிருந்தால் நிச்சயம் பின்தொடர கூடும். அவர்களுடைய மோப்ப சக்தி மிருதுளாவைப் பற்றி அறிந்துக்கொள்ளும் அளவிற்கு வலுவானதாக இல்லாமல் இருந்திருந்தால், இந்த வரவின் மூலம் தானே அவளை பற்றி அவர்களுக்கு துப்புக் கொடுத்ததாகிவிடுமே என்று எண்ணினான். ஆனாலும் அவனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. மிருதுளாவுக்கு காவலாக டேவிட்டை வைத்தது, பாலுக்கு பூனையை காவல் வைத்தது போல் அவன் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டே இருந்ததில் ஓடோடி வந்துவிட்டான்.
இப்போது அவளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம். காரணம் இரண்டு… முதல் காரணம் நாயக் ஆட்கள்… இரண்டாவது காரணம் டேவிட். இந்த இருவருமே அவளிடம் நெருங்குவதை அவன் விரும்பவில்லை.
இரவே எங்கு செல்ல வேண்டும், எப்படி செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டுத்தான் படுத்தான். வெளிப்படையான பயணம் மேலும் ஆபத்தைத்தான் கொண்டுவரும் என்பதால் மிராஜபாடாவைவிட்டு வெளியேறுவதற்கு, நிழல் கூட பின்தொடர தயங்கும்… முதலைகள் நிறைந்த இந்த கால்வாயில் பயணம் செய்ய துணிந்தான். எதிரிகள் சுதாரிப்பதற்குள் காற்றில் கரைந்துவிடலாம் என்பது அவன் கணக்கு. ஆனால் கணக்கில் ஏதோ பிழை இருப்பது போல் இப்போது தோன்றுகிறது.
பறவைகளின் கிரீச்சிடலில், சருகுகளின் சரசரப்பில், காற்றின் வாசத்தில் ஏதோ வித்தியாசம் இருப்பது போல் தோன்றி கொண்டே இருந்தது. அவன் உயிரைப் பற்றி கவலையில்லை… மிருதுளாவை பாதுகாப்பாக கொண்டுச் செல்ல வேண்டும். அதுதான் அவனுக்கு மிக முக்கியம். இதோ… இன்னும் சற்று தூரம்தான்… பத்துப் பதினைந்து நிமிடத்தில் பக்கத்து தீவை அடைந்துவிடலாம். நிதானம் இழக்காமல் எதற்கும் தயார் நிலையில் இருந்தபடியே படகை செலுத்திக் கொண்டிருந்தான். நல்லவேளை… அஞ்சியபடி எந்த பிரச்சனையும் வரவில்லை. குறைந்தபட்சம் அப்போதைக்கு…
படகு கரையோரம் வந்து சேர்ந்த பிறகும் மிருதுளா கண்விழிக்கவில்லை. அர்ஜுன்தான் அவளை தட்டி எழுப்பினான். சுருக்கிய கண்களுடன் சுற்றுப்புறத்தில் தெரிந்த வித்தியாசத்தை கவனித்துவிட்டு, “எங்க வந்திருக்கோம்?” என்றாள் முழுமையாக உறக்கம் கலையாமல்.
“சொல்றேன்… வா…” – அவளை கைபிடித்து அழைத்துக் கொண்டு கீழே இறங்கினான். மாலை வெயில் முகத்தில் வந்து குத்தியது.
“பிதர்கானிகா…”
“என்ன!” என்று வியந்தவளுக்கு உறக்கம் நன்றாகவே கலந்துவிட்டது. “மிராஜ்பாடா போகலையா? ஏன் இங்க வந்திருக்கோம்?” – குழப்பத்துடன் கேட்டாள்.
“சொன்னேனே… உனக்கு ஒரு சர்ப்ரைஸ்” – கண்சிமிட்டி புன்னகைத்தான்.
“அப்படி என்ன சர்ப்ரைஸ் கொடுக்க போறீங்க?” – பதில் புன்னகையோடு அடுத்த கேள்வியை கேட்டாள்.
“அதை காட்டும் போது தெரிஞ்சுக்கோ… இப்போ வா…” – இழுக்காத குறையாக அழைத்துச் சென்றான். சிறிதளவும் சந்தேகப்படாமல் அவன் சொன்னதை அப்படியே நம்பினாள் மிருதுளா.
அன்று இரவு அவர்கள் தங்கியது ஒரு மண் குடில்…. முற்றிலும் மூங்கில்களாலும், மாட்டுச்சாணம் பூசப்பட்ட மண் சுவர்களாலும் கட்டமைக்கப்பட்டிருந்த சிறு குடில்.
அவளுக்கு எதுவுமே புரியவில்லை. தூங்கி எழுந்து சாதாரணமாக வெளியே வந்து நின்றவளை வாக்கிங் போகலாம் என்று சொல்லிவிட்டு தீவுவிட்டு தீவு கடத்திக்கொண்டு வந்து மண் குடிசையில் தங்க வைத்திருக்கிறான். அதுவும் தனியாக…
“இது யாரு வீடு அர்ஜுன்?” – குடிலை கண்களால் வட்டமடித்தபடி கேட்டாள்.
“நம்ம வீடுதான். நகரு அந்த பக்கம்…” – சுவரோரம் சாய்த்து வைக்கப்பட்டிருந்த நாடாக்கட்டில் ஒன்றை நிமிர்த்திப் போட்டபடி அவளுக்கு பதில் சொன்னான்.
அந்த கட்டிலையும் சுவரோரமிருந்த மண் அடுப்பையும் ஓரிரு பாத்திரங்களையும் தவிர வேறொன்றும் இல்லை அங்கு.
“யாரையும் காணுமே!”
“அதான் நாம இருக்கோமே…”
“நாம இப்ப இருக்கோம். இதுக்கு முன்னாடி இங்க யாரு இருந்தா?”
“பூட்டை நான்தானே திறந்தேன். வேற யாரு இருந்திருக்க முடியும்?” – விதண்டாவாதமாகவே பதில் சொல்லிக் கொண்டிருந்தான். அதில் எரிச்சலுற்றவள்,
“அடிக்கிற காத்து கொஞ்சம் வேகமா அடிச்சா குச்சி கூட மிஞ்சாது. இந்த குடிசலுக்கு கதவே ஓவர்… இதுல பூட்டு வேறயா?” என்று முதன்முறையாக அவனிடம் பகடி பேசினாள்.
அதை ரசித்து சிரித்தவன், “பக்கத்துலதான் ஹனிமூன் ரிசாட் இருக்கு. அங்க வேணா கிளம்பிடுவோமா?” என்றான் தன் முறைக்கு.
‘அடப்பாவி!!!’ – குபீரென்று புது ரெத்தம் பாய்ந்தது போல் முகம் சிவந்து சூடானது அவளுக்கு. வெட்கத்துடன் உள் கன்னத்தை கடித்தாள். அவனை நிமிர்ந்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு கூச்சம் ஆட்கொண்டது. முயன்று தன்னை இயல்பாகக் காட்டிக் கொண்டு, “அதுக்கு கல்யாணம் ஆயிருக்கணும்” என்றாள்.
அவளிடம் ஏற்பட்ட திடீர் மாற்றங்களை வியப்புடன் கண்டவன் அவளை கண்களாலேயே விழுங்கியபடி, “நான் ரெடி” என்றான்.
‘கடவுளே!’ – அவளால் பதில் பேச முடியவில்லை. வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் பட்டாம்பூச்சி படபடத்தது. சின்ன குடில்… அவளோடு அவன்… சூரியன் மங்கி வெளிச்சம் குறைந்துக் கொண்டிருக்கிறது… மின்விளக்கு…? சுவிட்ச்…? – அவள் கண்கள் வட்டமடித்தன.
“என்ன ஆச்சு?” – திடீரென்று அவள் காதோரம் ஒலித்தது அவன் குரல்.
“ஆங்! ப…பசி… பசிக்குது” – பதட்டத்தில் சம்மந்தமில்லாமல் பேசினாள்.
அவன் கைகளை உயரே தூக்கி நெளிவெடுத்தபடி, “எனக்கும்… ரொம்…ப… பசிக்…குது…” என்று கூறிவிட்டு படக்கென்று கண்ணடித்தான்.
குப்பென்று வியர்த்துவிட்டது அவளுக்கு. “வே…ர்…க்குது…ல்ல…? ஃபேன் இல்ல… லைட் கூட இல்லையே! கரண்ட் கனக்ஷனே இல்லையா?” – உளறி கொட்டினாள்.
“இந்த குடிசலுக்கு கதவே ஓவர்… கரண்டு எதுக்குன்னு விட்டுட்டேன். சரிவா… முழுசா இருட்டறதுக்குள்ள சாப்பாட்டுக்கு ஏதாவது வழிப்பண்ணுவோம்” – வேண்டுமென்றே அவளை வம்பிழுத்தபடி அடுப்புக்கு அருகே இருந்த தட்டுமுட்டு சாமான்களை உருட்டினான்.
என்ன செய்கிறான் என்று அருகில் சென்று பார்த்தாள் மிருதுளா. அங்கே இருந்த அரிக்கன் விளக்கை ஏற்றி தாழ்வாரத்தில் மாட்டிவிட்டு, சுவற்றில் மாட்டியிருந்த பை ஒன்றை எடுத்தான். அதில் பிரெஷாக காய்கறிகள் இருந்தன. அவர்கள் வருவார்கள் என்று தெரிந்து யாரோ வாங்கி வைத்திருப்பது போல் தோன்றியது.
“இதெல்லாம் யார் இங்க வாங்கி வச்சது அர்ஜுன்?” – மனதில் தோன்றியதை வாய்விட்டே கேட்டாள்.
“உனக்கு தெரியாதவங்க” – காய்கறிகளை கழுவி நறுக்கியபடியே பதில் சொன்னான்.
இதுதான் அவளுக்கு பிடிக்கவில்லை. எவ்வளவு நெருக்கமாக காட்டிக் கொண்டாலும் அவன் அவளிடம் நெருங்கவே இல்லை. சரசமாக பேசினாலும்… இழைந்தாலும் எல்லாம் மேலோட்டமாகவே தெரிந்தது. அவனிடம் ஆழமான அன்பை அவளால் உணர முடியவில்லை. ஏதோ ஒன்று குறுக்கே நிற்கிறது. தொழிலா? அல்லது அவன் குணமே இதுதானா? முகம் வாட கட்டிலில் சென்று அமர்ந்துவிட்டாள்.
அர்ஜுன் அவளுடைய கோபத்தை பொருட்படுத்தவில்லை. தானாக வரட்டும் என்று விட்டுவிட்டு விறகடுப்பை பற்றவைத்து பத்தே நிமிடத்தில் சமையலை முடித்தான். அவனுடைய வேகம் அவளை ஆச்சரியப்படுத்தியது.
ஆர்வத்துடன் தன் மீது அடிக்கடி படிந்து மேலும் அவள் பார்வையை கவனித்தவன், தன்னுடைய கணக்கு சரிதான் என்று எண்ணி உள்ளுக்குள் சிரித்தபடி, “கமான் ஹனி… டின்னர் ரெடி. ரெண்டு பிளேட் இருக்கு… ஆனா நமக்கு ஒன்னு போதும் இல்ல…?” என்று அவளை சீண்டினான்.
சட்டென்று சுதாரித்த மிருதுளா கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு அழுத்தமாக அமர்ந்திருந்தாள். அதையும் புன்சிரிப்புடன் கவனித்தபடி, இரண்டு தட்டுகளில் உணவை பரிமாறி அவளிடம் ஒன்றை கொண்டுவந்து நீட்டினான்.
காய்கறி, பருப்பு, அரிசி அனைத்தையும் ஒன்றாக போட்டு ஏதோ செய்திருந்தான். வாசனை தூக்கியது…
“தேங்க்ஸ்…” – முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டே நன்றி கூறி தட்டை வாங்கி கொண்டாள்.
“ஸ்பூன் இல்ல… கைலதான் சாப்பிடணும். மேனேஜ் பண்ணிடுவியா… இல்ல நா ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?” – கண்களில் குறும்புடன் புருவம் உயர்த்தினான். அவளுடைய மனநிலையை மாற்ற சின்னதாக ஒரு முயற்சி செய்து பார்த்தான்.
அவள் இறங்கிவரவில்லை. முகத்தை திருப்பிக் கொண்டு, “நா ஒன்னும் அமெரிக்கன் ரிட்டன் இல்ல…” என்றாள். குழந்தை கோபம்… தோள்களை குலுக்கிக் கொண்டு உணவில் கவனமானான் அர்ஜுன்.
அவனுக்கு அவளை பிடித்திருக்கிறது என்பதும் அவளை தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவன் விரும்புவதும் உண்மைதான் என்றாலும், ‘இதை செய்தால் இது கிடைக்கும்’ என்கிற கால்குலேட்டிவ் மனப்பாங்கிலிருந்து அவன் வெளியே வரவில்லை. அதனால்தான் அவளுடைய கோபத்தினால் தானக்கு எந்த பாதிப்பும் வராது என்று உணர்ந்துவிட்ட பிறகு அவளை சமாதானம் செய்ய அவன் விழையவில்லை.
உணவிற்கு பிறகு, மிருதுளா கட்டிலில் படுத்துக்கொள்ள அர்ஜுன் தரையில் சாய்ந்துவிட்டான். போர்வை தலையணை எதுவும் இல்லாமல் கட்டாந்தரையில் அவன் படுத்திருப்பதை பார்க்க பரிதாபமாக இருந்தது அவளுக்கு. அவ்வளவு பெரிய மாளிகையில் வசிக்கிறவன் எப்படி எந்த வசதியும் இல்லாத இந்த குடிலில் இயல்பாக இருக்கிறான் என்கிற வியப்பும் கூடவே எழுந்தது.
இந்த குடிலில் இருக்கும் ஒரே வசதி மேல்கூரை… அதுவும் இல்லாத காட்டில் கூட நாள் கணக்கில் அவனால் பொருந்தி வாழ முடியும் என்கிற உண்மை அவளுக்கு புரியவில்லை.
இரவெல்லாம் அவளால் உறங்கவே முடியவில்லை. ஒரே கொசு… கூடவே குளிர்… அவ்வளவு நேரம் பாடுபட்டுவிட்டு அப்போதுதான் கண்ணயர்ந்தாள். உடனே எழுப்ப துவங்கிவிட்டான் அர்ஜுன்.
“ப்ளீஸ்… அர்ஜுன்… கொஞ்ச நேரம்… இன்னும் விடியவே இல்ல…” – கண்களை பிரிக்கவே முடியவில்லை அவளுக்கு.
“அதெல்லாம் நல்லாத்தான் குறட்டை விட்ட… எழுந்திரு…” – அதட்டினான்.
கொசு கடிக்கிறது… குளிர்கிறது என்று புலம்பித்தள்ளி அவனைத்தான் அவள் உறங்கவிடவில்லை. அவளுடைய குளிருக்காக, மண்சட்டியில் விறகுகளை உடைத்துப் போட்டு தீமூட்டி கதகதப்பாக கட்டிலுக்கு அருகில் வைத்துவிட்டு, தீ வேறெங்கும் பரவிவிடக் கூடாதே என்று விடியவிடிய அவன்தான் உறங்கவில்லை.
“மிருதுளா…” – குரலை உயர்த்தினான்.
“ம்ம்ம்” – உறக்கம் கலையாமல் முனகினாள்.
“கெட் அப் பேபி…”
“சன் வரட்டும் அர்ஜுன்”
“சன் வந்துடிச்சுன்னா என்னோட சர்ப்ரைஸ் பிளான் ஸ்பாயில் ஆயிடும் ஸ்வீட்டி… எழுந்திரு…” – தோள்களை பிடித்து தூக்கினான். துவண்டு விழுந்தவளை கன்னத்தை தட்டி பிடிவாதமாக விழிக்கச் செய்தான்.
இவ்வளவு சுகமான தூக்கத்தை தியாகம் செய்யும் அளவுக்கு உண்மையிலேயே அந்த சர்ப்ரைஸ் ‘ஒர்த்’தானா என்கிற சந்தேகத்துடனேயே எழுந்தாள் மிருதுளா.
15 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kurinji says:
Inru epi irukka nitya
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Karthigan says:
Late aagum pa… correction poyittu irukku
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sug says:
Ven s next ud?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Afrin says:
Akka next ud epo
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Enna nithuma neenga ipadi panureengale ma…… ovoru epi m suspense thana….. engaluku manda kayuthu epadi apadiyanu…… vachu seyreenga engala mudiyala…. athunala naangelam paavam nu nenachu seekiramave next epi post panuga……fabulous episide….. but I feel aju va etho oru karanathukaha than suthalla viduranu thonuthu…. mirthu amma voda ph switch off la irukurathuku avan than karanama irupano…..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Selvi Ong says:
Wow! very interesting. When will be the continuation? Looking forward eagerly.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Selvalakshmi Suyambulingam says:
Nice Episode.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sug says:
Arjun mithu va ena purpose kaga kuda vachurukan. .ippo dan love panran.ok…..but first avakita arjun oda motive ena?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Love panurana…… but etho idikuthu….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Samri Thi says:
Apadi enna thambi surprise vachuruka!? Ennoru thiva katta poriya?Thievu thiva evanoda thavurathuthan eni un thalaieluthu Miri.. so sad … Nayak family ta erunthu evala enn maraika ninaikuran? Epo sis confuse suspense lam odachu engala theliya vaipinga…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Nayak than mirthu sona army man appava irukumo
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Priya Ganeshan says:
Nice ud sis👌👌👌👌👌
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kurinji says:
Peikku vaalkai partial murungai Maram eranum miru…one man army.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Afrin says:
😂😂😂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Yarukku vaalka pattalum apapo murungai maram erithan aakanum kurunji…. ilena nama vaalra society la nimathiya vaala mudiyathu….