ஹேய் ! நீ ரொம்ப அழகா இருக்க-11
1691
0
வினிதாவின் மடிக்கணினி (லேப்டாப்) பீப் சவுண்ட்யை ஒலித்தது…!!
படுக்கையிலிருந்து ஆவலுடன் ஓடினாள். கருப்பு திரைகளை அகற்றிவிட்டு தனது ஹேக்கிங் வேலையை தொடங்கினாள்.
mSpy சாப்ட்வேரை பயன்படுத்தி ஸ்பை அப் (Spy App) யை அவனது போனில் இன்ஸ்டால் (Install) செய்தால்.
முதலில் வாட்ஸ் அப்பில் இருந்து தொடங்கி கார்த்திக்கின் முழு போனையும் அவளது கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தாள்.
அவள் கார்த்திக்யின் போனை எந்தளவுக்கு ஹேக் செய்தாள் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் மிகவும் அதிர்ச்சி அடைவீர்கள்.
கார்த்திக் போனின் நிலைமை:
SMS செய்திகளைப் படிக்க முடியும்.
தொலைபேசிக்கு வரும் இன்கம்மிங் கால் மற்றும் அவுட்கோயிங் கால் அழைப்புகளையும் கண்காணிக்கவும் முடியும்.
ஜிபிஎஸ் டிராக்கிங் (GPS Tracking)
அவன் போனுடன் எந்த இடத்திற்கு சென்றாலும் அதனை அவளால் அறிய முடியும்.
இன்டர்நெட் பிரவுசர் (Internet Browser)
அவனின் பிரவுசர் எந்த வலைப்பக்கத்தின் முகவரி உள்ளே சென்றாலும் அவளால் பார்வையிட முடியும்.
Whatsapp history, Chats, வாட்ஸ் அப்பில் வரும் கால், நீக்கப்பட்ட செய்திகளை கூட அவளால் பெற முடியும்.
இவள் பார்வையிடுவதை கார்த்தியால் அரிய முடியவே முடியாது. மொபைல் ஃபோனில் antivirus சாப்ட்வேர்கள் மூலம் கூட இவள் கண்காணிப்பதை கண்டறிய முடியாது.
Facebook சமூக ஊடகத்திலிருந்து செய்திகளை எளிதில் படிக்க முடியும், பேஸ்புக் கணக்கின் மூலம் நிகழ்த்தப்படும் எந்தவொரு அழைப்பையும் கண்காணிக்க முடியும்.
மொபைல் போனின் திரையில் செயல்பாடு அனைத்தையும் கண்காணிக்க முடியும்.
ஒரு வழியாக கார்த்திக்கின் போனை அவளின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டாள். அதன் கண்ட்ரோல்களை தனது லேப்டாப்பில் இருந்து தனது மொபைலுக்கு ரிமோட் (Remote) ஆக்கிக் கொண்டாள்.
அவனின் தனிப்பட்ட தகவல்களை அனைத்தையும் சேகரித்து தனது லேப்டாப்பில் Hidden Floder யில் பதிவு செய்தாள்.
அவனது லேப்டாப்பை தனது கன்ட்ரோலுக்கு கொண்டு வரவேண்டும் என்று ஸ்பேம் (Spam) இமெயிலை தயார் செய்து அவனது ஈமெயில் id-க்கு அனுப்பி வைத்தாள். இனி கார்த்திக் வினிதாவின் தூண்டிலில் சிக்கிய மீனாக துடிக்க போகிறான்.
அன்றைய பொழுது அவளுக்கு அவனது போனில் ஓடியது.
வனிதா கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தாள். பிறகு இருவரும் அப்பாவின் பிறந்த நாளைக்கு கிஃப்ட் வாங்க கிளம்பினார்கள்.
வனிதா வினிதாவிடம் கார்த்திகை மாலுக்கு வர சொல்லவா என்று கேட்டாள். அதற்கு வினிதாவும் வர சொல் என்று கூறினாள். வனிதா brookefields ஷாப்பிங் சென்டருக்கு வா என்று கார்த்திக் மெசேஜ் அனுப்பினாள். வினிதா தனது போன் மூலம் கார்த்திக்கின் வாட்ஸ் அப்பை ஓபன் செய்து மெசேஜ்யை பார்த்து விட்டு உடனே வெளியேறி விட்டாள்.
வனிதாவும் கார்த்திக்கின் ரிப்ளையாக காத்து இருக்க பதில் எதுவும் வரவில்லை. அவளின் மனதில் சிறிய கோப தீ பற்றியது.
மெசேஜ்யை பார்த்து விட்டான். ஆனால் ஏன் பதில் கொடுக்கவில்லை என்றும், “காலையில் அவன் தான் வெளியில் சந்திக்கலாம்” என்றது அவள் ஞாபகத்தில் வரவே கோவம் சற்று கூடியது.
அருகில் வினிதா அவளின் கோப தீயில் குளிர் காய தொடங்கினாள்.
“சரி வனி விடு! அவர் எதும் பிஸியா இருக்க போறார்”
இன்னும் சுட்டை ஏற்றிவிட்டாள்.
“இல்ல வினி” உனக்கு தெரியாது டி!
காலையில் கார்த்திக் பேசியதை அப்படியே அவளிடம் ஒப்படைத்தாள் நம்ம அப்புராணி. ☹️
காலையில் எனக்கு தெரியாமா இதுலாம் நடந்து இருக்குகிறதா? (வினியின் மைண்ட் வொய்ஸ்)
1 மணி நேரத்திற்கு பிறகு:
கார்த்திக் மெசேஜ்யை பார்த்தான்.
அவனும் அவளைக் காண மாலுக்கு கிளம்பினான்.
அவர்கள் முன்பு முடிவு செய்தபடி தனது அப்பாவிற்கு VV பெயர் பொறித்த மோதிரத்தை ஆர்டர் செய்தார்கள். பிறகு புதிய மொபைல் Huawai Mate 20 ஒன்றை அவருக்காக வாங்கினார்கள்.
மாலில் வனிதாவை கண்ட கார்த்திக்கின் வகுப்பு தோழி சுனிதா, வனிதா விடும் பேச அருகில் வந்தாள். ஆனால் எதிர் முனையில் கார்த்திக் வருவதை பார்த்து மறைந்து கொண்டாள். 🤠
தொடரும்.
Comments are closed here.