ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க-12
1162
0
மூவரும் சந்தித்து கொண்டார்கள். அங்கு இருந்து அருகில் உள்ள ஜூஸ் ஸ்டாலுக்கு சென்று பேச தொடங்கினார்கள்.
கார்த்தி: வினி உனக்கு என்ன ஜூஸ் ஆர்டர் பண்ண?
வினிதா: கிவி ஜூஸ்
கார்த்தி: அது சரி! அக்காக்கும், தங்கைக்கும் ஒரே டேஸ்ட் தானா?
வனிதா: ஆமா! கார்த்தி. நாங்க ட்வின்ஸ் தான் இல்ல. மத்தப்படி எங்க டேஸ்ட் எப்பவும் ஒன்னாத்தான் இருக்கும்.
கார்த்திக் ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு வந்து அமர்ந்தான். அமரும் போது தனது மொபைலை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதை வினிதா கவனித்தாள்.
ஏதாவது செய்ய வேண்டுமென்று அவளுக்கு யோசனை தோன்றியது.
உடனே தனது மொபைலை எடுத்த வினிதா, கார்த்திக்கின் போன் Dialer உள்ளே சென்று கார்த்திக்கின் அப்பா மொபைலுக்கு கால் செய்து விட்டாள்.
காலிங் டு டேட்…!
கார்த்தியின் அப்பா சங்கர் அங்கு அழைப்பை எடுத்தார்…!!
ஹலோ கார்த்தி!
ஹலோ டேய் கார்த்தி! ஆர் யூ தேர்..!!
வினிதா தன்னிடமிருந்த ப்ளூடூத் ஹெட்செட்டை காதில் மாட்டினாள்.
பிரச்சனையை பெரிசாக்கி விட வேண்டும் என்பது அவனது உள்மனது சொன்ன யோசனை.
அதனால் கார்த்திக் வனிதாவின் காதல் விவகாரத்தை எடுத்து விட்டாள்.
வினிதா: கார்த்தி உங்கள் லவ் விஷயத்தை வீட்டில் சொல்லிட்டீங்களா? வீட்ல எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? எதுவும் பிரச்சினை வருமா?
கார்த்தி: இல்லப்பா. இன்னும் சொல்லலை. அப்பாவும் நினைச்சாதான் பயமா இருக்கு. அம்மா பிரச்சனை பண்ண மாட்டாங்க இதுக்கெல்லாம். என் விருப்பமே அம்மாவுடன் விருப்பம். ஆனா அப்பாவா தான் சமாளிக்கணும்.
வனிதா: don’t worry கார்த்தி. அங்கிள்டா அதெல்லாம் பேசி புரிய வைக்கலாம்.
கார்த்தி: எஸ் டியர். யுவர் கரெக்ட்.
வினிதா: ஆமா கார்த்தி. அதுக்கு இன்னும் டைம் இருக்கு. அதனால நீங்க அத நினைச்சு worry பண்ணாதீங்க.
அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த சங்கர் வந்த காலை துண்டித்து மீண்டும் கார்த்திக்கு கால் செய்தார்.
காலிங் டு கார்த்தி…!
அந்த அழைப்பை எடுத்தான் கார்த்திக். எதிர்முனையில் சங்கர் கார்த்தியை திட்டி மேய்ந்தார்.
நீ எங்கடா இருக்க!
மாலில் இருக்கேன் அப்பா!
நீ அங்க என்ன பண்ற என்கிறது எல்லாம் எனக்கு தெரியும் உடனே வீட்டுக்கு கிளம்பி வா.
காலை கட் செய்த கார்த்தி. கால் ஹிஸ்டரியை பார்த்தான். வெகு நேரமாக அப்பாவிற்கு கால் ஆன் ஆகியிருந்ததை கண்டு பதட்டம் அடைந்தான்.
கார்த்தி: சீட்! சாரி வனி, வினி. அப்பாட்ட இருந்துதான் கால். சரி நான் வீட்டுக்கு கிளம்புறேன். நீங்க பாத்து பத்திரமா வீட்டுக்கு போயிடுங்க.
வனி, வினி: என்ன ஆச்சி கார்த்தி?
கார்த்தி: ஒன்னும் இல்ல வனிதா. நாளைக்கு பேசிக்கலாம். ஐ லீவ் நௌ; ஐ வில் சி யு டுமோரோ. பை!!!
பதட்டத்துடன் வீட்டுக்கு கிளம்பினான்….!!
Comments are closed here.