ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க-13
1000
0
இரவு 9 மணி
அனிதா ரவியுடன் பேஸ்புக்கின் messenger யில் உரையாடி ரவியை தன் பக்கம் இழுத்தாள். நான் உங்கள் கல்லூரியில் படிக்கும் பொன்னு தான். உங்களையும் தெரியும், உங்க friend கார்த்திக்கையும் தெரியும் என்று தொடங்கினாள்.
அவ்வளவுதான் நம்ம பையன் ரவி, தன்னுடைய சொந்த விஷயம் ஆரம்பிச்சு, கார்த்திக்கின் சொந்த விஷயம் வரைக்கும் உளறித் தள்ளினான்.
அவர்களின் சிறிய உரையாடல்:
ரவி : செல்லம் ஒன்னு சொல்லவா…
ஜாஸ்மின் : சொல்லுடா..
ரவி : என்ன ஏன் டீ லவ் பண்ற?
நான் உனக்கு என்ன பண்ணினேன்?
முதலே நான் ஒரு பொண்ண ரொம்ப deep ah லவ் பண்ணிருக்கேன்.
வெளிய சுத்தி இருக்ககேன்
அது தெரிஞ்சும் எப்படி லவ் பண்ற என்ன..?
கோவம் வரலயா..?.
ஏன் டீ?
ஜாஸ் : நான் உனக்காக பொறந்தவ டா..
எத்தனை பேரு வந்தாலும் எனக்கு நீ உனக்கு நான் அதான் விதி.
நான் உனக்கு முதல் காதலா இருக்க ஆசைப்படல.உன்னோட கடைசி காதலா இருக்கத்தான்
ஆசைப்படுறேன்.
நான் உன் லைப் ல வர வரைக்கும் எத்தனை பொண்ணு வேணா உன் லைப் ல cross பண்ணிருக்கட்டும்..
ஆனா நான் வந்த அப்புறம் நான் தான் கடைசியா இருக்கனும்..
இருப்பேன்..
நான் போனா தானே இன்னொருத்தி வருவா..!
நான் போகமாட்டேன்.
ஐ லவ் யூ டா…
ரவி: முதலும் கடைசியுமா நீ மட்டுமே என் வாழ்க்கை ல எனக்கு கிடைக்கனும் டீ..
love u so much
ஜாஸ் : love u toooo டா.. பை குட் நைட்
குறிப்பு: strangers என்னும் முகம் தெரியாதவர்கள் உடன் தனது சொந்த விஷயங்களை பகிர்வதன் மூலம் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதை தினமும் செய்திகளின் வாயிலாக நாம் அறிந்து வருகிறோம். இதில் அனைவரும் கவனமாக இருப்பது நல்லது.
கார்த்திக்கின் வீடு:
கார்த்திக்கின் தந்தை சங்கர் கார்த்திக்கை அழைத்து முதலில் படிப்பில் கவனம் செலுத்து, இது உனக்கு இறுதியாண்டு. இந்த கிரிக்கெட் லவ்வு எல்லாத்தையும் கொஞ்ச நாளைக்கு மூட்டை கட்டிட்டு ஒழுங்கா படிக்கிற வேலையைப் பார். இருக்கிற arrear எல்லாத்தையும் முதலில் கிளியர் செய் என்று பல அறிவுரைகளை கூறி கார்த்திகை அனுப்பி வைத்தார்.
திருப்பங்கள் எல்லாம் வரும் தொடர்களில் நிகழ இருக்கிறது.
தொடரும்…!
Comments are closed here.