காஜலிட்ட விழிகளே 15
1808
0
மறுநாள் காலையில் தருண் எப்போதும்போல கார்த்திக் குளிக்கப்போகும் முன் குளித்து விகார்த்திக்கை எழுப்பினான்.
“கார்த்திக் இன்றைக்கு உன் ப்ரோகிராம் என்ன? ”
“பெரிசா ஒண்ணும் இல்லை. பேங்க் தான் போகணும். ஒரு அரை நாள் வேலை இருக்கும். அப்புறம் ரிகர்சல். ”
“ரிகர்சலை கேன்சல் பண்ண முடியுமா? ”
“ஏன் கேட்கிற? ”
“முடியுமா முடியாதா ? ”
“ம் முடியும்! விஷயம் என்ன? ”
“நான் மதியம் வந்திடுவேன். நாம இரண்டு பேரும் ஸ்ருதியுடன் பேசணும். ”
“ஐய்யோ வேண்டாம் தருண். கிரிஜா நேற்றுதான் ஸ்ருதியை ரொம்பத் திட்டியிருக்கா. கிரிஜா கோபம் கொஞ்சம் குறையட்டும். அப்புறம் இரண்டு பேரையும் கூப்பிட்டு பேசுவோம். பிரசாத் எப்படியாவது கிரிஜாகிட்ட புரிய வைக்கிறேன் என்று சொல்லியிருக்கான். அதுவரை நீ அவசரப்பாடாதே. நான் தான் அன்று அவசரப்பட்டுட்டேன் நீயும் அவசரப்படாதே. ”
“மதியம் இரண்டு மணிக்கு வந்திடுவேன். ரெடியாக இரு! ”
“டேய் மடையா சொல்லறது புரியலையா? ”
“சரி அவுங்க வேண்டாம். நானும் நீயும் மட்டும்தான். ரெடியாக இரு. ”
“மென்டல்” என்று முணுமுணத்த கார்த்திக், “சரி போடா எருமை. உன் கூட்டத்து எருமைகள் கீழேயிருந்து கத்துறதை பார்! கிளம்பு நீ! ”
தருண் சொன்னதுபோலவே சரியாக ஒரு மணிக்கு வந்துவிட்டான். கார்த்திக்கும் தருணும் ஒரு ஹோட்டலில் ஏ.சி அறையில் உட்கார்ந்திருந்தனர். தங்களது தேர்வுகளை வேலையாளிடம் சொல்லிவிட்டு உணவு வகைகளை அந்த மெனுகார்டில் பார்த்தபடி இரண்டு நிமிஷம் அமைதியாக இருந்தான் கார்த்திக்.
“ டேய் இங்க நாம சாப்பிட வரவில்லை. பேசத்தான் வந்திருக்கோம். ம் சொல்லு! ”
“என்னடா சொல்லணும்? ”
“அன்றைக்கு என்ன நடந்தது? ”
“அது என் விஷயம். நான் பார்த்துக்குறேன். ”
“அடச்சீ சொல்லு! ”
கார்த்திக் தனது மேஜையில் வைத்திருந்த பேப்பர் நாப்கின்னை எடுத்து மடித்து மடித்து கர்சீஃப் செய்தான். பிறகு அதனை விரித்து வைத்து கத்திக் கப்பல் செய்தான்.
“நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது. ”
“நான் சொல்ல மாட்டேன். உன் பிரச்சனை சரியானால் திருப்பதியில் மொட்டைபோடுவேன்.. ”
“தாங்க்ஸ்டா மச்சி. உன் ஆஃபிசில் கேட்டா என்ன சொல்லுவடா? ரொம்ப தாங்க்ஸ்டா! ”
“நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை மச்சான். உன் பிரச்சனை சரியானால் திருப்பதியில் மொட்டை போடுவேன்.. என்று சாமிகிட்ட நீ வேண்டிக்கோ! இப்ப பிரச்சனை என்னன்னு சொல்லு. ”
“அன்றைக்கு நாங்க கிரகப்பிரவேச வீட்டிற்கு போனப்ப..
. . . “ஸ்ருதி டேவிட் உன்னை மேலே கூப்பிட்டான். மொட்டை மாடியில் ஒரு ரூம் இருக்கு. அதில் நிறைய ஆர்க்கெஸ்ட்ரா ஜாமான்கள் எல்லாம் போட்டு வச்சிருக்கான் டேவிட். அங்கதான் வரச்சொன்னான். நீ என்னமோ டவுட் கேட்கணும் என்று சொன்னியாமே? அதான் உன்னை உடனே வரச்சொன்னான். நீ போயிடு. அப்புறம் என்னைதான் கடிப்பான். நான் கிளம்புறேன். எனக்கு நேரம் ஆச்சு கீபோர்டை சர்வீஸ் விட்டிருக்கேன் இன்று போய் வாங்கலைன்னா கார்த்திக் என்னை தொலைச்சுக்கட்டிடுவான். நேராக அங்கத்தான் போறேன். பை! ” என்று கூறியபடி வினோத் நகர்ந்து விட்டான்.
“வினோத் இப்பவா வரச்சொன்னார்? ”
“ஆமாம் ஸ்ருதி. உடனே… பை”
இரண்டு படி ஏறும்போதே கிரிஜா ஸ்ருதியை உரக்க கத்தி அழைத்தாள்.
“ஸ்ருதி எங்க போற? நானும் அவரும் பைக்கில் போறோம். நீ அம்மாகூட வந்திடுவியா? ”
“வந்திடுறேன் கிரிஜா. அம்மாகிட்ட சொல்லிடு. அவுங்க உன்கூட நானும் வந்துட்டேன் என்று நினைச்சுக்கப்போறாங்க.”
“சரி சரி. சொல்லிட்டே போறேன். வர்றேன் ஸ்ருதி. ”
“ம். பார்த்துப்போ. ” என்று இரண்டாம் படிக்கட்டில் இருந்தபடியே கத்தினாள்.
அடுத்த இரண்டு படிக்கட்டுகள் ஏறும்போது கால் தடுக்கியது. அட இது ஒன்று. தாவணியை நானே ஒழுங்கா கட்டியிருப்பேன். இந்த கிரிஜா கட்டிவிடுறேன் என்று சொன்னதும் சரின்னு சொன்னது தப்பு. “தாவணியை தழையத் தழைய கட்டிவிட்டிருக்கா.. எப்படி தடுக்குது பார்! ” என்று தன்னிடம் குறை சொன்னவள் கைகளில் பாவாடையை கொத்தாக பிடித்துக் கொண்டு மீதியிருந்த படிகளைக் கடந்தாள்.
அந்த அறைக்குள் உள்ளே நுழைந்தபோது எந்த சந்தேகமும் அவளுக்குத் தோன்றவில்லை.
“டேவிட் இல்லையா?” என்று கேட்டாள் கார்த்திக்கிடம்.
“இப்பதான் போனான் ஸ்ருதி. ”
“இல்லை என்னை டேவிட் கூப்பிட்டதாக வினாத் சொன்னான். இங்க தனியாக என்ன பண்ற கார்த்திக் வா கீழே போகலாம். ”
“சரி வா ஸ்ருதி கீழே போகலாம். ”
இருவரும் வெளியே செல்ல அடிகளை எடுத்து வைத்தனர். கார்த்திக் முன்னே செல்ல ஸ்ருதி பின்னே நடந்து வந்தாள்.
ஆனால் முன்னே சென்ற கார்த்திக் கதவுகளை மூடித் தாழ் போட்டபோது அவனது பின்னே வந்த ஸ்ருதி ஒன்றும் புரியாமல் விழிபிதுங்கி நின்றாள்.
“கார்த்திக் விளையாடாதே. அம்மா கீழே இருக்காங்க.”
ஆனால் கார்த்திக் கதவின் மேல் முதுகைச் சாய்த்துக்கொண்டு நின்றவன் அவளிடம்இ “ஸ்ருதி நீ இன்னைக்கு உன் அம்மாகிட்ட நம்ம விஷயத்தைப் பேசணும். ”
“கிரிஜா கல்யாணம் முடிந்து ஒரு மாதம் தான் ஆகியிருக்கு. அப்பா ஊரில் இல்லை. இப்ப எப்படிப்பா பேச முயும். ஏன் திடீரென்று நீ இப்படி அவசரப்படுற? ”
“அது நீ கட்டியிருக்கும் தாவணி செய்த பிழை ஸ்ருதி. ”
“சும்மா ஏதாவது காரணம் சொல்லாதே கார்த்திக். அப்பா இன்னும் ஒரு வாரத்தில் வந்திடுவார். அப்புறம் உன் அப்பாவை வைத்து பேசுவோம். அப்புறம் எல்லாம் சுபம் தான்.”
“அப்புறம்? ”
“அப்புறம் நம் கல்யாணம் தான். ” என்றாள் கதவின் அருகே இருந்த சுவரில் சாய்ந்துகொண்டு சிரித்தபடியே..
“ அப்புறம்? ”
“ அப்புறம் நடப்பதை அப்புறம் பார்க்கலாம்.” என்றாள்.
“இல்லை உனக்கும் எனக்கும் அது இப்பவே தெரியணும். ” என்று கார்த்திக் அவள் அருகே சென்று அவள் இடையில் கைவைத்தான்.
ஸ்ருதி தலையை சுவரின் மேல் புதைத்தாள். சுவரில் அவள் தலையை அழுத்திய இடத்தில் சில சுவிட்சுகள் இருந்தது. அனைத்தும் அணைந்தது.
வியர்த்து வழிந்த நெற்றியை தனது கைகுட்டையால் துடைத்துக்கொண்டே கார்த்திக் “ஸாரிடா ஸ்ருதி.. நான் இப்படி செய்திருக்கக்கூடாது.. என்று சொன்னான். ஆனால் ஸ்ருதி “கதவைத் திற கார்த்திக ” என்றாள்.
கார்த்திக் அவளிடம் இனி எதுவும் பேச முடியாது என்பதைப் புரிந்து கொண்டு கதவின் தாழில் கை வைத்தான். ஆனால் தாழ் அசைந்து கொடுக்கவில்லை. மீண்டும் முயற்சி செய்தான். தாழ் நகரவில்லை. ஸ்ருதியை செய்வதறியாது பார்த்தான். அவள் விஷயத்தை புரிந்து கொண்டாள்.
கார்த்திக் அவசரப்படவில்லை அவளிடம் சொன்னான் “ஸ்ருதி பதட்டப்படாதே.. நான் தருணிற்கு கால் செய்கிறேன். அவன் கம்பெனி இங்கே பக்கத்தில் தான். உடனே வந்திடுவான். கதவு வெளிப்பக்கமாக லாக் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன். ப்ரஸ் பண்ணி திறந்தால் உடனே திறந்திடும். கொஞ்சம் பொறுமையாக இரு! தருண் யாருக்கும் விஷயம் தெரியாமல் நம்மை இங்கிருந்து வெளியே கொண்டு வந்துவிடுவான். இரு நான் அவனுக்கு கால் பண்றேன்! ”
“பொறுமையாக இருக்கணுமா? அம்மா கீழே டேவிட் அம்மாவிடம் பேசி முடித்ததும் என்னைத் தேட ஆரம்பிச்சிடுவாங்க. என் செல்கூட கையில் இல்லை. இருந்தால் ஏதாவது பொய் சொல்லி வீட்டுக்கு போகச் சொல்வேன். அவுங்க சிம் இப்போதான் மாத்தினது.. எனக்கு நம்பர்கூடத் தெரியாது. உன் ஃபோன் இருக்குல்ல? பிரசாத்திற்கு கால் பண்ணு! ”
“ நோ ஸ்ருதி. பிரசாத் இப்போ கிரிஜாகூட இருப்பான். உன் வீட்டிலும் யாரும் இல்லை. கொஞ்சமாவது யோசி. இப்ப நீ அவனிடம் பேசினால் கண்டிப்பா கிரிஜாவுக்குத் தெரிந்திடும். ”
கார்த்திக் சொன்ன விளக்கம் சரி என்று தோன்ற.. ஸ்ருதி அமைதியாக கதவின்மேல் கண்களை மூடிச் சாய்ந்தாள்.
நேரம்தான் நகர்ந்தது. கார்த்திக் தருணை அழைத்துப் பார்த்தான். தருண் அழைப்பை ஏற்கவில்லை. பத்து நிமிடம் இருபது நிமிடம் ஆனது. இருபது நிமிடம் முப்பது நிமிடம் ஆனது.
ஸ்ருதி பொறுமை இழந்தாள்.
“கார்த்திக் தருணை நம்பி நான் இனி ஒரு நிமிஷம்கூட இங்க இருக்க மாட்டேன். இப்பவே நாற்பது நிமிஷம் வெட்டியாக போயிடுச்சு. அவன் எப்ப ஃபோனை எடுப்பது? நான் எப்ப இந்த ரூமைவிட்டுப் போவது? நான் இப்பவே பிரசாத் மாமாவுக்கு கால் பண்ணப்போறேன். இனியும் தாமதித்தால் பிரச்சனைதான் வரும். உன் ஃபோனைக் கொடு! ”
“நோ ஸ்ருதி. கால் பண்ணாதே. சொன்னால் கேளு! தருண் மிஸ்ட்டு கால் பார்த்ததும் கண்டிப்பா கூப்பிடுவான். ஒரு ஐந்து நிமிஷம் வெயிட் பண்ணு. ஏதாவது மீட்டிங்கில் இருப்பான்! அரை மணி நேரம் பொறுத்தாச்சு. இன்னும் ஐந்து நிமிஷம் பொறுக்க மாட்டியா?”
“கார்த்திக் ஃபோனைக் கொடு. கொடுக்கப்போறியா? இல்லையா? ”
கார்த்திக் ஸ்ருதியிடம் மேலும் சண்டையிடப் பிடிக்காமல் கைபேசியை எடுத்து தனது பேன்ட் பாக்கெட்டிற்குள் போட்டான்.
ஸ்ருதி கார்த்திக்கின் கையில் நறுக்கென்று கிள்ளினாள்.
கார்த்திக் ஆவென்று கத்தியபோது.. அவனுடன் சண்டையிட்டு அவனது பேன்ட் பாக்கெட்டில் கைவைத்தாள். கைபேசியை எடுத்துக்கொண்டாள்.
அவள் பேசினாலே தோற்றுவிடுவான். தொட்டுவிட்டால்?
கார்த்திக் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல.. ஸ்ருதி பிரசாத் எண்ணிற்கு அழைத்துவிட்டாள்.
“ பிரசாத் மாமா நான் டேவிட் வீட்டில் மாடி ரூமில் மாட்டிக்கொண்டேன். நானும் கார்த்திக்கும் இங்கதான் இருக்கோம். கீழே எங்களைத்தேடி வரும்முன் நீங்க வந்திடுறீங்களா?ப்ளீஸ். ”
“சரி. நான் வறேன் கார்த்திக். ”
என்றான் பிரசாத்.
ஸ்ருதி புரிந்துகொண்டாள். அருகில் கிரிஜா இருப்பதால்தான் பிரசாத் கார்த்திக் என்று சொல்கிறான் என்று.
அவளும் சரி என்ற பதிலுடன் கைபேசியை வைத்துவிட்டான்.
“உனக்கு சொன்னால் புரியாது? அறிவில்லை? ”
“கார்த்திக் உன் மகா மகா அறிவாளித்தனத்தால்தான் நாம இப்ப இங்க அடைபட்டுக் கிடக்கிறோம். ”
“கிட்ட வந்தேன்.. என்ன செய்வேன் என்றே தெரியாது..”
ஸ்ருதி ஒன்றும் பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
கார்த்திக் கைபேசி கிணுகிணுத்தது. தருண் தான் அழைத்தது. கார்த்திக் பற்களைக் கடித்துக்கொண்டு “அவன் கூப்பிடுவான் என்று சொன்னேன்தானே?” என்றவாரே அழைப்பை எடுத்தான்.
அவன் சொன்னதைக் கேட்ட ஸ்ருதி அவன் பக்கமாக திரும்பவேயில்லை. கார்த்திக் அலைபேசியில் கவனம் வைத்தான்.
“ கார்த்திக் என்னைக் கூப்பிட்டியா? ”
“ஆமாம்டா.. உன்னால் இப்ப டேவிட் வீட்டிற்கு வரமுடியுமா? ”
“ ம். நான் ஃப்ரீதான். என்ன என்ன விஷயம்? ” என்று கேட்டுக்கொண்டிருந்தபோதே அவனது கைபேசித் திரையில் கிரிஜா காலிங் என்று வந்தது..
பேயறைந்ததுபோல் ஸ்ருதியைப் பார்த்தான் கார்த்திக்.
Comments are closed here.