Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ஹேய் நீ ரொம்ப அழகா இருக்க-14

பொழுது விடிந்தது!

 

காலை 7 மணி:

 

கார்த்திக் வனிதாவிற்கு கால் செய்து நேற்று மாலில் நடந்த சம்பவத்தையும், இரவு அப்பாவுடன் நடந்த உரையாடலை பற்றி விவரித்தான். அதைக் கேட்ட வனிதாவுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

 

இங்கே இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் நம்ம தலைவி வினிதா குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருந்தாள்.

 

சரி கார்த்தி. இனி என்ன செய்வது? இப்படி ஆரம்பமே பிரச்சனையா முடிஞ்சிருச்சு?

 

வனி இதற்காக ஒன்றும் கவலைப்படாதே. நானும் அப்பா சொல்வது போன்றே படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துகிறேன். இந்த செமஸ்டரில் Arrear அனைத்தையும் கிளியர் செய்து விடுகிறேன்.

 

அதுவரை நம் பேசுவது, பழகுவதை குறைத்துக் கொள்வோம். எதுவும் முக்கியமான விஷயமாக இருந்தால் கால் செய் அல்லது மெசேஜ் பண்ணு. நேரம் கிடைக்கும்போது நேரில் சந்தித்துக் கொள்வோம்.

 

சரிடா கார்த்திக். நீ சொல்வது போன்றே செய்து கொள்வோம். இருந்தாலும் மனசுக்குப் ரொம்ப கஷ்டமாத்தான் இருக்குடா.

 

நீ கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்.

 

பேசிக்கொண்டு இருக்கும்போதே வனிதாவின் கண்கள் அவளை அறியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.

 

ஆமா வனி. எப்படி கால் சென்றது என்று தெரியவில்லை. நா keypad லொக் பண்ணி தான் இருந்தேன்.

 

சரிடா! நடந்தது எல்லாம் நடந்து முடிந்து விட்டது.

 

இதன்பின் அதை பேசி பலனில்லை டா. எல்லாம் என் தலைவிதி.

 

ஓகே டியர். மிஸ் யூ! லவ் யூ!

 

மீ டூ டா

 

அழைப்பு துண்டித்தது….!!

 

வனிதாவின் மனது காதல் பிரிவின் வலியை தாங்க மறுத்தது. அழுகையை அடக்கமுடியாமல் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.

 

வினிதா எழுந்திருத்து விட்டு தனது போனை தேடி நேரத்தை கண்டாள். நேரம் 8 டை காட்டியது.

 

கார்த்திக்கின் மொபைல் மெனுவில் சென்று கால் ரெக்கார்டரை செக் செய்தாள். ஒரு அவுட்கோயிங் கால் ரெக்கார்டு ஆகியிருந்தது.

 

மவனே! நீங்க எல்லாம் இப்படி பண்ணுவீங்கன்னு தான் நேத்து நைட் உன் போன்ல கால் ரெக்கார்டர் போட்டு வைத்தேன் டா!

 

எழுந்து காலைக் கடமைகளை முடித்து, குளித்து உடைகள் அணிந்து கல்லூரிக்கு தயாரானாள்.

 

மொபைலை ஆன் செய்து ரெக்கார்டிங் முழுவதையும் கேட்டுவிட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வனிதாவை காணச் சென்றாள்.

 

தொடரும்.

 

 




Comments are closed here.

You cannot copy content of this page