ஹேய் நீ ரொம்ப அழகா இருக்க-15
1012
0
வனிதா கார்த்திக் சொன்ன செய்திகளை வினிதாவிடம் கூறி சோகபட்டாள். வினிதாவும் சோகத்தில் இருப்பவளை உத்வேகப்படுத்தி ஆறுதல் வார்த்தைகளை கூறினாள்.
“இனி உங்கள் காதலுக்கு நான்தான் தூது” என்று கூறி வனிதாவை சந்தோஷம் அடைய வைத்தாள்.
பேசிக்கொண்டே இருவரும் கல்லூரிக்கு கிளம்பினார்கள்.
நேரம் ஓடியது. வினிதா பிரேக் நேரத்திற்காக காத்து கொண்டு இருந்தாள்.
மணி சத்தம் ஒழிக்கவே கார்த்திக்கின் வகுப்பறையை நோக்கி புயலாகப் புறப்பட்டாள்.
இந்த முறை கார்த்திகை வகுப்பறையின் வெளியே சந்தித்தாள்.
ஹாய் கார்த்தி! ஹவ் ஆர் யூ
ஐ அம் பைன் வினி
அக்கா நடந்த விஷயத்தை சொன்ன கார்த்தி.
நான் இப்படி ஆகும்னு நினைச்சே பார்க்கலை?
டோன்ட் ஒரி கார்த்தி! i will help you.
தேங்க்ஸ் வினி. அப்புறம் என்ன? சரி மேலே யார பார்க்க வந்த?
உங்களைப் பார்க்கத்தான் வந்தேன் கார்த்தி. அப்படிய உங்களுக்கு ஹெல்ப் பண்ண நான் இருக்கேன் என்று சொல்ல வந்தேன்.
அப்படியா வினி. ரொம்ப தேங்க்ஸ் பா!
கார்த்திக் உங்க நம்பர் தர முடியுமா?
சரி வினி. நோட் பண்ணிக்கோ.
கார்த்திக் அப்புறம் ஈவ்னிங் மீட் பண்ணலாமா?
உங்க லவ் விசயமா தான் கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு.
சரிப்பா மீட் பண்ணலாம். ஓகே பாய்!
பாய் கார்த்தி!
அங்கிருந்து கிளம்பிய வினிதா அனிதாவிற்கு மெசேஜ் அனுப்பி கேன்டீனுக்கு வர சொன்னாள்.
காலேஜ் கேண்டீன்:
அனி நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சுடி?
அவன் ஒரு டம்மி பீஸு டி. உங்க காலேஜ்ல படிக்கிறேன் என்று ஒரு டயலாக் தான் அடிச்சேன். பக்கி எல்லாத்தையும் கொட்டிடுச்சு!
வினிதா : செம காமெடி பீஸ் டி!
வினி சரி காதைக் கொடு! அந்த விஷயத்தை நான் சொல்றேன்.
இங்கேதான் யாரும் இல்லியே டி!
வேண்டாம். எல்லாம் ரொம்ப முக்கியமான விஷயம்.
வினிதாவின் காதருகில் சென்று அனிதா தான் சேகரித்த அனைத்து செய்திகளையும் ஓதி விட்டாள். அதைக் கேட்ட வனிதாவிற்கு பெரிய ஆச்சரியம் ஒன்றும் ஏற்படவில்லை.
சரிடி அனிதா! நீ ரவியைப் உடனடியா பிளாக் பண்ணி விடாதே. கொஞ்ச நாளைக்கு வச்சு ஓட்டு.
ஆனால் இனிமேல் கார்த்தியை பற்றி எந்த விஷயமும் கேட்காதே.
அது அவனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது.
சரி வா கிளாசுக்கு போலாம்.
வினிதாவிற்கு மாலை முதல்முறையாக கார்த்திகை தனிமையில் சந்தித்து உறவாடுவதை நினைத்து ஆனந்தத்தில் திளைத்துக்கொண்டிருந்தாள்.
நேரமும் மாலை ஆனது!!
தொடரும்.
Comments are closed here.