காஜலிட்ட விழிகளே 16
1962
0
பேயறைந்ததுபோல் ஸ்ருதியைப் பார்த்தான் கார்த்திக்.
ஸ்ருதி அவன் பக்கமாக திரும்பவேயில்லையே..
“தருண். நீ வரவேண்டாம். நான் பார்த்துக்கிறேன். ” என்றவன் கைபேசியில் அவனது உரையாடலை நிறுத்துவிட்டு ஸ்ருதியைத் தோளைப்பற்றித் திருப்பி தனது கைபேசியின் திரையைக் காண்பித்தான்.
கிரிஜா காலிங் என்று காண்பித்தது கைபேசி. ஸ்ருதி அதிர்ந்தாள்.
அவளது முக மாற்றத்தைக் கண்டு நான் பேசுறேன் என்று சைகையில் செய்தான்.
“ஹலோ.. ”
“கார்த்திக் சார்.. ஸ்ருதி அங்கயிருக்காளா? ”
“ஆமாம் கிரிஜா உள்ளே மியூசிக் இன்ஸ்டருமென்ட்ஸ் பார்த்திட்டுயிருந்தோமா.. கதவு எப்படியோ வெளிப்பக்கமாக பூட்டிக்கிச்சு. அதான் பிரசாத்தை ஃபோனில் அழைத்து வரச் சொன்னாள் ஸ்ருதி. ”
“கார்த்திக் ஸ்ருதிகிட்ட ஃபோனைக் கொடுங்க! ”
“கிரிஜா.. ”
“ப்ளீஸ்! ”
“ம்.. தர்றேன்.. ”
கார்த்திக் கைபேசியை ஸ்ருதியிடம் கொடுத்தான். ஸ்ருதி நடுங்கிய கரங்களுடன் கைபேசியை வாங்கினாள்.
“கிரிஜா அக்கா நாங்க இங்க தெரியாமல் மாட்டிக்கிட்டோம்.. ”
“நான் வர்றேன். ரூமில் வேறு யார் இருக்காங்க? ”
ஸ்ருதியின் இருதயம் வெடித்துவிடும்போல் இருந்தது.
“நானும் கார்த்திக்கும் மட்டும்தான் ”
“கார்த்திக்? ”
“ஆமாம்.. கார்த்திக் சார்! ” என்று தனது தவறை உடனே திருத்தினாள். காலதாமதமான திருத்தம். ஆனால் இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை. கெட்டது காரியம்.
“ஓ!” என்ற பதிலோடு கிரிஜா கைபேசியை அணைத்துவிட்டாள்.
ஆனால் ஸ்ருதி மடத்தனமாக கார்த்திக்கின் பெயரை ஒருமையில் சொல்லி அவசரப்பட்டு காரியத்தைக் கெடுத்துக் கொண்டதை நினைத்து நொந்தாள்.
அதன் பிறகு சரியாக பத்து நிமிடங்கள் கழித்து கிரிஜா வந்ததையும் அவளது அன்னை ஸ்ருதி கன்னத்தில் படார் என்று ஒன்று விட்டதையும் கார்த்திக் தருணிடம் சொல்லி முடித்தான்.
தருணிடம் மாடி அறைக்கதையை சொல்லி முடித்த அடுத்த நிமிஷம் நண்பர்களுக்கிடையில் அமைதிதான் நிலவியது.
தனது காப்பி கப்பை காலி செய்த பின் தனது சந்தேகங்களை கேட்டான் தருண்
“எப்படி கிரிஜாவுக்குத் தெரிந்தது? ”
“பிரசாத் ஃபோனில் ஏதோ ஸ்பீக்கர் பிரச்சனை. அதனால் ஸ்ருதி பேசினது நல்லாவே பக்கத்தில் இருந்த கிரிஜாவிற்கு கேட்டிருக்கு. மாட்டிக்கிட்டோம். ”
“ அது தெரியாமல் பிரசாத் பேசும்போது சரி கார்த்திக் என்று புருடாவிட்டு மாட்டிக்கிச்சாக்கும்? ஓகே.. அதை விடு! கதவு பூட்டிக்கிட்டது.. நீங்க திறக்க டிரை பண்ணது எல்லாம் ஓகே.. அந்த ஸ்விட்ச் எல்லாம் அணைந்த பிறகு என்னாச்சுன்னு என்கிட்ட நீ சொல்லவேயில்லையே? இரண்டு பேரும் வியர்க்க வியர்க்க வெளியே வந்துபோது கிரிஜா சிலையாகி நின்னுட்டான்னு சொன்ன! ஆனால் ஏன் வியர்த்ததுன்னு சொல்லவில்லையே மச்சி? ”
ஒரு நிமிடம் கோபம் கொண்டவன் மறுநிமிடம் “தருண் காப்பியைக் குடிச்சி முடிச்சிட்டியா? ” என்றான்.
“ஆமாம்டா.. ”
“இல்லை.. காப்பி இன்னும் மிச்சம் இருந்தது என்றால் உனக்கு அதிலே அபிஷேகம் பண்ணலாம் என்று ஒரு எண்ணம்.. அதான் கேட்டேன். ”
“இல்லை கார்த்திக் நான் ஒன்றும் எல்லாம் சொல்லு என்று கேட்கலை. மொத்தமும் சொல்ல வேண்டாம். கொஞ்சமாக சொல்லு! ”
கார்த்திக் காலியாக இருந்த காப்பி கப்பில் இரண்டு மடக்கு காப்பி இருந்தது. அதில் தன் விரலை நனைத்தான்.
டேபிளில் தன் விரல் கொண்டு எழுதினான்.
“P-E-R-S-O-N-A-L” என்று.
“அப்படின்னா அதைப் பற்றி என்கிட்ட பேசமாட்ட? ”
“ஆமாடா! உன் தலையில் கொட்டவேண்டி காப்பி ஆர்டர் பண்ணணுமா? இல்லை கிளம்பலாமா? ”
“சரி! கிளம்பலாம். பிரச்சனையை நீ எப்படி அனுகப்போற? ”
“தெரியலை. ”
அதன் பின் தருண் எப்படிக் கேள்விகேட்டும் பயன் இல்லாமல் போனது. கோபமாக கெஞ்சலாக என்று எந்த விதத்திற்கும் பயன் இல்லாது போனது! அடுத்து அடுத்து அவன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் கார்த்திக் இல்லை தெரியலை என்று பதில் சொல்லவும் தருண் கடைசியாக ஒரு முறை அவனிடம் ஒரு கேள்வி கேட்டான்.
“ஸ்ருதி மட்டும் இன்னும் முழுதாக சரியாகவில்லை! அப்படித்தானே? என்ன செய்யப் போற? ”
ஆம் என்று தலையாட்டியபோது வெயிட்டர் வந்து பில்லைக் கொடுத்துவிட்டுப் போனார். ஆனால் தருணின் என்ன செய்யப் போற? என்ற கேள்விக்கு மீண்டும் அமைதியாக இருந்த கார்த்திக்கைப் பார்த்து ரொம்ப கோபம் வந்தது தருணிற்கு!
“வாயைத் திறந்து பேசுடா. நானும் நீயும் காப்பி குடிச்சிட்டு பில் கட்டிட்டு.. வெயிட்டரிடம் பத்து ரூபாய் டிப்ஸ் கொடுத்திட்டு போகத்தான் வந்தோமா? என்ன கேட்டாலும் தெரியலை என்று ஒரு ரெடிமேட் பதில் வச்சிருக்க! வந்த நேரத்தில் இருந்து அந்த மெனுகார்டை மட்டும்தான் அசையாமல் பார்த்திட்டு இருக்க P-E-R-S-O-N-A-L என்று நீ சொன்னியே அதைப் பற்றி பேசத்தான் இங்க நாம் வந்தோம். உங்க இரண்டு பேருக்கும் அங்கதானே பிரச்சனை ஆரம்பித்தது? அதைப் பற்றி முதலில் என்கிட்ட சொல்லு! அதைவிட்டுட்டு புலம்பாதே! இப்ப என் கேள்விக்கு பதில் சொல்லு! P-E-R-S-O-N-A-L என்றால் என்ன? ”
இவ்வளவு நேரமும் கல் போல் அசையாமல் இருந்த காhத்திக் வெடித்து விட்டான். மௌனத்தை விடுத்து கோபத்தில் கத்தினான். காப்பி கிளாஸை எடுக்க வந்த பெண்மணி கார்த்திக்கின் கோபம் பார்த்து பயந்தே போனார்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை மறந்து கார்த்திக் பேசினான்.
“P-E-R-S-O-N-A-L’ என்றால் PERSONAL என்று அர்த்தம். ஸ்ருதி அப்பா இன்னும் இரண்டு நாளில் வந்திடுவார். அப்புறம் நிச்சயம் எங்க அப்பா சம்பந்தம் பேசினால் மறுக்க மாட்டார். ஜாதகம் பற்றி பேசினால் பிரசாத் நிச்சயம் சப்போர்ட் பண்ணுவான். எல்லாம் ஓகே! ஆனால்.. கிரிஜா அவுங்க அம்மா இவுங்க இரண்டுபேரைக்கூட நான் எப்படியாவது கல்யாணத்திற்குப் பிறகு இயல்பாக்கிடுவேன். ஆனால் ஸ்ருதியைப் பற்றி உனக்குத் தெரியும் தானே? என் மூன்று பிரச்சனைகளில் முதல் மற்றும் பெரிய பிரச்சனை அதுதான். ஸ்ருதி பேசுறா.. நான் பிடிவாதம் பிடிச்சா நேரில் என்னை அன்பு இல்லத்தில் வந்து பார்க்க வருகிறா.. ஆனால்..”
கார்த்திக் பேசும் போது தருண் இடைமறித்தான்.
“என்னடா தருண்?” என்று மூச்சு வாங்க கேட்வனிடம் “கார்த்திக் உன்னை கேலி செய்தேன் கிண்டல் பண்ணினேன். சிரிக்கவும் வைத்தேன். ஆனால் எதற்குமே நீ அசைந்து கொடுக்கலை ஆனால் உன்னை கோபப்படுத்தும் அந்த விஷயத்தைப் பற்றி மற்றும் பேசும்போது பொரிந்து தள்ளிட்ட.. சூப்பர். நீ இப்பதான் ஐந்து நிமிஷங்கள் சேர்ந்தார்ப்போல் பேசியிருக்க! மனசு லேசாகிடுச்சா? வா இப்ப கிளம்பலாம். இன்னும் இரண்டு நாள் இருக்கதானே? அதுக்குள்ள ஸ்ருதியை என் நாதா என்று உன்கிட்ட உருக வைக்க வழி கண்டுபிடிச்சிடலாம்! ”
ஆனால் கார்த்திக்கிற்கு அதே ஷனத்தில்தான் தருண் சொன்ன விளக்கத்தால் ஸ்ருதியை மனம் திறந்து பேச வைக்க ஒரு வாரமாக பேசாமல் இருந்ததை ஈடுகட்டும் விதமாக பேச வைக்க ஒரு வழி கிடைத்துதான் விட்டது.
Comments are closed here.