ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க-16
1105
0
வினிதா வனிதாவை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு பைக் பார்க்கிங்கில் கார்த்திக்காக காத்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் அவனும் வந்தான்.
ஹாய் வினி!
எங்க போய் பேசலாம்?
கார்ப்பரேஷன் பார்க்கு போகலாமா கார்த்திக்?
சரி போகலாம் வினி!!
வினிதா பைக்கின் பின்பக்கத்தில் தனது இரு கால்களையும் இருபக்கம் இட்டு தனது கைகளை கார்த்திக்கின் தோளில் வைத்தவுடன் KTM 200 Duke பைக் காற்றை கிழித்து கொண்டு மின்னல் வேகத்தில் பார்க்கை அடைந்தது. ️️️
பார்க்கின் உள்ளே சென்ற இருவரும் கொடி நடையாக பேசிக்கொண்டே நடந்தனர்.
ஏன் வினி பைக்ல இவ்வளவு வேகமா வந்தேனே உனக்கு பயமா இல்லையா?
அட போங்க கார்த்திக்! நான் கார்ல இதைவிட வேகமாக போவேன். உங்க ஆளு வனிதா தான் சரியான பயந்தாங்கோளி.
அப்படியா! நீ என்ன அவ்வளவு வேகமாகவா போவா?
ஆமா கார்த்தி. எங்க வீட்டில இருந்து 35 அல்லது 40 நிமிஷத்துல பொள்ளாச்சி வீட்டுக்கு போயிடுவேன்.
வாவ்! நீ சரியான ஆளு தம்பா!
தொடர்ந்து பேசத் தொடங்கிய வினிதா, தனது சொந்தக் கதை, ஊர் கதை, தனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று பட்டியலிடும் அளவிற்கு கார்த்திக்கிடம் அளந்து தள்ளினாள்.
கார்த்திக்கும் மறுமுனையில் ஆம், ஹ்ம்ம் என்று ஆமா சாமி போட்டுக்கொண்டே இருந்தான். இவ என்னடா நம்ம லவ்வுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு தனது சொந்த கதையை பீலா விட்டுக்கிட்டு இருக்க என்று கார்த்திக்கின் உள்மனம் யோசித்தது.
அதை வெளியில் காட்டி கொள்ளாமல் அவளின் பேச்சை கேட்டு கொண்டு இருந்தான்.
வினிதா தனது பேச்சை நிறுத்துவதாக தெரியவில்லை. பேசிக்கொண்டே இருந்தாள். இடையில் குறுக்கிட்டு கார்த்திக் வனிதாவை பற்றிய சில விஷயங்களை கேட்டான்.
அதற்கு வினிதாவும் பதிலளித்தாள்.
கார்த்திக் உங்களுடன் பேசிக் கொண்டே இருந்தது நேரம் போனதே தெரியவில்லை. சரி எனக்கு பயங்கரமாக பசிக்குது ஏதாவது ரெஸ்டாரண்டுக்கு சாப்பிட போலாமா?
சரி வினி. வா போகலாம். எனக்கும் உன் பேச்சை கேட்டுக் கொண்டே இருந்ததால் பசிக்க ஆரம்பித்துவிட்டது. 🤣
பார்க்கிலிருந்து பைக் வேகமாக கிளம்பி ரெஸ்டாரன்ட் வந்தடைந்தது. ️️️
இருவரும் சென்று சாப்பிட்டுவிட்டு, வினிதாவை அவளது வீட்டில் சென்றுவிட ஆயத்தமானான்.
அங்கிருந்து பைக் வேகமாக கிளம்பியது. ️️️
கார்த்திக் இன்று நாம் சந்தித்ததை வனிதாவிடம் சொல்ல வேண்டாம். ஏனென்றால் நான் அவள் காதலுக்கு உதவுவது மிகவும் சஸ்பென்சாக இருக்கட்டும்.
தயவுசெய்து அவளிடம் இதைச் சொல்லிவிடாதீர்கள்.
பைக்கை வீட்டின் அருகில் நிறுத்தாமல் எங்கள் தெருவின் முனையில் என்னை இறக்கி விடுங்கள்.
சரி வினி. கண்டிப்பா நான் சொல்ல மாட்டேன். நீ உன் அக்காவிடம் உலராமல் இருந்தால் சரி.
நீங்க என்னை ஓட்ட வாய் என்று நினைத்தீர்கள். பாருங்கள் நான் எப்போதும் சொல்ல மாட்டேன்.
வினிதா கூறிய படி கார்த்திக் அவளின் தெருமுனையில் பைக்கை நிறுத்தி, அவளை இறக்கிவிட்டான்.
வினிதா நான் ஒன்று சொல்லுகிறேன். அதை உன் அக்காவிடம் சொல்லி விடாதே?
சொல்லுங்க கார்த்தி!
ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே! ஆனால் நா சொன்னதை உன் அக்காவிடம் சொல்லி விடாதே!
சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே கார்த்தி தனது வீட்டுக்கு கிளம்பினான்.
அதைக் கேட்ட வினிதாவுக்கு கால் தரையில் இல்லை!!!
வினிதாவின் வலையில் கார்த்திக் விழுந்து விட்டானா??
பொறுத்திருந்து பார்ப்போம்
தொடரும்
Comments are closed here.