Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க-17

தனது கலாபக் காதலன் கூறிய வார்த்தையால் மிகுந்த சந்தோசத்தில்  நீந்திக் கொண்டே வீட்டை அடைந்தாள்.

 

(தொடாமலேயே காதல் கொண்டு இருப்பதற்கு பெயர் கலாப காதல்.)

 

கதவை வந்து வனிதா திறக்கவே வீட்டின் உள்ளே சென்றாள்.

 

வினி எங்க டி போன இவ்வளவு நேரமா?

 

அனிதா கூட வெளிய போனேன் டி!

 

சரி! சாப்பாடு இருக்கு. சாப்பிட்டு போய் தூங்கு டி!

 

வேண்டாம் வனி! சாப்பிட்டேன்.

 

கூறிவிட்டு தனது அறைக்கு சென்றாள்.

 

எப்படியும் கார்த்திக் தான் விரித்த வலையில் விழுவது நிச்சயம் என்பது உறுதி. அதனால் லேப்டாப்யை ஆன் செய்து கருப்பு திரைகளை அகற்றிவிட்டு ஸ்பை அப்-களை நீக்கிவிட்டாள்.

 

கார்த்திக்கின் நினைவுடன் கண்ணை மூடவே சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.

 

பொழுது விடிந்தது:

 

காலை 6 மணி

 

வனிதா கார்த்திக் உடன் போனில் உரையாட தொடங்கினாள்.

 

கார்த்தி என்னடா நேத்து முழுவதும் உன்னை பார்க்க முடியவில்லை?

 

ஆமா! கொஞ்சம் பிஸியாக போயிடுச்சு!

 

என்னால உன்னை ஒரு நாள் கூட பார்க்காமல் இருக்க முடியவில்லை டா?

 

இப்படி ஆரம்பத்துல எவ்வளவு கஷ்டமாக இருக்கே..! உன்னுடன் பேசணும், பழகணும் இதை தவிர வேற எதையும் சிந்திக்க முடியவில்லை.

 

சரி டியர்! இன்று சந்திக்கலாம்.

 

எப்படா?

 

ஈவினிங்.

 

நோ டா! நீ சிக்கரம் காலேஜ்க்கு ரெடி ஆகிவிட்டு என் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற பார்க் வாடா!

 

இன்னைக்கு உன் பைக்கில் தான் காலேஜ்க்கு வருவேன் டா!

 

😀😀 சரி டா செல்லம். I will catch at 8’o clock.

 

வினிதாவின் அறை:

நேரம் 7 மணி

 

போர்வையிலிருந்து வெளியே வந்த வினிதாவின் தலை தனது மொபைலை தேடியது.

 

மொபைலை எடுத்து வாட்ஸ் அப்-க்குள் நுழைந்தாள். கார்த்திக் ஆன்லைனில் இருப்பதாக காட்டியது. உடனடியாக கார்த்திக்கிற்கு மெசேஜ் அனுப்பினாள்.

 

நேற்று போன்று இன்று மாலையும் சந்திக்கலாமா?

 

சிறிது நேரம் எந்த பதிலும் வராததால். மீண்டும் ஒரு குட்டித் தூக்கத்தை போட்டாள்.

 

நேரம் 8 மணி

 

கார்த்திக் பார்க்கிற்கு அருகில் வந்து வனிதாவிற்கு  கால் செய்தான். அப்போது தற்செயலாக வினிதாவின் மெசேஜ் கண்டான். அந்த செய்திக்கு பதிலாக போகலாம் என்று பதிலளித்துவிட்டு கைபேசியை தனது பேண்ட் பாக்கெட்டில் சொருகினான்.

 

கார்த்திக்கின் அழைப்புக்கு பிறகு வீட்டிலிருந்து வெளியே வந்த வனிதா கார்த்திகை கண்டவுடன் புன்முறுவலுடன் அவனை சந்தித்தாள்.

 

நீண்ட நேரம் இருவரும் உரையாடி விட்டு கார்த்திக்கின் பைக்கிலே கல்லூரிக்கு கிளம்பினாள்.

 

வினிதா கல்லூரிக்கு தயாராகி அறையில் இருந்து வெளியே வந்து வனிதாவை தேடினாள்.

 

அவள் வீட்டில் எங்கும் இல்லாததால் கைபேசியை எடுத்து அவளை அழைக்கவே, அவளும் கார்த்திக்குடன் கல்லூரிக்கு வந்துவிட்டேன் என்றவுடன் வினிதாவிற்கு கோபம் சீற்றம் கொண்டது.

 

 

தொடரும்.

 




Comments are closed here.

You cannot copy content of this page