Share Us On
[Sassy_Social_Share]காஜலிட்ட விழிகளே 17
1897
0
கார்த்திக் அன்று வீடு வந்தபிறகு ஸ்ருதியை பேச வைக்க வேண்டும் என்றால் அவன் மனதில் நினைத்ததுதான் ஒரே வழி என்று கண்டுபிடித்துவிட்டான்.
ஆனால் எப்படி இதைச் செய்வது?
தனது வழிமுறையை எப்படி பரிசோதிப்பது?
என்ற கேள்விகளுக்குத்தான் தருண் என்பது விடையாக வந்து சேர்ந்தது. மனதில் ஒரு திட்டம் வகுத்தவனாய் இருந்தான். திட்டத்தை மனதில் ஓடவிட்டுப் பார்த்தபோதே.. தருண் அறைக்குள் தனது படை பரிவர்த்தனைகளுடன் வந்தான். அதான் கைபேசி மற்றும் லாப்டாப்புகளுடன் வந்தான்.
தருண் அறைக்குள் நுழைந்தபோது அறையே இருட்டாக இருந்தது. இருவரும் தூங்கும் வரை கார்த்திக் அறையில்தான் அடைந்து கிடப்பர். தூக்கத்தில் கண்கள் சொருகும் நேரம்தான் தருண் கார்த்திக் அறையை விட்டு நகர்வான்.
அன்று மணி எட்டுதான் ஆனது. ஆனால் கார்த்திக் அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு கட்டிலில் படுத்துக்கொண்டு தனியாக சிரித்துக்கொண்டிருந்தான். உள்ளே நுழைந்ததும் விளக்குகளை எறியவிட்டவன் கார்த்திக்கிடம் டேய் கார்த்திக் அன்றைக்கு லைட் ஆஃப் ஆனபோது “என்னடா நடந்தது? நீ இப்பலாம் இப்படி அடிக்கடி லைட்டை ஆஃப் பண்ணிட்டு தனியே சிரிக்கிற.. எனக்கு பயமாக இருக்குடா! ”
“சும்மா இரு தருண்! ”
“இல்லை மச்சி.. உன் பக்கத்தில் லைட் இல்லைன்னா உட்காரவே பயமா இருக்கு! என்னை கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுத்திடுவியோன்னு தோணுதுடா.. அன்னைக்கு அதுதான் நடந்தது என்று எனக்கு கண்டுபிடிக்கத் தெரியாதா? ”
“அது மட்டுமா? இன்னும் என்னென்னமோ.. ”
“இன்னுமா? டேய் கார்த்திக் நான் சின்னப் பையன்டா.. என்கிட்ட நீ இப்படி பேசலாமா? அபச்சாரம் அபச்சாரம்! ”
“கார்த்திக் அவனிடம் தருண் நான் அந்த ஒரு மேட்டர்.. P-E-R-S-O-N-A-L பற்றி உன்னிடம் சொல்லவா? ஆனால் நீ ஸ்ருதி ஃப்ரண்ட் ஜான்விகிட்டே மட்டும் நான் சொல்வதைச் சொல்லுவியா? ”
காத்திருக்கிறேன் ராஜகுமாரா என்று கார்த்திக்கின் கால்களைத் தொட்டுச் சொல்லாத குறையாகச் சொன்னான் தருண்.
ஆனால் கார்த்திக் சொன்ன விஷயத்தைக் கேட்டு பையனுக்கு குளிர்க்காய்ச்சலே வந்துவிட்டது..
தருண் கோபமாக முறைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
“கார்த்திக் நீ பண்ணது தப்புடா! ”
“இதுக்குதான் நான் சொல்ல மாட்டேன் என்று சொன்னேன்!
” தருண் எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுடா! ”
” என்ன? ”
” நீ ஜான்வியிடம் ஸ்ருதி கன்சீவ் ஆகியிருக்காளா இல்லையா என்று கேட்டுச் சொல்வியா மாட்டியா? எனக்கென்னமோ அதான் ஸ்ருதி அமைதியாக இருக்காளோ என்று சந்தேகமாக இருக்குடா! ஆனால் கன்பர்மாக அவள் கன்சீவ்தான் ஆகியிருக்காடா. அதில் இப்ப எனக்கு டவுட்டே இல்லை. நான் உனக்கு ஜான்வியோட அட்ரஸ்கூடத் தர்றேன். நீ நேரில்கூடப் போய் பக்குவமா பேசு!”
ஒருவர் தலைமீது அணுகுண்டளவுக்கு பாரம் ஏற்றினால்? பாவம் அந்த பூத உடல்!
அப்பேர்ப்பட்ட பூத உடலுக்குச் சொந்தக்காரன் தருண் சொன்னான் ,
“ஜான்விகிட்ட கேட்குறேன் மச்சி.. ஆனால் ஒரே ஒரு டவுட்..
“இப்ப என்ன டவுட்? ”
“மச்சி என் கையைக் கிள்ளேன்.. என் கண்ணு திறந்துதானே இருக்கு? ”
காலையில் எழுந்ததும் முதலில் இரவு அம்மா வற்புறுத்திக் கொடுத்த காபியை வாந்தி பண்ணினாள் ஸ்ருதி. உடலும் மனதுடன் சேர்ந்து தொந்தரவு பண்ண மாற்றம் வேண்டி தனது தோழிகளுக்கு கைபேசியில் அழைத்தாள்.
ஸ்ருதி தனது தோழிகளுடன் அன்றுதான் சிட்டிசென்டருக்கு கிளம்பினாள். கார்த்திக்குடன் மூன்று வாரமாக சண்டை போட்டுக்கொண்டு சரியாக பேசாமல் இருப்பது கஷ்டமாக இருந்தது.
முதலில் அன்றுநடந்த தவறுக்கு அவன் ஆயிரம் சாரி கேட்ட பிறகு மனது இளகியது.
கார்த்திக் அழைத்தபோது பேசினாள். ஆனால் சம்பிரதாயமாக பேசினாள்.
கார்த்திக் அப்பா வந்து தனது தந்தையிடம் சம்பந்தம் பேசுவார் என்பதில் உறுதியாக இருந்தாள். ஆனால் இனம் புரியாத கோபம் கார்த்திக் மேல் இருந்தது. அன்று கதவை மட்டும் அவன் தாழ் போடாமல் இருந்திருந்தால் அவளது அழகு காதல் சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டிருக்காதே. பிறரைப் பற்றி அவளுக்கு அக்கரை இல்லை. தனது தாயும் கிரிஜாவும் தன்னைப்பற்றி தவறான கணிப்பு செய்துவிட்டார்களே என்று மறுகினாள்.
முதல் மூன்று நாட்கள் கார்த்திக்கின் மீது அதிகமான கோபம் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் கோபம் யாவும் பஞ்சுப்பொதிகளாய் மாறிப்போனது. ஆனால் இன்னும் அவனுடன் சகஜமாப் பேசத்தான் முடியவில்லை. தொண்ணூறு சதவீதக் கோபம் பறந்துவிட்டது. ஆனால் பத்து சதவீதம் மட்டும் போவேனா என்று அடம்பிடித்தது. அவளும் அவனது ஒவ்வொரு முயற்சிகளையும் கண்டு ரசித்தாள். ஆனால் மனம் இன்னும் பத்தைப் பிடித்துக் கொண்டே தொங்கிக் கொண்டிருந்தது. மாற்றம் இடமாற்றம் மனதுக்கு சுகம் தருமோ என்று எண்ணி தோழிகளுடன் வெளியே சென்றாள்.
“ஸ்ருதி நீ இப்படி வேகமாக எஸ்களேட்டர் படியில் இறங்கி போகக்கூடாதுப்பா.” என்றாள் அவர்கள் பாடல் அஞ்சல் இசைக்குழுவில் ஃப்ளுட் வாசிக்கும் தேவிப்ரியா.
“அதெல்லாம் ஒன்றும் இப்போ ரிஸ்க் கிடையாது ப்ரியா.. எஸ்களேட்டர்கள் எல்லாம் இப்போ ரொம்ப ஸேஃப். ”
“அப்படியில்லை.. ” என்றவளை இன்னொருத்தியின் குரல் தடுத்தது. அது மைவிழியின் குரல்.
“யேய் ப்ரியா வரியா நாம ஃபுட்கோர்ட் போவோம்?
ப்ரியா, மைவிழி, ஸ்நேகா, ஆர்த்தி, ஜான்வி என்ற நண்பர்கள் பட்டாளத்துடன் சென்றவளுக்கு எல்லா பிரச்சனைகளும் மறந்தது.
ஆர்த்தி மற்றும் ஜான்வி தருணுடன் தான் வேலை பார்த்தனர்.
தனக்கு வேண்டியதை ஆர்டர் செய்தவள் தன் விரல் நகங்களைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாள். மற்றவர்கள் சினிமா , ஜஸ்டின் பீபரின் பாட்டு , பக்கத்துவீட்டு பாச்சுளர்கள் என்று எதை எதைப்பற்றியோ பேசிக்கொண்டிருக்க ஸ்ருதியின் மனதிற்குள் எத்தனையோ விஷயங்கள் வந்து வருத்தியது.
தந்தைக்கு தான் இரண்டு வருடங்களாக கார்த்திக்கை விரும்பியது தெரிந்தால் என்ன நினைப்பார்? கார்த்திக்கை சந்திக்கத்தான் நான் ட்ரூப்பில் பாட வந்ததாக நினைப்பாரோ? கிரிஜா அக்கா நினைப்பதுபோல் தினம் தினம் பத்து மணிநேரம் கார்த்திக்குடன் ஃபோனில் பேசியே வெட்டிப் பொழுது போக்கியதாக நினைப்பாரோ?
இல்லை அம்மா போல் தன்னை பொய்பேசும் கபடம் நிறைந்த பெண்ணாக தன்னை நினைப்பதுப் பார்ப்பாரோ?
மனதில் கேள்விகளின் வேகத்தை பதில் முந்தவில்லை.
அவளுக்கு அருகில் இருப்பவர் பெயர்கூட மறந்து விடுகிறது. ஆனால் இந்த கேள்விகளை துயிலிலும் மறக்க முடியவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக தங்களை அடுக்கிக் கொண்டு அவள் முன்னே நின்று பற்களை இளித்தன.
தனியே குழம்புவதைவிட நண்பர்களுடன் இருக்கும்போது குழம்பிக் கொள்ளலாம் என்று நினைத்துதான் ஸ்ருதி அந்த மாலுக்கு வந்தது.
மற்றவர்கள் ஒரு ஃபளுடாவில் மூழ்கியிருக்க ஸ்ருதி அமைதியாக ஒரு ஸ்வீட் கார்ன் வாங்கி மென்று கொண்டிருந்தாள்.
“நீ ஐஸ்கீhம் சாப்பிடலை ஸ்ருதி? ஏன்? ”
“ஏய் அவ இப்ப அதையெல்லாம் சாப்பிட மாட்டா. நிறைய ப்ரிசர்வேடிவ் சேர்த்திருப்பாங்கல்ல? ”
“தொண்டை கட்டிக்கிடும் அதனால் சாப்பிடமாட்டேன் என்பதில்லை ஸ்நேகா. இப்ப சாப்பிடத் தோணலை. அவ்வளவுதான். ”
ஆனால் உணவு உண்ண ஆரம்பித்ததிலிருந்து அவர்களில் யாராவது ஒருவர் அவளை இதைச்சாப்பிடாதே.. அதைச்சாப்பிடாதே என்று தடுத்துக்கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் ஸ்ருதியின் காதினில் ஸ்நேகா சொன்னாள் “இந்த மாதிரி நேரத்தில் நீ கோக் குடிப்பது நல்லது இல்லை ஸ்ருதி!”
“என்ன மாதிரி நேரத்தில்? ” என்று சத்தமாகக் கேட்டவளிடம்
“ஏய் கத்தாதே. யாருக்கும் தெரிய வேண்டாம் என்று நினைத்தேன். ”
“என்ன தெரியக்கூடாது? ”
“நீ கன்சீவ் ஆகியிருக்க என்று கேள்விப்பட்டேன் ஸ்ருதி. ஏன் அவசரப்பட்ட? கார்த்திக் நல்ல பையன் தான்.. ஆனாலும் நீ அவசரப்பட்டிருக்க கூடாது! ”
ஸ்ருதிக்கு நெஞ்சு கனத்தது.
சுற்றி இருந்தவர்கள் ஏலியன்களாத் தெரிந்தனர்.
Comments are closed here.