Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 42

அத்தியாயம் – 42

“உல்ஃப்” என்று போலீஸ் அதிகாரி கூறியதை கேட்டதும், “அவரா!” என்று வியந்தார் பகவான். அந்த மனிதரின் உண்மையான பெயரைவிட ‘ஓநாய்’ என்கிற அவருடைய பட்டப்பெயர் நிழல் உலகிலும் உளவு வட்டாரங்களிலும் மிகவும் பிரசித்தியானது. அவர் ஒரு வாடகை கொலையாளி. வாடகை கொலையாளி என்றால் லோக்கல் கூலிப்படை அல்ல… தனக்கென்று ஒரு திறமையான டீமை வைத்துக்கொண்டு சிஸ்டமேட்டிக்காக செயல்படும் இன்டர்நேஷனல் கொலையாளி. பிறப்பால் இந்தியர்தான்… தொழில் துவங்கியதும் இந்தியாவில்தான்… ஆனால் இப்போது அவர் ஒரு துருக்கி பிரஜை.

 

ஒரு கொலையாளி வெளிநாட்டில் சென்று கால் ஊன்றுவதும் அங்கிருந்து தன் தொழிலை தொடர்வதும் சாதாரண விஷயம் அல்ல. அப்படி செய்ய வேண்டும் என்றால் தொடர்புகள் பெரிதாக இருக்க வேண்டும். இருந்தது… ஓநாய்க்கு துருக்கியில் மட்டும் அல்ல… இன்னும் சில முக்கிய நாடுகளிலும் தொடர்புகள் இருந்தது. தொடர்பு என்றால் அரசாங்கத்தோடு நேரடி தொடர்பல்ல… உளவுத்துறை அதிகாரிகளுடன் அண்டர் டேபிள் தொடர்பு இருந்தது.

 

தங்கள் நாட்டுக்குள் எந்த ஆப்பரேஷனும் செய்யக் கூடாது… தங்கள் நாட்டுப் பிரஜைகள் மீது வெளிநாட்டிலும் கைவைக்கக் கூடாது என்கிற எழுதப்படாத ஒப்பந்தத்துடன், ஓநாய் போன்ற திறமையான ஆட்களை பயன்படுத்திக்கொள்வதும் அதற்கு கைமாறாக தங்கள் நாடுகளில் அவருக்கு தேவைப்படும் சலுகைகளை பெற்றுக் கொடுப்பதுமான அண்டர் டேபிள் தொடர்புகள் உளவுத்துறைக்கு வழக்கமானதுதான்… ஒருவகையில் பார்க்கப்போனால், உளவுத்துறையும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கூலிப்படைதானே… அரசாங்கத்தின் கூலிப்படை… எனவே அவர்களுக்குள் தொடர்பு இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அப்படியென்றால் பகவான் எதற்காக வியந்தார்??? அதற்கு வேறு ஒரு காரணம் இருந்தது…

 

‘கோர்த்தா ஒரு நபரை குறிவைத்துவிட்டால் அவருடைய கதை முடிந்துவிட்டது என்று அர்த்தம்’ – இந்த கூற்றை மாற்றி எழுதியவர் தான் அந்த ஓநாய்… ஆம்… கோர்த்தாவால் எட்டுமுறை குறிவைக்கப்பட்டு தப்பித்தவர். அதுவே ஆரம்பகாலத்தில் அவருடைய அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணமாகவும் அமைந்தது.

 

கோர்த்தாவின் பளபளக்கும் வெற்றி பலகையில் ஒரு பெரும் கரும்புள்ளியை வைத்த இந்த ஓநாய் இன்றுவரை கோர்த்தாவின் ஹிட் லிஸ்டில் இருக்கும் முக்கியமான ஆள்.

 

கோரப்பற்களும் கொடும்பசியுமாக தனக்காக காத்திருக்கும் கோர்த்தாவை எதிர்த்து அவர் எப்படி களம் இறங்குவார் என்பதுதான் பகவானின் வியப்புக்கு காரணம்.

 

ஆனால் அதிகாரியோ, “பேசிப் பார்க்காமல் ஊக்கத்தில் முடிவெடுக்காதீர்கள்” என்றார்.

 

அவர் கூறுவதில் ஏதோ குறிப்பு இருப்பது போல் தோன்ற ‘சரி’ என்பது போல் தலையசைத்தார் பகவான்.

 

பகவான் எண்ணியபடியே அதிகாரி ஒரு குறிப்போடுதான் ‘பேசிப்பார்க்காமல் முடிவெடுக்காதீர்கள்’ என்று கூறினார். காரணம், பகவானை சந்திக்க வருவதற்கு முன்பே, தன்னுடைய மேலதிகாரியை வைத்து இன்னொரு பெரும்புள்ளியை பிடித்து ஓநாயை தொடர்பு கொண்டுவிட்டார் அந்த அதிகாரி. அந்த பெரும்புள்ளி, இந்திய உள்நாட்டு உளவுத்துறையில் பணியாற்றும் ஒரு முக்கிய நபர்.

 

ஓநாய் இதற்கு முன் இந்தியாவில் பல ஆப்பரேஷன்களை செய்திருந்தாலும் இப்போதெல்லாம் அவரால் அவ்வளவாக இங்கு கால்பதிக்க முடியவில்லை. அரசாங்கம் ஒருபக்கம் கோர்த்தா இன்னொருபக்கம் என்கிற இருமுனை தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஒதுங்கியிருந்தார். இப்போது அவருடைய ஒரு எதிரியை அழிக்க இன்னொரு எதிரியின் உதவி கிடைக்கிறது. அதுவும் கூலியோடு… கசக்குமா என்ன…? “ஆலோசனை செய்கிறேன்” என்று கூறினார்.

 

நிழலைக் கூட சந்தேகிக்கும் நிழல் உலக மனிதர் அந்த உல்ஃப். அவ்வளவு சுலபமாக சம்மதித்துவிடுவாரா? இதில் ஏதேனும் சதி இருக்கக் கூடுமா என்கிற கோணத்தில் யோசித்தார். துருக்கியில் இருந்தபடியே இந்தியாவில் கோர்த்தாவின் நிலவரத்தை அலசி, பகவானின் நோக்கத்தை ஆராய்ந்து, போலீஸ் எதற்காக உதவுகிறார்கள் என்பதை விசாரித்து அனைத்திலும் திருப்தியடைந்த பிறகு ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டார்.

 

********************

 

மெல்ல மெல்ல மிருதுளாவின் உறக்கம் கலைந்தது. கண்விழிக்க மனமில்லாமல் பஞ்சு மெத்தையின் இதத்தை அனுபவித்தபடி இன்னும் ஆழமாக போர்வைக்குள் சுருண்டாள். நாசியை ஏதோ ஒரு நல்ல நறுமணம் வருடியது. கலையா உறக்கத்துடன் கண்களைத் திறந்தாள். குளியலறை கதவு திறந்திருந்தது. பார்வையை பக்கவாட்டில் திருப்பினாள். சட்டென்று மூளையின் விழிப்புநிலை நன்றாகவே உயிர்பெற்றது… சோம்பலும் தூக்கமும் பறந்தோடிவிட கண்களை அகலவிரித்தாள்.

 

அங்கே இடுப்பில் சுற்றிய ஒற்றை துண்டை தவிர, நீர்த்திவலைகள் பூத்த வெற்றுடம்புடன் கண்ணாடிக்கு எதிரில் அவளுக்கு முதுகுக்காட்டி நின்று கொண்டிருந்தான் அர்ஜுன். முகம் சிவக்க பதட்டத்துடன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள் மிருதுளா.

 

‘ஐயோ! இங்கு என்ன செய்கிறான்!’ – இதயம் படபடக்க போர்வைக்குள் மறைந்த படி ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து திருட்டுப்பார்வைப் பார்த்தாள்.

 

மென்புன்னகையுடன் அவள் உறங்கும் அழகை கண்ணாடி பிம்பத்தில் ரசித்தபடி ஈரத்தலையை துவட்டியவன், பாடி ஸ்பிரேயை பறக்கவிட்ட போதுதான் அவள் சோம்பலுடன் கண்விழித்தாள். அந்த நொடியிலிருந்து இப்போது போர்வைக்குள் ஒளிந்துக் கொண்டு கள்ளப்பார்வை பார்க்கிறாளே… அதுவரை அனைத்தயும் அவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். ஆனால் அவன் பார்க்கவில்லை என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். அஜூனின் இதழ்கள் லேசாக விரிந்தன.

 

அந்த சின்னப்புன்னகை கண்ணில் பட்டுவிட, ‘சிரிக்கிறான்! ஏன்? ஏன் சிரிக்கிறான்?’ என்கிற பதட்டத்துடன் மீண்டும் போர்வைக்குள் முழுவதுமாக தலையை நுழைத்துக் கொண்டாள் மிருதுளா.

 

இப்போது வரிசைப்பற்கள் பளீரிட வெளிப்படையாகவே சிரித்தவன், “நா ஒன்னும் தப்பா நினைக்க மாட்டேன்” என்றான்.

 

மாட்டிக் கொண்டோம் என்று அவளுக்கு புரிந்துவிட்டது. ஆனாலும் புரியாதது போல், “என்ன?” என்றாள் போர்வையை விலக்கிவிட்டு.

 

“டைரக்ட்டாவே பார்க்கலாம்”

 

“நா… நா… எதையும் பார்க்கலையே…” – மீண்டும் போர்வைக்குள் போய்விட்டாள். அவன் சிரித்தான்.

 

“நீ பார்த்தாலும் எனக்கு ஒன்னும் இல்ல…”

 

“பப்பி ஷேம்…” – அவள் மெல்லிய குரலில் கூற அவன் அறையே அதிரும்படி சிரித்தான்.

 

அவள் போர்வையை விலக்காமல் கேட்டாள். “இங்க என்ன பண்றீங்க?”

 

“ஒரு பாத்ரூம்தானே இருக்கு? குளிக்க வந்தேன்” – அவளுடைய சங்கடம் அவனுக்கு வெகு ரசனையாக இருந்தது.

 

சற்றுநேரம் எதுவும் பேசாமல் இருந்தவள், “சரி நா வெளியே வெயிட் பண்றேன்” என்று கூறியபடி சட்டென்று போர்வையை விலக்கிவிட்டு எழுந்து மின்னல் வேகத்தில் அறையிலிருந்து வெளியே ஓடினாள். அர்ஜுனின் வெடிச்சிரிப்பு அவளை துரத்தியது.

 

மேல்மூச்சு வாங்க ஹாலில் இருந்த அந்த சின்ன சோபாவில் வந்து அமர்ந்தாள் மிருதுளா. அனந்த்பூர் வந்து இன்றோடு நான்கு நாட்கள் ஆகிறது. இருவரும் ஒரு நொடி கூட பிரிவதில்லை. அவளுடைய கல்லூரி நேரத்தில் கூட காவல்காரன் போல் கார் பார்க்கிங்கிலேயே காத்துக் கிடந்தான் அர்ஜுன். அவளை ஒரு மகாராணி போல் நடத்தினான். பகலெல்லாம் அவளுக்கு ஊழியம் செய்வதையே தொழிலாகக் கொண்டான். இரவில் படுக்கையறையை அவளுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு ஹாலில் வெறும்தரையில் போர்வையை விரித்து படுத்துக் கொண்டான். இப்படியெல்லாம் ஒருநாளும் நடந்ததில்லை… இன்றுதான்… மீண்டும் முகம் சிவந்தாள்.

 

“என்ன ஆச்சு? திடீர்ன்னு இவ்வளவு வெட்கப்படற?” என்று கேட்டுக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தான் அர்ஜுன்.

 

மிருதுளா மெல்ல அவன்புறம் திரும்பினாள். உடைமாற்றியிருந்தான். ‘ஹப்பாடா…’ – அவளிடமிருந்து நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது.

 

சமையலறையில் வேலை செய்தபடியே சிரித்தான் அர்ஜுன்.

 

“எதுக்கு சிரிக்கிறீங்க?” – அவன் என்னவோ சொல்லப் போகிறான் என்று தெரிந்தும் வாயடக்கம் இல்லாமல் கேட்டாள் மிருதுளா.

 

“நல்ல ரெஸ்பாண்ட்ஸ்” என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தான்.

 

“ஆங்???” – அவளுக்கு புரிவது போலும் இருந்தது… புரியாதது போலும் இருந்தது.

 

“சின்ன பொண்ணா இருக்கியேன்னு நெனச்சேன்… பெருசா ஒன்னும் கஷ்ட்டப்பட்ட தேவை இருக்காதுன்னு நினைக்கிறேன்” – படக்கென்று கண்ணடித்துவிட்டான்.

 

கப்பென்று மூச்சை அடைத்தது அவளுக்கு. அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் படபடத்தன. தொண்டை உலர்ந்து போக, உமிழ்நீரைக் கூட்டி விழுங்கினாள்.

 

‘ராஸ்கல்’ – மனதில் தோன்றுவதை வாய்விட்டுக் கூற முடியாமல் “நா… குளிச்சுட்டு… வரேன்…” என்று தப்பித்து ஓடி குளியலறையில் அடைந்துக் கொண்டாள். அவனோடு நெருக்கமாக இருந்திருக்கிறாள் தான். ஆனால் இந்த சரசமான பேச்சுக்களெல்லாம் பழக்கமே இல்லாதது.

 

‘திடீரென்று என்ன ஆயிற்று அவனுக்கு? இப்படியெல்லாம் பேசுகிறானே!’ – அவள் சமநிலைக்கு மீண்டு வர வெகுநேரம் ஆனது.

 

மிருதுளா குளித்துவிட்டு வரும் போது காலை உணவு மேஜையில் தயாராக இருந்தது. வழக்கம் போல இருவரும் சேர்ந்தே உணவருந்தினர்கள். அர்ஜுன் இன்று நல்ல மூடில் இருந்தானோ என்னவோ… உணவின் போதும் கூட அவளை சீண்டி முகம்சிவக்க வைத்துக் கொண்டே இருந்தான்.

 

ஒன்பது மணியானதும் அவள் பேக்பேகை மாட்டிக் கொண்டு காலணியை அணிந்துகொள்ள அவன் கார் சாவியை எடுத்தான். வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வெளியேறினார்கள். மிருதுளாவை கல்லூரி வளாகத்தில் இறக்கிவிட்டுவிட்டு, வழக்கம் போல் அவள் வகுப்பறையை நோட்டமிட்டபடி கார் பார்க்கிங்கில் காத்திருந்தான் அர்ஜுன்.

 

கடந்த ஒரு மாதமாக மிஸ் செய்திருந்த பாடங்களில் எழுந்த சந்தேகங்களை மிருதுளா ப்ரபஸரிடம் கேட்ட போது, “இப்போது நேரத்தை வீணடிக்க வேண்டாம். பிரேக் டைமில் ஸ்டாப் ரூமில் வந்து கேள்” என்று கூறினார்.

 

அதன்படி அன்றைய மதிய உணவு வேளையில் ஆசிரியர்கள் அறைக்குச் சென்ற மிருதுளா திகைத்தாள். அந்த இருவரை தவிர அறையில் வேறு யாரும் இல்லை… வியர்வையும் பதட்டமுமாக ப்ரபஸர் அமர்ந்திருக்க இறுகிய முகமும் சிவந்த விழிகளுமாக அர்ஜுன் வெளியே வந்து கொண்டிருந்தான். இவளை பார்த்ததும் அவன் முகத்தில் சின்னதாய் ஓர் அதிர்வு தோன்றி மறைந்தது.

 

“இங்க என்ன பண்றீங்க?” – குழப்பத்துடன் கேட்டாள் மிருதுளா.

 

“ஒரு சின்ன பிசினஸ்… கம்…” – அவள் கையைப் பிடித்து வெளியே அழைத்துக் கொண்டு வந்தான்.

 

“நீங்க போங்க அர்ஜுன். எனக்கு சார்கிட்ட கொஞ்சம் டவுட் கேட்கணும்…”

 

“அவர் இப்போ உன்னோட டவுட்டை கிளியர் பண்ற மூட்ல இல்ல… அப்புறமா கேட்டுக்க” – அவளை இழுக்காத குறையாக கேன்டீனுக்கு இழுத்துச் சென்று உணவருந்த வைத்தான்.

 

அப்போதுதான் அன்நோன் நம்பரிலிருந்து அவனுக்கு அந்த அழைப்பு வந்தது… அழைத்தவர் ப்ளூ ஸ்டார்…

 

தான் இல்லை என்றால் மிருதுளாவை ஆபத்திலிருந்து யார் ஒருவரால் காக்க முடியும் என்று அர்ஜுன் நம்பினானோ அதே ப்ளூ ஸ்டார் தான் இப்பொழுது அழைத்திருந்தார்.

 

பகவான் மற்றும் போலீஸ் அதிகாரியின் திட்டத்தை புட்டுப்புட்டு வைத்தார். அனைத்தையும் பொறுமையாக கேட்டபடி, மிருதுளாவுக்கு கூட்டையும் பொரியலையும் பரிமாறிக் கொண்டிருந்த அர்ஜுன் இறுதியில் ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னான்.

 

“வெயிட்டிங்…” – அவன் முகத்தில் கபடப்புன்னகை கவிந்திருந்தது.

 

*******************

 

கோர்த்தாவின் மூத்த வழக்கறிஞர் அஞ்சானி லால் டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரியை சந்திக்க வந்திருந்தார். உடன் தனிப்படை அதிகாரியும் இருந்தார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அதிகாரிகள் இருவரும் காத்திருக்க அவர்கள் முன் ஒரு கோப்பை எடுத்து வைத்தார் அஞ்சானி லால்.

 

அவர் கொடுத்த கோப்பை புரட்டிப்பார்த்த மூத்த அதிகாரி புருவம் சுருக்கினார். ஓநாய் என்கிற பெயரால் அழைக்கப்படும் வாடகை கொலையாளியின் வரலாறை தொகுத்து அடங்கியிருந்தது அந்த பைல்.

 

“இதெல்லாம் எங்களுக்கு தெரிஞ்சுது தானே? எதுக்காக இதை இப்போ எங்ககிட்ட கொண்டுவந்திருக்கீங்க?” – உள்நாட்டு உளவுத்துறை அதிகாரியைப் பிடித்து, பாதுகாப்பு அதிகாரிக்கும் ஓநாய்க்கும் தொடர்பை ஏற்படுத்தியவர் இந்த உயர் அதிகாரிதான். அவருக்கு அனைத்து உள்விவரங்களும் தெரிந்திருந்தது. ஆனாலும் ஒன்றும் தெரியாதவர் போல் முகத்தை வைத்துக் கொண்டார்.

 

அதை பார்த்து மனதிற்குள் நக்கலாக சிரித்துக் கொண்ட அஞ்சானி லால், “இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச விஷயமா இருக்கலாம் சார்… உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை இப்போ நான் உங்களுக்கு சொல்றேன்” என்றார்.

 

“என்ன?” என்றார் அதிகாரி.

 

“இந்த உல்ஃப் இன்னும் நான்கைந்து நாட்களில் டெல்லிக்கு வரவிருக்கிறார். அவரால் இந்தியர்களின் உயிருக்கு பெருமளவில் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக எங்கள் ஆட்களுக்கு…” என்றார் நேரடியாக.

 

அதிகாரியின் இறுகிய இதயமே ஒருகணம் நின்று துடித்தது. வெறும் நான்கே பேருக்கு தெரிந்த இந்த விஷயம் எப்படி கோர்த்தாவின் செவியை எட்டியது என்று புரியவில்லை அவருக்கு. அவருடைய பார்வை பாதுகாப்பு அதிகாரியை சந்தித்தது. அவரும் அதிர்ச்சியில்தான் இருந்தார். அப்படியென்றால் உளவுத்துரை அதிகாரியா? அல்லது பகவான் மூலம் தெரிந்திருக்குமா? – நேரடியாக அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை… ஆனால் எங்கோ… ஏதோ… ஓட்டை இருக்கிறது… – எதிரில் இருப்பவரை மறந்து சிந்தனையில் உலகை சுற்றியது அவர் மனம்.

 

அஞ்சானி லால் தொடர்ந்தார்…. “அவரால் எங்களை பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது. ஆனால் எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை இப்போது உங்களால் நன்றாகவே ஊகிக்க முடியும்” என்றவர் ஒருநிமிடம் இடைவெளி விட்டு, “நாங்கள் சட்டத்தை கையிலெடுக்க விரும்பவில்லை. அதனால் தான் உங்களை அலர்ட் செய்ய வந்தேன்” என்றார்

 

அதிகாரியின் முகம் கறுத்தது.

 

“உங்கள் உளவு வட்டத்தை முடுக்கிவிட்டு விபரம் சேகரித்துக்கொள்ளுங்கள். எச்சரிக்கையாக இருங்கள்” என்று மென்புன்னகையுடன் கூறிய அஞ்சானி லால் கைகூப்பிவிட்டு எழுந்தார்.

 

இப்போது இருதலைக்கொள்ளி எறும்பாக மாட்டிக்கொண்டது காவல்துறை.

 

கோர்த்தாவை உறக்கத்தில் இருக்கும் போது அடித்தால்தான்… விழித்திருக்கும் போது அருகில் நெருங்க கூட முடியாது. இப்போது விழித்திருப்பது மட்டும் அல்லாமல், அந்த உல்ஃபின் வருகைக்காக காத்துக் கொண்டும் இருக்கிறார்கள். நிச்சயம் தாக்குவார்கள்… அவனை ஒரேடியாக மேலோகத்திற்கு அனுப்பிவிட்டால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை… ஆனால் கடத்திவிட்டால்? இதில் யார் யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிந்துவிட்டால்…? அவ்வளவுதான்… அதிகாரிகளின் சந்ததியே வேரறுக்கப்பட்டுவிடும். நெற்றியில் துளிர்த்த வியர்வையை துடைத்துக் கொண்டார்.

 

அந்த உல்ஃபும் ஒன்றும் சளைத்தவன் அல்ல… பெரிய கெட்டிக்காரன் தான். இப்போது இன்னும் வளர்ந்திருக்கிறான். முழுமையாக இல்லை என்றாலும் கோர்த்தாவின் ஓரிரு ஆட்களையாவது முடித்துவிட்டான் என்றால் அதுவும் பிரச்சனை… ‘அப்போதே எச்சரித்தேனே… என்ன கிழித்துக் கொண்டிருந்தாய்’ என்று வந்துவிடுவான் அந்த ராகேஷ் சுக்லா… கண்ணாடி டம்ளரில் இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்துவிட்டு, ‘இப்போது என்ன செய்வது?’ என்பது போல் எதிரில் அமர்ந்திருந்த பாதுகாப்பு அதிகாரியை பார்த்தார். இருவரும் சற்று நேரம் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

 

அதே நேரம் இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டதாகவும் அடுத்து தங்களுடைய பக்கத்திலிருந்து என்ன செய்ய வேண்டும் என்றும் அர்ஜுனிடம் கேட்டுக் கொண்டிருந்தார் அஞ்சானி லால்.

 

இந்த பதிவு பிடித்திருந்ததா? கருத்துக்கூற இந்த இணைப்பை கிளிக் செய்யவும்…

 




23 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ahigokul says:

    Nice ud. Next ud podunga mam…..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    JAYALAKSHMI PALANIAPPAN says:

    Romba interesting ah irukku. When next episode?


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya Ganeshan says:

    Next ud eppo sis….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya Ganeshan says:

    Nice ud sis 😘😍😘😍


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Jothi Priya says:

    Interesting ud


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you Jothi.. 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Reena thayan says:

    Naan podda comments kanom


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      என்னப்பா இது… இங்க இருந்த கெணத்த காணும்ங்கற மாதிரி சொல்லறீங்க!!! என்ன கமெண்ட்??? எங்க போட்டீங்க???? 😀


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Reena thayan says:

        Inkathanya poddan inkathan poddan hehehe vanthuddu


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Selvalakshmi Suyambulingam says:

    Superb.


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you…:)


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Reena thayan says:

    I just wonder is wolf and Arjun are same
    Blue star interesting is he or she already come or yet to be introduced
    Hmm professor is certainly bagavan man
    Nice and curiousity update


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      No way… 🙂 They both are different persons. I even posted wolf’s pict in this epi…
      Blue star is a man and not yet come in scene…
      Thanks for commenting… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rajee Karthi says:

    Super interesting story


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you Rajee…. 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sumithra Ramalingam says:

    Eagerly waiting for the next ud


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you Sumithra… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Samri Thi says:

    Aju really semma ketthu hero sis😍😍 unmailaiye kortha group semma talent than anjanilal Ku udane news kidachuruche😅 professor ah aju en miratitu varan Miri ah kolla nadakura Sathi la avarukum pangu erukumo… Ellame suspense and tik tik nu tha eruku but very interesting sis… Aju Miri ta rasanaioda pesurathu nalla eruku👏👍 but Evana marriage panrathu sathiyama? Nilaiyana life ilathavan…. Suman Sujith enna ananga?


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you Samri, Anjani ku info kidaikkiradhukku munnaadi Arjun ku thaan news vandhadhu… 🙂

      Professor yedho oru vidhaththula Arjun kooda sammandhappattirukkaar. adhu ennannu seekkiram solidren…

      Arjun Mirudhula Marriage kashtamaana vishayam thaan…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nithya R says:

    அடுத்து என்னாாாாகுமோனு திக்திக்னு இருக்கு…


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you Raji… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Jai Rithi says:

    Super


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you Jai… 🙂

You cannot copy content of this page