ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க-18
857
0
வேகமாக கல்லூரிக்கு விரைந்த வினிதா, வனிதாவின் வகுப்பறைக்கு சென்றாள்.
வனிதா இங்கே வா என்று கொஞ்சம் தனியாக பேசணும்?
சரி வினி. என்ன விஷயம்?
வகுப்பறைக்கு வெளியே வந்து இருவரும் உரையாடத் தொடங்கினார்கள்.
ஏன் வனி? கார்த்திக் ஓட அப்பா அவ்வளவு சொல்லி இருக்காங்களே? வெளிய எல்லாம் சுத்த வேண்டாம் என்று.
இல்ல வினி. அவன ரொம்ப தேடியது. அதனால் தான் பார்க்கலாம் என்று அவனை வரச் சொன்னேன். வேறு ஒன்னும் இல்லைடி.
சரி வனி. கொஞ்ச நாளைக்கு போன்ல பேசிக்கோ நேர்ல சந்திக்கிறது வேண்டாம்.
மறந்துடாம திங்கள், செவ்வாய் கல்லூரிக்கு விடுமுறை சொல்லிடு வனி.
சரி வினி.
அங்கிருந்து தனது வகுப்பறைக்கு புறப்பட்டாள்.
நேரம் ஓடியது. மார்னிங் பிரேக் வந்தது.
வினிதா, அனிதா, ஜென்னி மூவரும் கேன்டீனுக்கு புறப்பட்டார்கள்.
எங்கடி இந்த திவ்யா நேற்றும் கல்லூரி வரவில்லை. இன்னைக்கும் ஆள காணோம்.?
ஜென்னி: ஆமாடி. போன் ஸ்விட்ச் ஆஃப் ல இருக்கு. ஆள பிடிக்க முடியவில்லை.
வினிதா: சரிடி. அவ லைன்ல கிடைச்சா? திங்கட்கிழமை அப்பாவோட பர்த்டே பார்ட்டிக்கு மறக்காமல் வந்து விடுங்கள்.
அனிதா: சரிடி. நாங்களும் நாளைக்கு ஈவினிங் ஊருக்குத்தான் கெளம்புறோம்.
பெல் சத்தம் ஒலிக்கவே! மூவரும் தேனீர் அருந்திவிட்டு வகுப்பறைக்கு சென்றார்கள்.
நேரமும் ஓடியது. பொழுதும் மாலை ஆனது.
நேற்று போன்றே வினிதா கார்த்திக் உடன் கல்லூரிக்கு அருகில் இருக்கும் fun ஷாப்பிங் மாலுக்கு புறப்பட்டாள்.
மீண்டும் அதைப் போன்றே வினிதா தனது உரையாடலை தொடங்கினாள்.
ஆனால் கார்த்தி நேற்றை போன்று இல்லாமல் இன்று அவளின் பேச்சை ரசித்துக் கேட்க தொடங்கினான்.
நீண்ட உரையாடலுக்குப் பிறகு இருவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
கார்த்திக் அவளை வீட்டின் அருகில் வந்து இறக்கி விட்டான்.
கார்த்திக் நான் ஒன்று சொல்லுகிறேன். அதை என் அக்காவிடம் சொல்லிவிடாதீர்கள்?
சரி! சொல்லு வினி.
ஏய்! நீங்க ரொம்ப அழகா இருக்கிறீங்க! ஆனால் நா சொன்னதை என் அக்காவிடம் சொல்லிவிடாதீர்கள்! 🥰
மாற்றங்கள் ஒன்றே மாறாதது!
தொடரும்.
Comments are closed here.