நிழல்நிலவு – 43
6404
17
அத்தியாயம் – 43
தில்லி சர்வதேச விமான நிலையம் வழக்கம் போல பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. பணியாளர்களும் பயணிகளும் வழியனுப்ப வந்தவர்களும் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். மேலோட்டமாக பார்த்தால் தெரியாது… ஆனால் கண்களை சற்று கூர்மையாக்கினால் பொதுமக்களோடு மக்களாக காவல்துறையினரும் கலந்து நடமாடிக் கொண்டிருப்பதை கண்டுகொள்ளலாம். ஓரிருவர் அல்ல… பலர்… கிட்டத்தட்ட இருபது பேர் கழுகுப்பார்வையும் இறுகிய முகமுமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள். அனைவருமே நன்கு பயிற்சிபெற்ற திறமைசாலிகள்.
துருக்கி இஸ்தான்புல் நகரிலிருந்து வந்திறங்கிய விமானத்திலிருந்து வெளியேறிய பயணிகள் இமிகிரேஷனை முடித்துக் கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.
காவலர்களிடம் பரபரப்புத் தெரிந்தது. அவர்கள் அனைவருடைய பார்வையும் அந்த ஒரு மனிதனையே தேடி கொண்டிருந்தது. அவரும் வந்தார்… உல்ஃப்… உடன் மூன்று பெண்கள். மூவருமே கிடான்ஸ்…
அந்த நேரம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கே நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் யாரோ ஒருவர்… அல்லது இருவராகக் கூட இருக்கலாம்… உல்ஃபை தாக்கப் போகிறார்கள். அல்லது கடத்தப் போகிறார்கள். அதை தடுக்க வேண்டும். அதுதான் அந்த காவலர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அசைன்மென்ட்.
அவ்வளவு போரையும் சோதனை செய்ய முடியாது… வேறு என்ன செய்யப் போகிறார்கள்??? எப்படி உல்ஃபை காப்பாற்ற போகிறார்கள்?
காவலர்களின் கூறிய பார்வை ஒரு மானசீக வட்டமாக உல்ஃபை சுற்றி வந்து கொண்டிருந்தது. அந்த வட்டத்திற்குள் யார் வந்தாலும் காவலர்களின் பார்வைக்குள் வருவார்கள்.
அரைவல் ஹாலில் ஒரு பெரியவர் ஏதோ விளம்பரத்திற்காக போகிற வருகிற அனைவரிடமும் துண்டுப்பிரசுரம் கொடுத்துக் கொண்டிருந்தார். உல்ஃப் அங்கே வந்த போது அவரிடமும் ஒன்றை கொடுத்தார். கொடுக்கும் போது ஒரு கணம் உல்ஃபின் கண்களும் அந்த பெரியவரின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.
கையிலிருந்த துண்டுசீட்டை மேலோட்டமாக பார்த்துவிட்டு கசக்கி தன்னுடைய கோட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டபடி தொடர்ந்து நடந்து கொண்டிருந்த உல்ஃப் விமானநிலையத்திலிருந்து வெளியே செல்லாமல், உள்ளேயே இருந்த ஒரு உணவகத்திற்குள் நுழைந்தார். காரணம் அந்த துண்டுப்பிரசுரத்தின் ஒரு மூலையில் சிறிய எழுத்துக்களில் ஆங்கில வாசகம் ஒன்று எழுதப்பட்டிருந்தது.
“கேர்ஃபுல்… கோ டு த ரெஸ்டாரெண்ட்” – ‘கவனம்… உணவகத்திற்கு செல்லுங்கள்’ என்கிற வாக்கியத்திற்கு கீழ் மொட்டையாக ‘எஸ்’ என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது. ‘எஸ்’ என்றால் ‘ஷேடோ…’ அவர்களுடைய அந்த ஆப்பரேஷனின் பெயர். தற்போது தன்னை வழிநடத்துவது போலீசார்தான் என்பதை அவர் உடனே புரிந்துக் கொண்டார்.
தன் கிடான்ஸுடன் உணவகத்திற்குள் நுழைந்த உல்ஃப் மெனுவை பார்த்து ஏதோ சில ஐட்டங்களை ஆர்டர் செய்தார். சற்று நேரத்தில் அவர் ஆர்டர் செய்த உணவு வந்தது. உணவு ஆறாமல் இருக்க ட்ரே அரைவட்ட வடிவ மூடி ஒன்றினால் மூடப்பட்டிருந்தது.
உல்ஃப் மூடியைத் திறந்தார். உணவு தட்டும், கூடவே துணியால் சுற்றப்பட்ட இன்னொரு பொருளும் இருந்தது. பார்த்ததுமே அனுபவம் வாய்ந்த அவர் கண்கள் அதை அடையாளம் கண்டுகொண்டன. அது ஒரு கைத்துப்பாக்கி.
அவர் ஒரு தொழில்முறை கொலைகாரர் என்பதால் எப்போதும் அவரிடம் ஆயுதத்திற்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இப்போது அவர் இருப்பது விமானநிலையம். விமானப்பயணத்தில் ஆயுதம் கொண்டுவருவது அவ்வளவு சுலபமல்ல. எனவே விமானநிலையத்திற்கு வெளியேதான் அவர் ஆயுதத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதை அறிந்தே அவருக்கு போலீசார் உதவுகிறார்கள்.
உணவு ட்ரேயில் துப்பாக்கியைப் பார்த்ததும் அதை சர்வசாதாரணமாக தன்னுடியாத பாக்கெட்டில் எடுத்து வைத்துக் கொண்டார் உல்ஃப். சாப்பிட்டு முடித்ததும் பில் வந்தது. பில்லின் மூலையில் “வாட்ச் அவுட் ஃபார் ஜி” என்று எழுதப்பட்டிருந்தது.
‘ஜி’ என்றால் கோர்த்தா என்பதை புரிந்துகொள்ள அவருக்கு நொடி பொழுதுகூட தேவைப்படவில்லை. கோர்த்தா தன்னை குறிவைத்திருக்கிறது என்று போலீசார் எச்சரிப்பதை புரிந்துக் கொண்ட உல்ஃப், உணவிற்கு உண்டான பணத்தை செலுத்திவிட்டு உணவகத்திலிருந்து வெளியே வந்தார். அவருடைய அனுபவம் மிக்க கண்கள் சுற்றத்தை ஆராய்ந்துக் கொண்டே வந்தன. அப்போதுதான் அது நடந்தது.
அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த பெண் தன் கைப்பைக்குள் கைவிட்டாள். அதே நொடி உல்ஃபும் தன் கோட் பேக்கெட்டிற்குள் கைவிட்டார். அரை நொடிக்கும் குறைவான நேரம்தான். அதற்குள் இருவரும் ஒருவரை ஒருவர் குறிவைத்து துப்பாக்கியை நீட்ட, அதே நொடி அந்த பெண்ணுக்கு பின்னால் வந்த மனிதர் அவள் மீது வந்து மோத, அவள் நிலைதடுமாறி கீழே விழுந்தாள். பொட்டுவெடி வெடித்தது போல் ‘பட்’டென்று ஒரு சின்ன சத்தம் மட்டும் கேட்டது. சைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கி… யார் யாரை சுட்டது???
அவளை மோதி கீழே தள்ளிய போலீசார் அவசரமாக ஆராய்ந்தார். உல்ஃப் வேகமாக தன் கிடான்ஸுடன் வெளிப்புறம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். கீழே விழுந்து கிடந்த பெண், கால்தடுமாறி விழுந்துவிட்டாள் என்கிற நினைவில் மற்ற பயணிகள் அவளுக்கு உதவிக்கு வந்தார்கள். தூரத்தில் இருந்த மற்ற போலீசாரும் அவளை நோக்கி வந்தார்கள். ஆனால் அவர்கள் உதவி செய்ய வரவில்லை. அவளை கைது செய்ய வந்தார்கள்.
அதுவரை டார்கெட் மட்டுமே யார் என்று தெரிந்திருந்தது அவர்களுக்கு. இப்போது தாக்க வந்தது யார் என்பதும் தெளிவாகிவிட, தாக்க வந்தவளை கைது செய்யும் நோக்கத்துடன் அவர்கள் அவளை நெருங்கி கொண்டிருந்த போது அவள் தன் கையிலிருந்த கைப்பையை ஓங்கி தரையில் அடித்தாள்.
அடுத்த நொடி பெரிய சத்தத்துடன் அந்த இடமே புகைமூட்டமானது. வீரியம் குறைவான, கண்ணீர் புகை குண்டு… மக்கள் சிதறி அங்கும் இங்கும் ஓடினார்கள். ஒரே கூச்சல்… குழப்பம்… கலவரம்… எல்லாம் முடிந்து புகை மூட்டமும் அடங்கிய போது அந்த பெண் அங்கே இல்லை…
உல்ஃபும் அவருடன் வந்த பெண்களும் ஓட்டமும் நடையுமாக விமானநிலையத்திலிருந்து வெளியேறிய போது, சீறிவந்த கார் ஒன்று அவர்களுக்கு எதிரில் வந்து நிற்க அதன் கதவுகள் திறந்து கொண்டன.
இப்படிப்பட்ட நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது உல்ஃப் போன்ற ஆட்களுக்கு நன்றாகவே தெரியும். காரணம் இது போன்ற பல இக்கட்டான சூழ்நிலைகளை அவர்கள் கடந்துதான் வந்திருப்பார்கள்.
விமானநிலையத்திற்குள்ளேயே எச்சரிக்கப்படுகிறார்… அங்கேயே கையில் ஆயுதம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது… அதற்கு தகுந்தாற் போல் அவர் மீது கொலை முயற்சியும் நடக்கிறது. சரியான நேரத்தில் அந்த முயற்சியும் முறியடிக்கப்படுகிறது என்றால் அவரை யாரோ காப்பாற்ற தீவிரம் காட்டுகிறார்கள் என்றுதான் அர்த்தம். அப்படி காப்பாற்ற முனைகிறவர்கள் அவர் தப்பிச் செல்லவும் நிச்சயம் ஏற்பாடு செய்திருப்பார்கள். இந்த காரும் அவர்களுடைய ஏற்பாடாகத்தான் இருக்கும்… எதிரிகளின் காராக இருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று அனுபவம் மிக்க உல்ஃப் அரைநொடியில் முடிவெடுத்து முன் சீட்டில் பாய்ந்து ஏறிக்கொள்ள, அவரோடு வந்த பெண்கள் பின்னால் ஏறி கொண்டார்கள். கார் வேகமெடுத்துப் பறந்தது.
நான்கரை மணிநேர பயணத்தின் முடிவில் அந்த கார் ஜெய்பூர் சர்வதேச விமானநிலையத்தில் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கும் போது ட்ரைவர் உல்ஃபிடம் ஒரு கவரைக் கொடுத்தார். அந்த கவரில் துருக்கி செல்ல நான்கு விமான டிக்கெட்டுகள் இருந்தன.
*******************
அன்று சனிக்கிழமை… காலை எழுந்ததிலிருந்தே அர்ஜுன் கணினியில் பிஸியாக இருந்தான். ஹெட்போனை மாட்டிக் கொண்டு வரிசைகட்டி நின்ற ஆடியோ பைல்களை கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். ஆள் வைத்து செய்ய முடியாத ஏதோ முக்கியமான வேலை என்று அவளுக்கு புரிந்தது.
காலை உணவை அவளுக்கு வெளியில் ஆர்டர் செய்துவிட்டு, அவன் அவித்த முட்டையும் பழங்களும் எடுத்துக் கொண்டான். மதியமும் டெலிவரி பாய் அவளுக்கு மட்டும் ஒரு பிரியாணி பொட்டலத்தை கொண்டுவந்து கொடுத்த போது அவளுக்கு சங்கடமாக இருந்தது.
எந்த சூழ்நிலையிலும் அவளுடைய தேவைகளை அவன் மறந்ததில்லை. அவ்வளவு முனைப்போடு அவளை கவனித்துக் கொண்டான். ஆனால் அவனை கவனிக்கத்தான் யாரும் இல்லை. மூன்று நாட்கள் பட்டினி கிடந்தாலும் ஏன் என்று கேட்க ஒருவரும் இல்லை. ஏனோ அந்த எண்ணமே அவளுக்கு வலித்தது. அவனை கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிற அக்கறை துளிர்த்தது. சமையலறைக்குள் நுழைந்தாள். வேலையாட்கள் இல்லாத வீடு என்றே சொல்லமுடியாது. அவ்வளவு சுத்தமாக இருந்தது சமையலறை.
‘நீட் ஃப்ரீக் மேன்’ என்று முணுமுணுத்தாள் கொண்டே அரிசியை கழுவி எலக்ட்ரிக் குக்கரில் வைத்தாள்.
‘சாப்பிடுவானா?’ – மனம் சஞ்சலப்பட்டது. ‘பார்த்துக்கொள்ளலாம்’ – மறுத்தால் பேச்சால் எப்படி அவனை சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டே அடுப்பில் உருளைக்கிழங்கை வேக வைத்தாள். சற்று நேரத்தில் தயிர்சாதமும் உருளைக்கிழங்கு வறுவலும் ரெடியானது.
சமையலறையில் அவள் ஏதோ உருட்டிக் கொண்டிருப்பதை அவன் கண்டுகொள்ளவில்லை. போரடிக்கிறது போலும்… ஏதோ செய்து கொண்டிருக்கிறாள் என்பதற்கு மேல் எதையும் யோசிக்காமல் வேலையில் கவனமாக இருந்தவன், அவள் ட்ரேயை கொண்டு வந்து டீப்பாயில் வைத்த போது ஆச்சரியப்பட்டான்.
ஒரு கிண்ணத்தில் ஆர்டர் செய்த பிரியாணி, அதே போன்ற இன்னொரு கிண்ணத்தில் தயிர்சாதம், சிறிய கிண்ணங்களில் உருளை கிழங்கு வறுவல், குருமா, முட்டை, பச்சடி என்று அனைத்தும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
வாய் திறந்து எதுவும் கேட்காமல் ‘என்ன இது?’ என்பது போல் அவளை ஏறிட்டான் அர்ஜுன். அந்த பார்வையே அவனுடைய மறுப்பை தெளிவாக கூறிவிட, அவனை எப்படியாவது உண்ண வைக்க வேண்டும் என்கிற உத்வேகம் பிறந்தது அவளிடம்.
“எனக்கு தெரியும்… சாப்பாடு விஷயத்துல நீங்க யாரையும் நம்ப மாட்டீங்க… அதுக்குதான் ரெண்டு பேருக்கும் ஒன்னாவே கொண்டு வந்திருக்கேன். சேர்ந்தே சாப்பிடலாம். எனக்கு நானே எதுவும் செஞ்சுக்க மாட்டேன்ல…” – படபடவென்று பேசினாள்.
எதிர்பார்ப்பையும் ஆவலையும் கண்களில் தேக்கி தன்னை இமைக்காமல் பார்ப்பவளை சுவாரசியமாக நோக்கினான் அர்ஜுன். அந்த கண்கள் மகிழ்ச்சியில் மலர்வதை காண வேண்டும் என்று தோன்றியது.
உடனே லேப்டாப்பை மூடி ஓரமாக வைத்துவிட்டு, “பிளேட் கொண்டுவா” என்றான்.
அவன் எதிர்பார்த்தபடியே அவள் முகம் தாமரையாய் மலர்ந்தது. கண்கள் மகிழ்ச்சியில் மின்னின. ஆனந்தத்துடன், “இதோ…” என்றபடி துள்ளிக் கொண்டு சமையலறை பக்கம் ஓடினாள். சில வினாடிகளிலேயே இரண்டு தட்டுகளோடு திரும்பி வந்தாள். அவளுடைய பரபரப்பையும் புன்னகையையும் ரகசியமாய் ரசித்தபடி இருவருக்கும் பரிமாறினான் அர்ஜுன்.
உள்ளே ஒரு குரல் எச்சரித்துக் கொண்டே தான் இருந்தது. ஆனால் அதை அவன் அலட்சியப்படுத்தினான். அவளால் தனக்கு ஆபத்து வராது என்று நம்பினான். அந்த நம்பிக்கை அவனுக்குள் ஒருவித அமைதியை கொண்டுவந்தது. காலையிலிருந்து இருந்த ப்ரெஷர் கூட வெகுவாக குறைந்துவிட்டது போல் தோன்றியது. மிகவும் ரிலாக்ஸாக உணர்ந்தான்.
அவளுடைய அருகாமை, பார்வை, பேச்சு, சிரிப்பு அனைத்தும் அவனை மகிழ்வித்தது. அதிகம் பேசிக்கொள்ளாமல் அமைதியாகவே இருவரும் உணவருந்தினார்கள். அப்போது அவனுடைய அலைபேசி அழைத்தது. எடுத்து பார்த்தான். அன்நோன் நம்பர்… நம்பர் தெரியாததாக இருந்தாலும் அழைக்கும் நபர் யார் என்பது அவனுக்கு தெரிந்தே இருந்தது… அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்தான்.
“உல்ஃபை பேக் பண்ணியாச்சு…” – அந்த பக்கத்திலிருந்து ஒலித்தது ப்ளூ ஸ்டாரின் கனத்த குரல்.
“பேக் பண்ணியாச்சுன்னா… பாடி-பேக்ல இல்லையே?” – அவன் குரலில் சிரிப்பிருந்தது.
அவனுடைய கேலியை ரசித்ததற்கு அடையாளமாக அந்த பக்கத்திலிருந்து ஒரு அழுத்தமான அமைதி மட்டுமே கிட்டியது. பிறகு, “நல்ல மூட்ல இருக்க போலருக்கு….” – உணர்வற்ற அதே கனத்த குரல்.
ரசனையோடு மிருதுளாவை பார்த்தான் அர்ஜுன். உதட்டோரம் ஒளித்துவைத்த புன்னகையுடன், “எஸ்…” என்று பெருமிதத்தோடு பதிலளித்தான்.
மீண்டும் ஒரு சின்ன அமைதிக்குப் பிறகு, “கேர்ஃபுல்” என்கிற எச்சரிக்கையுடன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
உல்ஃபை திருப்பி அனுப்பிவிட்டோம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, அனைவருக்கும் போக்கு காட்டிவிட்டு, டொமஸ்டிக் ஃபிலைட் எடுத்து இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களுக்கு அந்த நால்வரும் தனித்தனியாக பறந்தார்கள்.
17 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
interesting ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ahigokul says:
When will be the next ud mam…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Priyanga Ramesh says:
Innaiku ud update pannuga sis please
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Arhitha Arhaan says:
Akka next epi epo varum ☹️☹️☹️
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Afrin Zahir says:
Wolf car la escape aahi ponadha gortha aalunga paakalaya
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Manimegalai Vasudevan says:
கதை ஆரம்பத்துல இருந்து
செம திரில்லா போகுது நித்தி..
ரொம்ப நல்லா எழுதுறீங்க..
அர்ஜூன் செம கேரக்டர்..
நம்பி சாப்பிடும் அளவுக்கு வந்துட்டானா???
அர்ஜூன் வீட்டுக்கு எப்ப போறது..
அங்க உள்ளவங்க எல்லாம் என்ன ஆனாங்க..
மிரு அம்மா என்ன ஆனாங்க
பயங்கர சஸ்பென்ஸ் ah நகர்த்துறீங்க…
மிருவ தாக்க வந்தவங்க யாரு???
முதலில் அர்ஜூன் தான் டார்கெட் நினைச்சேன்…
எப்பி போட்டு இருப்பீங்களான்னு
அடிக்கடி செக் panniduven..
கதை ரொம்ப பிடிச்சிருக்கு..
நன்றி.
வாழ்க வளமுடன்.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Jothi Priya says:
Very interesting… Wat ‘l happen nxt
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Selvalakshmi Suyambulingam says:
Wolf could be her dad. The lady who attempted to kill Wolf might be her Mother. Is heroine also a terror gang person… Too much of suspense. Confusion continues.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Uma Maheswari says:
Miru மேல இன்னும் doubt irunthukitte iruku enaku. Antha wolf thaan iva appava இருக்குமோ.
Wolf ai attack Panna போனது அவ அம்மாவா இருக்குமோ.. 🤔
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ahigokul says:
Nice episode…with more suspense …
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sathiya Priya says:
Nice ud sis, next ud eppo sis?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Wowww .. Nithya semma kalakkal update pa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ambika V says:
Nice epi
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ambika V says:
Semma epi pa arjun 😍😍😍😍😍
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
Sema thrilling ah mudichitingale.. Enna seiyaporano.. careful nu eduku sollanum?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
saranya shan says:
Arjun Kannil mannai thuva mudiyumaa…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sumithra Ramalingam says:
wolf gang vera oorukku poittangale, ippo enna seiya poran