ஹேய் ! நீ ரொம்ப அழகா இருக்க-19
1322
0
பொழுது விடிந்தது:
வழக்கம்போல் இருவரும் கல்லூரிக்கு சென்று தங்கள் வகுப்புகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்கள்.
நேரம் மாலை 6 மணி
ஊருக்கு கிளம்புவதற்கான தயார் நிலையில் வாகனத்தை வீட்டின் உள்ளேயிருந்து வெளியே வந்து வினிதா நிறுத்தினாள்.
சில நிமிடங்களில் வனிதாவும், சங்கீதாவும் காரில் வந்து ஏறினார்கள்.
வேகமாக கிளம்பிய கார் NH83 தேசிய நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டு சென்றது.
வனிதா: வினியைப் பார்த்து கொஞ்சம் மெதுவாதான் போட்டேன்டி?
வினிதா: வனி மெதுவாத்தான் ஓட்டுறேன். நீ ஒன்னும் பயப்படாத.
சங்கீதா: பாப்பா எனக்குதான் பயமா இருக்குமா?
வினிதா: என்னம்மா அவ தான் சின்ன புள்ள மாதிரி பயப்படுறாங்க நீங்களுமா?
வேகமாக சென்ற கார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் காரை நிறுத்தினாள்.
காரைவிட்டு முதலில் இறங்கிய சங்கீதா,
“பாப்பா நீங்க இங்கேயே இருங்க நான் போய் டீ வாங்கிட்டு வரேன் என்று புறப்பட்டாள்”.
அதன்பின் இருவரும் காரைவிட்டு இறங்கினார்கள்.
இருவரும் காரில் சாய்ந்தபடி பேசிக்கொண்டிருந்தார்கள்.
வினிதா அப்பாடா பர்த்டே கிராண்டா கொண்டாடுவோம் டி?
ஆமாம் வனி. சரி அப்பாக்கு வாங்கின கிப்ட் எல்லாம் எடுத்து பேக்கில் வைத்து விட்டாயா?
எடுத்து வைத்து விட்டேன் வினி.
வினி அங்க பாருடி டீக்கடை வாசலில் இருந்து ஒரு பையன் உன்னையே சைட் அடிக்கிறான்?
😂😂 ஆமாம் டி! சரி பொழைச்சு போகட்டும். பாத்துட்டு போறேன்.
கார்த்திக்கே பர்த்டே பார்ட்டிக்கு இன்விட் பண்ணியா?
பண்ணிட்டேன் வினி. ஆனா அவன் வர மாட்டேன்னு சொல்லிட்டான். அவனுக்கு முக்கியமான மேட்ச் இருக்குதாம்.
சரி ஓகே வனி வா கிளம்புவோம்.
அங்கிருந்து கிளம்பிய கார் நேராக அவர்கள் வீட்டில் போய் நின்றது.
வந்தவர்களை வரவேற்க கோபால், சித்தி வனஜா, சித்தப்பா அருள், தம்பி ராமு, சோமு மற்றும் கௌரி அனைவரும் வந்து வரவேற்றார்கள்.
கௌரி அவர்கள் கொண்டு வந்த பேக்குகளை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள்.
சங்கீதா கோபாலிடம் தன் வீட்டிற்கு செல்வதற்கு அனுமதி கேட்டாள்.
கோபால்: சங்கீதா சாப்பிட்டு விட்டு போகலாம்.
சங்கீதா: வேண்டாம் ஐயா. வீட்ல புள்ளைங்க எல்லாம் காத்துகிட்டு இருக்கோம். நான் நாளைக்கு வரேன் அய்யா.
கோபால்: சரிப்பா நாளைக்கு காலையில சீக்கிரமா வந்துவிடு. உன் மாப்பிள்ளை முனுசாமியை ரெண்டு நாளைக்கு இங்க வேலைக்கு வர சொல்லு. நிறைய வேலை கிடைத்தது பார்.
சங்கீதா: சரி ஐயா வர சொல்றேன்.
கோபால்: சங்கீதா இருப்பா! போன மாசம் சம்பளம் வாங்கினியா? வந்து வாங்கிட்டு போ.
சங்கீதா வீட்டு உள்ளே சென்று தனது ஊழியத்தை வாங்கிக்கொண்டு அவன் வீட்டிற்கு சென்றாள்.
வீட்டின் உள்ளே இவர்களின் வருகையால் வீடே கலை கட்டியது. சித்தி வனஜா தனது இரு குழந்தைகளின் மீதும் பாசத்தை கொட்டி தீர்த்தாள். தன் செய்த இனிப்பு பலகாரங்களை இருவருக்கும் பூட்டிவிட்டு அழகு பார்த்துக் கொண்டிருந்தான்.
சித்தப்பா அருளும் சோபாவில் அமர்ந்தபடி தனது இரு கைகளையும் ஒன்றை வனிதாவின் தோளிலும் மற்றொன்று வினிதாவின் தோளிலும் போட்டு அமர்ந்திருந்தார்.
அடியே வனஜா! உன் பிள்ளைங்க வந்த பிறகு என்ன மறந்துட்டியா? அதுக்கு மாத்தி மாத்தி உடுறிய எனக்கு ஒரு வாய் ஊட்டி நீயா?
என்று அருள் கேட்க, வனஜாவும் இனிப்பை ஊட்டினாள். அதைக் கண்ட அனைவரும் வாய் விட்டு சிரித்தார்கள்.
இந்த ஆனந்தத்தை எல்லாம் கண்டுகொண்டிருந்த கோபாலின் கண்கள் ஆனந்தக் கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தது.
கார்த்திக் வீடு:
கார்த்திக் இரண்டு தினங்களுக்கான உடைகளை பேக்கில் எடுத்து வைத்துக் கொண்டு வெளியே செல்வதற்காக தனது காரை ஸ்டார்ட் செய்தான்.
தனது கைப்பேசியை எடுத்து ரவிக்கும், அருணுக்கும் conference call யை போட்டான்.
ரவி: மச்சான் கார்த்தி நான் ரெடியா இருக்கேன் டா வீட்டுல.
அருண்: நானும் ரெடியாகத் தான் இருக்கிறேன் மச்சான்.
கார்த்திக் இருவரையும் பிக் செய்துகொண்டு, கார் வேகமாக ஊட்டியை நோக்கி சென்றது.
கார்த்திக்கிற்கு ஊட்டியில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறது. விடுமுறை தினங்களை குடியும் குடித்தனமாக அங்குதான் கழிப்பார்கள்.
மேட்டுப்பாளையத்தில் கார் நின்றவுடன் ரவி தங்களுக்கு தேவையான பீர் பாட்டில்களை வாங்க சென்றான்.
கார்த்திக் காரிலிருந்து வெளியே இறங்கி சிகரெட்டை பற்றினான்.
புகை உள்ளே சென்று வெளியிடும் நேரத்தில் தனது கைப்பேசியில் இருந்து குறுந்தகவல் செய்திக்கு ஒரு நோட்டிபிகேஷன் ஒலித்தது.
கைபேசியை எடுத்து திறந்து பார்த்தான்.
ஒரு Unknown நம்பரிலிருந்து குறுந்தகவல் வந்து இருந்தது. அதனை ஓபன் செய்து பார்த்தான்.
அந்த குறுந்தகவல் இதுதான்!!
ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!
யாராக இருக்கும் சிந்தியுங்கள் மக்களே?
தொடரும்
Comments are closed here.