Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 44

அத்தியாயம் – 44

அர்ஜுன் மற்றும் மிருதுளா இருவரின் உலகமும் மற்றவரை சுற்றியே சுழலத் துவங்கியிருந்தது. காலை நேர ஜாகிங்கில் ஆரம்பித்து காபி, டிபன் என்று தொடரும் அவர்களுடைய இணைந்த பயணம் மாலை வாக்கிங் வரை வந்து இரவு உணவு வரை நீளும். அதற்குப் பிறகும் கூட இருவருக்கும் உறங்கச் செல்ல மனம் வராது. ஏதாவது கதைபேசியபடி வராண்டாவில் அமர்திருப்பார்கள். ஏதாவது கதை பேசியபடி வராண்டாவில் அமர்ந்திருப்பார்கள். நிலவொளியும் குளிர்தென்றலும் நேசம் கொண்ட நெஞ்சமுமாக அழகாய் கழியும் நேரத்தை அனுபவித்து உள்வாங்கினார்கள்.

அதுமட்டும் அல்ல. அர்ஜுன் அவளுக்கு குத்துசண்டை சொல்லிக் கொடுத்தான். தப்பும் தவறுமாக சண்டையிட்டு அடிபட்டுக்கொள்பவள் வெகுண்டு அவனிடம் எகிறி குதிப்பாள். அவளுடைய குழந்தை கோபத்தை ரசித்து, வித்தைக்காரன் போல் அவளை தூக்கி தலைகீழ் சுற்றி இறக்கி சத்தமாக சிரிப்பான் அவன்.

துப்பாக்கிச் சுட கற்றுக் கொடுத்தான். ஹெட்செட்டை மீறி காதை அதிரும் சத்தத்தில் இலக்கை தவறவிட்டுவிட்டு அவன் சொல்லித்தருவது சரியில்லை என்று காலை உதறுவாள் மிருதுளா. அவள் சிறுபிள்ளை தனத்தை கண்டு சிரிக்கும் அர்ஜுன், அவள் கன்னத்தை வலிக்க கிள்ளியிழுத்து கொஞ்சுவான்.

அவள் அடிக்கடி சமைப்பதும் அதை அவன் தயங்காமல் சுவைப்பதும் கூட நடந்தது. இருவருக்குள்ளும் நெருக்கமும் நம்பிக்கையும் வெகுவாய் அதிகரித்திருந்தது. அப்படியே இரண்டு வாரங்கள் உற்சாகமாக கழிந்தது. அதன்பிறகுதான் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.

அப்போது மாலை ஐந்து அல்லது ஐந்தரை மணியிருக்கும்… பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் முடிந்து அனைவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரம். போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பிரதான சாலையில் காரை செலுத்திக் கொண்டிருந்த அர்ஜுன், அடிக்கடி கவனம் சிதறி மிருதுளாவை திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தான். கல்லூரி முடிந்து வந்து காரில் ஏறியதிலிருந்தே, ஏதோ சிந்தனையும் குழப்பமுமாக அமைதியாகவே இருந்தாள்.

“என்ன ஆச்சுன்னு சொன்னாதானே தெரியும்…?” – பத்துமுறை கேட்டும் அவளிடமிருந்து பதில் வராததையடுத்து குரலில் சற்று அழுத்தத்தை கூட்டினான்.

அதற்கும் அவள் அசைந்துக் கொடுக்கவில்லை. “ப்ச்… ம்ஹும்…” என்று உச்சுக்கொட்டி ‘ஒன்றும் இல்லை’ என்பது போல் தலையை குறுக்காக அசைத்துவிட்டு பார்வையை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டாள்.

அவள் தன் கண்களை சந்திக்க மறுக்கிறாள் என்று உணர்ந்த அர்ஜுன், அடுத்து வந்த திருப்பத்தில் ஸ்டியரிங் வீலை திருப்பி டிராபிக் இல்லாத சாலையில் காரை ஓரம்கட்டி நிறுத்தினான்.

சற்று நேரம் எதையும் உணராமல் தன்போக்கில் ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தவள், ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகே கார் நின்றுக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

குழப்பத்துடன் அவனை திரும்பிப் பார்த்து, “ஏன் ஸ்டாப் பண்ணியிருக்கீங்க?” என்றாள்.

அவள் பக்கம் நன்றாக திரும்பி அவள் முகத்தை ஆழமாக நோக்கிய அர்ஜுன், “என்கிட்ட சொல்லக்கூடாத விஷயமா?” என்றான்.

சட்டென்று அவள் முகம் வெளுத்தது. கண்களில் கலக்கம் தெரிந்தது. “இ…இல்லையே…” என்றாள் தடுமாற்றத்துடன்.

விஷயம் ஏதோ முக்கியமானது என்பதும் அதை தன்னிடம் பகிர்ந்துகொள்ள அவள் தயங்குகிறாள் என்பதும் அவனுக்கு நன்றாகவே புரிந்துவிட்டது. உடல் இறுக ஓரிரு நிமிடங்கள் அவளை வெறித்துப் பார்த்தவன் பிறகு சாலையை நோக்கி பார்வையை திருப்பினான். சிந்தனையில் அவன் புருவங்கள் முடிச்சிட்டன.

திடீரென்று கடுமையாக மாறிவிட்ட அவன் முகத்தை திகைப்புடன் பார்த்த மிருதுளா, “அர்ஜுன்…” என்று தயக்கத்துடன் அழைத்தாள்.

அவன் திரும்பியே பார்க்கவில்லை. வெகு அழுத்தமாக அமர்ந்திருந்தான். பிறகு சாலையை பார்த்தபடியே, “நா உன்ன நம்பினேன்” என்று கூறியவன் மெல்ல அவள் பக்கம் திரும்பி, “நீயும் என்னை நம்பறேன்னு நெனச்சேன்” என்றான் வெறுமையாக.

“அஃப்கோர்ஸ் அர்ஜுன்… ஐ பிலீவ்…” – அவசரமாக விளக்கம் சொல்ல முயன்றவளை, “டோண்ட்….” என்று குரலை உயர்த்தி இடைமறித்தவன், ஒரு வெறித்த பார்வைக்குப் பிறகு “டோண்ட்… ஸே எனிதிங் அன்டில் யூ மீன் இட்….” என்றான் அழுத்தம் திருத்தமாக.

‘உண்மையாக உணராமல் எதையும் சொல்லாதே’ – உதடுகளை அழுந்த மூடினாள். உண்மை சுட்டது. அவனை நம்புகிறேன் என்று சொல்கிறவள் உண்மையில் நம்பியிருந்தால் அந்த விஷயத்தை மறைத்திருக்க மாட்டாளே! அப்படியென்றால் அவனுடைய பேச்சில் என்ன தவறு? அவனுடைய கோபத்தில் என்ன தவறு? குற்றமுள்ள நெஞ்சம் குத்தியது. வார்த்தைகள் வற்றி போய்விட இமைக்காமல் அவனைப் பார்த்தாள்.

விடைத்த நேர் நாசியும் கனல்வீசும் கண்களுமாய் அவனும் அவளை நேருக்கு நேர் பார்த்தான் அர்ஜுன். வெகுநேரம் அந்த பார்வையை அவளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. உதட்டை கடித்துக் கொண்டு தலைகவிழ்ந்தாள்.

கண்களை மூடித்திறந்து தலையை அழுந்தக்கோதி, ஏமாற்றத்தை ஜீரணிக்க முயன்றான் அர்ஜுன். அவள் பர்ஸை திறந்து ஒரு காகிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள். அதில் ஏதோ ஒரு போன் நம்பர் எழுதியிருந்தது.

அவனை மீறி யாரோ அவளை நெருங்கிவிட்டார்கள். அதைத்தான் அவள் மறைக்க முயன்றிருக்கிறாள்! – நடந்ததை ஊகித்தவனின் முகம் தணல் போல் சிவந்தது.

“யாருன்னு தெரியல. முதல்தரம் இன்னைக்குத்தான் அவனை பிரேக் டைம்ல பார்த்தேன். திடீர்ன்னு வந்தான்… இந்த பேப்பரை கைல கொடுத்து, ‘ஆபத்துல இருக்க. இந்த நம்பருக்கு கால் பண்ணு. அர்ஜுனுக்கு தெரிய வேண்டாம்’ன்னு சொல்லிட்டு போய்ட்டான்” – நடந்ததை அப்படியே ஒப்புவித்தாள்.

“சோ… யாருன்னே தெரியாதவன் ஒருத்தன் சொன்னதை நம்பி என்னை சந்தேகப்பட்டுட்ட… இல்ல?” – கண்கள் இடுங்க உள்ளடங்கிய குரலில் வினவினான்.

அவனுடைய பார்வையும் குரலும் வயிற்றை பிசைய, “இல்ல அர்ஜுன். அப்படி இல்ல… நா ஏதோ குழப்பத்துல…” என்று விளக்கம் கொடுக்க முயன்றவளை இடைமறித்து பேசினான்.

“ரிஸ்கிங் மை லைஃப், டு டைம்ஸ் உன்ன சேவ் பண்ணியிருக்கேன். மறந்துட்ட இல்ல?”

அவன் கூறிய உண்மையும் அதை கூறியபோது அவன் முகத்திலிருந்த கசந்த புன்னகையும் அவள் மனதை கசக்கி பிழிந்தது.

உண்மைதானே! அவளுக்காக உயிரை பணயம் வைத்திருக்கிறான். குண்டடி பட்டிருக்கிறான். ரெத்தம் சிந்தியிருக்கிறான். கொலை கூட செய்திருக்கிறான். இன்னும் எத்தனையோ… அவனை சந்தேகப்படலாமா? கனவில் கூட அவளுக்கு அந்த எண்ணம் எழுந்திருக்கக் கூடாது. – நன்றியுணர்ச்சியும் குற்றவுணர்ச்சியும் மனதை பிசைய கலங்கிப்போனாள்.

தன் மீதே ஆத்திரம் எழுந்தது. அழுகையில் கண்கள் கலங்கியது. “சாரி அர்ஜுன். ஏதோ ஒரு கன்பியூசன்ல அப்படி இருந்துட்டேன். ஐம் ரியலி சாரி” – இதயம் வலிக்க தவிப்புடன் மன்னிப்பு கோரினாள்.

அவன் மறுப்பாக தலையசைத்தான். “டோன்ட் பி சாரி. உன்மேல எந்த தப்பும் இல்ல. நா மாஃபியா மேன். கொலைகாரன். நம்பறது கஷ்டம்தான். நா எதிர்பார்த்திருக்கக் கூடாது. தப்பு எம்மேலேதான். மாத்திக்கிறேன்” – இறுகிய குரலில் அமைதியாக கூறிவிட்டு காரை ஸ்டார்ட் செய்தான்.

அவனுடைய அமைதியின் ஆழம் என்ன என்பதை அடுத்து வந்த நாட்களில் அறிந்துக் கொண்டாள் மிருதுளா.

அர்ஜுனும் மிருதுளாவும் ஒரே வீட்டில்தான் இருந்தார்கள். ஆனால் தனித்தனியாக வாழ்ந்தார்கள். அவளுடைய உணவு, உறக்கம், விழிப்பு எதிலும் அவன் அக்கறை காட்டுவதில்லை.

ஜாகிங், சண்டை பயிற்சி, துப்பாக்கி சுடுதல் அனைத்தையும் ஓரம்கட்டிவிட்டு கடுமையான உடற்பயிற்சியில் கூடுதல் நேரம் செலவழித்தான். அவளோடு சேர்ந்து செய்யும் வேலைகளை தனியாக செய்தான் அல்லது செய்வதையே தவிர்த்து அவளை ஒதுக்கினான்.

வீட்டில் ஓய்வாக இருக்கும் போது கணினியில் ஆழ்ந்தான். கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் போதும் வரும் போதும் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு அவள் அருகாமையை அலட்சியப்படுத்தினான்.

தனிமையில் தத்தளித்து போன மிருதுளா அவனுடைய புறக்கணிப்பை தாளமுடியாமல் வலிய வந்து பேசினாள். அவனோ கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளித்துவிட்டு மௌன கவசத்தை மாட்டிக்கொண்டான்.

வீடே ஓவென்றிருந்தது. பேச்சில்லை… சிரிப்பில்லை… சந்தோஷமில்லை… எங்கும் வெறுமை சூழ்ந்திருந்தது. அவனுடைய இயல்பான பேச்சுக்கும், சின்ன சிரிப்புக்கும் அவள் ஏங்கினாள். அவனுடைய கண்டிப்பும் அக்கறையும் இல்லாமல் பிடியிழந்து பரிதவித்தாள்.

இருவருக்கும் மத்தியில் விழுந்த மௌனத்திரை இரும்புத்திரையாக மாறி கொண்டிருப்பதை உணர்ந்து காயப்பட்டாள். இதை சரிசெய்யவே முடியாதோ என்று கலங்கி கண்ணீர்விட்டாள். ஏன் இப்படி செய்துவிட்டோம் என்று புழுங்கினாள். இந்த விலகல் பெரிதாக்கப்போகிறது என்கிற எண்ணம் அவளை அச்சுறுத்தியது. இரவெல்லாம் உறங்க முடியவில்லை. அதிலும் அன்று அவன் நடந்து கொண்ட விதம் அவள் நம்பிக்கையை நொறுக்கிவிட்டது.

என்னதான் கோபமாக இருந்தாலும் பேசாமல் ஒதுக்கினாலும் அவளை சுற்றித்தான் அவன் இருப்பான். ஆனால் அன்று அவளை வீட்டில் தனியே விட்டுவிட்டு, செல்லும் இடத்தைக் கூட சொல்லாமல் வெளியே சென்றான். அவளுக்கு உள்ளே வலித்தது. அவன் கோபத்தை வெல்ல முடியாமல் மெளனமாக இருந்தாள். விரைவிலேயே திரும்பி வந்துவிடுவான் என்று எதிர்பார்த்தாள்.

ஆனால், இரவு வெகுநேரம் ஆகியும் அவன் வீடு திரும்பவில்லை. அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தவித்துப்போனாள் மிருதுளா. அவனுடைய ஒதுக்கமும் புறக்கணிப்பும் மறந்து போய் அவனுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிட்டதோ, அசம்பாவிதம் நேர்ந்துவிட்டதோ என்று கலங்கினாள். நிலைக்கொள்ளாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். ஜன்னலை எட்டியெட்டிப் பார்த்தாள். வாசலில் போய் நின்றாள். நேரம் ஆகஆக மூச்சுமுட்டியது. நெஞ்சே அடங்கிவிடும் போலிருந்தது. ‘அர்ஜுன்-அர்ஜுன்’ என்று உருப்போட்ட மனம் ஊரில் உள்ள தெய்வங்களையெல்லாம் வேண்டி களைத்தது.

நள்ளிரவை தாண்டி ஓரிரு மணிநேரங்கள் கடந்திருக்கும்… நெஞ்சுக்குழிக்குள் பந்தாய் உருண்டுக் கொண்டிருக்கும் பயத்தோடு வாசலில் நின்ற மிருதுளா, இன்னும் கொஞ்சம் வெளியே வந்து சாலையின் இருபுறமும் பார்வையை வீசினாள். தூரத்தில் ஒரு காரின் ஹெட்லைட் ஒளி தெரிந்தது. சுருக்கென்று உள்ளே ஓர் உணர்வு பாய்ந்தது. ‘அவன் தான்’ என்று இதயம் சொன்னது. மூச்சை பிடித்து கொண்டு அவனுடைய கார்தானா என்று பார்த்தாள். எதிர்பார்ப்பில் நெஞ்சம் விம்மி வெடித்துவிடுவது போலிருந்தது. தொண்டைக்குழிக்குள் ஏதோ அடைத்தது. கண்களை கரித்தது. உதடு துடித்தது. அவள் பார்வை விலகவில்லை. கார் அருகில் வந்தது. அவன்தான்… – அதுவரை அடைபட்டிருந்த கண்ணீர் மடைதிறந்து, அருவியாய் கன்னத்தில் வழிந்தது.

அவளை ஒதுக்கி காரை உள்ளே செலுத்தி நிறுத்தியவன் அவள் நிற்பதையே அறியாதவன் போல் விறுவிறுவென்று உள்ளே சென்றான். நொறுங்கிப்போனாள் மிருதுளா. அதுவரை நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்த பயம் துக்கமாக உருமாறியது. இமைக்காமல் அவன் முதுகையே பார்த்துக் கொண்டு நின்றவள், அவன் கண்ணிலிருந்து மறைந்ததும் தளர்ந்து போய் அங்கேயே ஒரு கல்லில் அமர்ந்தாள்.

நிராகரிப்பு மிக மோசமானது. மரணத்தைக்கூட விதி என்று ஏற்றுக்கொண்டுவிடும் மனித மனம் நிராகரிப்பை அத்தனை சுலபமாக ஏற்பதில்லை. மிருதுளாவுக்கும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எத்தனை பாசமாக இருந்தவன்! ஒரே நாளில்… ஒரே சம்பவத்தில் இப்படி மாறிவிட்டான். அவ்வளவுதானா! அவன் காட்டிய அக்கறை… அன்பு… எல்லாம் அவ்வளவே தானா! இப்போது.. இங்கு… இந்த இடத்தில் யாரேனும் அவளை சுட்டுத்தள்ளிவிட்டு போனாலும் கண்டுகொள்ள மாட்டானா! அப்போதும் கூட யாரோ ஒருத்தி செத்துக்கிடக்கிறாள் என்றுதான் அலட்சியமாக தோளை குலுக்கிவிட்டு போவானா? – தாங்க முடியவில்லை.

எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்தவள். பெற்ற அன்னையை காணாமல் தேடிக் கொண்டிருப்பவள். இன்னும் சந்திக்க வேண்டியவை ஏராளம். வாழ்க்கை நீண்டுகிடக்கிறது. எதுவுமே அவள் நினைவில் இல்லை. அவன் மட்டுமே வாழ்க்கை என்பது போலவும் அவனை இழப்பது அனைத்தையுமே இழப்பது போலவும் தோன்ற அவனுக்கும் அவளுக்குமான அந்த இடைவெளி பூதாகரமாக அவள் எதிரில் எழுந்து நின்றது. உள்ளுக்குள் எரிமலை போல் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு பொங்கியது. அழுகை… கோபம்… ஆத்திரம்… அனைத்தையும் மீறிய வேறொரு விசித்திர உணர்வு. விருட்டென்று எழுந்து வேகமாக உள்ளே சென்றாள்.

கோபத்தை விட அகங்காரம் தான் அர்ஜுனை ஆட்கொண்டிருந்தது. அவள் எப்படி அவனிடம் ஒன்றை மறைக்க நினைக்கலாம் என்கிற அகங்காரம் நெஞ்சுக்குள் தீயை வைத்தது போல் எப்போதும் எரிந்துக் கொண்டே இருந்தது. விலகிநின்றான். அவள் வருந்துவது தெரிந்தது. ஆனாலும் இறங்கிவர மனமில்லை. சந்தேகம் என்பது சாதாரணமானதல்ல. அதை விட்டுவைக்கக் கூடாது, வேரறுக்க வேண்டும். இனி ஒருமுறை அவனுக்கு எதிராக அவள் சிந்திக்கவே கூடாது. – சற்று முரட்டுத்தனம்தான். ஆனால் அதுதான் அவன் சுபாவம்.

வேண்டுமென்றுதான் சொல்லாமல் வெளியே சென்றான். உறங்காமல் காத்துக்கொண்டிருப்பாள் என்று தெரிந்து தான் வெகுநேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்தான். ஆனால் ஒன்றை மட்டும் அவன் எதிர்பார்க்கவில்லை.

நள்ளிரவில்… அரவரமற்ற சாலையில்… தனிமையில்… அவன் வரும் திசையையே பார்த்துக் கொண்டு நின்றவளைக் கண்டு அவன் உள்ளம் குலுங்கிவிட்டது. நிச்சயம் அவன் இதை எதிர்பார்க்கவில்லை. கோபம் அகங்காரமெல்லாம் நொடியில் உடைந்து நொறுங்கிவிட்டது. ஆனால் ஈகோ விடவில்லை. வரட்டுப்பிடிவாதத்துடன் அவளை ஒதுக்கிவிட்டு உள்ளே சென்றான். பின்னாலேயே வந்துவிடுவாள் என்று தான் நினைத்தான். ஆனால் அவள் வரவில்லை. கண்ணாடி வழியாக பார்த்தான். தாயில்லா சிறுமி போல் காலை கட்டி கொண்டு குறுகி அமர்ந்திருந்தாள். கூர்மையாய் ஏதோ ஒன்று உள்ளே பாய்வது போல் உணர்ந்தான். பார்வை அவள் மீதே நிலைத்திருந்தது. உதடுகளை அழுந்த மூடினான்.

அவள் திடீரென்று எழுந்து வீட்டை நோக்கி வந்தாள். அவனும் சட்டென்று திரும்பி படுக்கையறைக்குள் நுழைந்து சட்டையை அவிழ்த்தெறிந்துவிட்டு பனியனோடு நின்று வோர்டரோபில் மாற்றுடையை தேடினான்.

வீட்டிற்குள் வந்த மிருதுளா அவன் படுக்கையறையில் இருப்பதை உணர்ந்து உள்ளே வந்தாள். மனதில் அலையடித்துக் கொண்டிருந்தாலும் அவளை கண்டு கொள்ளாதவனாக தன் போக்கில் அலமாரியை குடைந்து கொண்டிருந்தான் அர்ஜுன்.

அவள் ஏதாவது சொல்லுவாள் அல்லது சண்டை கூட போடுவாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவள் செய்ததோ வேறு.

கண்ணீரும் கம்பலையுமாக முகம் சிவக்க அவன் எதிரில் வந்து நின்றவள், துணிகளோடு உறவாடிக் கொண்டிருந்த அவன் கையை வலுக்கட்டாயமாக பிடித்து உள்ளங்கையில் அழுத்தமாக முத்தமிட்டாள். அவன் திகைப்பும் ஆச்சரியமுமாக அவளை பார்த்தான். இப்போது அவள் கண்டுகொள்ளவில்லை. அவனுடைய அடுத்த கையையும் எடுத்து அங்கேயும் முத்திரையை பதித்தாள். பிறகு இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்து மாற்றி மாற்றி முத்தமிட்டுவிட்டு அவனை இறுக்கமாக கட்டி கொண்டு நெஞ்சில் இதழ்பதித்தாள்.

அவன் உடல் விறைத்து நிமிர்ந்தது. சிலை போல் இறுகி நின்றான். அவன் பதிலுக்கு தன்னை அணைக்கவில்லை, எந்த உணர்வையும் பிரதிபலிக்கவில்லை என்பதை சில நொடிகளிலேயே உணர்ந்தவளுக்கு துக்கம் பொங்கியது. அடக்க முடியாமல் வெடித்து அழுதாள். அழுகையினூடே, “சா…ரி… ப்…ளீ…ஸ்… சாரி… ப்ளீ…ஸ்…” என்று திக்களும் திணறலுமாக முணுமுணுத்தாள்.

அவன் இளகவே இல்லை. அப்படியே சிலை போல் நின்றான். “டாக் டு மீ… ப்ளீஸ்… செத்துக்கிட்டிருக்கேன்…. ஐம் டையிங் பை யுவர் ரிஜக்ஷன்… பேசுங்க… ப்ளீஸ்…” – நொறுங்கிப்போன மனதிலிருந்து தேம்பலும் தவிப்புமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

சற்றுநேரம் எந்த உணர்வும் இல்லாமல் மரக்கட்டை போல் நின்றவன் பிறகு கனத்த குரலில் ஒற்றை வார்த்தையை உதிர்த்தான். “ஏன்?”

அவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். அவன் பார்வையும் அவள் முகத்தில் தான் இருந்தது. இமைகள் தடித்து கண்கள் கோவைப்பழம் போல் சிவந்திருந்தது. முகமெல்லாம் வீங்கியிருந்தது. சற்று நேரத்தில் வெகுவாய் மாறிவிட்ட அவள் முகத்தை வெறுமையாக பார்த்தவன், “ஏன் இந்த அளவுக்கு அஃபக்ட் ஆகற?” என்றான் நிதானமாக.

அவனுடைய கேள்வி புரிந்தது. ஆனால் பதில் சொல்ல தெரியவில்லை. மூளை சிந்திக்கும் திறனற்று போயிருந்தது. எதுவுமே சொல்லாமல் தேம்பலுடன் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளை விளக்கி நிறுத்தி, “டூ யு லவ் மீ?” என்றான்.

ஓரிரு நொடிகள் அவனையே பார்த்த மிருதுளா, ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தாள். அவன் முகமும் உடலும் மேலும் இறுகியது. கண்கள் ஏதோ புரிந்துகொள்ள முடியாத உணர்வில் பளபளத்தது.

“ஸே இன் வோர்ட்ஸ்…” – அவள் தோள்களை அழுந்தப்பற்றி உலுக்கியவன், “வார்த்தையால சொல்லு… என்னை லவ் பண்றேன்னு வாய்விட்டு சொல்லு” என்றான்.

“ஐ… லவ்… யூ…” – காற்றாய் வெளிப்பட்டது அவள் குரல்.

“அகைன்…” – அவன் பிடி மேலும் இறுகியது. கண்கள் சிவந்தன.

“ஐ லவ் யூ…” – வலியில் முகம் சுளித்தாலும் அவள் குரலில் அழுத்தம் கூடியது.

“ஒன்ஸ் அகைன்…” – முகமெல்லாம் .பரவிப்படர்ந்த உணர்வலைகளுடன் அவளை உலுக்கினான். அவன் உடல் நடுங்கியது. குரல் கரகரத்தது.

அவனுடைய ஆக்ரோஷமான வெளிப்பாடு அவளுக்கு விசித்திரமாக இருந்தது. ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்று புரியவில்லை. ஆனால் அவள் மனதில் அவன் இருப்பது உண்மை… அந்த உண்மையை சொல்வதில் அவளுக்கு எந்த தயக்கமும் இல்லை…

“ஐ லவ் யு… ஐ லவ் யு… ஐ லவ் யு… ஐ லவ் யு சோ மச் அர்ஜுன்…” – ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தம் திருத்தமாக அவள் உச்சரித்த போது முகத்தில் தண்ணீர் தெளித்தது போல் சட்டென்று அவன் உணர்வின் உச்சம் தணிந்தது. முகபாவம் மாறியது. சோகம்… வலி… வேதனை… அவளை விட்டு விலகி நின்றான்.

‘என்னவாயிற்று!’ – மிருதுளாவின் மனம் தவித்தது. அவனுடைய அந்த சின்ன விலைகளைக் கூட அவளால் பொறுக்க முடியவில்லை. ஏக்கமாக அவனைப் பார்த்தாள்.

அவன் ஏதோ டென்ஷனில் இருப்பவன் போல் தலையை கோதினான்… கைகளால் முகத்தை அழுந்த துடைத்தான். மீசையை நீவினான்… முகத்தில் குழப்பம்… கலக்கம்… அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.

“அ…ர்…ஜு…ன்…” – பிடிவாதத்துடன் அவனை பிடித்து இழுத்து தன்பக்கம் திருப்பினாள்.

அவன் அவள் முகத்தை ஊன்றி பார்த்து, “என்ன சொன்ன?” என்றான்.

எதை கேட்கிறான் என்று புரிந்தது. ஆனால் அவன்தானே மீண்டும் மீண்டும் சொல்ல சொன்னான்! இப்போது என்ன சொன்னாய் என்று கேட்கிறானே! ஏன் இப்படி விசித்திரமாக நடந்துகொள்கிறான்! குழப்பமும் கவலையும் மேலிட “என்ன ஆச்சு உங்களுக்கு?” என்றாள்.

“ப்ச்.. ப்ச்…” – தலையை குறுக்காக அசைத்தான். “இல்ல… இப்போ… கொஞ்சம் முன்னாடி… ஏதோ சொன்னியே… திரும்ப சொல்லு”

அவள் உதட்டை கடித்துக் கொண்டு ஓரிரு நொடிகள் அமைதியாக நின்றாள். “சொல்லு மிருதுளா” அவன் அதட்டினான்.

அவள் அவனிடம் நெருங்கிச் சென்றாள். வெகு அருகில்… இருவருக்கும் இடையில் ஒரு இன்ச் இடைவெளிதான் இருக்கும். அவ்வளவு நெருக்கமாக… அவன் கண்களுக்குள் இதயத்தை தேடுவது போல் கூர்ந்து பார்த்தபடி அவன் முகத்தை கைகளில் ஏந்தினாள்.

“ஐ லவ் யு அர்ஜுன்… ஐ லவ் யு சோ மச்…” மெல்ல முணுமுணுத்தபடி நுனிகளில் எக்கி அவன் தடித்த இழழ்களை தன் பூவிதழால் ஒற்றியெடுத்தாள்.

அவன் உடல் மேலும் விறைத்தது. தன் கைகளுக்குள் அடங்கியிக்கும் அவன் தாடை இறுகுவதை உணர்தவளுக்கு உள்ளே வலித்தது. அந்த வழியை அதிகமாக்குவது போல் அவன் அவளை விளக்கி நிறுத்தினான்.

“அர்ஜுன்!” – அவனை பரிதாபமாய் பார்த்தாள்.

“அர்..ஜு…ன்!!! அர்..ஜு..ன் ஹோ..த்ரா!!! – பெரிய மாஃபியா மேன் – பவர் – மணி – அதிகாரம் இதையெல்லாம் தான் லவ் பண்ற, நாட் மீ ரைட்?” – கசப்புடன் கேட்டான்.

மிருதுளா அவனது குழப்பத்துடன் பார்த்தாள். “இதெல்லாம் தானே நீங்க?”

அவன் மறுப்பாக தலையசைத்தான். “நோ…. இதெல்லாம் நா இல்ல. நா வேற… என்னோட எமோஷன்ஸ்… பீலிங்ஸ்… ஹார்ட்… ஸோல்… இதெல்லாம் தான் நான்… டெல் மீ நௌ. டூ யு லவ் மை எமோஷன்ஸ்? டூ யு லவ் மை பீலிங்ஸ்? டூ யு லவ் மை ஹார்ட்? டூ யு லவ் மை ஸோல்? டூ யு லவ்… மீ…?” – உள்ளத்தில் பிரவாகமெடுத்த உணர்வு குவியல் அவன் முகத்தில் பிரதிபலித்தது.

மிருதுளா அவனை கனிவுடன் பார்த்தாள். அவனுக்குள் ஏதோ ஒரு பாதுகாப்பின்மை இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. வாய்விட்டு எதையும் சொல்லாமல் புன்னகையும் கண்ணீருமாக தலையை மட்டும் மேலும் கீழும் அசைத்தாள்.

“ஸே இன் வோர்ட்ஸ்…” – கரகரத்த அவன் குரலில் எதிர்பார்ப்பிருந்தது.

அதை புரிந்து, “எஸ்.. ஐ லவ்” என்று அவள் ஆரம்பிக்கும் போதே வலுவான அவன் கரம் ஒன்று அவள் இடையை வளைத்து இழுக்க, மறு கரம் பின்தலையை தாங்கிப்பிடித்து. அதே நொடி மென்மையான அவள் செவ்விதழ்கள் அவன் வன்மையான தாக்குதலுக்கு ஆட்பட்டன.

நீண்ட முத்தத்தில் நெடுநேரம் தடைபட்ட சுவாசம் உலுக்க தன்னிலைக்கு மீண்டு அவன் சற்று விலகிய போது பெரிதாய் மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றியபடி, “யூ…” என்று தடைபட்ட வாசகத்தை முடித்தாள் மிருதுளா.

பூரிப்பில் மலர்ந்திருந்த அவள் முகத்தை பார்வையால் பருகி முத்திரையால் குளிப்பாட்டி செவ்வானமாய் சிவக்கச் செய்தவன் மேலும் முன்னேறி அவள் கழுத்து வளைவில் தன் சுவாசத்தை தேடினான். அவள் உடல் சிலிர்த்து நடுங்கியது. பிரிவின் தாக்கத்தில் வலுவிழந்து போயிருந்த அவள் மனம் தடையற்று அவனோடு உறவாட தயாரானது. ஆனால் அவ்வளவு நெகிழ்ந்திருந்த நேரத்திலும் எல்லையில் நின்று அவள் கண்ணியம் காத்தான் அர்ஜுன்.

Share your comments here

65 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    WOW SUPERRRRRRRR

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ahigokul says:

    Early waiting mam…..

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    saranya shan says:

    Engr theduven Aditya epiyai eppo theduven

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      😀 😀 Nalai… 😀

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Afrin Zahir says:

        Akka… ud podlaya 😓😓😓😓

        • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
          Nithya Karthigan says:

          updated…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Megala Appadurai Megala Appadurai says:

    வாவ் 😍😍😍😍 என்ன ஒரு உணர்வுபூர்வமான எபி …. சூப்பர் நித்தி அருமையா அவர்களோ உணர்வுகளை உங்கள் வார்த்தைகள் மூலம் சொல்லீருக்கீங்க …. என்ன மாதிரியான எழுத்துக்கள்….. அப்படியே கண்முன்னே அர்ஜுனனும் மிருதுளாவும் வந்து போறாங்க …. முத்தக்காட்சியில் வெக்கமா வருது …. டேய் அர்ஜுன் எத்தனை தடவையா கேட்ப …. திரும்ப திரும்ப கேட்கும் நீ….

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      முத்தக்காட்சியில் வெக்கமா வருது ….

      🙈🙈🙈🙈 😀 😀 😀

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Safeeya Zain says:

    Very interesting.but we need lengthy episode

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you Safeeya Zain… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Mangai L says:

    Super story ji. Ore moochila 44 update sum padicheten. Ippo wait panna kastama iruku. Next ud eppo sis

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you Mangai L

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Mangai says:

    Wonderful story sis. Eagerly waiting for next ud

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you Mangai 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Selvalakshmi Suyambulingam says:

    Wonderful Episode.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rusha Seevaamirtham says:

    Nithu..
    So nice dear..

    Feelings sa natural la express panrathila ungalukku nikar neengale thaan..
    Just superb…👌👌👌👌👍💐💐💐

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you Rusha… 🙂 enga konja naalaa aalai kaanum??? 😀

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Rusha Seevaamirtham says:

        Hey dear..
        Busy with academic things..
        Post graduate final exam MD is on the way…
        Bit busy schedule..
        But no busy to ur story….
        Good luck dear

        • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
          Nithya Karthigan says:

          All the very best… 🙂 Exams ellaam nallaa pannunga…

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Rusha Seevaamirtham says:

        Hi nithu..
        Bit busy schedule with near by postgraduate exam…
        But il be there on and off..
        Thank you so much and Good luck

        • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
          Nithya Karthigan says:

          oh! ok Rusha… All the very best… time irukkum podhu oru Hai sollittu ponga… 🙂

          • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
            Rusha Seevaamirtham says:

            Thank you so much nithu……😊😊😊😊😊

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anjali Suresh says:

    Maasaama man ya namma aju…

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Ha Ha… 😀 yen appadi soldreenga!!!! 😀 😀

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Afrin Zahir says:

    When will be the next ud ?

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Seekkirame da… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ahigokul says:

    Nice ud mam… interesting story yet to reveal lot of suspense..

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you ahigokul… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Reena thayan says:

    Arjun certanly knows about Miru fully avan Miru va vaichchu etho game aduran ana Mir va love pannuran
    Normally I did not ask this quection
    WHEN IS THE NEXT UPDATE ?????

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Arjun certanly knows about Miru fully avan Miru va vaichchu etho game

      Nalla yosikkireenga… 😀

      WHEN IS THE NEXT UPDATE ?????

      Seekkirame Reena … 😀

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rajee Karthi says:

    Super…. Story interesting ah poguthu. Emotional ah irunthuchi. Next episode sekirama podunga please please. Very exited.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you…

      Next episode sekirama podunga

      Sure Sure

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    vathany k Krishnamoorthy says:

    Nanthan firsta vanthan enthamanusan ponapudinkydu padukaviduthu.ipathan aruthala padichudu Varan.otu kurayumilla superapokuthu.arjunum anpitku eankum kulanthai pola.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you Sooo much Vathany… 😀

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Samrithi says:

    Very emotional epi sis… Miri love ah othuka vachutan but Avan love panratha sollave ilaye sis…. arju personal lifela ethum Periya problem erukumo?But please sis arju,Miri rendu perum orutharkoruthar unmaiyanavangala tha epavum erukanum… Then evlo problem vanthalum end la nallapadiya rendu perum serthutanum sis plz plz…

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you So muchSamrithi… 😀 kandippa serndhuduvanga da… no worries… 😀

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sathiya Priya says:

    nice ud sis, waiting for next ud sis

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you Sathiya.. 😀

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya Ganeshan says:

    Nice ud sis 😘😍😘😍😘 waiting for next ud,.😃😃😃😃😃

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you Priya… 😀

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ambika V says:

    அடுத்த எபிக்கு இப்போ இருந்து வெயிட்டிங்🙄🙄

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you Ambika… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sumithra Ramalingam says:

    love avanum velipadaiya othukkondan.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      அவன் எங்க ஒத்துக்கிட்டான்??? அவளைத்தானே ஒத்துக்க வச்சான்???

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        saranya shan says:

        Ippadi sonaal eppadi nitya.happy endingnnu solli irukke..

        • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
          Nithya Karthigan says:

          Happy ening thaan… Don’t worry… 😀

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Afrin says:

        Ayyayo enna akka ipdi solliteenga…. bayama iruke

        • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
          Nithya Karthigan says:

          Bayappadaadheenga… 😀 yaamirukka bayamen??? 😀 😀

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Reena thayan says:

        hahahaha ka ka po enakku vasikkum pothe or doubtu vanthichchu kankalin palappukku karanam Miru voda love mattum ella endu
        Arjun plz Miru pavam appuram Miru unna nambave matta Arjun

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Rajee Karthi says:

        Enna ippidi sollitinga nithiya Medam.rendu peraiyum serthu vachirunga please.

        • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
          Nithya Karthigan says:

          Adhellaam serndhuduvaanga Rajee… neenga kavalaiye padaadheenga… 😀 😀

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Emily Peter says:

    Great Arjun and pavam Arjun

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      🙁

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Reena thayan says:

      hahahaha he is not pavam Miru than pavam Enna Nithya Sis 😀

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Nithya Karthigan says:

        Yes… Yes… you are right… 😀

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ambika V says:

    Nice epi 😍Kiruthika amma ponna thedave illa suman sujith devit avanga enna ananga

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      அடுத்த எபியில் ஓரளவுக்கு எல்லாம் விளங்கிடும் 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Uma Maheswari says:

    Enaku இன்னமும் miru மேல தான் டவுட் இருக்கு..
    Don’t know y.. something fishy..

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      அடுத்த எபியில் தெரிந்துவிடும் உமா…

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Uma Maheswari says:

        Waiting Nithya..

        • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
          Nithya Karthigan says:

          🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    saranya shan says:

    Arjunirkullum Ranam irukiratho..miru Unnao suthi egapatta valai oru mudicum Avila mattenguthu.kidan engr.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      அடுத்த எபியில் கதையின் முக்கியமான முடிச்சு உடைபடும் என்று நினைக்கிறேன்.

You cannot copy content of this page