Share Us On
[Sassy_Social_Share]காஜலிட்ட விழிகளே 19
1575
0
கோபம் மறைந்ததுமே காதல் வந்து ஆனந்த ராகம் இசைத்தது. அவள் இதயத்தை யாழ் என நினைத்து அதன் நரம்புகளை வருடி ஆனந்த ராகம் வாசித்தது.
“நோ டியர். அப்பாகிட்ட நான் தான் சம்மதம் வாங்குவேன். அப்பா ஃபிளைட்டில்தான் வர்றார். நான் இங்கிருந்து போன அடுத்த ஒரு மணி நேரத்தில் அப்பா வந்திருப்hர். அவரிடம் அப்பா உங்களுக்கு ஒரு பையன் இல்லை என்ற குறையை கார்த்திக் என்னைக் கல்யாணம் செய்து சரி பண்றேன் என்கிறார் நீங்க என்ன சொல்றீங்க? என்று கேட்கப்போறேன். இதையே நான் எத்தனை முறை என் வீட்டில் இந்த ஒரு வாரமும் ரிகர்சல் பண்ணேன் தெரியுமா? ” என்றவள் தனது கோபம் மறந்து அழகாகச் சிரித்தாள்.
“ஸ்ருதி.. ”
“ம்? ”
” நீ ஒண்ணு மறந்திட்ட! உன் அப்பா சரின்னு சொல்லிட்டார்னா நீ என்னிடம் எக்குத்தப்பா மாட்டிக்குவ! இப்பவே உன்னால் உன் கையை என்னிடம் இருந்து பிரிக்க முடியல்லை. ”
” கார்த்திக் நீயும் ஒண்ணு மறந்திட்ட.. நான் உன் சட்டைக் காலரை மட்டும்தான் தொட்டேன். அப்புறம் நம்ம ஃப்ர்ஸ்ட் நைட் ரூமிற்குள் நான் என் வீணை கொண்டு வரவா? ” என்று சிரித்து சிரித்து கண்ணீர் வடிந்தபடியே கேட்டாள்.
கார்த்திக் அவளிடம் “ஏய் போக்கிரி! ஐ வொன்!” என்றான்.
“என்ன? என்னத்த ஜெயிச்ச?” என்றாள் கோபம் போலக் காட்டி.
“உன்னை நான் இரண்டு நிமிஷம் நாற்பது செகன்ட் சிரிக்க வச்சிட்டேன். ” கார்த்திக்கின் உல்லாச கணக்கை ஒதுக்குவது போல ஒதுக்கிவிட்டுச் சொன்னாள்
“தருண் மட்டும் என் கையில் கிடைத்தால்.. ”
“அம்பு எய்தவன் சட்டைக் காலர்தான் உன் கையில் இருக்குல்ல.. அம்பை ஏன்மா டிஸ்டர்ப் செய்யிற? ” என்றான் சிரிக்காமலே..
ஆனால் அங்கே சிரிக்க வேண்டியவள் சிரித்தாள்.
ஸ்ருதி சமாதானம் ஆனதால் கார்த்திக் புத்தியில் வேறேதுவும் தோன்றவேயில்லை. எதைப்பற்றியும் நினைக்கவேயில்லை. ஸ்ருதியும் அவளது தோழிகளுடன் கிழம்பிவிட்டாள். அவனும் தனது பைக் நிற்கும் இடத்திற்கு வந்தான்.
ஆனால் அன்பு இல்லத்தைவிட்டு வெளியே வந்தபிறகு தருணைப் பார்த்ததும் அவனது இதயம் வேகமாகத் துடித்தது. இவனுடன் தானே நாம வந்தோம்? என்ற நினைவே பிறகுதான் அவனுக்கு வந்தது.
பைக்கில் ஏறப்போனவனை தடுக்கவில்லை தருண். வீடு வந்து சேரும் வரை பேசவும் இல்லை.
இந்த புலிகேசி எதற்கு பம்முறான்? என்று மனதில் நினைத்தாலும் கார்த்திக்கினால் கேட்கமுடியவில்லை.
ஆனால் அவன் வீட்டிற்குள் வந்ததுமே பதிலும் வந்தது.
கதவைத் தாழ்போட்ட அடுத்த நொடி தருண் ஆரம்பித்தான்..
“ஆக அன்றைக்கு ஃபேன் ஆஃப் ஆனதால்தான் நீங்க ரெண்டு பேரும் வியர்த்து வடிந்ததா? ”
கார்த்திக் சிரிக்காமல் இருக்க அரும் பாடுபட்டான்.
“என்ன சார் நான் ஜான்விகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும்? ஸ்ருதி கன்சீவ் ஆகியிருக்காளா? இல்லையான்னு கேட்கணுமா?ஆனால்… ” என்று நிறுத்தியவன் மேலும் சொன்னான் இ
“நீ என்கிட்ட சொன்னதை நான் முழுதாக நம்பி அவளிடம் ‘ஸ்ருதியை கொஞ்சம் படிகட்டுகள் ஏறி இறங்கும்போது பார்த்துக்கோ’ ன்னு சொன்னேனே.. அதை நினைச்சாதான் மனசு ஆறவே மாட்டிக்குது. ”
இதற்கு மேல் கார்த்திக்கினால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அவன் முதுகு சிரிப்பினால் குலுங்க ஆரம்பித்ததும் பின்னாலிருந்து அவனைத் தள்ளியவன் அவனை தரையில் புரட்டி எடுத்தான்.
இருவரும் கொஞ்சம் உருண்டுவிட்டு மூச்சு வாங்கிக்கொண்டு அமைதியானபோது.. தருண் அவன் மேல் உட்கார்ந்துகொண்டு “டேய் அன்றைக்கு ஒரு மணிநேரமாக அவளைத் தொடாமல் அந்த ரூமில் என்னடா செய்த? ” என்று கேட்டான்.
“சொல்றேன்டா! நீ முதலில் எழுந்திடு! ”
தருண் எழுந்ததும் கசங்கிய சட்டையை தட்டிவிட்டுக்கொண்டு சுவரில் சாய்ந்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டார்கள் இருவரும்.
தருண் கார்த்திக்கின் முகத்தில் தனது பார்வையை பதிக்க.. கார்த்திக் ஆரம்பித்தான்..
மாடி அறையில் (2018)…
ஸ்ருதி சுவரில் தலையைச் சாய்த்ததும் ஸ்விட்ச் எல்லாம் அணைஞ்சிடுச்சு! நான் தொட்டதும் அந்த இடத்திலிருந்து தள்ளி ஓரமாக போய் நின்னுக்கிட்டா..
” ஸ்ருதி ஒரே ஒரு கிஸ் கொடுடி… ”
” கார்த்திக் அந்த இடத்தைவிட்டு நகராதே! ”
” ஸ்ருதி இன்னைக்கு மட்டும்தான்.. ”
” நோ கார்த்திக். ”
” சரி. அப்பன்னா நான் யாரையும் ஹெல்ப்புக்கு கூப்பிடமாட்டேன். ”
” என்ன? ”
” கதவை நீயே திறந்துக்கோ! ”
” கார்த்திக்! இப்ப நீ கதவைத் திறக்க ஏதாவது வழி கண்டுபிடிக்கலைன்னா.. நான் கத்துவேன். ”
” ஏய் யார்கிட்ட டூப் விடுற.. நீ மூச்சுகூட விட மாட்ட.. இதுல்ல கத்துவாளாம்.. எங்க சத்தமாக மூச்சுவிடு பார்ப்போம் ” என்று அவள் அருகே எட்டு வைத்து நடந்து வந்தான்.
” கார்த்திக் நீ அந்த இடத்திலேயே இரு! ”
” கடவுளாக.. இல்லை இல்லை கதவாக எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பு! அதையும் விடச்சொல்றியே கண்ணம்மா! ”
ஸ்ருதி உடனே அவள் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த வீணையை எடுத்து இருவருக்கும் இடையில் வைத்தாள்.
” என்னடி பண்ற? ”
” வீணையை தாண்டி வந்திடுவியா? ”
” என்னடி லாங் ஜம்ப் டிரைனிங் தருகிறியா? ”
” வீணையை நீ தாண்டுவ? நிச்சயம் தாண்ட மாட்ட. எனக்குத் தெரியும்! கதவு திறக்கும் வரை நீ அந்தப்பக்கம் நான் இந்தப்பக்கம் தான்! ”
அதன் பிறகு கார்த்திக் ஒரு இன்ச்கூட அசையவில்லை. பத்து நிமிடம் கழித்து வீணைக்கு அருகே கிட்டாரும் இருந்தது. அடுத்த பத்து நிமிடத்தில் ஒரு செட் மிருதங்கமும் இருந்தது.
” ஏய் என்னடி பண்ற? ”
” நீ ஏன் இங்கிட்டும் அங்கிட்டும் அசையிற? அதான் எனக்கு கூடதல் பாதுகாப்பாக இவற்றையெல்லாம் வச்சிருக்கேன். ”
…
” கார்த்திக் ஒரே வியர்வை.. உடம்பெல்லாம் கச கசன்னு இருக்கு! கதவைத் திற்கக மாட்டியா? ”
” மாட்டேன்! ”
” கார்த்திக் அதான் ஒரு மணி நேரம் உன்கூட இங்க அடைந்துகிடந்தாச்சுல்ல? பத்தாதா? ”
” கதவை திறக்க முடியலைடி. நான் என்ன பண்ணுவது? ”
” நீ தானே இந்த ரூமிற்குள் என்னை மாட்டிக்க வச்சிட்ட? ”
” இப்ப என்ன குறைஞ்சி போயிடுச்சு? என்னுடன் இன்னும் ஒரு மணிநேரம் இப்படியே இரு! ”
” யாராவது பார்த்திட்டா என்ன ஆகுமோன்னு எனக்கு பயமா இருக்கு.. உனக்கு இது குஜாலா இருக்கா? ”
” இவ்வளவு நேரம் குஜாலாக இருந்தது பத்தலை! மொட்டை மாடி மொட்டை மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி.. இலவசமா ஒரு சினிமா…”
” உனக்கு புத்தி பேதலிச்சிடுச்சு! ”
” ஸ்ருதி இப்படி ஒரு தனிமை கம்பெனி இனி எனக்கு நம்ம கல்யாணத்திற்கு பிறகுதான் கிடைக்கும். அதை இப்ப நான் ரசனையாக அனுபவிப்பதில் என்ன தப்பிருக்கு? ”
” கார்த்திக் ரொம்ப டயர்டாக இருக்குப்பா.. ”
” இருக்கும் இருக்கும்! அப்படித்தான் இருக்கும்! ”
” கார்த்திக் எனக்கு மயக்கமா வருதுப்பா? ”
” மயக்கமா? அது எப்படி இப்ப வரும்? இன்னும் குறைஞ்சது மூனு மாதமாவது ஆகுமே ஸ்ருதி? ”
” கார்த்திக்.. கதவைத் திற! ”
” அட ராமா தமிழ் தெரியாத பொண்ணுகூட நான் நாற்பது வருஷம் எப்படிக் குடித்தனம் நடத்தப்போறேனோ? ”
…
” ஸ்ருதி உனக்கு வேற மொழி ஏதாவது தெரியுமா? அதில் வேணும்னாலும் நான் சொல்றேன். கதவை திறக்க முடியலை. கதவு தானாக செல்ஃப் லாக் ஆகிடுச்சு. ”
” என்னை இங்கு தனியே கணக்கு பண்ண மட்டும் வந்து உன் மூளை யோசிச்சதுல்ல? கதவை பூட்டும்போது மட்டும் ஒழுங்காக யோசிக்கலையா? கதவை மூடும்போது என்ஜாய் பண்ணுனில்ல? இப்ப கதவைத் திறக்க மூளையை யூஸ் பண்ணு! ”
” நான் மட்டுமா என்ஜாய் பண்னேன்? நீயும் தானே என்ஜாய் பண்ண? ”
…
” நானாவது ஒரே ஒரு செகன்ட் உன் இடுப்பில் மட்டும் தான் கை வைத்து என்ஜாய் பண்னேன்.. ஆனால் நீ இவ்வளவு நேரம் உன்னைத் தொடவிடாமல் என் கையைக் கட்டிப்போட்டு என்ஜாய் பண்ணியிருக்கடி! ”
அடுத்த அரை மணி நேரத்தில் ஸ்ருதி கார்த்திக்கின் செல்பேசியை வாங்கி பிரசாத்திற்கு அழைப்புவிடுத்தாள்.
கிரிஜாவிடம் மாட்டிக்கொண்டாள்.
அதன் பிறகு நடந்தது தருணிற்கு மனப்பாடமாகத்தெரியும்.
Comments are closed here.