Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 45

அத்தியாயம் – 45

தட்டிலிருக்கும் உணவை ஸ்பூனால் அளந்தபடி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் மிருதுளா. ஜூஸ் நிறைந்த கண்ணாடி கோப்பையை அவளிடம் கொண்டுவந்து வைத்துவிட்டு எதிரில் அமர்ந்த அர்ஜுன், அவளுடைய இலக்கற்ற பார்வையை கவனித்துவிட்டு அவள் முகத்துக்கு நேராக கையை உயர்த்தி இருமுறை சொடக்குப்போட்டான். சட்டென்று சிந்தனையிலிருந்து மீண்டு அவன் முகத்தில் பார்வையை பதித்தாள்.

“என்ன? சாப்பிடற உத்தேசம் இல்லையா?” – கேள்வி கேட்டவன் பதிலை எதிர்பார்க்காமல், “அந்த ஜுஸையாவது குடி” என்றபடி தன் உணவில் கவனமானான்.

சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்த மிருதுளா, “நம்பர் கொடுத்து போன் பண்ண சொன்னவங்க, எதுக்காக போனை ஸ்விட்ச் ஆப் பண்ணி வைக்கணும்? இட் டஸின்ட் மேக் எனி சென்ஸ் ரைட்?” – அவனிடம் கேட்பது போல் தன்னிடமே மீண்டும் ஒரு முறை அந்த கேள்வியை கேட்டுக் கொண்டாள்.

சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான் அர்ஜுன். ‘இதைத்தான் இவ்வளவு நேரமா யோசிச்சுகிட்டு இருந்தியா?’ என்றது அவன் பார்வை.

நேற்று இரவு கோபம் தீர்ந்து அவனோடு சமாதானமாகிவிட்ட சந்தோஷத்தில் அந்த தொலைபேசி எண் சங்கதியை அறவே மறந்திருந்தாள் மிருதுளா. இன்று காலை அவன்தான் அதை அவளுக்கு நியாபகப்படுத்தி, அந்த நம்பரை டயல் செய்யச் சொன்னான். அவளும் செய்தாள். அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அப்போதிலிருந்தே அவளுக்கு குழப்பம். அந்த கேள்வி அவளை குடைந்துக் கொண்டே இருத்தது. இப்போதுதான் வாய்விட்டு கேட்க தோன்றியது.

“கைல செல்போன் வச்சுருக்க. நம்பர் கிடைச்சதும் போன் பண்ணியிருந்தேன்னா எடுத்திருப்பாங்க. இப்போ ஒரு வாரம் ஆயிடிச்சு. என்கிட்ட டிஸ்கஸ் பண்ணியிருப்பேன்னு தெரிஞ்சிருக்கும். அதான், ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டாங்க” – இயந்திரம் போல் கூறிவிட்டு மீண்டும் உணவில் கவனமானான்.

“என்கிட்ட போன் இருக்கறது அவங்களுக்கு தெரியுமா!” – வியப்புடன் கேட்டாள் மிருதுளா.

“தெரியும்” – கூடுதல் குருமாவை தன் தட்டில் பரிமாறியபடி அவள் கண்களை சந்திக்காமல் பதில் கூறினான் அர்ஜுன்.

“போன் இருக்கது தெரியும்னா நம்பர் கூட தெரிஞ்சிருக்க சான்ஸ் இருக்குல்ல?”

“எஸ்…” – அப்போதும் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை.

“அப்படின்னா அவங்களே கால் பண்ணி பேசியிருக்கலாமே! எனக்கு நம்பர் பாஸ் பண்ணி… வெயிட் பண்ணி… இப்போ ஸ்விட்ச் ஆப் பண்ணி… எதுக்கு இவ்வளவு காம்ப்ளிகேஷன்ஸ்?” – உண்மையில் அவளுக்கு புரியவில்லை. சுலபமாக செய்ய வேண்டிய ஒரு வேலையை எதற்காக தலையை சுற்றி மூக்கை தொடுகிறார்கள்? என்று குழம்பினாள்.

அவளுடைய குழப்பத்தை தீர்க்க அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. “சீக்கிரமே உனக்கு கால் வரும்” என்று மட்டும் கூறிவிட்டு எழுந்து கைகழுவ சென்றான்.

அவன் பின்னாலேயே ஓடிச் சென்று, “எப்படி?” என்றாள் மிருதுளா.

“தே ஆர் வாட்சிங் யூ” – அலட்டிக்கொள்ளாமல் பதில் சொல்லியபடி, ஈர கையை டவலில் துடைத்தான் அர்ஜுன்.

“வாட்! ஹௌ டூ யூ நோ தட்?” – வியப்புடன் கேட்டாள்.

“ஐம் வாட்சிங் தெம்” – டவலை அவள் தோளில் போட்டுவிட்டு அவன் நகர்ந்துச் செல்ல, அகல விரிந்த விழிகளுடன் அவன் முதுகை திகைத்து நோக்கியவள், ஓரிரு நொடிகளில் தன்னிலைக்கு மீண்டு அவசரமாக கைகழுவிவிட்டு அவன் பின்னால் ஓடினாள்.

“அர்ஜுன்… அர்ஜுன்-அர்ஜுன்… வெயிட். யாரு அவங்க? என்னை ஏன் கண்காணிக்கிறாங்க? ஐம் ஜஸ்ட் எ காமன் கேர்ள்”

அவன் உதடுகள் மேல்நோக்கி வளைந்தன. “நோ… யு ஆர் நாட்” என்றான் அழுத்தமாக.

“வாட் யூ மீன்?”

“ஐ மீன்… யூ… ஆர்… நாட்… எ… காமன் கேர்ள்…” – ‘நீ ஒரு சாதாரணப் பெண் அல்ல’ என்று வார்த்தைகளை அழுத்தமாக உச்சரித்து அவன் கூறிய விதத்தில் குழப்பமுற்று, “அப்புறம்?” என்றாள்.

“மை ஸோல்…” – முகத்தில் வசீகர புன்னகையுடன் நெஞ்சில் கைவைத்து கூறியவனின் குரல் குழைந்து கரைந்தது.

மனம்கொள்ளா மகிழ்ச்சியில் நெஞ்சே அடைப்பது போலிருந்தது அவளுக்கு. என்ன பேசுவதென்றே தெரியாமல் வாயடைத்துப் போய் அவனை பார்த்தபடியே நின்றாள். அதை எதிர்பார்த்துதான் அவனும் அந்த வார்த்தையை சொன்னானோ என்னவோ… வேகமெடுத்து பாய்ந்து வந்த அவளுடைய கேள்வி கணைகளுக்குத் தடைபோட்டுவிட்டு எங்கோ வெளியே செல்ல தயாரானான்.

செல்ல நாய்க்குட்டி போல் ஏதேதோ பேசியபடி அவன் செல்லுமிடமெல்லாம் பின்னாலேயே சென்றுக் கொண்டிருந்த மிருதுளா, கார் சாவியை கையில் எடுக்கும் வரை அவன் என்ன செய்துக் கொண்டிருக்கிறான் என்பதையே கவனிக்கவில்லை. அவன் ஷூ ராக்கை நெருங்கும் போதுதான் சுதாரித்தாள்.

“வெளியே கிளம்பறீங்களா அர்ஜுன்!” – வியப்புடன் கேட்டாள். கோபமாக இருக்கும் போதுதான் எதுவும் சொல்லாமல் அவளை தனியேவிட்டுவிட்டு சென்றான். இப்போது என்ன வந்தது! எதுவுமே சொல்லாமல் கிளம்புகிறானே!

வாடிய அவள் முகத்தை கவனித்த அர்ஜுன் அவளிடம் நெருங்கி முகத்தை கைகளில் ஏந்தி நெற்றியில் இதழொற்றி, “ஒரு மணி நேரத்துல வந்துடுவேன்” என்றான் மென்மையாக.

அவள் முகம் தெளியவில்லை. சங்கடத்துடன் அவளை சற்று நேரம் பார்த்தவன், “யூ நோ மை ஜாப் ரைட்? உன்ன கூட்டிட்டு போக முடியாத இடம். என்ன புரிஞ்சுக்க மாட்டியா?” என்றான் இறங்கிய குரலில்.

அவள் கீழுதட்டை கடித்தபடி முகத்தை திருப்பிக் கொண்டாள். “என்னை பாரு” என்று அவள் தாடையை பிடித்து வலுக்கட்டாயமாக தன் பக்கம் திருப்பி, “நீதான் என்னோட பலம்… நீதான் என்னோட பலவீனமும் கூட. சொல்லு, இப்போ நா போகட்டுமா வேண்டாமா?” – தீவிரமாக கேட்டான்.

அவளை தன்னுடைய பலம் என்கிறான், பலவீனம் என்கிறான் ஏன் உயிர் என்று கூட சொல்கிறான். ஆனால் அவளுடைய உயிர் மீது அவனுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா?

“நீங்க இல்லாத நேரத்துல யாராவது என்னைய அட்டாக் பண்ணி கொலை செஞ்சுட்டா என்ன செய்வீங்க? அதை பற்றி உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லையா?” – நேற்று இரவு மனதில் தோன்றிய அந்த கேள்வியை இப்போது கேட்டுவிட்டாள்.

சட்டென்று ஏதோ திரை விழுந்தது போல் அவன் முகத்திலிருந்த உணர்வுகளெல்லாம் மறைந்து போயின.

அவள் முகத்தையே சற்று நேரம் இமைக்காமல் பார்த்தான். பிறகு, “பயப்படறியா?” என்றான்.

தனக்குள் பயம் என்கிற உணர்வு சிறிதும் இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தாள் மிருதுளா. அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. உயிருக்கே அச்சுறுத்தல் இருக்கும் போது அவளிடம் அச்சமே இல்லையே! இது எப்படி சாத்தியம்? எப்போது வந்தது இந்த தைரியம்? – சுய அசலில் இறங்கியவளின் பார்வை தன் எதிரில் ஆஜானுபாகுவாய் நின்ற அர்ஜுனின் மீது விழுந்தது.

‘இவன்தான்… இவன்தான் அவளுடைய தைரியம்… இவன்தான் அவளுடைய நம்பிக்கை…’ – உண்மை பொட்டில் அறைந்தது.

“என்ன ஆச்சு? ஏன் அப்படி பார்க்கற?” – அவள் சிந்தனையில் குறுக்கிட்டான் அர்ஜுன்.

“ம்ஹும்… ஒன்னும் இல்ல…” – மறுப்பாக தலையசைத்தாள்.

“பயப்படறியான்னு கேட்டேன்” – மீண்டும் அந்த கேள்வியை கேட்டான்.

“இப்போ இல்ல… ஆனா நீங்க போயிட்டா என்னோட தைரியம் என்கிட்ட இருக்குமான்னு சொல்ல முடியாது” – முணுமுணுத்தாள்.

“நா உன்ன விட்டு எங்கேயும் போகமாட்டேன். உன் கூடவேதான் இருப்பேன். எப்பவும். நீயே போகணும்னு நினைச்சாலும் முடியாது. நா விடமாட்டேன். நீ ப்ராமிஸ் பண்ணியிருக்க. கடைசிவரைக்கும் கூடவே இருப்பேன்னு எனக்கு வாக்கு கொடுத்திருக்க”

“அந்த வாக்கையெல்லாம் காப்பாத்த முடியும்னு தோணல. எவனாவது துப்பாக்கியை கொண்டு வந்து நெத்தி பொட்டுல வச்சு ஒரு அழுத்து அழுத்தினா போயித்தானே ஆகணும்?” என்றாள் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு.

தாடை இறுக உதடுகளை அழுந்த மூடி அவளை வெறித்துப்பார்த்தான் அர்ஜுன்.

“டோன்ட் ஒர்ரி. அப்படி எதுவும் நடக்காது” – இறுகிய குரலில் கூறினான்.

“நடந்ததே… மிராஜ்பாடாலேருந்து வரும் போது என்மேல ஒரு அட்டெம்ண்ட் நடந்ததே! இப்போ மட்டும் எப்படி நடக்காது? நடக்கலாம்னு எதிர்பார்த்துதானே என்னை இங்க கூட்டிட்டு வந்து வச்சிருக்கீங்க? காலேஜ்ல கூட கூடவே இருக்கீங்களே?” – கேள்விகளை அடுக்கினாள்.

அர்ஜுன் தலையை அழுந்த கோதினான். உதட்டை மடித்துக் கடித்தான். அவன் முகத்தை இயல்பாக வைத்திருக்க சிரமப்படுவது போல் தோன்றியது. ஆனால் ஏன்? என்ன பிரச்சனை? அவளிடம் சொல்லக் கூடாதா? – மிருதுளாவின் மனம் சுணங்கியது.

ஓரிரு நிமிடங்களில் சமநிலைக்கு மீண்டு தெளிவாக பேசினான் அர்ஜுன்.

“மிருதுளா, சில விஷயங்களை தெரிஞ்சுக்காம இருக்கறதுதான் நல்லது. நிம்மதியா இருக்கலாம். உன்ன நிம்மதியா வச்சுக்க நா ட்ரை பண்றேன். நீயும் கோஆப்ரேட் பண்ணு, சரியா?” – அவனுடைய தொனியில் இருந்த சின்ன கண்டிப்பு அவளுடைய அடுத்த கேள்விக்கு தடை போட்டது. எதுவும் பேச தோன்றாமல் அவனை பார்த்துக் கொண்டே நின்றாள்.

“உனக்கு எந்த ஆபத்தும் வராது. ஒரு மணிநேரத்துல வந்துடுவேன். எதுவும் யோசிக்காத. உள்ள போ…” – அதற்கு மேல் பேசிக் கொண்டிருக்க அவகாசம் இல்லாதவனாக விறுவிறுவென்று வெளியேறினான்.

அவனுடைய கார் அந்த வீட்டு வளாகத்திலிருந்து வெளியேறி ஐந்து நிமிடம் கூட இருக்காது. அவளுடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அழைத்தவர் அவளுடைய பேராசிரியர். ஏதோ அவசரம் என்றார். அவளை உடனே சந்திக்க வேண்டும் என்றார். உடனடியாக புறப்பட்டு தன்னுடைய வீட்டிற்கு வரும்படி கூறினார்.

Share your comments here

28 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    NICE UD SIS

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priyanga Ramesh says:

    Today ud unda sis?

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Jothi Priya says:

    Interesting epi sis….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    JAYALAKSHMI PALANIAPPAN says:

    Always in suspense and thrilling.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    PriyaShakti says:

    Super update. Evlo twist tricks and suspense indha storyla. Full time tensionlaye vachrukengapa……

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Reena thayan says:

    Nithya you said in this episode u will leak o clue but still nope
    I am not believe Arjun I he make Miri baby the trab goat

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      சாரி ப்பா… நானும் இந்த எபில சஸ்பென்ஸ் ரிவீல் ஆயிடும்னு தான் எதிர்பார்த்தேன். ஆனா சுருக்கி எழுத முடியல… இன்னும் ஒரு எபிசோட் போயி, அடுத்த எபிலதான் முதல் முடிச்சு அவிழும்…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sumithra Ramalingam says:

    poga mudivu eduppalo

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      எஸ்…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    saranya shan says:

    Mirukke teriyaatha pakkam arjunukku teriyum.terinthaal Miri un sandosam poi vidumo.miru parants kortaavinaal kollapattavargalaa….arjun valaiyai viruchu kaathirukaan …

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      கெஸ் பண்ணிகிட்டே இருங்க சரண்யா… இன்னும் ஒரு எபி போகட்டும்… ஓடி வந்து உண்மையை சொல்லிடறேன்… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Afrin Zahir says:

    Akka … Indha epi la plot break aahum nu sonnenga

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Sorry Afrin… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya Ganeshan says:

    Nice ud sis👌👌👌👌…

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you Priya.. 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Mithra says:

    Super sis✌🏻….but short ud

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you Mithra… Next epi adhigam kodukka try pannaren… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Samrithi says:

    Professor ah? Avar tha avala watch panrara? Then phone no koduthatu kuda avar aal thana? Avar nallavara kettavara? Avarukum muri amma tholanchu ponathukum ethatu sammantham erukumo? Aju sonna u r not comman girl Ku Vera etho reson erukum Pola thonuthu… Evata avanga nerunganumnu than epo Evan veliya porano? NXT enna nu tik tik nu eruku sis… Very interesting… But small ud nu feel eruku… NXT ud quick ah koduka try panunga. Sis.. keep rocking 👍

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you so much Samrithi, I’ll try to update bigger episode next time… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priyanga Ramesh says:

    And solla marathuda yeppovum Pola ud super but rompa kutty epiya irrukku next time perusa poduka sis

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you so much Priyanga… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priyanga Ramesh says:

    Yenna sis oru rakasiyamu sollala adutha ud la tha suspens irrukka adutha ud sikkiramaaa poduka wait Panna mudiyala please

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      sorry Priyanga… calculation thappaayidichchu. one more epi wait pannanum… 🙁

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ambika V says:

    நித்யா மேம் முக்கியமான இடத்தில் நிறுத்திட்டிங்க சஸ்பென்ஸ் முடியல பிளீஸ் சீக்கிரம் அடுத்த எபி தாங்க மிருதுளா கிளம்பி போவால🤔🤔🤔

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Reena thayan says:

      Aval pokanum endu Thane Arjun veliya ponanan ellaiya Nithya sis

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Nithya Karthigan says:

        இல்லை ரீனா… 🙂 அவன் தவிர்க்க முடியாத வேலையாதான் வெளியே போயிருப்பான்…

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      ஹாய் அம்பிகா,
      ஆமாம், மிருதுளா கிளம்பு போவா, என்ன நடக்கும்??? நாளை எபி பதிவிடுகிறேன்.

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Reena thayan says:

        well this comment was one day ago (pouted)

You cannot copy content of this page