Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு -46

அத்தியாயம் – 46

அர்ஜுன் தெருமுனையைக் கூட தாண்டியிருக்க மாட்டான். அதற்குள் அவளுடைய அலைபேசிக்கு அழைப்பு வந்தது. நம்பர் புதிதாக இருந்ததால் அழைக்கும் நபர் யாரென்று தெரியவில்லை.

‘உன்னுடைய அலைபேசிக்கு அழைப்பு வரும்’ என்று சற்று நேரத்திற்கு முன் அர்ஜுன் கூறியது நினைவிற்கு வந்தது.

இது அந்த கொலைகார கும்பலிடமிருந்து வரும் அழைப்போ! அவளை குழப்ப மீண்டும் முயற்சி செய்கிறார்களோ! – சந்தேகம் எழுந்தது. உடனே அழைப்பை துண்டித்துவிட்டு அர்ஜுனை கூப்பிட்டு சொல்லிவிடலாமா என்று யோசித்தாள். ஆனால் ‘உனக்கு எந்த ஆபத்தும் வராது’ என்று அவன் கூறிய வார்த்தை அவளுக்குள் பெரிய சக்தியாய் உருவெடுத்து நின்று தைரியம் கொடுக்க, அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்து, “ஹலோ” என்றாள்.

மறுமுனையிலிருந்து “மிருதுளா” என்று ஒலித்தது பிரபஸரின் குரல்.

“சார்… நீங்களா?” – ஆச்சரியப்பட்டாள்.

அவளுடைய ஆச்சரியமோ வியப்போ எதுவும் அவர் கருத்தில் பதிந்ததாக தெரியவில்லை.

“ஒரு எமர்ஜன்சி மிருதுளா. நீ உடனே இங்க வரணும். உனக்காக நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றார் பரபரப்புடன்.

“இப்போவா?”

“ஆமாம்… இப்போ தான்… உடனே…” – அவசரப்படுத்தினார்.

அர்ஜுன் வீட்டில் இல்லாத – அவளுக்கும் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு தடையில்லாத சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து சரியான தருணத்தில் அவர் தன்னை அழைக்கிறார் என்கிற விபரம் புரியாமல், வெள்ளந்தியாக “அர்ஜுன் வெளியே போயிருக்கார் சார். வந்ததும் வரட்டுமா?” என்றாள்.

“நோ… நா உன்ன இப்போவே மீட் பண்ணனும். உன்கிட்ட முக்கியமான சில விஷயங்கள் பேசணும். உடனே வா…” என்றார்.

அவர் அவ்வளவு தூரம் வற்புறுத்தி அழைத்த பிறகு அவளால் மறுக்க முடியவில்லை. அதோடு அவரும் யாரோ தெரியாத மனிதர் இல்லை. அவளுடைய ஆசான். விஷயம் முக்கியமானதாக இல்லாமல் அவர் இப்படி அழைக்க மாட்டார் என்று தோன்ற, “எங்க வரணும் சார்?” என்றாள் மிருதுளா.

அவர் தன்னுடைய வீட்டிற்கே வரும்படி கூறினார். மேலே யோசிக்காமல் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வந்தாள். அர்ஜுனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடலாம் என்று எண்ணி அவனுடைய அலைபேசிக்கு தொடர்புகொள்ள முயன்றாள். போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

“ப்ச்…” – உச்சுக்கொட்டியபடி மேலும் இரண்டு மூன்று முறை முயற்சி செய்து கொண்டே பிரதான சாலை வரை நடந்தே வந்து ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து ஒரு ஆட்டோவை எடுத்துக் கொண்டு பிரபஸரின் வீட்டிற்கு விரைந்தாள்.

புறநகர் பகுதியில் உள்ள தனி வீடு அது. குடியிருப்புகள் மிக குறைவான பகுதி என்றாலும் கல்லூரியிலிருந்து பக்கம் என்பதால் இங்கே வீடு எடுத்திருந்தார் பிரபஸர். சுற்றுப்புறத்தின் அதீத அமைதி ‘ஓ’-வென்றிருந்தாலும், பகல் நேரம் என்பதால் பயம் ஏதும் தெரியாமல் அங்கே வந்து இறங்கினாள் மிருதுளா.

உயரமான மதில் சுவர்கள் வீட்டை சூழ்ந்து மறைத்திருக்க கேட்டும் மூடியிருந்தது. ஆட்டோ டிரைவரிடம் பணத்தை கொடுத்து கணக்கை முடித்துவிட்டு கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள் திகைத்து நின்றாள்.

‘இந்த கார்… இது எப்படி இங்கே!’ – வெளிப்புறம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் தான் அவளுடைய திகைப்புக்கு காரணம்.

அந்த கார் அவளை நெருங்கி வந்து நின்றது. கண்ணாடியை இறக்கிவிட்டு அவளை பார்த்த அர்ஜுன், “இங்க என்ன பண்ற?” என்றான்.

அவள் கேட்க வேண்டிய கேள்வி. ஆனால் அவன் குரல் ஏன் இப்படி…! யாரோ தெரியாதவர்களிடம் பேசுவது போல்…! அந்நியமாக…!

“மிருதுளா” – அதட்டிய அவன் குரல் அவள் சிந்தனைக்கு தடைபோட, “ஆங்…” என்று விழித்தாள் அவள்.

“கேட்டது காதுல விழல? இங்க என்ன பண்ற?” – குரலில் கடுமை ஏறியது.

“நீங்…நீங்க… இங்க?”

“பிசினஸ்…” – அவள் கேள்வியை கத்தரித்து பதில் சொன்னவள், மறுபக்க கதவை திறந்துவிட்டு, “கெட் இன்…” என்றான்.

“இல்ல… நா… சாரை பார்க்க வந்தேன். பார்த்துட்டு வந்துடறேன்”

“அவர் வீட்ல இல்ல…”

“என்னை வர சொன்னாரே!”

அவன் புருவம் சுருங்கியது. பார்வை கூர்மையாக அவள் முகத்தை ஆராய்ந்தது. அதை தொடர்ந்து “எப்போ?” என்கிற கேள்வியும் கணையாய் பாய்ந்தது.

“இப்போதான்… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கால் பண்ணினார். நீங்க வீட்லேருந்து கிளம்பி ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கும்”

“ஓ!” என்றதற்கு மேல் அவன் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஸ்டியரிங் வீலை பற்றியிருந்த கைகளில் இறுக்கம் கூடியது போல் தோன்றியது. ஓரிரு நொடிகள் அசையாமல் அமர்ந்திருந்தவன் பிறகு அவள் புறம் திரும்பி, “இன்னொரு நாள் பார்த்துக்கலாம்… வண்டில ஏறு” என்றான்.

ஒருகணம் அவனை யோசனையுடன் பார்த்த மிருதுளா அவனை மறுத்துப் பேசாமல் சொன்னதை செய்தாள்.

தன்னை அவசரமாக வர சொல்லிவிட்டு அவர் எங்கு போயிருப்பார் என்கிற கேள்வி அவளுக்குள் பெரிதாய் எழுந்தாலும் அதைப்பற்றி அவனிடம் எதுவும் அவள் பேசவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவளால் பேச முடியவில்லை. அவ்வளவு இறுக்கமாக இருந்தான் அர்ஜுன்.

‘அவனிடம் சொல்லாமல் இங்கு வந்ததால் கோபமாக இருக்கிறானா!’ – அதுதான் உண்மை என்று தோன்றியது அவளுக்கு. மெல்ல பேச்சு கொடுத்துப் பார்த்தாள்.

“அர்ஜுன்…”

“ம்ம்ம்ம்”

“கிளம்பறதுக்கு முன்னாடி நான் கால் பண்ணினேன். உங்க போன் ஸ்விட்ச் ஆஃப்ல இருந்தது. என்னால உங்கள ரீச் பண்ண முடியல. சா…ரி…”

“நோ இஷ்ஷுஸ்…” – பிரச்சனை இல்லை என்று கூறினாலும் அவன் அதை பிரச்சனையாகத்தான் நினைக்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது. அவனை எப்படியாவது சமாதானம் செய்தே ஆகவேண்டும் என்று தோன்றியது. எனவே, “வீட்டுக்கு போயி என்ன செய்ய போறோம்? எங்காவது வெளியே போயிட்டு வரலாமா?” என்றாள் இனிய குரலில்.

“எங்க போகணும்?” – வறண்ட குரல் அவன் இலக்கமின்மையை எடுத்துக் காட்டியது.

அவளுக்கு என்னவோ போல் இருந்தது. ஆனாலும் முயற்சியை விடாமல், “ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா?” என்றாள்.

“வீட்டுக்கு போயி சாப்பிட்டுக்கலாம்” என்றான் அவன் இயந்திர மனிதன் போல்.

மிருதுளாவின் முகம் விழுந்துவிட்டது. வழக்கமாக அவள் இப்படி ஏதாவது கேட்டால் அவன் மறுக்கவே மாட்டான். இன்று என்னவாயிற்று! மிகவும் கோபமாகிவிட்டானா! – அவள் மனம் கலங்கியது.

அவளுடைய கலக்கம் எதுவும் அவன் கவனத்தில் படவில்லை. கர்மசிரத்தையாக காரை செலுத்தினான்.

கார் வீட்டு வளாகத்தரிக்குள் நுழைந்ததும் அவள் இறங்கிக்கொள்ள அவன் காரை கேரேஜிற்குள் செலுத்தி நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வந்தான்.

சோபாவில் அமர்ந்திருந்த மிருதுளாவை கண்டுகொள்ளாமல் குளியலறைக்குள் நுழைந்தான்… வெகு நேரம் கழித்து அவன் வெளியே வந்த போது, டிவியில் ஏதோ ஒரு ஆங்கிலப்படம் ஓடிக் கொண்டிருந்தது. திரையில் பார்வை பதிந்திருந்தாலும் மிருதுளாவின் எண்ணங்கள் அவனையே சுற்றிக் கொண்டிருந்தன.

நேற்றுதான் சமாதானம் ஆனான். அதற்குள் மீண்டும் இன்னொரு மனஸ்தாபமா! ஏன் இப்படி நடக்கிறது? அவளும் அவசரப்பட்டு போயிருக்க வேண்டாம். ஏதோ போய்விட்டாள்… அவனும் அவளை புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறானே! – மனம் வருத்தத்தில் உழன்று கொண்டிருக்க, கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருந்தாள்.

அவளை பார்த்தபடியே சமயலறைக்குள் நுழைந்து பிரிட்ஜை திறந்து ஒரு கப்பில் அவளுக்கு பிடித்த சாக்லெட் ஐஸ் கிரீமை நிரப்பி கொண்டு வந்து அவளுக்கு அருகில் அமர்ந்தான் அர்ஜுன். அதற்காகவே காத்திருந்தவள் போல் அனிச்சையாய் அவன் தோளில் சாய்ந்தாள் மிருதுளா. அவனுடைய அருகாமை மட்டுமே அத்தியாவசியம் என்பது போல் தோன்றியது அவளுக்கு.

அவன், அவளிடம் ஐஸ்க்ரீம் கப்பை நீட்டினான். தொலைக்காட்சியிலிருந்து பார்வையை விலக்காமலே அதை வாங்கியபடி, “கோவம் போச்சா?” என்றாள்.

“கோவமா!” என்று வியந்தவன் தொடர்ந்து, “என்ன கோவம்?” என்றான் புரியாதவனாக.

சட்டென்று நிமிர்ந்து அவனை ஏறிட்ட மிருதுளா “உங்ககிட்ட சொல்லாம பிரபஸரை பார்க்க போனேனே! கோவம் இல்ல?” என்றாள்.

“இல்ல…” – ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான்.

தன் மீது கோபம் இல்லை என்றால் பிறகு எதற்காக இந்த மௌனம் – இறுக்கம்? என்கிற குழப்பம் மேலிட்டது அவளுக்கு. அதோடு அவன் காட்டிய விலகலும் மனதை சங்கடப்படுத்தியது. எனவே,

“அப்புறம் ஏன் என்னவோ போல இருக்கீங்க?” என்றபடி மீண்டும் அவன் தோளில் சாய்ந்தாள்.

“பெருசா எதுவும் இல்ல. ஜஸ்ட், ஒர்க் பிரஷர்” என்றபடி அவளை தன்னிடமிருந்து விலக்கி எழுந்தவன், “என்ஜாய் யுவர் ஐஸ்க்ரீம்” என்று ஜீவனற்ற ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு அங்கிருந்துச் சென்றான்.

அப்போது மட்டும் அல்ல அன்று முழுவதுமே அர்ஜுனின் நடவடிக்கைகள் வித்தியாசமாகத்தான் இருந்தது. அவனுடைய மௌனம், இறுக்கம், விலகல் எல்லாம் அவள் ஏற்கனவே பார்த்ததுதான். ஆனால் இன்று என்னவோ புதிதாக… என்னவென்று புரிந்துகொள்ள முடியாத வித்தியாசத்தை அவனிடம் உணர்ந்தாள் மிருதுளா.

அதை பற்றி யோசித்து யோசித்து அன்று இரவு கூட அவளுக்கு சரியாக உறக்கம் வரவில்லை. புரண்டுகொண்டே படுத்திருந்தவள் ஏதோ தோன்ற எழுந்து வெளியே வந்தாள். அர்ஜுன் உறங்கவில்லை என்றால் அவனிடம் பேச்சு கொடுத்து பார்க்கலாம் என்று எண்ணினாள். நள்ளிரவு நேரத்தில் இது பைத்தியக்காரத்தனமான யோசனைதான். ஆனால் தூக்கம் வரவில்லையே! அவனும் தூங்கவில்லை என்றால் ஒருவருக்கொருவர் கம்பெனிகொடுக்கலாமே என்று எண்ணியபடி வெளியே வந்தவள் திகைத்து நின்றாள். ஹாலில் விரித்துக் கிடந்த படுக்கையில் அர்ஜுன் இல்லாதது விடிவிளக்கின் வெளிச்சத்தில் நன்றாகவே தெரிந்தது.

‘இந்த நேரத்தில் எங்கே போய்விட்டான்!’ – அவசரமாக மின்விளக்கின் விசையை தட்டி வீட்டை வெளிச்சமாக்கிவிட்டு சமையலறைக்குள் ஓடிப் பார்த்தாள். காணவில்லை… ‘ஒருவேளை பாத்ரூமில் இருப்பானோ! அவன் உள்ளே வந்தது போலவே தெரியவில்லையே! விழித்துத்தானே இருந்தோம்!’ – சந்தேகத்துடன் குளியலறைக்குள்ளும் எட்டிப்பார்த்தாள். ம்ஹும்… அது ஒன்றும் பெரிய மாளிகை அல்ல… எத்தனை முறை சுற்றிவந்தாலும் ஒரு ஹாலும் சமையலறையும், படுக்கையறையும்தான். நிச்சயமாக அவன் வீட்டில் இல்லவே இல்லை… அவளை தனியாக விட்டுவிட்டு எங்கு போனான்! – பயத்தில் நெஞ்சு படபடத்தது.

மெயின் கதவை திறந்து கொண்டு வெளியே எட்டிப்பார்த்தாள். எங்கும் ‘கும்’ இருட்டு. உள்ளே படபடத்தது. பயத்தில் வயிற்றுக்குள் ஏதோ பிசைவது போல் இருந்தது.

அர்ஜுன்..!’ – அழைத்துப் பார்த்தாள். அவள் குரலே பயங்கரமாக மீண்டும் வந்து அவள் செவியில் மோதியதே தவிர அவனிடமிருந்து பதில் வரவில்லை. நாவறண்டது.

பக்கத்தில்தான் எங்காவது நிற்பான் என்று குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டு வராண்டா மின்விளக்கை ஒளிரவிட்டுவிட்டு கேட்டு திறந்து கொண்டு வெளியே வந்தாள். சற்று தள்ளி இருந்த அக்கம் பக்கத்து வீடுகளில் ஏதேனும் அரவரம் தெரிகிறதா என்று பார்த்தாள். மயான அமைதி என்பார்களே… அப்படித்தான் இருந்தது. ஆள் நடமாட்டம் என்ன… நாய் நாரி நடமாட்டம் கூட இல்லை என்று அவள் எண்ணிய போது எங்கோ ஒரு நாய் ஊளையிட்டது. அது அந்த சூழ்நிலையின் பயங்கரத்தை இன்னும் அதிகமாக்க மிரண்டு போன மிருதுளா உமிழ்நீரை கூட்டிவிழுங்கியபடி சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டிருந்த போது, “இங்க என்ன பண்ற?” என்று ஒலித்த கனத்த குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்.

“அர்ஜுன்!!!!” – இதயம் எகிறி வெளியே குதித்துவிடுவது போல் படபடக்க, உடல் நடுங்க நெஞ்சை பிடித்துக்கொண்டு அவனை ஏறிட்டாள் மிருதுளா.

‘இவன் என்ன வீட்டுக்குள் இருந்து வருகிறான்!’ – அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“ரிலாக்ஸ்…” – ரெத்தப்பசையற்று வெளிறிப்போயிருந்த அவள் முகத்தில் மிரட்சி அப்பியிருந்ததை கண்டு அவள் மனநிலையை ஊகித்த அர்ஜுன் அவளை அமைதிப்படுத்த முயன்றான்.

“எங்… எங்க… எங்க இருந்தீங்க!” – திக்கித் திணறினாள். அவளுடைய சுவாசம் இன்னும் கூட இயல்பாகவில்லை.

“கேரேஜ்ல இருந்தேன்…”

“கேரேஜ்லயா! உள்ளேயிருந்து வர்றீங்க!”

“ம்ம்ம்… கிட்சன் ஸ்டோர்ரூம் வழியா கேரேஜுக்கு போக ஒரு வழியிருக்கு”

“வாட்!” – இத்தனை நாட்களாக அவளும் இந்த வீட்டில் தான் இருக்கிறாள். ஸ்டோர்ரூமுக்கு கூட சில முறை சென்றிருக்கிறாள். அப்படி ஒரு வழி இருப்பதை அவள் அறியவே இல்லையே! ரகசிய வழியா! இன்னும் என்னென்ன ரகசியங்கள் இருக்கிறது இந்த வீட்டில்! – அவள் விழிகள் விரிந்தன.

“நா… நா… அந்த… அந்த வழியை பார்த்ததே இல்லையே!” – மேலண்ணத்தில் ஒட்டிய நாவை இழுத்துப்பிடித்துப் பேசினாள்.

“இன்னொரு நாள் பார்த்துக்கலாம். இப்போ உள்ள வா…” – இலகுவாக கூறினான். ஆனால் அவள் மனம் தெளியவில்லை.

“இந்த நேரத்துல கேரேஜ்ல என்ன பண்ணுனீங்க?” என்றாள் குழப்பத்துடன்.

“கார் சுத்தம் பண்ணினேன்…” – அவள் அவனை விசித்திரமாக பார்த்தாள். இன்று அவள் பயணம் செய்த அதே காரை தான் கூறுகிறான். ஏற்கனவே வெகு சுத்தமாக பளபளத்த அந்த காரில் இன்னும் சுத்தம் செய்வதற்கு என்ன இருக்கிறது! அதுவும் இந்த நேரத்தில்! – மனதில் தோன்றிய கேள்வியை அவள் வாய்விட்டு கேட்ட போது, ஒரு நொடி தயங்கிய அர்ஜுன், “நீ டிக்கியை பார்க்கல” என்றான்.

சுரீர் என்றது அவளுக்கு. அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். மேலே விபரம் கேட்கவே பயமாக இருந்தது. கேட்டால் சொல்லுவான் என்றுதான் தோன்றியது. ஆனால் தெரிந்துகொள்ளும் துணிவு அவளுக்கு இல்லை. திகைத்துப்போய் சிலை போல் நின்றவளை, “கம்…” என்று கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான் அர்ஜுன்.

கமெண்ட்ஸ் பதிவிட

24 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rusha Seevaamirtham says:

    Hey nithu dear..
    I also want to ask what’s next…suspense thaanga mudiyala😲..
    But its okay.. when you have time, come and give update..
    I used to give up stories when no regular updates..
    But il never do it here bcz i love u and ur writings a lot ..🥰😍🥰😍…
    Sometimes i might not hv time..but will definitely be with ur writings forever 🥰😍
    I can wait for u….☺️☺️☺️

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Rusha, I’m really really honored and privileged… Thanks a lot dear… 😍😍😍😍

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Suganya Sasikumar says:

    Nith…suspence na next ud ku ivlo gap vidalama?😨😨ven vl b next ?gv regular updates

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      ச்சே… ச்சே… கண்டிப்பா கேப் விடணும்னு வேணுன்னு விடலைப்பா. முடிஞ்ச அளவுக்கு ரெகுலரா அப்டேட் கொடுக்கத்தான் ட்ரை பண்ணறேன். ஆனா தொடர்ந்து ஏதாவது ஒரு வேலை வந்துகிட்டே இருக்கு. அதுவும் தவிர்க்க முடியாதது. சைட்டை லைவா வச்சுக்க ரொம்ப ட்ரை பண்ணறேன். அதுக்காகவாவது நான் ரெகுலர் அப்டேட் கொடுத்தாகணும். ஆனாலும் முடியல. தப்பா நினைக்காதீங்க…

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Suganya Sasikumar says:

        Hey no issues..jus asked out of curiosity. ……but anyhow vl ask for regular uds😉😉

        • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
          Nithya Karthigan says:

          😀 😀 😀 😀

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    kurinji says:

    dikiyil yarunnu vidai solla viriva vaa nityaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priyanga Ramesh says:

    Next ud eppo sis, sikkirama update pannuka sis eagerly waiting for your ud.😍😍😎😎

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Reena thayan says:

    By the way nice update

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Reena thayan says:

    Hmm professor poddu thallina avanukku visayaththa yaru solluwa
    Ana professor edam irunthu thevaiyana thevaiyana thakawala Pera time kanathu may be he got
    Miru ethukkum store rooma check pannuma professor erunthalum eruppar avarkidda kettukoma ethukku kuppittar endu

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Selvalakshmi Suyambulingam says:

    ஆஆஆஆஆ. எவ்வளவு suspense கதையில். முடியல.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Afrin Zahir says:

    Car la edachu surprise irukkumo 🤔

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Umamanoj says:

    Movie le vara mathiri last le Arjun police officer nu solvingalaa Nithya 😊

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sumithra Ramalingam says:

    professor ah kali panni acha.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    ப்ரொபஸர போட்டுடானா …

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    saranya shan says:

    Visayan terintha manithanum ho Gaya…miru un ithayam romba balam.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    OMG. Dikki kulla Enna/ yaru?

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya Ganeshan says:

    Nice ud sis👌👌👌👌eagerly waiting for a next ud …..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Mithra says:

    Professor ahh Arjun konnutana? Car(dikki) la irundhadhu professor ahh🤔semma interesting✌🏻
    Eagerly waiting for your nxt ud……………💖

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Jothi Priya says:

    Sema sis

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    carukkuulaa yaaru(dikki)profeseraaaaaaaaaaaaaa
    intersting ud sis
    susbence yeppooooo open panuveengaaaa

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Samrithi says:

    Oh god professor Kaliya?😱 Thik thik nu eruku sis… Very interesting… eagerly waiting for your next ud… keep rocking 👍

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priyanga Ramesh says:

    Super ud sis,suspens nerayaa errukkum Pola,sikkiramaaa suspens open pannuka sis eagerly waiting for your ud

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ambika V says:

    கார் டிக்கியில் புரெபசரா 😀😀சஸ்பென்ஸ் ஜாஸ்தி ஆகிட்டே இருக்கு பா

You cannot copy content of this page