முட்டகண்ணி முழியழகி-13
1764
0
முட்டக்கண்ணி – 13
“நீதான..? நீதான்… நீ மட்டும் தான்.. இதுக்குக் காரணம் எனக்குத் தெரியும்.. ஏன்டீ..? ஏன்..? இப்படி செஞ்ச..? இருக்கிற பிரச்சினையெல்லாம் பத்தாதா..? புதுசு புதுசா வந்துக்கிட்டே இருக்கணுமா..?” என வீடே அதிரக் கத்திக் கொண்டிருந்தான் நிலவன்.
வீட்டுப்பெண்கள் நால்வரும் இந்த வழக்கில் இவள் ஜெயிக்க வேண்டும் என மாளிகைப் பாறைக் கோவிலுக்கு சென்றுவிட, வீட்டில் ஆண்கள் மட்டும்.. கூட செந்திலும், ஷாலினியும். செந்திலுமே குழப்பத்தில், அவனுக்கு எதுவும் தெரியவில்லை. ஷாலினிக்குத் தெரியும ஆனால் அவள் மூச்சுக்கூட விடவில்லை.
பெரியவர்கள் முகத்தில் கலவரம், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். செந்திலும் அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தான். ஷாலினியோ மாட்டிக்கொண்ட பாவனையில் யாரையும் பார்க்காமல் குனிந்து நின்றிருந்தாள்.
அவரவர் அவரவர் யோசனையில் இருக்க, நிலவன் கத்தியதைக் காதில் வாங்காமல் கையிலிருந்த டிவி ரிமோட்டை அழுத்தி நியுஸ் சேனலை வைக்க… ‘மதுரை மாவட்ட உயர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு.. பழங்குடி சிறுமிகள் பாலியல் வன்புணர்வு வழக்கில் கைதான குற்றவாளிகள் நால்வரையும், பத்து பேர் அரிவாளால் நீதிமன்ற வளாகத்திலேயே சராமரியாக வெட்டிச்சாய்த்தனர்.
குற்றவாளிகளை தாக்கியவர்கள் நேரடியாக நீதிபதியிடமே சரணடைந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தந்தைகளும், உறவினர்களும் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது…’ என்று ஃப்ளாஷ் நியுஸ் ஸ்க்ரோலிங்கில் போய்க்கொண்டிருக்க, அவள் முகம் மட்டும் நினைத்ததை சாதித்து விட்டதை எண்ணி பெருமை கொண்டது.
மற்றவர்களுக்கெல்லாம் மனதில் அப்பாடா என்ற நிம்மதியும், இவள என்னதான் பண்றது என்கிற ஆயாசமும் மொத்தமாய் குடியேறியது. பேசிப் பேசிக் கலைத்துப் போய் தலையில் கைகளை வைத்து அமர்ந்திருந்த நிலவனைப் பார்க்க பாவமாய் இருந்தது செந்திலுக்கு. அவனிடம் சென்று “மாப்ள..” என்றுத் தோளில் கை வைக்க,
“மச்சான்.. நாங்க நாளைக்கு கிளம்பறோம். இந்த ப்ளான்ல எந்த சேஞ்சும் இல்ல, இங்க என்ன நடக்குது, என்ன பண்ணனும்னு நீங்க பாருங்க, நான் என்னோட வொர்க் ஷெட்யூல் முடிச்சிட்டு ரிசப்ஷனையும் முடிச்சிட்டு வரேன்… வேற எந்த பிரச்சினைலயும் மாட்டிக்க வேணாம், தமிழ் சிஸ்டர் இப்படி இருக்கும் போது ரொம்ப ரொம்ப கவனமா இருக்கனும்..” என்று பதில் பேசக்கூட விடாமல் பேசியவன், ஷாலினியிடம் திரும்பி,
“அடுத்த ப்ளான் என்ன..? சரண்டர் ஆனவங்க ஜாமீன் எடுக்க ஆள் ரெடி பண்ணிட்டீங்களா.. அடுத்த ஹியரிங் எப்போ..?” என்று கேள்விகளை அடுக்க, அவள் வழக்கம்போல் திருதிரு தான்.
கனலியைப் பார்த்து ‘உன்னைத் திட்ட முடியலன்னா என்னைத் திட்டுவாங்களா..? அதை நீ பார்த்துட்டு சும்மா வேற இருப்பியா..?’ என்பது போல் ஒரு முறைப்பு.
பதிலுக்கு கனலி ஒரு தோள் குலுக்கல் ப்ளஸ் ஒரு நமுட்டுச் சிரிப்பு பார்சல். அது போதுமே, கொம்பு சீவிய புள்ளிமானாய், கட்டப்பொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனாய் மாறித் தன் போட்டுக் கொடுக்கும் வேலையை செவ்வனே செய்தாள்.
“ஜாமீன் எடுக்க ஆள் போயிட்டாங்க.. இந்தக் கேஸ் நான் ஹேன்டில் பண்ணிடுவேன், நான் பார்த்துக்கிறேன். ஹியரிங் வர டூ மந்த்ஸ் ஆகலாம். இன்னும் டேட் தெரியல..” மூச்சு விடாமல் பேச… கனலி கனலைக் கக்கிங். (ஹா ஹா)
நிலவனின் அமைதி செந்திலை மிகவும் வருத்தியது. ‘எவ்வளவு எடுத்துச் சொல்லியும் இந்தப் பெண் இப்படி செய்து விட்டாளே.’ என்ற ஆதங்கம் வேறு.
“ஏன் கனலி என் கிட்ட கூட சொல்லல, நான் தான் பொறுமையா ஏதாவது செய்யலாம்ன்னு சொன்னேன்ல, எதுக்கு இவ்வளவு அவசரம்..” – செந்தில்.
அதுவரை மற்றவர்கள் பேசியதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவள் ஆவேசமாய் கத்த ஆரம்பித்தாள்.
“அண்ணா ப்ளீஸ், நான் தப்பு பண்ணிட்டேன்னோ, இல்லை அவசரப்பட்டுட்டேன்னோ சொல்லாதீங்க, இவ்வளவு நாள் அவனுங்களை விட்டு வச்சதேத் தப்பு. அப்பவே… அப்பவே முடிச்சிருக்கனும், பாதிக்கப்பட்டது குழந்தைங்கண்ணா.. ஒன்னுக்கு போகனும், ரெண்டுக்கு போகனும்னு கூட சொல்லத் தெரியாத பிஞ்சுக் குழந்தைங்க, இவனுங்களுக்கு அரிப்பெடுத்தா, பிஞ்சுக் குழந்தைங்கள, கொடுமை செய்வாங்களா, அந்தக் குழந்தைகளை நீங்களும் தான பார்த்தீங்க, பார்த்தும் எப்படிண்ணா இப்படிக் கேட்க மனசு வருது…”
“ஆமாம்… நான் தான் … நான் தான் எல்லாம் ப்ளான் பண்னேன், அவனுங்களைப் போடவும் நான்தான் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தேன் இப்ப என்ன..? போலிஸ்க்கும் தெரியும், அவங்களும் எனக்கு சப்போர்ட் பண்ணாங்க.. அந்த நாய்ங்க செத்ததுல வருத்தமும் இல்ல.. அப்படியே நான் தான் இதுக்குப்பின்னாடி இருக்கேன்னு தெரிஞ்சு என்னை அரெஸ்ட் செய்தாலும், என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும், ஐ நோ.. ஐ கேன் டூ இட்…” என்றவள்,
“நேத்து பாரதியோட அம்மா அழுத அழுகை என்னால மறக்கவே முடியாதுண்ணா… இன்னும் அப்பப்போ ரத்தப்போக்கு வருது ராணிம்மா, இவ பிழைச்சதை நினைச்சு சந்தோசப்படவா, இப்படி பிழைச்சுட்டாளேன்னு வருத்தப்படவான்னுத் தெரியலன்னு சொல்லி அழும்போது தான் முடிவு பண்னேன்.”
“இந்தப் பரதேசி நாய்ங்கள, நாயை விடக் கேவலமா கொல்லனும்னு தோணுச்சு, அதுக்குப் பிறகுதான் இந்தப் ப்ளானே பண்னேன்…” என்று முகத்தை மூடிக் கொள்ள, அந்தப் பதில் செந்திலுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே என்பது புரிந்தது.
அவள் பேசுவதை அதுவரை அமைதியாய்க் கேட்ட நிலவன், எழுந்து வந்து அவளைத் தன்மேல் சாய்த்துக் கொண்டான்.
தட்டிவிடவும் இல்லை, தள்ளிவிடவும் இல்லை, இவ்வளவு நேரம் திட்டிட்டு, இப்ப வந்து கொஞ்சுற என்ற கோபமான வார்த்தைகளும் இல்லை. இதற்காகவே காத்திருந்தாள் போலும், கழுத்தைக் கட்டிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள்.
பயத்தை வெளிக்காட்டாமல், தைரியமாகக் காட்டிக் கொண்டு, அனைவரையும் சமாளித்து என்று பெரும் அலைக்களிப்பில் இருந்திருக்கிறாள். அவனின் ஆறுதலான ஒரு தொடுகை, அவளை அந்தப் படபடப்பில் இருந்து வெளிக் கொணர்ந்திருந்திருக்கிறது என்று எல்லோருக்கும் புரிந்தது.
“அந்தப் பாப்பா பாவம் மாமா.. நான் தான் பாரதின்னு பேர் வச்சேன், என் குழந்தையையே நாசம் பண்ணிட்ட மாதிரி எனக்கு கோபம். இங்கே கண்டிப்பா தண்டனை கொடுப்பாங்க, ஆனா அவனுங்க அடுத்து மேல கேஸ் ஃபைல் பண்ணுவாங்க, அப்போ பாதிக்கப்பட்டவங்க என்ன பண்றது மாமா, பணம் இருந்தாக் கூட எதுவும் யோசிப்பாங்க, ஒன்னுமே இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க, அதுதான் நான் இப்படி முடிவு பண்னேன். இது ஒரு பாடமா இருக்கனும் எல்லாருக்கும், பொண்ணைத் தப்பா பார்க்குறதுக்கு கூட பயப்படனும்..” என்றவள்,
“நான் செஞ்சது தப்பா…” என அழுகைக் குரலிலேயேக் கேட்க, சமாதனப் படுத்தும் குரலில் “இல்லடா.. அப்படியெல்லாம் இல்ல.. நிதானாமா நீயே யோசிச்சுப்பாரு.. இப்போ எதையும் நினைக்காத, சாப்பிட்டு ரெஸ்ட் எடு, வா..” என்றழைக்க,
தன் கேள்விக்கான பதில் அது இல்லையென்றாலும், வீம்பு செய்யாமல் நடந்தாள் அவனோடு உணவறைக்கு. மற்றவர்கள் அப்படியே நிற்க, “ஷாலினி எல்லாரையும் சாப்பிடக் கூப்பிட்டு வா..” என்ற நிலவனின் அழைப்பிற்கு, உணவு இறங்குமா தெரியாது, ஆனால் அவளுக்காகவேனும் சாப்பிட வேண்டுமே என சாப்பிட ஆரம்பித்தனர்.
அடுத்து என்ன நடக்குமோ என்ற பயம் போய், என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் என்ற எண்ணம் வந்துவிட, அதுவே அனைவரையும் சற்று ஆசுவாசப்படுத்தியது. செந்திலும் கிளம்ப ஆயத்தமாகி, “ஷாலினி நீ என் கூட வர்ரியா, இல்லை நாளைக்கு இவங்க கிளம்பினதும் வர்ரியா…” என,
“அவ இருக்கட்டும்ண்ணா, நாளைக்கு நான் அண்ணியைப் பார்த்துட்டுத்தான் கிளம்புவேன், சோ அப்போ வந்து இவளை விடுறேன்..” என்று கனலி முடித்து விட, செந்திலும் சரியென்றுக் கிளம்பி வெளியில் வர, அவனை இடித்துத் தள்ளிக் கொண்டு உள்ளே ஓடிவந்தான், வீட்டில் வேலை செய்யும் முத்தையன்.
ஓடிவந்தவன் மூச்சு வாங்க கனலியின் முன் நின்று “பொம்மிம்மா நீங்க உள்ளப் போய் ஒழிஞ்சுக்கோங்க, என்கிட்ட கேட்டாங்க, நீங்க இல்லைன்னு சொல்லிட்டேன். ஆனாலும் நம்ப மாட்டேங்கிறாங்க.. உள்ளாற வராங்க…” எனப் பேச,
“நான் எதுக்கு ஒழியனும்..? யார் வந்தா…? என்னக் கேட்டா..? தெளிவா சொல்லு..?” என்று வரிசையாய்க் கேள்வி கேட்க,
“அய்யோ பொம்மிம்மா… உங்களைத் தேடி போலீஸ் வந்துருக்கு, ஏதோ விசாரணைக்காம்..” என்று பயத்தோடு பேச, அதைக் கேட்டதும் அனைவரின் முகத்திலும் மீண்டும் ஒரு பயம், படபடப்பு வந்து தானாக ஒட்டிக் கொண்டது.
என்ன..? எப்படி..? என்று யோசிக்கும் முன்னே இன்ஸ்பெக்டர் உள்ளே வந்திருந்தார். கூடவே எள்ளும், கொள்ளும் வெடித்தபடியே ஒருக் கூட்டம். பக்கத்து ஊரு ஆட்கள் என்றுப் பார்த்ததும் தெரிந்தது.
“வாங்க சார், உட்காருங்க… நீங்களும் வாங்க… குடிக்க ஏதாவது கொண்டு வரச் சொல்லட்டுமா..? “ சூழலைக் கனிக்க முயன்றபடி நிலவன் பேச,
அந்த இன்ஸ்பெக்டரோ அவனுக்கு ஒரு பரிதாப லுக்கை பார்சல் செய்துவிட்டு, “பரவாயில்ல சார், ஒரு சின்ன என்கொயரி முடிச்சிட்டுக் கிளம்புறது தான்…” என்றவர், கனலியிடம் திரும்பி,
“மேடம் எந்த ஆதாரமும் இல்லாம ஒரு லாயர்க்கிட்ட என்கொயரி செய்யக் கூடாது, பட் இவங்க கம்ப்ளைன்டலயே எல்லா ஆதாரமும் இருக்கு, சோ நீங்க ஒத்துழைப்புக் கொடுக்கனும்..” என்றார்.
Yes sir.. I am sure.. But what’s the complaint…?” என்று மரியாதையாகக் கேட்க,
“அது வந்து.. Sorry to say… இவங்க ஊர் ஆலமரத்துக் கோவில்ல இருந்த பிள்ளையாரை நீங்க எடுத்துட்டு வந்ததா சொல்றாங்க.. உங்களையும், உங்க கூட இருந்தவங்களையும், நீங்க பிள்ளையாரைத் தூக்கிட்டு வந்ததையும் வீடியோ எடுத்து ஆதாரமா வச்சுருக்காங்க…” எனத் தயங்கி தயங்கிப் பேச…
“வாட்…” – நிலவன்
“ஓ மை காட்..” – செந்தில்
“அட சண்டாளி..” – ஷாலினி
“புள்ளையா இது..” – பெற்றவர்கள். என்ற வீட்டினரின் அதிர்ச்சியைக் கண்டுக் கொள்ளாமல், இன்ஸ்பெக்டரின் பின்னாடி இருந்தவர்களைப் பார்த்து,
“அதுவந்து சோமுண்ணே நம்ம ஊர்ல கோவில் பழசுதான், சாமி புதுசு.. புது பிள்ளையார் சிலை வைக்கிறாங்க, அப்படி வைக்கக் கூடாது, திருட்டுப் பிள்ளையார் தான் வைக்கனும்ன்னு எங்க அப்பத்தா ஓவர் ஃபீலிங்க்ஸ்… சரி நாலு பேருக்கு நல்லதுன்னா, எதுவும் தப்பில்லன்னு ஆண்டவரே சொல்லிருக்கார்.”
“அதுதான் உங்க ஊர் பிள்ளையாரை சுட்டுட்டேன். இப்ப உங்களுக்கும் பிள்ளையார் வேணும்தானே. அதுக்காகாவும் ஒரு பிள்ளையாரை ஆட்டையப் போட்டு வச்சுருக்கேன். இன்னைக்கு நைட் கொண்டு வந்து வைச்சிடலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு.. சாரிண்ணே.. வந்தது வந்துட்டீங்க, இந்தப் பிள்ளையாரையும் கையோடக் கொண்டு போயிடுங்க..” எனப் பேச, பேச…
ஷாலினி பொங்கிய சிரிப்பை அடக்கப் பெரும்பாடுபட்டு முடியாமல் வாயைக் கையால் மூடி, பக்கத்தில் இருந்த அறைக்குள் ஓட, செந்திலும் தன் பங்குக்கு நிலவனைப் பார்த்து அனுதாபப் பார்வையைக் கொடுத்துவிட்டு, வாய்கொள்ளாப் புன்னகையுடன் கிளம்பிவிட, நிலவனோ தன் தந்தையின் முன்னே வந்து.. “பார்த்துப் பேசி அனுப்புங்கப்பா..” என்றவன் கனலியை இழுத்துகொண்டு அறைக்குள் நுழைந்தான்.
வந்தவர்களிடம் சமாதானம் பேசி, அவர்களின் பிள்ளையார் சிலையைக் கொடுத்து, மன்னிப்புக் கேட்டு என ஓய்ந்து போயினர் பெரியவர்கள்.
அறைக்குள் நுழைந்தவன், “ஏன்டீ.. ஏன்டீ பிசாசே, உன்னால சும்மாவே இருக்க முடியாதா..? எவ்வளவு பிரச்சினை, எவ்வளவு டென்சன்… உன்னை எப்படித்தான் சமாளிக்கப் போறேனோ தெரியல…” என ஆற்றாமையால் கத்த,
‘என்னடா இது, ஒன் வீக்லயே இப்படி புலம்புறான். இதெல்லாம் ஜஸ்ட் சாம்பிள் பீஸ். நம்மளப் பத்தி புல் டீடைல்ஸ் தெரிஞ்ச என்ன செய்வான்… அச்சோ பாவம் பையன். தெரியாம சிக்கிட்டான் போல..’ என்று உள்ளுக்குள் கவுன்டர் கொடுத்தாலும், வெளியே பாவப் பரிதாபமாய் ஒரு லுக்..
அதன் பிறகு அவன் எதுவும் பேசவில்லை. நடந்தவைகளை ஜீரணிக்க சிறிது அவகாசம் தேவைப்பட்டது. ஆனால் அந்த அமைதி அவளை எதுவோ செய்ய , எழுந்து அவன் அருகில் அமர்ந்து, “மாமா…” என,
“….”
“மாமா..”
“ப்ச்…”
“மாமா ப்ளீஸ், இதெல்லாம் அம்மா அந்தக் குட்டீஸ்க்காக செஞ்சது. அதோட நான் ஊருக்குப் போறேன்னு எல்லாரும் ஓவர் ஃபீலிங்கு.. வாட் டூ டூ..? அவங்களை எஞ்சாய் பண்ணனும்னுதான் இந்த ஆபரேஷனே கையில எடுத்தது. ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெத்துன்னு சொல்லுவாங்களே… அதுமாதிரி இப்படி சொத்துன்னு உங்க முன்னாடி லாக்காகிட்டேன்..” என்று மேலும் தன் முட்டைக்கண்ணை விரிக்க..
ஆழியாய் அடித்துச் செல்லும் விரிந்த விழிகளை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. ‘என்ன செய்ய வேண்டும் நான் இப்போது. ஆழ்கிணறாய் அகன்று விரியும் இந்தக் கயல்விழிகளுக்குள் தலைக்குப்புற விழ வேண்டுமா..? மாட்டிக் கொண்ட பாவனையில் பற்களில் கடிபடும் இதழ்களை, அழுத்தமாய் முத்தமிட்டு, செப்பிதழை விடுதலை செய்ய வேண்டுமா..?
ஒன்றும் தெரியாத அப்பாவியாய் அந்தக் கைகளில் தாங்கிய கன்னங்களில், தன் கன்னங்களை அழுந்திப் புதைய, அவளுள் மூழ்கிப் போக வேண்டுமா..? உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்தவனை, மேலும் சோதிக்கவென, அவன் தோளை த் தட்டி ‘என்னாச்சு..’ என்பது போல் சைகையில் கேட்க, முடிந்தது.. அனைத்தும் முடிந்தது.
அடுத்து நடந்ததை நான் ஏன் விம் போட்டு விளக்க வேண்டும்.. மனசாட்சி கிழிகிழியெனக் கிழிக்க, மானஸ்தன் நிலவன், மானங்கெட்ட நிலவனாகிப் போனான் காதலிலும், காமத்திலும்..
ஊடலும், கூடலுமாய் கழிந்த நிமிடங்களுக்குப் பிறகு, அந்த அமைதியைக் கிழித்தது கனலி தான். கணவனின் மார்பில் கோலம் வரைந்தவாறு “மாமா… நான் தப்பு செஞ்சிட்டதா உங்களுக்கும் தோனுதா..” என மெல்லக் கேட்க, அப்படி சொல்லிவிடாதே என்ற வேண்டுகோள்தான் அந்தக் குரலில் மேலோங்கியிருந்தது.
அதை உணர்ந்தவன் “நீ தப்பு செய்வன்னு நான் சொல்லல.. அது உன்னால முடியாது. முடிஞ்சதைப் பத்தி டோன்ட் டாக்.. இனி அடுத்து என்ன செய்யலாம்னு யோசிப்போம்.. உன் வழியில நான் எப்பவும் குறுக்க வர மாட்டேன். உன்னோட ஒவ்வொரு ட்ராவல்லயும் நான் உனக்குத் துணையா இருப்பேன். இன்னைக்கு நடந்த மாதிரி இனி நீ எப்பவும் நடந்துக்க கூடாது. உன்னை நான் வாட்ச் பண்ணி ட்டுத்தான் இருப்பேன்.”
“நீ வரம்பு மீறக்கூடாது. இனி ஒரு பிரச்சினை உன்னால வரக்கூடாது. காலம் கடந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். சட்டம் படிச்ச நீங்களே அதை ப்ரேக் பண் ணக் கூடாது.. அப்போ பொது ஜனங்களோட மைன்ட் செட் எப்படி இருக்கும் அதை யோசி..” என்று நீளமாகப் பேசியவனைப் பார்க்க கனலிக்கு பாவமாகத்தான் இருந்தது. ஏனென்றால் அவன் கூறிய ஒன்றையும் அவள் கேட்கப் போவதில்லை.. அனைவரும் ரூல்ஸ் என்றால், அனைத்திலும் இவள் ப்ரேக் த ரூல்ஸ்தான். அடுத்தடுத்து செய்ய வேண்டியதும் படமாகவும் ஓடியது. கண்களை மூடிக் கொண்டாள்.
கடந்து போன இந்த ஐந்து நாட்களை நினைத்துப் பார்த்தவன் கண்களை மூடி சாய்ந்துக் கிடந்தவளை அப்படியே விட மனமில்லை. சீண்டி விடலாம் என்ற எண்ணம் தோன்ற.. காரை ஓரமாக நிறுத்தி, சற்று நேரம் அவளையே சுவாரஸ்யமாய் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மெல்ல அவள் அருகே சென்றுத் தோளில் கையை வைத்தான்.
தோளில் வைத்த அவன் கையை வேகமாய் தட்டிவிட்ட கனலியின் தலை அடுத்த சில நொடிகளில் அவன் தோளில் புதைந்து போனது. அவளை மெல்ல அணைத்த அவன் கரங்களின் அணைப்பை மேலும் இறுக்கவென கனலியின் தலை ஆழ ஆழ புதைந்தது.
மங்கையவளின் மதிமுகம் நிமிர்த்தி, முன்காலை பனிமலராய் ஜில்லிட்டிருந்த கனலியின் கன்னத்தில் மெல்ல முத்தமிட்டான். முத்தத்தின் முடிவில் அடுத்த முத்தம் மூச்செடுக்க, அங்கே எறும்புகளின் அணிவகுப்பாய் முத்தங்கள் அணிவகுத்தன. எதற்கும் ஓர் முடிவு உண்டு என்பதற்கு இணங்க, முத்தங்கள் நிறைவுற்று மௌனங்கள் கலைந்தன. தன் தோளில் சாய்த்தபடியே காரை எடுத்தான். புது வாழ்வை நோக்கி…
இன்னும் முழிப்பாள்.
Comments are closed here.