ஹேய் நீ ரொம்ப அழகா இருக்க-20
956
0
மேட்டுப்பாளையம்:
கார்த்திக்கின் யோசனையில் முதலில் வந்தது வினிதா தான். அவள் தான் நம்மிடம் இதற்கு முன் இந்த வார்த்தையை கூறியது. அவளிடம் போன் பண்ணி விசாரித்தாள். கண்டிப்பாக மறுப்பதற்கு வாய்ப்புகளும் இருக்கு. அதனால் அவன் யோசனையில் வனிதாவிற்கு கால் செய்து வினிதா என்ன செய்கிறாள் என்று விசாரிக்கலாம் என்று முடிவுக்கு வந்தான்.
போனை எடுத்து வனிதாவிற்கு டயல் செய்தான். அவளும் அழைப்பை ஏற்க.
நலம் விசாரித்துவிட்டு அவளுடன் உரையாடத் தொடங்கினான்.
வனிதா ஊருக்கு போய் சேர்ந்து விட்டீர்களா?
ஆமா கார்த்தி. வீட்டுக்கு வந்தாச்சு! என்று ஹஸ்கி வாய்சில் பேசினாள்.
என்ன ஆச்சு வனிதா? இவ்ளோ மெதுவா பேசறே?
வீட்ல இருக்கேன் கார்த்தி. அப்பா, சித்தி எல்லாம் இருக்காங்க. அதுதான்.
சரி வனிதா. வினிதா என்ன செய்றா?
அவ தம்பிகள் கூட விளையாடிகிட்டு இருக்கா.
மொபைல் கையிலேய வச்சிருக்கா?
இல்ல கார்த்தி. அவ போன என் பக்கத்துல தான் இருக்கு!
அப்படியா சரி!
என்னாச்சு கார்த்தி. புதுசா இதெல்லாம் கேட்கிற?
ஒன்னுமில்ல வனிதா! எனக்கு ஒரு Unknown நம்பரிலிருந்து மெசேஜ் வந்துச்சி. ஒருவேளை வினிதா தான் கலாய்க்கிறனு நினைச்சேன்.
இல்ல கார்த்தி. அவ ரொம்ப நேரமா தம்பிகள் கூடத்தான் விளையாடிக் கொண்டு இருக்கா.
சரி ஓகே வனிதா. நீங்க ரெண்டு பேரும் ஓன்ன இருக்கிற ஒரு போட்டோவை எனக்கு வாட்ஸ் அப் பண்ணு.
நா பிரண்ட்ஸோட என் ஊட்டி கெஸ்ட் ஹவுசுக்கு போறான் பா. Take Care குட் நைட் டியர்.
யூ டூ டியர். லவ் யூ டியர்.
கார்த்திக்கின் யோசனை வினிதா செய்யவில்லை என்றால் இதை செய்து இருப்பது யார்?
அவனுக்கு தலையெல்லாம் சுற்றியது. இந்த மெசேஜ் இருக்கு பதில் அனுப்பலாமா? வேண்டாமா? என்று சிறிது யோசித்துவிட்டு.
பதில் அனுப்பாமல் போனை வைத்து விட்டான்.
ஊட்டி கெஸ்ட் ஹவுஸ்:
அங்கிருந்து கார் கிளம்பி ஊட்டி கெஸ்ட் ஹவுசை வந்தடைந்தது.
வாட்ச்மேன் ரகு: வாங்க தம்பிகளா! என்ன ரெண்டு மூணு வாரம் இந்த பக்கம் ஆளையே காணோம்?
அருண்: ஆமா அண்ணே! படிப்பில் கொஞ்சம் பிசி ஆயிட்டோம்!
வாட்ச்மேன் ரகு: உண்மையா தம்பி! அப்ப ரொம்ப சந்தோஷம். சரிப்பா உங்களுக்கு சாப்பிட என்ன வேணும்னு சொல்லுங்க நான் வாங்கிட்டு வரேன்?
கார்த்திக்: 3 சிக்கன் ப்ரைட் ரைஸ், 2 சிக்கன் தந்தூரி, 1 இரண்டு லிட்டர் பெப்சி. அப்படியே உங்களுக்கு ஏதாவது சாப்பிட வாங்கிக்கோ அண்ணா! இந்தாங்க காச வாங்கிக்கோங்க.
பணத்தைப் பெற்றுக்கொண்டு ரகு உணவு வாங்கச் சென்றான்.
மூவரும் வீட்டின் உள்ளே சென்று ஹாலில் உள்ள சோபாவில் வந்த களைப்பிற்கு ஓய்வெடுத்தார்.
சிறிது நேரத்தில் வாட்ச்மென் ரகு உணவுடன் வீட்டின் உள்ளே வந்தான். உணவு பொட்டலங்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு தனது வேலையை பார்க்க சென்று விட்டான்.
ரவியும், அருணும் வாங்கி வந்த பீர் பாட்டில்களை மடமடவென்று குடிக்கத் தொடங்கினார். ரவி ஒரு பாட்டிலை கார்த்திக்கின் பக்கம் நீட்ட, அவன் வேண்டாம் என்று மறுத்துவிட்டான்.
அவர்கள் கிண்டலாக என்னடா திடீரென்று பத்தினி வேஷம் போடுற?
இல்ல மச்சான். இனி ட்ரிங்க்ஸ் பண்ண கூடாது என்று முடிவுல இருக்கேன் அதுதான்.
சரிடா மச்சான். ஆனா இந்த முடிவை வாங்கிக் கொடுக்கக் கூடாது என்று எடுத்து விடாதே! அப்புறம் எங்க கதி அதோ கதிதான்! 😂😂
கார்த்திக் தனது போனை எடுத்து வனிதாவிடம் இருந்து வந்த போட்டோவை பார்த்து விட்டு, தனது நண்பர்களிடம் காட்டினான்.
ஆழ்ந்த போதையில் இருந்த அவர்கள் போட்டோவை பார்த்து விட்டு அருண் வினிதா அழகாக இருக்கா என்றும்,
ரவி! ரெண்டு பிகரும் சூப்பரா இருக்கு மச்சான். “இரண்டையும் கட்டிக்கோ மச்சான்” என்று கேலி செய்தான்.
ஆனால் கார்த்திக் தான் வனிதாவை காதலிப்பதாக கூறிவிட்டு அவளின் புகைப்படத்தை காட்டினான்.
கார்த்திக் போனுக்கு மீண்டும் ஒரு குறுந்தகவல்!
வெரி குட்! Don’t drink! It is injurious for your health என்ற தகவலை படித்தவுடன் கார்த்திக்கிற்கு தலையெல்லாம் சுற்றியது. யார் நம்மை பாலோ செய்வது என்று குழம்பினான்.
வந்த மெசேஜ் இருக்கு பதில் மெசேஜ் டைப் செய்தான்.
யாரோ ஆட்டத்தில் புது ஆளு போல இருக்கே?
தொடரும்.
Comments are closed here.