Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ஹேய் நீ ரொம்ப அழகா இருக்க -21

அந்த ராங் நம்பருக்கு ஹூ ஆர் யூ? (Who are you) மே ஐ நோ யுவர் நேம்? (May i know your name) பதில் மெசேஜ்யை அனுப்பினான்.

நீண்ட நேரமாக பதில் எதுவும் வராததால் தனது அறைக்கு உறங்க சென்று விட்டான்.

பொழுது விடிந்தது!
காலை 7 மணி 

வனிதா எப்போதும் போல் கார்த்திக்கிற்கு கால் செய்தாள். ரிங் அடித்து ஓய்ந்தது!

மீண்டும் முயற்சித்தாள். தூக்க கலக்கத்தில் கார்த்திக் காலை அட்டென்ட் செய்தான்.

சொல்லு வனிதா!

சாரிடா கார்த்திக் தூங்குறியா?

முழிச்சுட்டேன். பரவாயில்லை சொல்லுடி செல்லம்.

சும்மா தான்டா உன்கிட்ட பேசணும்டு அடிச்சேன்.

சரி ஓகே 15 minutes வெயிட் பண்ணு. நானே பிரஸ் ஆயிட்டு திருப்பி கூப்பிடுறேன்.

ஓகேடா கார்த்தி.

பிறகு மெசேஜ்யை திறந்து பார்த்தான். பதில் எதுவும் வரவில்லை.

போனை வைத்துவிட்டு பாத்ரூமுக்கு விரைந்தான். குளித்து உடைகளை அணிந்து விட்டு டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான்.

வாட்ச்மேன் ரகு சூடாக அனல் பறக்கும் டீயைக் கொண்டு வந்து குட் மார்னிங் உடன் கார்த்திக்யிடம் கொடுத்தான்.

டேபிளில் இருந்த செய்தித்தாளை டீ முடியும்வரை ஒவ்வொரு பக்கங்களாக திருப்பிக் கொண்டே இருந்தான்.

கார் சாவியை எடுத்துக்கொண்டு ரவியும், அருணும் இருக்கும் அறையின் கதவை திறந்து பார்த்தான். நைட் குடித்த பீரின் போதையில் விடிந்தது கூட தெரியாமல் மப்பில் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

திறந்த கதவை சாத்திவிட்டு காரை நோக்கி சென்றான்.

காரை ஆன் செய்து தனது போனை கார் மொபைல் ஹோல்டரில் பொருத்திவிட்டு ப்ளூடூத் இல் வனிதாவை அழைத்தான்.

காரை ஓட்டிக்கொண்டே வனிதாவிடம் சந்தோசமாக காதல் பொங்க பேசிக்கொண்டே ஊட்டியை வட்டமிட்டான்.

பொள்ளாச்சி வீடு:

விருந்தாளியை கவனிப்பதைப் போன்று வனிதாவிற்கும் வினிதா விற்கும் காலை உணவை பட்டையை கிளப்பும் அளவிற்கு தயாராகிக் கொண்டிருந்தது.

வினிதா தந்தையின் நண்பர்களே பட்டியல் உண்டாக்கி அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்க தயாராக இருந்தாள்.

வீடு மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் வேலைகளை தலையில் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து கொண்டிருந்தார்கள்.

வினிதா தனது உள்ளூர் தோழிகளுக்கு எல்லாம் கால் செய்து அழைத்துக் கொண்டு இருந்தாள்.

ஒரு கையில் அழைப்பிதழ் மறுகையில் கைப்பேசியும் ஆக இருந்தாள்.

சித்தி காலை உணவை தயார் செய்துவிட்டு அனைவரையும் சாப்பிட அழைத்தாள்.

கார்த்திக்கின் கார்:

கார்த்திக் வனிதாவுடன் உரையாடிக்கொண்டே காரில் இருந்தபடி ஒரு செல்பி வனிதாவின் வாட்ஸ் அப்புக்கு தட்டினான்.

வனிதா பதிலுக்கு “you always handsome dear”  ஹாட்டின் உடன் பதில் வந்தது.

வனிதாவும் பதிலுக்கு ஒரு செல்பி கார்த்திக்குக்கு அனுப்பினாள்.

கார்த்திக் பதிலுக்கு “you so cute dear”  உடன் பதில் அனுப்பினான்.

ஊட்டி கெஸ்ட் ஹவுஸ்:

ரவியும், அருணும் படுக்கையிலிருந்து எழுந்து வந்து டைனிங் டேபிள் அமர்ந்தார்கள்.

வாட்ச்மேன் ரகு தம்பிகளா டீயா காப்பியா என்று கேட்க இருவரும் “அண்ண சூடா lemon tea எடுத்துட்டு வாங்க?” உத்தரவு விட்டார்கள்.

அவரும் விரைந்து சென்று இருவருக்கும் டீயை எடுத்துக்கொண்டு வந்தார்.

கார்த்திக் எங்கே அண்ணன்?

தம்பி இப்ப தான் கார் எடுத்துட்டு வெளியே போனிச்சு!

மச்சான் அருண் இவன் வரவர சரி இல்ல டா! பாரேன் இவ்வளவு காலையிலே வெளியே போயிருக்கான்?

தம்பி 8.30.  உங்களுக்கு இப்பதான் விடியுது பா!

ரவி: ஆமா அண்ணே நீங்க சொல்றது சரிதான். இருந்தாலும் இந்த கார்த்தி பையன் காதலில் விழுந்த பிறகு தலைகீழா மாறி விட்டான்.

அப்படியா தம்பி? சின்னய்யா காதலிக்குதா! கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு.

கார்த்திக்கின் கார்: 

கார்த்திக் இன்று அணிந்திருந்த உடையில் மிகவும் அழகாக இருந்தான்.

பிளாக் டீ சர்ட்டும் அதன்மேல் ப்ளூ கலர் ஜீன்ஸ் ஜாக்கெட்டும், ப்ளூ ஜீன்ஸ் பேண்டும், ரேபான் கூலர்ஸ் அணிந்திருந்தான்.

காரை தெருவோர பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வெளியே இறங்கிய கார்த்திக் சிகரெட்டை பற்றினான்.

நேற்று இரவு போன்ற மீண்டும் ஒரு குறுந்தகவல். 

தலையை காரின் உள்ளே விட்டு போல்டரிலிருந்து போனை எடுத்துப் பார்த்தான்.

மீண்டும் அதே நம்பர்

 




Comments are closed here.

You cannot copy content of this page