Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முட்டகண்ணி முழியழகி-14

முட்டக்கண்ணி – 14

 

முட்டலும்,மோதலுமாய் ஆரம்பித்து,கெஞ்சலும்,கொஞ்சலுமாய்சீண்டலும் சிணுங்கலுமாய் தம்பதியரின் நீண்ட பயணம் முடிவுக்கு வந்திருந்தது. அவர்கள் வீடு வந்து சேர நள்ளிரவாகியிருந்ததுஅவர்கள் வரும் நேரம் தெரிந்து, நாயகியின் ஏற்பாட்டின் படி, அவரது தோழியான கங்கா ஆரத்தி எடுத்து சில சம்பிரதாயங்களை நடத்திவிட்டே வீட்டிற்கு உள்ளே விட்டார்.

 

தொடர் பயணங்களின் அலைச்சல், இருவரது உடலும் ஓய்வுக்கு கெஞ்ச, வழியிலேயே இரவுணவை முடித்திருந்ததால், சோர்வும் களைப்பும் சேர, அப்படியே உறங்க ஆரம்பித்தனர். இருவரது அலைபேசியும், உச்சாஸ்ததியில் அலற, அது சிறிதேனும், இருவருக்கும் எட்டியதா என்றுத் தெரியவில்லை. அப்படி ஒரு உறக்கம் இருவருக்கும்..

 

தூரத்தில் ஒலிக்கும் கோவில் மணியோசையின் சத்தத்தில் சோர்வாக கண்திறந்துப் பார்த்தக் கனலியின் காதில் மீண்டும் மீண்டும் காலிங் பெல் சத்தம் அலறுவது விழுந்தது. கோவில் மணி சத்தம் என்று  சாதாரணமாக நினைத்ததை எண்ணி தலையில் அடித்துக் கொண்டவள், அடித்துப் பிடித்து எழுந்துக் கதவை திறக்க, அவளின் முன் கங்கா டிபன் கேரியருடன், “என்னம்மா தூக்கத்தைக் கெடுத்துட்டேனா..” என்றவாறே புன்னைகைக்க, “அச்சோ இல்ல ஆன்ட்டி கொஞ்சம் டயர்டா இருந்துச்சு அவ்ளோதான்..” என்றாள் தூக்கக் கண்களோடு அசடு வழிய,

 

அதனாலென்ன பரவாயில்ல விடு.. நானும் அதுதான் எழுப்பாம இருந்தேன்.. ஆனா உன்னோட மாமியார் அங்க இருந்து போனுக்கு மேல போன்.. என்னமோ ஏதோன்னு..” எனவும்,

 

போன் சத்தமே கேட்கல ஆன்ட்டி.. சாரி ஆன்ட்டி.. உள்ள வாங்க வெளியவே நிற்க வச்சு பேசிட்டு இருக்கேன்..” என்றாள் கனலியும் வீட்டாளாய்.

 

இல்லடாம்மாநானும் அங்கிளும் கோவிலுக்கு போறோம், உங்களுக்கு இதுல டிபன் இருக்கு, சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க, லஞ்சும் நானே வந்து செஞ்சு தரேன்.. நீ எதுவும் செய்ய வேண்டாம்போயிட்டு வர்றோம்..” என அவர் கிளம்ப,

 

வேண்டாம் என ஒரு பேச்சுக்கு கூட மறுக்காமல் கனலியும், தலையை ஆட்டிவிட்டு, கதவைத் தாழிட்டு, கங்கா கொடுத்ததை டைனிங் டேபிளில் அடுக்கி, வீட்டைச்சுற்றி பார்வையை சுழற்றியவளுக்கு ஹாலில் மாட்டியிருந்த அந்தப் போட்டோவில் பார்வை பதிந்தது. முகமெல்லாம் இறுக, கண்கள் வெறிக்க அப்புகைப்படத்தையேப் பார்த்திருந்தாள்.

 

அதுஅவளும், நாயகியும் மட்டும் இருக்கும் படம். சில வருடங்களுக்கு முன் எடுத்தது.. நாயகி வருடத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்திருந்தாலும், நிலவன் மட்டும் படிப்பைக் காரணம் காட்டி வந்ததில்லை.. அன்றுதான் பல வருடங்களுக்குப் பிறகு அவனை பார்க்கிறாள். அவனது தோற்றம் நிச்சயம் அவளைக் கவருவதாகத் தான் இருந்தது.

 

அவன் வந்ததில் இருந்தே நாயகியின் பின் சுற்றுவதாக பெயர் செய்து கொண்டு நிலவனை சைட்டடித்துக் கொண்டிருந்ததும், அதைக் கண்டுகொண்டு ஏதோ அவன் கற்பை சூரையாட வந்தது போல், என்னப் பேச்சு..? எத்தனை அசிங்கப்படுத்திவிட்டான் வளர்ந்து கெட்டவன்.. அன்று நடந்த சண்டையும், தொடர்ந்ததன் நினைவுகளும், அது கொடுத்த வலிகளும்மரண பங்கம் அவளுக்கு

 

அன்று அவன் பேசியதை நினைவு கூர்ந்தவளுக்கு கோபம் மலையென உயருகிறது.. என்ன முயற்சி செய்தும் அது குறைவேனா என்றது.. மொத்த சோர்வும், தூக்கமும் இருந்த இடம் தெரியாமல் போக, பட்டென எழுந்து, டைனிங் டேபிளில் இருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து இரண்டடி நகர்ந்தவள், ‘எப்படி பேசினான், இது மட்டும் எப்படி போதும்என மூளையை கசக்கியபடியே, ஹாலை நோட்டம் விட, ஹாலுக்கும், கிச்சனுக்கும் நடுவில் ஒரு சிறுமேடை அதன்மேலே அழகாய் அமர்ந்திருந்தது ஃப்ரிட்ஜ்.

 

அதைப் பார்த்ததும் விழிகள் பளிச்சிட, ஓடிப்போய் ஃப்ரீசரில் இருந்த ஐஸ் கியுப்சை வாட்டர் ஜக்கில் கொட்டி, “ஹான் பொம்மி உனக்கு மூளையோ மூளை, ஃபர்ஸ்ட் டேவே உன்னை உன் மாமங்காரன் அரண்டடிச்சு கொண்டுபோய் மயிலாடும்பாறைல விடப்போறான்..” என நைட்டியில் இருந்த காலரைத் தூக்கிவிட்டு பெட்ரூமிற்குள் நுழைந்தாள்.

 

பகலவன் வந்து பல்லைக் காமிச்சுக்கிட்டு இருக்கார்.. இந்த நிலவன் இழுத்துப் போர்த்தி தூங்கிட்டு இருக்கான், இவனை’  என்றவள் ஓடிக்கொண்டிருந்த ஏசியை நிறுத்திவிட்டு, மூடியிருந்த திரைச்சீலைகளை முழுவதுமாக ஒதுக்கி, ஜன்னலைத் திறந்து விட்டாள்.

 

பிறகு ஐபேடோடு கனெக்டாகிருந்த சவுண்ட் சிஸ்டத்தில் மைக்கேல் ஜாக்ஷனின்பீட்டிட்டைஅலறவிட்டு, படுத்திருந்த அவனையே பார்க்க, அப்போதும் அவன் அசையாமல் படுத்திருந்தான்.

 

ஐஸ் தண்ணிய ஊத்தி பையனை அவுட்டாக்கக் கூடாதுன்னு பாவம் பார்த்தா, என்னமோ கும்பகர்ணனே மறுபிறவி எடுத்து வந்த மாதிரி இப்படித் தூங்குறான். இவனுக்கு போய் பாவம் பார்த்தோமே.. நம்மளச் சொல்லனும்..’ எனத் தன்னையே திட்டிக் கொண்டவள், அவன் தலைக்கு நேராக நின்று, Mr.நிலவன் நீங்க தப்புக்கு மேல தப்பு பண்ணிட்டீங்க.. அதுக்கு கனலியோட கோர்ட்ல உங்களுக்கு நிச்சயமா தண்டனை உண்டுமெதுவா ஸ்டார்ட் பண்ணலாம்னு நினைச்சேன்பட் அந்த போட்டோவைப் பார்த்ததும் ஆன் ஸ்பாட்ல அட்டாக்கை ஆரம்பிச்சிடலாம்னு முடிவு பன்னிட்டேன்”.

 

ஃபர்ஸ்ட் நீ செஞ்ச தப்பு என்ன தெரியுமா..? ஏதோ பார்க்க சுமாரா இருக்கியே, எப்படியுமென் தலையிலதான் உன்னைக் கட்டுவாங்கன்னு தெரிஞ்சதுனால, போனாப் போகுதுன்னு உன்னைச் சைட் அடிச்சாஎன்னமோ ஓவரா சீன் போட்ட, இனக்கவர்ச்சி, மனக்கவர்ச்சின்னு பீட்டர் விடுற, நீ பேசினதுக்கு எல்லாம் போடான்னு போயிருப்பேன்தான்.. போயிருக்கனும்தான்.. ஆனா அப்போ எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சது. அதான் சரி நம்ம பையன்தானேன்னு விட்டேன்.”

 

நெக்ஸ்ட் நீ வெளிநாட்டுக்குப் போனதுசரி நம்ம புருஷர் அயல்நாட்டுக்கெல்லாம்  போயிட்டு வரார்ன்னு அதையும் விட்டேன்.. அடுத்து வீட்ல பொண்ணு பாருங்கன்னு சொன்னது, உனக்கு கல்யாணம்னு ஒரு கழுதையை பண்ணா நான் தான் ஃப்ர்ஸ்ட் சாய்சா இருப்பேன்னு கனவு கண்டுட்டு இருந்தாஅந்தக் கனவுலயும் கம்ப்யுட்டர் சாம்பிராணிய போட்டு, திகுதிகுன்னு எரிய விட்டுடியே அதத்தாண்டா என்னால விட முடியல…”

 

எப்படி.. எப்படி.. என்னைத் தவிர வேறெந்த பொண்ணா இருந்தாலும் பரவாயில்லையாநீ பேசுற ஓட்ட இங்க்லிஷை, உனக்கு சமமா பேசனும்னு வேர வழி இல்லாம கத்துக்கிட்டு, நீ வேணும்னு உன் பின்னாடி அலைஞ்சாநான் உனக்கு இளப்பமாவிடமாட்டேன்டா..” என்று மூச்சு விடாமல் பக்கம் பக்கமாய் வசனம் பேசியபடியே, தன் கையில் இருந்த நீரை அவன் தலையில் கொட்ட, அப்போதும் எழுந்து கொள்ளவில்லை நிலவன்.

 

ஒன்றும் புரியாமல், ‘என்னடா இது..’ என்று யோசனையோடு ரஜாயை இழுக்க, அங்கே கணவனுக்குப் பதிலாக பில்லோ ஈயென்று இளித்தது இவளைப் பார்த்து.  ‘அடப்பாவி..’ என ஷாக் ஆனவள் எங்கே போயிட்டான்ஒருவேளை எனக்கு முன்னாடி எழுந்து வெளிய போயிட்டானோ இல்லையேவாய்ப்பே இல்லையே, அவங்கிட்ட இருந்துதான நான் எழுந்து வந்தேன்..’ என்றுத் தலையில் தட்டியபடியே அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது , பின்னிருந்து அப்படியே அவளை அள்ளியது கனலியின் நிலவனின் கரங்கள்.

 

ஹேய்..” என்ற கூச்சலோடு திமிறியவளை விடாமல் அடக்கி, தூக்கியவன் பாத்ரூமின்  சவரில் நிறுத்தி குழாயைத் திருகிய பின்னே விட்டான்.

 

ஏய் விடுவிடுன்னு சொல்றேன்ல, விடுடா குரங்கு..” எனக் கத்தியவளை, கொஞ்சமும் சட்டை செய்யாமல், விடாமல் அழுத்திப் பிடித்தவன், “ஏன்டீ.. ஒரு புருஷன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லாமஅவன் இவன், வாடா போடான்னு ஏக வசனத்துல பேசிட்டு இருக்க, வந்ததும் வராததுமா உன்னோட குரங்கு சேட்டையை வேற ஆரம்பிச்சிருக்க.. உன்னைப் பிடிச்சிருந்தும் வேண்டாம்னு சொன்னதுக்கு இந்த மங்கி சேட்டைதான் ரீசன்.”

 

சும்மா எப்ப பாரு சீரியசா யோசிச்சு, லூசுத்தனமா ப்ளான் போடுறது. உன்ன மாதிரி டம்மி பீசுகூட சுத்துறதுக்கும் நாலு பேரு.. மை காட்..”

 

உன்னை என்னால சமாளிக்க முடியாதுன்னுதான் உன்னைப் பிடிச்சிருந்தும் வேண்டாம்னு சொன்னேன். ஆனா நீ இல்லாம என் லைப்பை நினைக்கக் கூட முடியல, சரி எப்படியோ உனக்காக உன்னோட கேர்க்டர்க்கு நான் அடாப்ட் ஆகிக்கலாம்னு நான் யோசிக்கும் போது தான் ஒரு உண்மை எனக்கு மண்டைல பளிச்சுன்னு தோணிச்சு.. அது என்னைத் தவிர யாராலயும் உன்னை சமாளிக்க முடியாதுங்கிறதுஹா ஹா இது தெரியாம எல்லாரையும் டென்சன் செய்து, நானும் டென்சனாகி..” எனப் பேசிக்கொண்டே  வந்தவன், அவள் முட்டைக் கண்கள் இரண்டும் சாசராய் விரிந்து கொண்டே செல்ல, வாயும் ஆவெனப் பிளந்து நின்றவளைப் பார்த்து சட்டென அவளை இழுத்தணைத்து ஆழ்கடலாய் தன்னை உள்ளிழுக்கும் அந்த ஆழ்விழியை அழுத்தமாய் முத்தமிட்டான் நிலவன்.

 

கணவனது ஒற்றை முத்தத்திலேயே சித்தம் கலங்கி அவனுக்குள் மொத்தமாய் அடங்கியவளின் மன நிலையை, மதித்து சவரை நிறுத்திவிட்டு மேலும் தனக்குள் புதைத்துக் கொண்டான். நொடிகள் நிமிடமாய் கழிய, என்ன நினைத்தானோவாய்விட்டு சிரிக்க, ஏதோ அழகான கனவுலகத்தில் இருந்தவளை பட்டென வெளியே இழுத்து விட்டதுபோல் புரியாமல், அவனிடமிருந்து விலகி திருதிருவென முழிக்க, அவளது முழியில் மேலும் சிரித்தவன், “இல்ல உன்னோட ஆப்ரேசன் எல்லாம் நினைச்சுப் பார்த்தேன். அதான் இந்த சிரிப்புஹா ஹா எல்லாம் ஊத்திக்கிச்சா….” சொல்லிவிட்டு  மறுபடியும்  சிரிக்க,

 

வெடுக்கென அவனைத் தள்ளிவிட்டு, திட்ட வேண்டும், கோபப்பட வேண்டும் என நினைத்தாலும் முடியாமல், சற்றுமுன் நடந்த நிகழ்வில் மனதில் பரவியிருந்த இதம் அதைத் தடுக்க, வெட்கமும் சிரிப்புமாய்ச்சீப்போ..” என அவனைச் செல்லமாய் திட்டி, அவன் முகம் பார்க்கத் தடுத்த நாணத்தோடு அவன் மார்பிலேயே புதைந்துக் கொண்டாள்.

 

தனக்குள் புதைந்த புதையலை பொக்கிசமாக பார்த்துக் கொள்ளும் பெரும் பொறுப்பு அவனுக்கு.. நாளை என்ன நடக்கும் தெரியவில்லை.. அவன் அவளைக் காப்பானா..? அவள் மீது வன்மம் வைத்து காத்திருக்கும் கொடிய மிருகங்களிடம் இருந்து அவளை மீட்பானா..? தெரியவில்லைகாலம் தான் பதில் சொல்லும்..

அவர்களது மோன நிலையைக் கலைக்கவென.. வீட்டின் காலிங் பெல் ஒலிக்க, “நீ ரெடியாகிட்டு வாநான் யாருன்னு பார்க்கிறேன்..” என்றவன்.. தன்னிடமிருந்துப் பிரித்து மீண்டும் அழுத்தமாய் அந்த கண்களில் இதழைப் பதித்து விட்டு சென்றான்.

 

முதல் முத்தத்தில் தன்னையே மறந்து திளைத்தவளால், நிலவனின் இந்த முத்தத்தில் திளைக்க முடியவில்லை.. பதட்டத்துடன் கொடுத்தது போல் இருந்தது. அவன் முகமும் நொடியில் இறுகியும் இருந்தது. ஏன் என்று கேட்க நினைக்கும் முன் அவன் போயிருந்தான். இவன் என்ன மூட்ல இருப்பான்னே தெரியலயே பொம்மி..’ என வழக்கம்போல் ஒரு புலம்பலை கொட்டி, தோளைக் குலுக்கிவிட்டு மற்ற வேலையைப் பார்த்தாள்.

 

கதவைத் திறந்த நிலவனோ.. வெளியில் நின்றிருந்த நபரைப் பார்த்துநீயாஉன்னை யார் வரச்சொன்னது..” என எரிமலையாய் வெடித்துக் கொண்டிருந்தான்.

 

கிடந்து தவிக்கிறேன்

எங்கெங்கு காணினும் நீயே

தென்படுகிறாய்..

எங்கெங்கு நோக்கினும் நீயே

நிறைந்திருக்கிறாய்..

தோன்றும் கனவிலெல்லாம் நீயே

வாசம் செய்கிறாய்..

ஒரேயொரு முறை வந்து செல்

ஒரேயொரு முறை உன் தோளில் சாய

அனுமதி கொடு

ஒரேயொரு முறை உன் ஸ்பரிசத்தை

தீண்ட விடு

ஒரேயொரு நிமிடம் வாழ்ந்து விட்டு செல்

போதும்

இதற்குமுன் நானிப்படி இருந்ததில்லை

 

நீயென் வரமா சாபமா என சத்தியமாய்

தெரியவில்லை..

வந்து சென்றாலும் சீக்கிரத்தில்  சென்றுவிட்டாயே என ஏங்க வைக்கிறாய்..

வராமல் இருந்தாலும் வரமாட்டாயா என

புலம்ப வைக்கிறாய்..

பேசினாலும் தொல்லையாக்குகிறாய்

பேசாவிட்டாலும் தொல்லையாக்குகிறாய்

நேரில் தான் வதைக்கிறாய் என்றால்

வீடு வந்து சேர்ந்த பின்னும்

நினைவில் வந்து வாட்டமாய் வதைக்கிறாய்.

பார்க்கும் பிம்பங்கள் எல்லாம்

நீயே ஆகிறாய்..

அமைதியாக இருந்து விட்டு

அனைவரும் உறங்கிய பின் வரும்

ஆலகால விஷ கனவு நீ

 

உன்னிலிருந்து விடுபடும் எண்ணம்

எனக்கில்லை

எனக்கந்த தைரியமும் இல்லை

இனி எதுவும் பழைய நிலைக்கு

திரும்ப போவதில்லை

உன்னிடத்தில் வரும் ஆசுவாசம் எந்த

பொருளிலும் இல்லை

உன்னில் கலந்து உன்னிடமே சரணாகதி

அடைய நீ எந்த பிரயத்தனங்களும்

படவில்லை

இயல்பாக அதுவே அரங்கேறுகிறது.

என் இந்த வாழ்வை மிக அழகாக மாற்ற

உன்னை தவிர இவ்வுலகில் வேறு யாருமில்லை..

உன்னிடமே இளைப்பாறுகிறேன்

மரணம் வரை….

 




Comments are closed here.

You cannot copy content of this page