Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ஹேய்! நீ ரொம்ப அழகா இருக்க-22

வந்த மெசேஜ்யை ஓபன் செய்து பார்ப்பதற்க்குள் ரவியின் அழைப்பு வந்தது.

 

எங்கடா இருக்க கார்த்தி? செமயா பசிக்குதுடா. பிரேக் பாஸ்ட் எதுவும் வாங்கிட்டு வாடா!

 

சரிடா! வாங்கிட்டு வரேன்.

 

அழைப்பை துண்டித்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு கிளப்பினான்.

 

வந்த மெசேஜ்க்கு பதில் அனுப்பினான். மீண்டும் அடுத்த மெசேஜ் வரவே, மெசேஜ்லயே உரையாட தொடங்கினான்.

 

வாகனத்தை ஒரு ஹோட்டலில் நிறுத்திவிட்டு அனைவருக்கும் காலை உணவை பார்சல் வாங்கினான்.

 

பொள்ளாச்சி வீடு:

 

காலை உணவை முடித்து விட்டு கோபால் மற்றும் வனிதா இருவரும் கோபாலின் நண்பர்களை அழைக்கவும், அருள், வனஜா, வினிதா உறவினர்களை விழாவிற்கு அழைக்க சென்றார்கள்.

 

கோபாலின் கார்:

 

பொள்ளாச்சி மெயின் ரோட்டில் இருக்கும் ஒரு ஒர்க் ஷாப் அருகில் கோபால் தனது காரை நிறுத்தினார். கோபாலின் வயதுடைய ஒருவர் ஒர்க்ஷாப்பில் அமர்ந்திருந்தார்.

 

அவரைக் கண்ட கோபால் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திக் கொண்டார். அவர் கோபாலின் மிக நெருங்கிய நண்பன் அன்வர்.

 

இருவரும் சிறுவயதிலிருந்தே இன்பத் துன்பங்களை பகிர்ந்து கொள்ளக் கூடியவர்கள். அன்வரின் முதல் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் போது அதற்கான முழு மருத்துவ செலவும் கோபாலை செய்தார்.

 

அது போன்றே கோபாலை மறுதிருமணம் செய்து கொள்ள பலமுறை அன்பு கட்டளைகள் போட்டதும் அன்வர்தான்.

 

இருவரும் அன்வரையும், அவரின் குடும்பத்தையும் அழைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

 

வினிதாவின் சொந்தக்கார வீடு:

 

வந்தவர்களும் இருந்தவர்களும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். வினிதாவின் போன் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. பேசிக்கொண்டிருந்த அவர்களிடமிருந்து அனுமதியை வாங்கிக்கொண்டு சற்று விலகி போனை எடுத்தாள்.

 

அனிதா: மச்சி எங்கடி இருக்க?

 

வினிதா: நான் சொந்தக்கார வீட்ல இருக்கேன் டி

 

மச்சி ஒரு பிரச்சனை ஆகிடுச்சி டி?

 

 

என்னடி சொல்றா? என்ன பிரச்சனை?

 

நம்ம திவ்யா இன்னும் வீட்டுக்கு வரவே இல்ல டி? அவங்க அம்மா எனக்கு போன் பண்ணி அழுகிறாங்க?

 

கோவை வீட்டிலேயே இல்லை? ஊருக்கு வரல?

 

அவ எங்க போய் இருக்கா கேட்கிறார்கள்?

 

என்னால எந்த பதில் சொல்ல முடியல?

 

சரிடி நீ முதல்ல அழுகிறதா நிறுத்து. ஜென்னிக்கு கான்ஃபரன்ஸ் கால் போடு.

 

Conference call connected…!!

 

வினிதா: நீங்க ரெண்டு பேரும் உங்க வீட்ல என் வீட்டுக்கு போறேன் சொல்லிட்டு, உடனே என் வீட்டுக்கு கிளம்பி வாங்க. என் வீட்டை ரிச்சா ஆகும் வரைக்கும் கால கட் பண்ணாதீங்க.

 

அனிதா: சரிடி ஓகே. ஜென்னி வீட்ல ரெடியாயிரு நான் பைக் எடுத்துட்டு வரேன்.

 

ஜென்னி: ஓகே மச்சி.

 

சித்தி, சித்தப்பா எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. நான் கிளம்புறேன். நீங்க ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு வந்துடுங்க.

 

வினிதாவின் கார் வேகமாக வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

 

அனிதா: ஜென்னி நான் உன் வீட்டுக்கு வெளியே தான் இருக்கேன். சீக்கிரம் வா!

 

ஜென்னி: இதோ வந்துட்டேன் டி.

 

அனிதா: வினிதா நாங்க ரெண்டு பேரும் உன் வீட்டுக்கு கிளம்பிட்டோம்.

 

வினிதா: சரிடி ஓகே! நானும் கிளம்பிட்டேன் ஆன் தி வே!

 

அனிதா என் வீட்டு ரிச் ஆனபிறகு! நீ அறைக்குள்ளே போய்! என் லேப்டாப்பை ஆன் செய்து திவ்யாவோட மொபைல் நம்பரை டிராக் பண்ணு.

 

அனிதா: சரிடி ஓகே.

 

ஊட்டி கெஸ்ட் ஹவுஸ்:

 

மச்சான் கார்த்தி போட் ஹவுஸ் போலாமாடா?

 

சரிடா மச்சான் வா கிளம்புவோம்.

 

 

மூவரும் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

 

வினிதாவின் கார்:

 

என்னடி வீட்டை ரீச் பண்ணிட்டீங்களா?

 

ஆமாடி ரிச் பண்ணிட்டோம்.

 

சரி வேகமா போய் நான் சொன்னதை செய்!

 

அனிதா கருப்பு திரைகளை அகற்றிவிட்டு நிழல் உலகத்துக்குள் சென்று திவ்யாவின் போன் நம்பர் கடைசியாக ஆன்யில் இருந்த இடத்தை கண்டறிந்தாள்

 

வினிதா லைன்ல இருக்கியாடி?

 

இருக்கேன் சொல்லுடி!

 

மச்சி நேத்து அவ போன் லாஸ்ட்டா ஆன்ல இருந்த லொகேஷன் ஊட்டி என்று காட்டுதுடி!

 

என்னடி சொல்லுறா! நம்ம கிளாஸ்ல யாரும் ஊட்டியில் இருக்காங்களா?

 

யாரும் இல்லைடி!

 

அப்ப யாரைப் பார்க்க டி அங்க போய் இருப்பா?

 

தெரியலடி! Next என்னடி பண்ணலாம்? அவங்க வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிடலாமா? ஸ்டேஷன் எதுவும் கம்ப்ளைன்ட் செய்து கொள்ளட்டும்.

 

வினிதா: வேண்டாண்டி! லேப்டாப், charger cable, USB இன்டர்நெட் எல்லாத்தையும் எடுத்து பேக்கில் போட்டு கொண்டு வீட்டுக்கு வெளியே வாங்க!

 

நம்மைப் ஊட்டிக்கு கிளப்புறோம்!!

 

கார்த்திக் – வினிதா – திவ்யா சந்தித்துக் கொள்வார்களா?

 

தொடரும்.




Comments are closed here.

You cannot copy content of this page