ஹேய் ! நீ ரொம்ப அழகா இருக்க-23(first part)
1319
0
காலை 10 மணி
வேகமாக விரைந்து வந்த வினிதாவின் கார் இருவரையும் ஏற்றிக்கொண்டு ஊட்டியை நோக்கி விரைய தொடங்கியது.
4 மணி நேரப் பயணத்தை நோக்கி!
வினிதா: அனிதா அப்படியே அவள் கடைசியாக எந்த நம்பருக்கு போன் பேசி இருக்கான்னு பாரு?
அனிதா: வினிதா கடைசியாக அவ வியாழக்கிழமை தான் அவ போன்ல இருந்து பேசியிருக்கிறாள். Last 5 நம்பர்ல நம்ம நம்பர் 3. இரண்டு நம்பர் புதுசா இருக்கு.
ஜென்னி: அவ கடைசியா புதன்கிழமை தான் காலேஜுக்கு வந்தா. அன்னைக்கு நைட்டு தான் நம்ம எல்லாம் பேசுனோம்.
அனிதா: அந்த ரெண்டு நம்பருக்கும் புராஃப் என்ன இருக்குன்னு பாரு? மொபைல் நம்பர் ட்ராக்கரல போடு வந்திடும்.
அனிதா: ஒன்னு பொள்ளாச்சி அவ வீட்டு நம்பர். மற்றொன்று லிண்டா மார்ட்டின் (US-காரி). அவ பாஸ்போர்ட்டும் விசா காப்பியும் வச்சு சிம் வாங்கி இருக்காடி.
வினிதா: அவ நம்பரை டிராக் பண்ணு. லொகேஷன் எங்க காட்டுதுண்டு பாரு?
வினிதாவின் காரில் பெட்ரோல் அளவு கம்மியாக காட்டியதால் பெட்ரோல் பங்க் இருக்கு வண்டியை செலுத்தினாள்.
அண்ணா டேங்க் ஃபுல் பண்ணுங்க!
சரி மா! கார்டா கேஷா மா?
கார்டு!
பங்கில் உள்ளவர் பெட்ரோலை ஃபுல் பண்ணிவிட்டு வினிதாவின் கார்டை வாங்கி ஸ்வைப் செய்தார்.
பெட்ரோல் பங்கிலிருந்து கார் நகர்ந்து ஊட்டியை நோக்கியது.
முற்பகல் 12 மணி
அனிதா: அவ லொகேஷனும் ஊட்டிய தான் காட்டுது. அதுவும் திவ்யாவுடைய போனும், லிண்டாடைய போனும் சேம் ரேஞ்சில் தான் இருக்கு.
வினிதா: அப்ப கண்டிப்பா திவ்யா அவ கூடத்தான் இருக்காள். நீ வேற அமெரிக்கக்காரிடு சொல்லுறா? சோ அவளுக்கும் ஹேக்கிங் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு.
நீ என்ன பண்ணு ஆனியன் பிரௌசர் ஓபன் பண்ணி நம்ம facebook பேஜ்லிருந்தும், திவ்யாவுட பர்சனல் ஐடியில் இருந்தும் அவ கூட சாட் பண்ணி இருக்கான்னு செக் பண்ணு?
அனிதா: சரிடி செக் பண்றேன்.
வினிதா: அதுமாதிரி அவ போன் நம்பரை தொடர்ந்து track பண்ணிட்டே இரு.
அனிதா: சரிடி
Comments are closed here.