Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 49

அத்தியாயம் – 49
திறமையானவனை பெண்ணுக்குப் பிடிக்கும். பாதுகாப்பானவன் அவள் மனதில் ஆழப்பதிவான். இவன் இருக்கும் வரை என்னை அசைக்க முடியாது என்கிற நம்பிக்கையை கொடுப்பவனிடம் அவள் சரணடைய தயங்குவதில்லை. சரணடைந்துவிட்டால் அவனை நம்பி எந்த எல்லைக்கும் செல்வாள். மிருதுளாவும் நம்பினாள்.

வெளிப்படையாக எண்ணிப்பார்க்கவில்லை என்றாலும், அர்ஜுன் தன்னை தேடி வருவான் என்கிற எண்ணம் அவள் ஆழ்மனதில் இருந்தது. அவன் வந்து நின்றான். அவளுக்கு ஆதரவாக அதிகாரியிடம் நெஞ்சை நிமிர்த்தி முறைத்தான். அந்த ஒரு கணத்தில் எல்லாவற்றையும் மறந்து பூரித்தது அவள் மனம்.

அர்ஜுனை பார்க்கும்வரை மிருதுளாவிற்கு ஏராளமான சந்தேகங்கள் இருந்தன. குழப்பங்கள் இருந்தன. பயங்கள் இருந்தன. ஆனால் ஆனால் அவனை பார்த்த நொடியில் அனைத்தும் மறந்து போனது. அந்த அளவிற்கு அவள் மனதையும் அறிவையும் அவன் முழுமையாக ஆக்கிரமித்தான்.

இனி என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்கிற துணிவு பிறந்தது. விருட்டென்று எழுந்து அவனிடம் நெருங்கி அவன் கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

அவள் உடலில் மிச்சமிருந்த நடுக்கத்தை உணர்ந்த போது அவளை இங்கு வர விட்டிருக்கக் கூடாது என்று எண்ணினான் அர்ஜுன். தன் அலட்சியத்தை வெறுத்தான்.

“இது நம்ம கடைசி சந்திப்பா இருக்கப்போறது இல்ல அர்ஜுன். சீக்கிரமே உன்ன தேடி வருவேன்” என்று அவர் சவால்விட்ட போது, “வெயிடிங்” என்று எள்ளலாக கூறிவிட்டு அவளை அங்கிருந்து வெளியே அழைத்து வந்தான்.

உடன் வந்த வழக்கறிஞருக்கு கண்ணசைவில் விடைகொடுத்துவிட்டு, மிருதுளாவோடு காரில் ஏறி கதவை அடைத்தவன், ஸ்டியரிங் வீலை இறுக்கிப் பிடித்தபடி அசைவற்று அமர்ந்திருந்தான்.

இந்த விசாரணையின் பின்னணி அவனுக்கு தெரியும். மிருதுளாவின் மீதான சந்தேகத்தினால் அவள் இங்கு அழைத்துவரப்படவில்லை. இது அவனை சிக்க வைக்கும் முயற்சி. நிச்சயம் அவனைப்பற்றிய கேள்விகள் எழுந்திருக்கும். மிருதுளா உண்மையை பேசியிருந்தால் அவன் இந்நேரம் கைது செய்யப்பட்டிருப்பான். அவள் தனக்கு எதிராக பேசவில்லை என்பதில் அவனுக்கு நெகிழ்ச்சிதான்… ஆனால் அதுவே மனதை கனமாய் அழுத்தவும் செய்தது.

மிருதுளாவின் பார்வை அவனிடமே இருந்தது. பாறையில் செதுக்கிய சிற்பம் போலிருந்தது அவனுடைய பக்கவாட்டுத் தோற்றம். இறுகிய தாடையும், கழுத்தில் புடைத்திருந்த நரம்பும் அவனுடைய டென்ஷனை எடுத்துக் கூறியது. சில நிமிடங்கள் அப்படி இறுக்கமாக அமர்ந்திருந்தவன், பிறகு தானாகவே அவள் பக்கம் திரும்பினான்.

“ஆர் யு ஓகே?” – குரலிலும் முகத்திலும் எந்த உணர்வும் இல்லை. ஆனால் கண்களில் சின்ன கலக்கம் தெரிந்தது. அது தன் மீதான அக்கறை என்பதில் அவளுக்கு ஆனந்தமே. ஆனால் அந்த ஆனந்தத்தை முழுமையாக அவளால் அனுபவிக்க முடியவில்லை. உள்ளே ஒருபக்கமாக ஒதுங்கியிருந்தாலும், அந்த கவலை மனதை புழுவாக அரித்துக் கொண்டிருந்தது.

“அர்ஜுன்…” – மேலே பேச தயங்கினாள். அவன் அவள் தொடர்வதற்காக காத்திருந்தான்.

“நீங்க… பிரபஸரை ஒன்னும் பண்ணிடலல்ல?” – குரலில் சின்ன நடுக்கம் தெரிந்தது.

அழுந்த மூடிய உதடுகளுக்குள் அடைபட்டுக் கிடந்தன அவன் உணர்வுகள். கண்களில் வெறுமையை தேக்கி ஓரிரு நிமிடங்கள் அவளை வெறித்து நோக்கியவன் பிறகு எதுவுமே சொல்லாமல் காரை கிளப்பினான்.

மிருதுளாவின் சஞ்சலப்பட்டிருந்த மனம் அன்று இரவு அவளை உறங்கவிடவில்லை. கேள்விகள் உள்ளத்தை வண்டாய் குடைந்தன. எழுந்து வெளியே வந்தாள். விடிவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. முதல் நாளை போலவே அர்ஜுனின் படுக்கை காலியாக இருந்தது.

‘இன்றும் கேரேஜிற்கு சென்றுவிட்டானா!’ – ஒருவித திடுக்கிடலுடன் அவள் எண்ணிப்பார்க்கும் போதே, வாசலில் அவளுக்கு முதுகுகாட்டி, கைகளை பின்னால் கட்டிக்கொண்டு வானத்தை அண்ணார்ந்து பார்த்தபடி அவன் நின்றுக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது.

உடனே அவனிடம் சென்று, “இங்க என்ன செய்றீங்க?” என்றாள் மெல்ல.

அவள் வந்ததையே உணராதவன் போல் அசையாமல் நின்றவன் சில நொடிகளுக்குப் பிறகு, “கனெக்டிங் டாட்ஸ்” என்றான் ஆழ்ந்த குரலில்.

நட்சத்திரங்களை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி ஏதாவது ஒரு உருவத்தை கண்டுபிடிப்பது போல் ஏதேதோ சம்பவங்களை தொடர்புபடுத்தி எதற்கோ விடை தேடுகிறான் என்று அவளுக்கு புரிந்தது. அவனோடு பழகிய சில மாதங்களில் அந்த அளவுக்கேனும் அவனை அவளால் புரிந்துகொள்ள முடிந்திருந்தது.

சற்றுநேரம் அவனையுடைய சிந்தனையில் குறுக்கிடாமல் அமைதியாக நின்றவள், பிறகு “நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இல்லையே?” என்றாள்.

அவள் எதைப்பற்றி பேசுகிறாள் என்று அவனுக்கு புரிந்தது. தலையை திருப்பி எதிர்பார்ப்பு நிறைந்த அவள் முகத்தை சில நொடிகள் பார்த்தவன், தன் கைகளை முகத்துக்கு நேராக உயர்த்திப் பார்த்து, “இந்த கைல அவரோட ரெத்தம் இல்ல” என்றான் உள்ளடங்கிய குரலில்.

சட்டென்று பிறந்த விடுதலை உணர்வுடன் ஆசுவாசமாக மூச்சுக்காற்றை வெளியேற்றியவள், அவன் கைகளை பிடித்து அதில் முகம் புதைத்து, “எனக்கு தெரியும். நீங்க எதுவும் பண்ணியிருக்க மாட்டீங்க” என்றாள்.

கைகளில் ஈரத்தை உணர்ந்த அர்ஜுனின் உடல் விறைத்து நிமிர்ந்தது. மெல்ல கைகளை அவளிடமிருந்து உருவிக் கொண்டான். அவன் கைகளில் பிரபஸரின் ரெத்தம் இல்லை என்பது உண்மை தான். ஆனால், அந்த கைகள் ரெத்தம் தோய்ந்த கைகள் தானே? – மனம் சஞ்சலப்பட்டது.

“போ… போய் தூங்கு” – அவள் முகத்தை பார்க்காமல் கூறினான்.

உணர்ச்சிவசத்தில் இருந்த மிருதுளாவும் அவனிடம் தெரிந்த மாற்றத்தை உணரவில்லை. “நீங்களும் வாங்க. ரொம்ப டைம் ஆச்சு” என்றாள் மூக்கை உறிஞ்சியபடி. அழுகையாலும் உறக்கமின்மையாலும் அவள் கண்கள் சிவந்துவிட்டது.

தனக்கு உறக்கம் வரவில்லை என்று கூறி அவளை உள்ளே அனுப்பிவிட்டு சூழ்ந்திருந்த இருளில் தனித்து நின்றான் அர்ஜுன்.

அவனுடைய கடந்தகாலமும் எதிர்காலமும் ஏற்றுக்கொள்ளாத நிகழ்கலாம் அவள். இருள் சூழ்ந்த தனிமைக் காடாக இருந்த அவன் உலகத்தில் அழகிய மின்மினி பூவாய் ஒளிர்பவள். அவளை பிரியும் நிலை எண்ணிப் பார்க்கவே முடியாத சூனியம். ஆனால் அந்த சூனியம் தன்னை நெருங்கி கொண்டிருப்பது போல் உணர்ந்தான் அர்ஜுன்.

கடந்த பத்து நாட்களாக வடநாட்டின் முக்கிய நகரங்களில் சில முக்கிய நபர்கள், தொழிலதிபர்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஊடகங்களை பொறுத்தவரை ஒவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு காரணம்… ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. காவல்துறையும் அதைத்தான் பதிவு செய்தது. மக்களும் அதைத்தான் நம்பினார்கள். ஆனால் பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா? – அர்ஜுனுக்கு சந்தேகம் வந்தது. உல்ஃப் நாட்டைவிட்டு செல்லவில்லை என்று நம்பினான். ப்ளூ ஸ்டாரை தொடர்பு கொண்டான். விபரம் கேட்டான். அவருக்கும் விஷயம் தெரிந்திருக்கவில்லை. அப்போதுதான் எதிர்பாராமல் இன்னொரு செய்தி அவன் செவிக்கு வந்தது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கோர்த்தாவின் ஆட்கள். இது பெரிய அதிர்ச்சி அவனுக்கு.

கோர்த்தாவின் அடுத்த தலைவன் அவன்தான் என்பது ராகேஷ் சுக்லாவின் வாய்மொழி. பெருந்தலைகள் அனைவருமே அதை ஆமோதித்தார்கள். ஆனால் கோர்த்தாவில் உள்ள முக்கிய நபர்களையே அவனுக்கு தெரிந்திருக்கவில்லையே! அப்படியென்றால் எத்தனை மேலோட்டமாக அங்கு இருக்கிறான்! அல்லது அப்படி இருக்க வைக்கப்பட்டிருக்கிறான்! உண்மை தகித்தது. கொதித்துப்போனான்.

ராகேஷ் சுக்லாவின் இன்னொரு கபட முகத்தை கண்டு கொண்டவன் அவரிடமே பாய்ந்தான்.

“கோர்த்தா கடல் மாதிரி ஆழமானது அர்ஜுன். இங்க எனக்கே தெரியாதவங்ககூட எனக்காக வேலை பார்க்கறாங்க. எல்லாரையும் உனக்கு தெரிஞ்சிருக்கணும்னு அவசியம் இல்ல. கொலை செய்யப்பட்டுக் கொண்டிருப்பது நம்ம ஆளுங்க. உல்ஃப் இங்கதான் இருக்கான். அவனை பிடிக்க என்ன செய்யணுமோ செய்” என்று கூறி பேச்சை கத்தரித்தார். அவனுக்கு அடுத்த அசைன்மென்ட் வந்து சேர்ந்தது.

உல்ஃப் தான் இந்த கொலைகளை செய்கிறான் என்றால் அவனுக்கும் கோர்த்தா பிளாக் குழுவிற்கும் தொடர்பு இருக்கிறது. அவர்களில் முக்கியமான ஆள் அவன் கண் எதிரிலேயே இருக்கிறான். நூலை கட்டி பறக்கவிடும் பட்டம் போல் அவரை விட்டு வைத்திருந்தான். இப்போது நேரம் வந்துவிட்டது. தூக்கிவிட்டான்.

முப்பத்தியாறு மணிநேரம் பிரபஸரை மயக்கத்திலேயே தன் வீட்டு கேரேஜில் வைத்திருந்தவன் இப்போதுதான் இருளில் பதுங்கி வந்த ஒரு கருப்பு காரின் டிக்கியை நிரப்பி அனுப்பினான். இனி ப்ளூ ஸ்டார் பார்த்துக்கொள்வார். விஷயத்தை மட்டும் வாங்கி அவனுக்கு அனுப்புவார்.

இது ஒன்றும் பெரிய அசைன்மென்ட் அல்ல. நகத்தை கடித்து துப்புவது போல் அசால்ட்டாக செய்து முடிக்கக் கூடியது. ஆனால் இதில் மிருதுளா இடையிட்டுவிட்டாள். அவரை கடத்தும் நாள் அன்று அவர் மிருதுளாவிற்கு போன் செய்யவில்லை என்றால், அவள் அங்கு வந்திருக்கவில்லை என்றால் இந்த பிரச்சனையே எழுந்திருக்காது. இப்போது காவல் விசாரணையை அவள் சந்திக்கும்படி ஆகிவிட்டது. அது அவனுக்கு பெரிய மனஉளைச்சல். அதுமட்டும் அல்ல…

அவள் அவனை பாதுகாக்க முயன்றிருக்கிறாள்! அது சாதாரண செயல் அல்ல. உண்மையை பேசவைக்க எவ்வளவு அழுத்தம் கொடுப்பார்கள் என்று அவனுக்கு தெரியும். அதுவும் மிருதுளா போன்ற பெண்களை பார்வையாலேயே நிலைகுலைய செய்துவிடுவார்கள். அப்படி இருந்தும் அவள் அமைதியாக இருந்திருக்கிறாள் என்றால், அவளுடைய அன்பு ஆழமானது. அவனுக்காக எதையும் செய்யக் கூடியது.

இதைத்தான் அவன் எதிர்பார்த்தான். திட்டமிட்டுத்தான் அவளை இந்த நிலைக்கு கொண்டுவந்தான். ஆனால் இவற்றையெல்லாம் செய்திருக்க வேண்டாமோ என்று குழப்பமாக இருந்தது. இந்த உண்மையெல்லாம் ஒருநாள் அவளுக்கு தெரியவரும். இதுமட்டும் அல்ல… இன்னும் அவனுக்குள் மறைந்திருக்கும் அத்தனை உண்மைகளும் பெரும் சீற்றத்துடன் வெளிப்படும். அவற்றையெல்லாம் அவள் தாங்குவாளா? தாங்கி அவனோடு இணைந்திருப்பாளா? – எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருந்தது. சிந்தனையோடு வெகுநேரம் வெளியே நின்றுக் கொண்டிருந்துவிட்டு உள்ளே வந்தான்.

கட்டிலில் கால்களை மடக்கி சுருண்டு படுத்திருந்தாள் மிருதுளா. அவளை பாக்கும் போதே அவன் மனம் கனிந்தது. கட்டிலுக்கு அருகில் சேரை இழுத்துப் போட்டு அவள் முகத்தை பார்த்தபடியே அமர்ந்துவிட்டான்.




12 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Merlin Mary says:

    Sri mam thank you so much to solve my problem.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Merlin Mary says:

    Sri mam I am unable to open nizhal nilavu new update after 50th episodes. Pls help to open the link


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Meena says:

      Now you can view the episodes after 50


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rajee Karthi says:

    Super interesting story


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Fazeela Fazil says:

    Nice 👍
    When z next ud


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      updated… Forum la irukku…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Merisha says:

    Rompa nalla story ……Oru movie pakura feel iruku… Dialogues yellam super…..Knjm kuda bore adikatha viru virupa porathu mathiri supera kathaya kondu porathu rompa pidichiruku…Niraya turns and twists…Waiting fr next update


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Suvitha Suvitha says:

    ஹாய்,
    இங்கே நான் புதியவள். முக நூலில் தோழமைகள் ‘நிழல்நிலவு’ கதையை பரிந்துரை செய்யவே வாசிக்க வந்தேன். அருமையான நாவல். ஆசிரியர் விருவிருப்பாக கொண்டு சென்ற விதம் அருமை. நாவல் இன்னமும் நிறைவு பெறவில்லையா? என்னால் 49 epi வரை மட்டுமே வாசிக்க முடிந்தது.


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Indira selvam says:

      எங்கள் தளத்திற்கு உங்களைவரவேற்கிறேன்.ஆமாம் கதைஇன்னமும் முழுமை பெறவில்லை தோழி. on going novel தான். நீங்கள் கனல் விழி காதல் படித்து விட்டீர்களா? இதே எழுத்தாளர் தான்.அது முடிவுற்ற கதை. முடிந்தால் படிங்கள் .


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Suvitha Suvitha says:

        தோழிகளின் தயவால் அதுவும் படித்து விட்டேன் சகோ. அதுவும் அருமையான நாவல்.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rusha Seevaamirtham says:

    Nithu..
    Miruthu paavam.😥..this episode also nice na..👌
    Keep on rocking dear..👍
    Im an addict of ur writings…♥️♥️♥️


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    Arjun avla love panrana illaya? Wolf thirumba vandada IPO than kandu pidchangala?! Inum konjam periya episode ah thangalen please

You cannot copy content of this page