Share Us On
[Sassy_Social_Share]நிழல்நிலவு – 50
9222
3
நிழல்நிலவு – 50
அன்று காலை கண்விழித்ததுமே அவள் மனம் அவனைத் தேடியது. அவசரமாக குளியலறைக்குள் சென்று திரும்பி, படுக்கையறையிலிருந்து வெளியே வந்து எட்டிப்பார்த்தாள். சமையலறையில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான் அர்ஜுன். பூனை போல் மெல்ல நடந்துச் சென்று, ஒருபக்க தோளை தட்டிவிட்டு மறுபக்கம் அவன் முகத்தை பார்த்து பளீரென்று சிரித்தாள்.
“குட் மார்னிங்” – அவனும் மலர்ந்த முகத்துடன் அவளை வரவேற்றான்.
“நைட் ரொம்ப நேரம் தூங்கலையே! எப்போ வந்து படுத்தீங்க?” – சமையல் மேடையில் தாவியேறி அமர்ந்தபடி கேட்டாள்.
“அவள் கையில் காபி கப்பை கொடுத்தவன் அவளுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல், “டிபன் என்ன பண்ணலாம்? பிரெட் ஆம்லெட் ஓகேவா?” என்றான்.
அவன் இரவெல்லாம் உறங்கவே இல்லை என்பது அவளுக்கு புரிந்தது. சட்டென்று முகம் வாடியது. அவளுடைய வருத்தம் அவன் மனதை இதமாய் வருடியது. மலர துடிக்கும் புன்னகையை உதட்டில் அடக்கி அவள் முகத்தை கைகளில் ஏந்தி நெற்றியோடு நெற்றி ஒற்றினான். இமைகள் தானாய் மூடிக் கொள்ள நாசியில் அவளுடைய நறுமணத்தையும், மனதில் அக்கணத்தின் அற்புத உணர்வையும் ஏற்றி கொண்டு கண்விழித்து, “ஐம் ஆல்ரைட் ஸ்வீட்டி” என்றான் குழைவாக. அந்த கணத்தில் அவள் உலகம் வெகுவாய் சுருங்கிவிட்டதாய் தோன்றியது. அவனுக்கு மட்டுமே அவள் உலகத்தில் இடமிருந்தது.
இனிய உணர்வை மனதில் தாங்கியபடி இருவரும் இனைந்து காலை வேலைகளை முடித்தார்கள். மிருதுளா கல்லூரிக்கு தயாரானாள். வழக்கம் போல் அவனே அவளை அழைத்துச் சென்றான். கல்லூரி பார்க்கிங்கில் அவள் காரிலிருந்து இறங்கிய போது, “இங்கதான் இருப்பேன்…” என்றான் அர்ஜுன்.
முதல்நாள் அவன் அங்கே இல்லாததால் இன்று அவள் பயப்படுவாளோ என்கிற அக்கறையோடு அவன் கூறியது அவளுக்கு பிடித்திருந்தது.
“ஐ நோ…” – அவன் கையை அழுத்திப் பிடித்துத் தன் நம்பிக்கையை அவனுக்கு உணர்த்திவிட்டு கீழே இறங்கி வகுப்பறையை நோக்கி நடந்தாள்.
சில மணிநேரங்கள் கூட கழிந்திருக்காது. மீண்டும் பரபரப்புடன் அர்ஜுனைத் தேடி ஓடிவந்தாள். தூரத்தில் அவளை பார்த்ததுமே விஷயம் ஏதோ முக்கியமானது என்பதை புரிந்துக் கொண்டவன் அடியை எட்டிப்போட்டு அவளை நோக்கி நடந்தான்.
“என்ன ஆச்சு?”
“ஐ காட் எ கால்”
“யார்கிட்டேருந்து”
“அம்மா”
“வாட்!”
“ப்ராமிஸ்… எனக்கும் நம்ப முடியலதான்… ஆனா உண்மை… நானே பேசினேன்”
“என்ன சொன்னங்க?”
“ரொம்ப அவசரமா பேசினாங்க. என்னை உடனே இந்த அட்ரஸுக்கு வர சொன்னாங்க” – ஒரு பேப்பரை அவனிடம் நீட்டினாள்.
“சரி வா போகலாம்” – பேப்பரை வாங்கிப் பார்த்தவன் உடனடியாக புறப்பட எத்தனித்தான்.
“அர்ஜுன்” – அவள் தயங்கினாள்.
“என்ன?” – புருவம் சுருக்கினான்.
“தனியா வர சொன்னாங்க”
“ஓ!” – அவன் முகம் மாறியது.
“ஏதோ பிரச்சனையில் இருக்காங்கனு நினைக்கிறேன்” – சமாதானம் செய்ய முயன்றாள்.
“நீ போயி காப்பாத்த போறியா?” – வெடுவெடுத்தான். மிருதுளா பேச்சிழந்தாள்.
“உனக்கே லைப் த்ரெட் இருக்கு. இது உனக்கு வெட்டின குழியா கூட இருக்கலாம். நீயா போயி விழறேன்னு சொல்றியா? உன்ன அனுப்பி வச்சுட்டு, நா கைய கட்டிக்கிட்டு நிக்கணுமா? வாட் யு திங் அபௌட் மீ… ம்ம்ம்?” – பற்கள் நறநறக்க அடிக்குரலில் சீறினான்.
“அம்மாவே சொன்னாங்க அர்ஜுன்”
“யாராவது அவங்கள அப்படி பேச வச்சிருக்கலாம்”
“ஐயோ!”
“எஸ்… அவங்க கடத்தப்பட்டிருக்கலாம். சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம். உன்ன கூப்பிட சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம்”
“அர்ஜுன்!!!” – பயந்துவிட்டாள் மிருதுளா.
“இதெல்லாம் என்னோட கெஸ்சிங் தான். ஆனா இதெல்லாம் நடந்திருந்தா ஐ ஒன்லி கேன் ஹெல்ப் யு… அண்ட் யுவர் மாம்… ஒருவேளை அப்படி எதுவும் நடக்கலைன்னா, உன்ன உங்க அம்மாகிட்ட ஒப்படைச்சுட்டு நா கிளம்பிடறேன். என்ன பிரச்சனை இதுல?” – பிசிறுதட்டாமல் அறிவுறுத்தினான். அதுதான் சரியென்று அவளுக்கும் தோன்றியது.
“யு ஆர் ரைட் அர்ஜுன். உடனே கிளம்பலாம்” – பதட்டத்துடன் அவனை அவசரப்படுத்தினாள். இருவரும் ஏறிக்கொள்ள அதிகபட்ச வேகத்தில் பறந்தது அர்ஜுனின் கார்.
மிருதுளா குறிப்பிட்ட முகவரியில் இருந்த ஊர் அனந்த்பூரிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில்தான் இருந்தது. முக்கால் மணிநேரத்தில் இலக்கை அடைந்துவிட்டார்கள். அது ஒரு சிறு நகரம்… ஓரளவுக்கு மக்கள் புழக்கம் இருக்கும் பகுதியில்தான் அந்த முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் சுற்றிக் கொண்டே இருந்தார்கள். கடைசியாக பெரிய மெக்கானிக் ஷெட்டிற்கு பின்னால் முளைத்திருந்த ஒரு புது குடியிருப்பில் ஆங்காங்கே சில வீடுகள் இருப்பதை கண்டுபிடித்து அந்த ஏரியாவிற்குள் நுழைந்து, வீட்டு எண்ணை கண்டுபிடித்து, வாசலில் நடுநாயமாக காரை கொண்டுச் சென்று நிறுத்தினார்கள்.
காரிலிருந்து இறங்குவதற்கு முன்பே ஜன்னல் திரைச்சீலையின் வழியே இரண்டு உருவங்கள் தெரிவதை கவனித்தாள் மிருதுளா. ஒரு பெண் ஒரு ஆண்… அவள் கவனம் கூர்மையானது. உள்ளே பரபரப்பு தெரிந்தது. சிந்தனையுடன் கீழே இறங்க எத்தனித்தாள்.
“ஸ்டே…” – உத்தரவிட்டான் அர்ஜுன். அப்போதுதான் அவள் கவனம் அவள் பக்கம் திரும்பியது. கண்களில் வேட்டை மிருகத்தின் பளபளப்பும் முகமெல்லாம் தணலின் தகிப்புமாக மிரட்டினான்.
அவள் மேலே யோசிப்பதற்குள் “மிருதூ…” என்கிற அலறலுடன் வெளியே ஓடிவந்தாள் அவள் தாய்.
விருட்டென்று காரிலிருந்து இறங்கி குறுக்கே வந்து, கால்களை அகட்டி, இடுப்பில் கைவைத்து, மலை மனிதன் போல் தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றான் அர்ஜுன்.
முதலில் திகைத்து பின்வாங்கிய அந்த பெண்மணி, பிறகு சுதாரித்துக் கொண்டு, “அர்ஜுன், என் பொண்ண விட்டுடு” என்றாள் பெண் புலியின் சீற்றத்துடன்.
கடகடவென்று சத்தமாக சிரித்தான் அவன். ஆக்ரோஷ சிரிப்பு… அசுர சிரிப்பு…
மிருதுளா மிரட்சியுடன் காரிலிருந்து இறங்கினாள். தாய்க்கும் மகளுக்கும் குறுக்கே அகழியாய் விரிந்து நின்ற அந்த ஆணவக்காரன் உரத்தக் குரலில் பேசினான்.
“நீ வித்தைக்காரி ஷோபா… ஆனா நா வித்தனுக்கும் வித்தன்… விட்டுடுவேனா?”
‘ஷோபாவா! இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களா!’ – மிருதுளா திகைத்து நின்றாள்.
மகளிடமிருந்த அதே திகைப்பும் மிரட்சியும் ஷோபாவிடமும் தெரிந்தது. ஏழு ஆண்டுகளாக எந்த எமனுக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கிறாளோ அந்த எமன் அவள் எதிரில்… பாசக்கயிறை சுழற்றியபடி கர்ஜிக்கிறானே! மிரட்சியில்லாமல் போகுமா? அத்தனை மிரட்சியிலும் அவனுடைய பிரதான குறியாக தன் கணவனை கட்டாயப்படுத்தி பின்வாசல் வழியாக வெளியே தள்ளி கதவை அடைத்துவிட்டு அடிவயிறு தடதடக்க அவன் எதிரில் வந்து நின்றாள். அவள்தான் ஷோபா…
“மிருது… வந்துடு… என்கிட்ட வந்துடு…” – வறண்டுபோன நாவை முயன்று பிரித்து மகளோடு பேசினாள்.
என்ன நடக்கிறது என்றே புரியாமல் மூளை மரத்துப்போய் நின்றுக் கொண்டிருந்த மிருதுளா, “அம்மா இது…” என்று ஏதோ விளக்கம் கூற முற்பட, அவளை இடைமறித்து அதட்டி, “வாடி இந்த பக்கம்” என்று கத்தினாள் தாய். அவள் உடல் வெளிப்படையாக நடுங்கியது.
அப்போது கூட தாயின் பயம் தேவையற்றது என்றே எண்ணினாள் மிருதுளா. இருவரும் பரிச்சயமானவர்களாக இருந்தாலும், அவர்களுக்குள் பிரச்சனை இருந்தாலும் அதை தன்னால் தீர்க்க முடியும் என்று நம்பினாள்.
இருவரையும் சமாதானம் செய்ய அவளால் முடியாதா என்ன? எதிர்பாராமல் சந்தித்த அதிர்ச்சியில் இருவரும் கத்திக் கொள்கிறார்கள். இடையில் அவள் வந்தால் அனைத்தும் மாறிவிடப்போகிறது… – அசைக்க முடியாத நம்பிக்கையுடன் தாயை நோக்கி ஒரு அடியெடுத்து வைத்தாள் மிருதுளா.
“ஸ்டே… ஸ்டில்… ஹனி…” – இடையிட்ட அவன் குரலில் தேங்கினாள்.
“குட்” – பாராட்டினான் அர்ஜுன். அவன் குரலிலிருந்த குழைவிலும் அதற்கு மகள் கட்டுப்படும் விதத்திலும், வயிற்றுக்குள் ஐஸ் கட்டியை வைத்துக் கட்டியது போல் விதிர்விதிர்த்துப்போனாள் ஷோபா.
“அர்ஜுன்… வேண்டாம்… அவ சின்ன பொண்ணு. விட்டுடு” – எச்சரித்தாள்.
“சின்ன பொண்ணா!” – மிருதுளாவின் அருகே சென்று கீழிருந்து மேல்வரை மோப்பம் பிடித்தான்.
“அர்ஜுன்!!!!” – கண்கள் சிவக்க கிறீச்சிட்டாள் அந்த தாய்.
“ரிலா…க்…ஸ் தோழி… வி ஆர் ஃபிரண்ட்ஸ். நா என்ன பண்ணிடப் போறேன் உன் பொண்ண? வி லைக் ஈச் அதர்… இல்ல ஹனி?” – மிருதுளாவை தோளோடு அணைத்து, அவள் முகத்திற்கு வெகு அருகே தன் முகத்தைக் கொண்டு சென்று புருவம் உயர்த்தினான்.
அவனுடைய செயலில் மிருதுளாவே சற்று முகம் சுளித்து பின்வாங்க முயன்றாள். அவன் பிடி இறுகியது.
“அர்ஜுன் ப்ளீஸ்” – மெல்லிய குரலில் அவனை கட்டுப்படுத்த முயன்றாள் மிருதுளா.
“ஹூ – ஆம் – ஐ – டு – யு?” – ஒவ்வொரு வார்த்தையையும் தனித்தனியாக உச்சரித்து, தீவிர பார்வையுடன் அவளை நோக்கினான்.
“யு நோ மீ வெரி வெல். காம் டௌன் ப்ளீஸ்…” – தாயின் காதில் விழாமல் முணுமுணுப்பாக கூறி அவனை சமாதானம் செய்துவிட முனைந்தாள்.
அவனிடம் மகள் காட்டும் நெருக்கத்தில் தவித்துப்போன தாய், “நோ… மிருது… வேண்டாம் டா… வந்துடு அம்மாகிட்ட” என்று கெஞ்சினாள்.
“ஆன்சர் – மீ – டார்லிங்… நான் யார் உனக்கு?” – அழுத்தம் திருத்தமாக பிடிவாதத்துடன் கேட்டான். அவள் மீது அவன் கொண்டிருந்த ஆளுமை தாயின் கெஞ்சலைக் கூட தள்ளிவைக்கும் அளவிற்கு தீவிரமாய் இருந்தது. அதன் பலன், அவள் பார்வை அர்ஜுனிடமே நிலைத்திருந்தது.
“ஹி இஸ் நாட் எ குட் மேன்…” – அலறினாள் ஷோபா… தாயின் பெருங்குரல் ஒரு பக்கம் எச்சரித்துக் கொண்டிருந்தாலும்,
அவன் கேட்ட கேள்விக்கு, “மை லவ்” என்று நிதானமாக பதிலளித்தாள் மிருதுளா.
“அவன் பாவி… நம்பாத…” – அழுதாள் தாய்.
“ஹாங்??? காதுல விழா…” – வேண்டுமென்றே காதை குடைந்தான் அந்த கபடன்.
தாயின் அழுகை ஒருபக்கம்… அவனுடைய ருத்ராவதாரம் இன்னொரு பக்கம்… மிருதுளா உடைந்தாள்.
“உன்ன கொன்னுடுவான்டி…” – “மை லவ்…” – தாயும் மகளும் ஒரே நேரத்தில் உறக்கக் கத்தினார்கள். இருவர் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. அர்ஜுன் என்னும் மனிதனுக்குள் தாண்டவமாடிக் கொண்டிருந்த அசுரன் திருப்தியுடன் நிமிர்ந்தான்.
“ஐயோ கடவுளே!” – தலையில் அடித்துக் கொண்டாள் ஷோபா.
“கேட்டியா ஷோபா? ஐம் யுவர் டாட்டர்ஸ் லவ். ஷி லவ்ஸ் மீ…” – கொக்கரித்தான்.
“மிருது, அவனை நம்பாத. உன்ன ஏமாத்துறான். அவன் உன்ன கொன்னுடுவான். ப்ளீஸ் வந்துடு டா செல்லம்…” – கூக்குரலிட்டாள்.
“பகவான் எங்க ஷோபா?” – அர்ஜுன்.
அவனுக்கு பதில் சொல்வதை தவிர்த்து மக்களிடம் பேசினால் ஷோபா… “பெரிய கொலைகாரன் அவன்… ஏழு வருஷமா என்னை துரத்திக்கிட்டு இருக்க எமன்…”
“அம்மா… நீங்க நினைக்கற மாதிரி இல்ல… அர்ஜுன்… அர்ஜுனும் என்னை லவ் பண்றார். நா கன்வெண்ஸ் பண்றேன் ம்மா… ப்ளீஸ் ஸ்டே காம்” – தாயிடம் நெருங்க முயன்றாள் மகள். அர்ஜுன் ஹோத்ராவின் வலிய கரம் அவளை வன்மையாக பற்றித்தடுத்தது.
கையே உடைந்துவிடும் போல் தோன்றியது. தன் வலியை காட்டிக் கொண்டால் தாயின் பதற்றம் மேலும் அதிகமாகும் என்று எண்ணிய மிருதுளா பல்லை கடித்து வலியை சகித்துக் கொண்டு, “ப்ளீஸ்” என்று அவனை கெஞ்சுதலாகப் பார்த்தாள். அவன் முகத்திலோ கோபம் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது.
“பகவான் எங்க?” – மீண்டும் கேட்டான்.
“ஐயோ! அவனை அவனை நம்பாதேயேன்” தவித்தாள் தாய்.
“நாங்க வரும் போது உள்ள இருந்த மாதிரிதானே இருந்தது.”
“அவர் இல்ல…” – அழுகையை நிறுத்திவிட்டு திடீரென்று சீறினாள்.
“இந்த தடவையும் உன்ன விட்டுட்டு ஓடிட்டானா? பின்பக்கமா எகிறி குதிச்சு ஓடுறது பழகிடிச்சு போலருக்கு?”
“அவர் யாருங்கறதை மறக்காத அர்ஜுன்” – எச்சரித்தாள்.
“நெவர்…”
“ம்மா ப்ளீஸ்…” – மிருதுளா தாயிடம் கெஞ்சினாள்.
“ஐயோ… மிருது… அவனைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? அவனுக்கு கல்யாணம் ஆயிடிச்சு. சொன்னானா உன்கிட்ட?”
“வா…ட்…!” – அதிர்ச்சியில் அவள் இதயம் நின்றே போனது.
“ப…க…வான் எங்க ஷோ…பா…???” – பூமி அதிர உறக்கக் கத்தினான். கட்டுக்கடங்கா கோபத்தில் அவன் உடல் நடுங்கியது. மிருதுளாவை பிடித்திருந்த பிடியில் அவள் கை இற்றுப் போனது.
“நோ… நாட் பாஸிபிள்…” – தலையை குறுக்காக அசைத்தாள் மிருதுளா. தாயை நம்ப மறுத்தாள். ‘இருக்காது… இருக்க முடியாது… இது எப்படி சாத்தியம்!’ – அலறியது அவள் உள்ளம்.
“குழந்தை கூட…” என்று ஷோபா ஆரம்பிக்கும் போதே மிருதுளாவின் தலை பயங்கர சத்தத்துடன் காரில்சென்று மோதியது.
அவள் முடியை கொத்தாகப் பிடித்தது இழுத்து மோதியிருந்தான் அர்ஜுன். கோரமான அலறலுடன் அவள் கண்கள் மேல்நோக்கி செருக அவள் நெற்றி பிளந்து ரெத்தம் வழிந்தது.
“ஐயோ!!!” என்று அலறி துடித்த அவள் தாய் அருகில் வருவதற்குள் மிருதுளாவை காருக்குள் தள்ளி கதவை அடைத்துவிட்டு விஸ்வரூபமெடுத்து நிமிர்ந்து நின்றான் அந்த ராட்சசன்.
“விட்டுடு அர்ஜுன்… நீ என்ன சொன்னாலும் செய்றேன். என் பொண்ண தயவு செஞ்சு விட்டுடு” – கையெடுத்து கும்பிட்டு கதறும் ஷோபாவை துச்சமாக பார்த்தான் அர்ஜுன்.
அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்துக் கொண்ட ஷோபா, “அது எங்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்… பார்சனலா உனக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்ல… அதை ஒரு பிசினெஸா பார்க்காம ஏன் எங்களை இப்படி துரத்தர? நீ பண்ணாத எதை நாங்க பண்ணிட்டோம்… ப்ளீஸ் விட்டுடு…” – பயனில்லை என்று தெரிந்தும் தன்னிலை விளக்கம் கொடுக்க முயன்றாள்.
“எக்ஸ்சாக்ட்லி ஷோபா. இதுவும் அசைன்மென்ட் தான். எனக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். ஏழு வருஷமா முடிக்க முடியாம இழுத்துகிட்டே இருக்கே!” – தோளை குலுக்கினான்.
நிராசையுடன் தலையை குறுக்காக அசைத்தாள் ஷோபா.
“பகவானை வர சொல்லு. கூட நீயும் வா.. என் வீட்டுக் கதவு எப்பவும் உங்களுக்காக திறந்தே இருக்கும். எனக்கு தேவை நீங்க ரெண்டு பேரும் மட்டும்தான்” – சிரித்தான். அந்த சிரிப்பில் தெரிந்த துஷ்ட்டன் ஷோபாவை உறைந்து போகச் செய்தான்.
“ஒருவேளை நீங்க வராம… வேற ஏதாவது பிளே பண்ண ட்ரை பண்ணினா… பார்த்திருப்பியே… உன் பொண்ண நா எவ்…வ…ளவு லவ் பண்றேன்னு… டெயிலி இப்படி லவ் பண்ணிகிட்டே இருப்பேன். புரியிதுல்ல… புரியும்… வி ஆர் ஃபிரண்ட்ஸ் ரைட். பகவானை கேட்டதா சொல்லு… பார்க்கலாம்…” – அவன் பேச்சில் எத்தனை எள்ளல் இருந்ததோ அதைவிட ஒருமடங்கு அதிகமாக கோபம் இருந்தது.
கார் ரிவர்ஸ் எடுத்து திரும்பும் போது ரெத்தம் வழிந்த முகத்தோடு அரைமயக்க நிலையில் கார் சீட்டில் கிடந்த மிருதுளா முயன்று நிமிர்ந்து தாயின் முகத்தை பார்த்தாள். பரிதவிப்புடன் ஒன்றோடொன்று இணைந்திருந்த இருவர் பார்வையையும் வலுக்கட்டாயமாக அறுத்துவிட்டது மகளின் அந்த பயணம்.
3 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Merlin Mary says:
Sri mam pls update today. Waiting eagrly
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Merlin Mary says:
Not sri mam that is nithi mam. Sorry for my typo error
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ganesan S says:
Next episode eppo?